இது எல்லாமே மிகவும் தவறாக இருக்கிறது. குறைந்தபட்ச புத்திசாலித்தனம் இருந்தால் கூட இதை போன்ற தவறான செயலை அனுமதிக்க மாட்டார்கள். இந்த உலகம் முழுவதுமே குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடவுள் இல்லை என்று சொல்லும் வாதங்களுக்கு பிரதிவாதம் பண்ண யாருமே இல்லை. சமீபத்தில் நான் படுத்த ஒரு சில புத்தகங்களில் மற்றும் நான் பார்த்த ஒரு சில இணைய காணொளி நிகழ்ச்சிகளில் கூட கடவுள் இல்லை என்ற வாதத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும் இத்தகைய விஷயங்களில் கடவுள் நம்பிக்கை உருவாக்கி பணத்தை சம்பாதிப்பவர்களால் மட்டும் தான் கடவுள் மற்றும் கடவுளுடைய சக்திகள் என்ற கான்செப்ட் உருவாக்கப்பட்டது என்று நிறைய கருத்துக்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த கருத்துக்களை நான் முழுமையாக நிராகரிக்கிறேன். கடவுளுடைய பெயரை வைத்துக் கொண்டு ஏமாற்றங்களை செய்து கொண்டிருப்பவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். மேலும் கடவுளுடைய பெயரை வைத்துக்கொண்டு பிரிவினையை பாராட்டி மற்றவர்களிடம் இருந்து சொத்துக்களை எடுத்துக் கொள்வதும் உயர்வான பிறப்பு என்றும் தாழ்வான பிறப்பு என்றும் பிரித்துப் பார்க்கும் மோசமான ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவருடைய மனதின் கருத்துக்கள் சிறிய குழந்தையாக வளரும்பொது மனதுக்குள் இவர்களுக்கு ஆழமாக பதிந்து விடுகிறது இப்போது இவர்களுடைய ஆட்சிகளும் அதிகாரமும் மிகவும் சிறப்பாக இருப்பதால் கடவுள் நிச்சயமாக இவர்களுக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறாரா ? என்ற சந்தேகம் மட்டும் தான் எனக்கு இருக்கிறது தவிர கடவுள் என்ற ஒரு சக்தி இருக்கிறார் என்பதில் எனக்கு எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இது தனிப்பட்ட கருத்து. இப்போது கடவுள் எடுக்க வேண்டிய முடிவு சமூகத்தை மாற்ற வேண்டிய முயற்சி பண்ணி கொண்டு இருக்கும் அனைவருக்கும் போதுமான விஷயங்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும் இன்றைய நிலையில் போதைப் பொருட்களை விற்பவர்கள் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் உழைக்கும் மக்களுக்கு உதவும் வகையில் சிறிய அளவில் சிற்றுண்டி சாலை அமைப்பவர்கள் குறைவாக சம்பாதிக்கிறார்கள். இவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ? மிகவும் அடிப்படையில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு சிறப்பாக யோசித்தால் போதுமானது. சிறப்பான யோசனைகள் சமூகத்தை நல்ல பாதையில் கொண்டு செல்லும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. மன்னிக்க முடியாத குற்றங்களை காலத்தை செய்ய அனுமதிக்க வைத்து பின்னாட்களில் மன்னிப்பு கேட்டால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
No comments:
Post a Comment