Sunday, June 16, 2024

CINEMA TALKS - CAPTAIN MARVEL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


கேப்டன் அமெரிக்கா - தி ஃபர்ஸ்ட் அவன்ஜர் படத்துக்கு பின்னால் பெரிதாக ஆரிஜின் ஸ்டோரி என்று மார்வெல் ஸ்டுடியோஸ் எதுவுமே ஃபோகஸ் பண்ணவில்லை. அவெஞ்சர்ஸ் என்ட் கேம் படத்துக்காக தானோஸ்ஸை எதிர்க்க ஒரு வலிமையான ஹீரோ வேண்டும் அல்லவா அதனால்தான் இந்த கேப்டன் மார்வெல் திரைப்படம். இந்த படத்தை விமர்சனங்கள் எப்படி சொன்னாலும் சுருக்கமாக சொல்லப்போனால் பேஸிக்கான ஒரு சூப்பர்ஹீரோ ஸ்டோரி. மார்வெல்க்கு கெத்து காட்டிவிட்டு நிக் ஃப்யூரிக்கு நல்ல காமெடியான ஆங்கில் கொடுத்து இருக்கிறார்கள். இன்பினிட்டி வார் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை எல்லாம் இந்த படத்தில் எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும் அதிகம் எதிர்பார்க்காமல் இந்த படத்துக்கு சென்றால் உங்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் வேல்யூ இருக்கும். குறிப்பாக 1990 களின் வைப்ஸ் இந்த படத்தில் பார்க்கலாம். பாக்ஸ் ஆபீஸ் ஒரு பில்லியன் தொட்டுவிட்டதுக்கு அவேன்ஜர்ஸ் ரசிகர்களுக்கே தாங்க்ஸ் சொல்ல வேண்டும். ஒரு முறை பார்க்கலாம். மறுபடியும் மறுபடியும் பார்க்க படத்தில் எதுவும் இல்லை. இவ்வளவுதான் இந்த படத்துக்கான விமர்சனம். இன்னும் நிறைய திரை விமர்சனங்களை தெரிந்துகொள்ள நம்முடைய வலைப்பூவுக்கு சந்தாதாரராக மாறுங்கள் என்று கம்பெனி சார்பாக பணவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...