வெள்ளி, 21 ஜூன், 2024

MUSIC TALKS - NENJUKKULLE UNNAI MUDINCHIRUKKEN - INKE ETHTHISAIYIL EN POZHAPPU VIDINCHIRUKKUM ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கும் !
வெள்ள பார்வை வீசி விட்டீர் முன்னாடி !
இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம்
ஆனை புலி எல்லாம் அடக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும் நிழல் மட்டும்
போகலையே போகலையே
நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு
அப்ப நிமிர்ந்தவ தான் அப்புறமா
குனியலையே குனியலையே
குடைக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே !

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கும் !

பட்சி உறங்கிருச்சு பால் தயிரா தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல இலை கூட தூங்கிருச்சு
காச நோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில
ஆச நோய் வந்தமக அரை நிமிஷம் தூங்கலையே
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கும் !

ஒரு வாய் இறங்கலையே உள் நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா எச்சி முழுங்கலையே !
ஏலே.. இளஞ்சிறுக்கி எதுவும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ள பார்வை வீசி விட்டீர் முன்னாடி
இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கும் !
வெள்ள பார்வை வீசி விட்டீர் முன்னாடி !
இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம்
ஆனை புலி எல்லாம் அடக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும் நிழல் மட்டும்
போகலையே போகலையே
நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு
அப்ப நிமிர்ந்தவ தான் அப்புறமா
குனியலையே குனியலையே
குடைக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே !

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கும் !

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...