Saturday, June 15, 2024

GENERAL TALKS - நடப்பு நொடியை கணக்கில் எடுக்க முடியாத ஒரு துறை !


இன்றைக்கு தேதிக்கு நிறைய விஷயங்கள் எழுத்து துறையில் முன்னேற்றம் அடைய நமக்காக இருக்கிறது. ஆனால் என்ன ஆனாலும் எழுத்து துறைக்கான என்னுடைய பயணம் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கிறது. இந்த பயணத்தில் போராட்டம் வலிகள் மற்றும் வேதனைகள் மிகவும் அதிகம். பொதுவாக கிரியேட்டிவ் வகையில் எழுதக்கூடிய திறனில் போட்டி கடுமையாக இருக்கும். எந்த அளவுக்கு கடினம் என்றால் ஒரு போரை சந்தித்து அந்த போரை நீங்கள் வெற்றி அடைவது எந்த அளவுக்கு கடினமானதோ அந்த அளவுக்கு கடினமானதாக இருக்கும். எழுத்துக்கள் என்பது ஒரு தனித்த மனிதன் இன்னொரு தனித்த மனிதன் அல்லது தனித்த சிறிய குழுவை எதிர்ப்பதற்கு உருவாக்கும் ஆயுதங்களை போன்றது ஆகும். உங்களுடைய ஆயுதங்களும் நீங்களும் எந்த அளவுக்கு ஸ்மார்ட்டாக இருக்க போகிறது என்பதை பொறுத்துதான் உங்களுடைய வெற்றியையும் தோல்வியையும் வாழ்க்கை முடிவு செய்ய போகிறது என்பதால் நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய எழுத்துக்களை உங்களுடைய கிரியேட்டிவ் திறன்களை உங்களுடைய வேலைகளை கொண்டு எப்படி நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும் என்று யோசித்துக்கொண்டே இருக்க வேண்டும். இணையத்தில் உங்களால் முடிந்தவரை உங்களுடைய எழுத்து திறன்களை வளர்த்து உங்களுடைய எழுத்து திறன்கள் சம காலத்தில் உங்களோடு யாரெல்லாம் போட்டி போட்டாலும் அவர்கள் எல்லோரையும் தோற்கடிக்க முடிந்தால் மட்டும்தான் எழுத்து துறையில் வாழ்க்கை என்பதே உங்களுக்கு இருக்கும் இல்லை என்றால் இருக்காது. சமீபத்தில் நெட்பிலிக்ஸ்ஸின் 3 பாடி பிராப்ளம் என்று ஒரு அறிவியல் புனைகதை ஒரு 320 பக்கம் நாவலாக இருந்து இப்போது நெடும் தொடராக பெரிய பட்ஜெட் படமாக (நெட்பிலிக்ஸ் ஓரு வெளியீடு விட்டால் அடிப்படையில் சினிமா கேமராவில் எடுக்கிறார்கள் - சினிமா படங்களின் லெவல் படத்துக்கு கிடைக்கிறது. )  - இங்கே என்ன விஷயத்தில் உங்களால் சம்பாதிக்க முடியும் என்பதை செயல்பாடுகளில் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் எப்போது தோற்று போனாலும் எழுத்து துறையை தேர்ந்தெடுத்த மக்களை வாழ்க்கை வைத்து செய்துவிடும் என்பதுதான் உலகத்தின் மிகப்பெரிய உண்மை. எந்த ஒரு விஷயத்திலும் நடப்பு நொடியை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்பட கூடாது. நல்லா யோசிச்சு பார்த்துவிட்டு ஜெயிக்க முடியும்ன்னு தெரிந்த பின்னால்தான் இந்த போராட்டத்தில் போராடிக்கொண்டு இருக்கிறேன்.



No comments:

Post a Comment

GENERAL TALKS - நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலப்பு உலோகங்கள் !

  1. Steel (Iron + Carbon) 2. Stainless Steel (Iron + Chromium + Nickel) 3. Bronze (Copper + Tin) 4. Brass (Copper + Zinc) 5. Sterling Silve...