ஒரு தரமான காமெடி படம் நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் இந்த படம் உங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ்-ஆக இருக்கலாம். 2003 ல் வெளிவந்த ஸ்பை-காமெடி படமான ஜானி இங்கிலீஷ் படத்தின் அடுத்த பாகம்தான் இந்த படம். இந்த படத்தில் வோர்ட்டேக்ஸ் என்ற அமைப்பை இங்கிலாந்து உளவுத்துறைக்காக கண்டுபிடித்து அந்த அமைப்புக்கு உள்ளே இருப்பவர்களை கைது பண்ண ரொம்பவே முயற்சி பண்ணுகிறார் ஜானி இங்கிலீஷ் ஆனால் பக்கத்திலயே இருந்தாலும் இவருடைய அஸ்ஸிஸ்ட்டன்ட் ஸ்மார்ட்டாக வில்லனை கண்டுபிடித்து கொடுத்தலும் நமது கதாநாயகர் கோட்டை விட்டுவிடுகிறார். பின்னதாக எப்படி எல்லாவற்றையும் சமாளித்து நடக்கப்போகும் அசம்பாவிதங்களை தடுக்கிறார் என்பதுதான் மீதி கதை. நீங்கள் நிறைய படங்களை பார்த்து இருக்கலாம் இந்த படம் ஒரு காமெடி படம்தான் என்றாலும் விஷுவல் ஸ்டைல் மற்றும் கோரியோக்ராபி வேற லெவல்லில் இருக்கிறது. திரைக்கதையை ஸ்வாரஸ்யமாக நகர்த்தி சென்றுள்ளார்கள். அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு படத்தில் இறுதி வரைக்கும் இருக்கும் வரையில் ஒரு தரமான காமெடி படத்தை கொடுத்துள்ளார்கள் ! கண்டிப்பாக பாருங்கள் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக