உலகம் முழுவதும் மனித உடல் உறுப்புகளை கடத்தும் ஒரு மிகப்பெரிய கிரைம் நெட்வொர்க்கில் இருந்து ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சி பண்ணி தெரியாமல் மாட்டிக் கொள்ளும் இரு ஒரு இளம் டாக்டர் பெண் விபத்தால் கோமாவுக்கு செல்கிறாள். ஆனால் அடுத்த நாள் ஒரு டெட்டிபேர் பொம்மைக்குள் அவள் உயிரோடு இருக்கிறாள். இன்னொரு பக்கம் ஜெனீயஸ் லெவல் இண்டெலிஜன்ஸ் இருப்பதால் அதிகம் யாரிடம் பேசாத கேரக்ட்டராக இருக்கும் நிறைய அறிவு திறனுடன் கூடிய மிகவும் புத்திசாலியான ஒரு கதாநாயகராக இருக்கிறார். இந்த டெடி பேர் உடலுக்குள் இருக்கக்கூடிய டாக்டர் வாழ்க்கையில் இந்த சதிகளுக்கும் இந்த கொலைகளுக்கும் காரணம் என்ன ? எப்படி இந்த விஷயத்தில் இருந்து வெளியே வருவது என்பதை கதாநாயகனோடு சேர்ந்து கண்டுபிடிப்பதுதான் இந்த டேடி என்ற படத்தின் திரைப்படம். படத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் திரைக்கதை நன்றாக உள்ளது விசுவலாக கேமரா வொர்க்ஸ் குறை சொல்லும் படி எதுவும் இல்லை. டோரா தி எக்ஸ்ப்ளோரர் , டோரேமான் என்ற கார்ட்டூன் கேரக்டர்களுக்கெல்லாம் வாய்ஸ் கொடுத்துள்ள டப்பிங் ஆர்டிஸ்ட் இந்த படத்தின் பொம்மைக்கு வாய்ஸ் கொடுத்துள்ளதால் கேரக்டர் டிசைன் ஃபேமிலி ஆடியன்ஸ் கேட்டது போல உள்ளது. இருந்தாலும் வழக்கமாக கிரைம் படங்கள் என்றால் என்னென்ன விஷயங்கள் இருக்குமோ அதை நேரடியாக கொடுக்காமல் மக்களுக்கு கொஞ்சம் பேண்டஸியா கொடுக்கக் கூடிய இது போன்ற இந்த மாதிரியான மெச்சூரிட்டியான படங்களும் கூட தமிழ் சினிமாவுக்கு கண்டிப்பாக தேவை என்றால் அதுவே நிதர்சனம் !
No comments:
Post a Comment