இந்த உலகத்தில் நீங்கள் யாருக்கு நேர்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கல்யாணம் பண்ணிக்கொள்ளும் பெண்ணுக்கு நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். இந்த உலகம் ரொம்பவுமே கொடியது. ஒரு குடும்பத்து பெண் அவளுடைய வாழ்க்கைக்குள் நிறைய கடினமான விஷயங்களை சந்தித்துவிடுகிறாள். அவளுடைய கஷ்டங்களில் அவளுக்கு சப்பொர்ட்டாக இருந்து அவளை வெற்றியடையச்செய்ய யாருமே அவளோடு இருக்கமாட்டார்கள். ஆனால் அவளுடைய சந்தோஷத்தில் மட்டும் எல்லோருமே குழந்தைகளை போல அடம்பிடித்து அவர்களுடைய பங்குகளை எடுத்துக்கொள்வார்கள். நீங்கள் கல்யாணம் பண்ணிக்கொள்ளும் பெண்ணானவள் உங்களிடம் என்னதான் எதிர்பார்க்கிறாள் ? நிறைய அன்பையும் முழுமையான பாதுகாப்பையும் எதிர்பார்க்கிறாள். இந்த விஷயத்தில் அவளுக்கு நிச்சயமாக ஏமாற்றத்தை கொடுக்க கூடாது. வாழ்க்கை நமக்கு எவ்வளவோ தோல்விகளை கொடுத்து இருக்கலாம் அந்த தோல்விகளால் , வலிகளால் , வேதனைகளால் என்று மனதுக்குள்ளே எவ்வளவோ காயங்களை நாம் பார்த்து இருந்தாலும் நாம் கல்யாணம் பண்ணிக்கொள்ளும் பெண்ணுக்கு இத்தனை கஷ்டங்களை நிச்சயமாக கொடுக்க கூடாது. நம்முடைய வாழ்க்கை ஒரு கடலை போன்றது. நிறைய நேரங்களில் நம்மை மூச்சு திணற வைத்துவிடும். இருந்தாலும் நாம்தான் நமக்காக போராட வேண்டும். சமீப காலமாக நாண் என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை வைத்து மிகவும் ஆழமாக கற்றுக்கொண்ட விஷயம் என்னவென்றால் கல்யாணம் பண்ணிக்கொள்ளும் பெண்ணுக்கு கண்டிப்பாக துரோகம் இழைக்க கூடாது. அவளை விட்டுக்கொடுக்க கூடாது. அவளுடைய காதலில் நஞ்சை கலந்துவிட கூடாது. வாழ்க்கையில் திருமணம் ஒரு முறைதான் சிறப்பாக நடக்கிறது. இந்த திருமணத்தின் காதலை பற்றி இன்னும் அதிகமாக பேசிக்கொண்டே இருக்கலாம். நிறைய காதல் கதைகள் காத்துக்கொண்டு இருக்கிறது.
No comments:
Post a Comment