Friday, June 7, 2024

MUSIC TALKS - NAAN KUDIKKA POREN EN CUPPULA KARPANAI KOTTUDHU PULLA - SONG LYRICS - VERA LEVEL PAATU !

வெள்ளி கிழமை உன்ன நான் பாத்தேன் முதலா ஓரமா
நின்னு ரசிச்சா எனக்கு வேற ஒன்னும் தேவையில்லை
பெண் கூட்டத்துல நீ ஒரு தேவதை குயிலே இறைவனும்
செதுக்கிக்கிய சிலையே உன்னதான் நான் தேடி ஓடோடி வந்தேன்
அரை பாட்டில்லு அடிச்ச பிறகும் ஸ்டீல் பாடியா நிக்குறேன்டி
உன் வளைவுவுடன் அழக கண்டு இதயம் திக்குத்து விக்குத்து நிக்குதடி
நான் குடிக்க போறேன் என் கப்புல கற்பனை கொட்டுது புள்ள
காதலிய தேட கவிதை கொட்டுது சோதனை உள்ளுக்குள் இல்ல
மானே மயிலே மஞ்சத்துல குயிலே வழக்கு என்னடி சிலுக்கு 
உனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலே கெறங்கி கெடக்கு மனசு

ஆதித்தன் கரிகாலன் கசட தபற யரல வழள
கலைஞன் எனக்கு கவிதை விருந்து
உனக்கும் எனக்கும் இருக்கும் கவலை 
மறந்து மறந்து மதுவை அருந்து
உல்லாசம் ஆயிரம் உள் எண்ணம் கோபுரம்
தள்ளாடும் உன் உடம்பு வான்வெளியில காகிதம்
நான் சிந்தனையில சிறகடிக்கிறேன் 
விண்வெளியில பறந்து பல கண் கவர்ச்சிகள் கால் கொலுசுகள்
தேடுது வழி நடந்து சென்று
சிரிக்கிற பெண்கள் என்னை சிந்தையில் சிறை வைக்கிறார்
சிறுநகை புரிந்தவள் சிறுவனை சிலுவையில் ஏற்றினாள்
குடித்த பிறகு குருதி எழுந்து குதிரை படைகள் ஓட்டம்
என் குவளை நனைக்க குமரி இடங்கள் தேடுது களி ஆட்டம்
இது படைத்தவனுக்கும் பாமரனுக்கும் பேதம் போக்கும் பானம்
நான் உரைக்கும் வார்த்தை உண்மை என்று உரக்க சொல்லும் கானம்

நான் குடிக்க போறேன் என் கப்புல கற்பனை கொட்டுது புள்ள
காதலிய தேட கவிதை கொட்டுது சோதனை உள்ளுக்குள் இல்ல
மானே மயிலே மஞ்சத்துல குயிலே வழக்கு என்னடி சிலுக்கு 
உனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலே கெறங்கி கெடக்கு மனசு

கருங்கூந்தலின் பாசத்தில் முழுகிறேனே 
உன் சுவாசத்தால் நான் நனைகிறேனே
நேசத்தில் மறைவதற்கு இடமில்லையே
தேடி உன்னை அடைவேனே
சேலை நம் உடலை அணைக்க உருவானதே
காற்றில் நம் இதயம் இரண்டும் உறவானதே
பூ வானம் மேலே பூக்கள் மேல் கொட்டுதே
உன்னை பார்த்ததுமே களை கட்டுதடி
தாலிய கட்டவும் நாளையும் தேடிப்புடி

வெள்ளி கிழமை உன்ன நான் பாத்தேன் முதலா ஓரமா
நின்னு ரசிச்சா எனக்கு வேற ஒன்னும் தேவையில்லை
பெண் கூட்டத்துல நீ ஒரு தேவதை குயிலே இறைவனும்
செதுக்கிக்கிய சிலையே உன்னதான் நான் தேடி ஓடோடி வந்தேன்
அரை பாட்டில்லு அடிச்ச பிறகும் ஸ்டீல் பாடியா நிக்குறேன் டி
உன் வளைவுவுடன் அழக கண்டு இதயம் திக்குத்து விக்குத்து நிக்குதடி
நான் குடிக்க போறேன் என் கப்புல கற்பனை கொட்டுது புள்ள
காதலிய தேட கவிதை கொட்டுது சோதனை உள்ளுக்குள் இல்ல
மானே மயிலே மஞ்சத்துல குயிலே வழக்கு என்னடி சிலுக்கு 
உனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலே கெறங்கி கெடக்கு மனசு

No comments:

ARC - 031 - சரியான காரியங்களை தள்ளிப்போடும் ஆட்கள்

ஒரு உணவக உரிமையாளர் ஒருவர் தன்னுடைய உணவகத்திற்க்கு வெளியே வீதியில் ஒரு வயதானவர் ஞானியை போன்ற தோற்றத்துடன் வருவதை கண்டார். அவரிடம் ஏதாவது ஞா...