திருச்சி மாநகரின் மையப்பகுதியில் இருக்கும் ஒரு டெவலப் ஆன ரௌடி குழுவினரின் மோதலில் பின்னணியில் கதாநாயகன் காதல் வெற்றி அடையுமா ? என்பதுதான் படத்தின் கதை. ஒரு மீடியம் பஜ்ஜெட்டில் இவ்வளவு தெளிவான ஒரு திரைக்கதையுடன் ஒரு நல்ல படத்தை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. படத்துடயை டோன் நன்றாக ஹேன்ட்டில் செய்து இருக்கிறார்கள். சப்போர்ட்டிங் நடிகர்களின் நடிப்பும் வேற லெவல்லில் இருக்கிறது, நிறைய வன்முறைக்கு நடுவே ஒரு காதல் வெற்றி அடைவது எந்த அளவுக்கு கஷ்டம் என்று சொல்லியிருப்பது மட்டும் அல்லாமல் எப்போதுமே சண்டையும் கவலைகளும் கௌரவமும் மட்டுமே ஒரு பாதை என்று தேர்ந்தெடுப்பது தவறான விஷயம் என்ற கருத்தை கிளைமாக்ஸ்ஸில் மிக அருமையாக சொல்லி இருக்கும் இந்த படம் வெளிவந்த போது மிகப்பெரிய தரமான விமர்சனங்களை பெற்று என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் பிரபு அவருடைய கேரக்ட்டரில் வாழ்ந்து இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு தரமான நடிப்பை கொடுத்து இந்த படத்துக்கு அவரே மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்துக்கொண்டு இருக்கிறார். வசனங்கள் பிரமாதமாக உள்ளது. திரைக்கதை கொஞ்சமாக இருந்தாலும் ஷார்ப்பாக உள்ளது. உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு சிறப்பான விஷயங்களை கொடுக்கும் அருமையான படம். கண்டிப்பாக பாருங்கள் ! இவ்வளவுதான் இந்த படத்துக்கான விமர்சனம். இன்னும் நிறைய திரை விமர்சனங்களை தெரிந்துகொள்ள நம்முடைய வலைப்பூவுக்கு சந்தாதாரராக மாறுங்கள் என்று கம்பெனி சார்பாக பணவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment