Tuesday, October 31, 2023

CINEMA TALKS - THE IRISHMAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 இந்த 2000 களில் எப்பவுமே பொதுவாக வயலன்ஸ் நிறைந்த அமெரிக்கன் படங்கள் என்றாலே மார்ட்டின் ஸ்கார்சிஸ் மட்டும்தான் ரொம்ப ஜெனியுனாக  ரொம்ப சிறப்பாக பண்ணி கொடுப்பாரு என்பது எல்லோருக்கும் தெரியும் . இந்த படம் அவருடைய ரொம்ப ஃபைன்னஸ்ட் வொர்க்.  இத்தனைக்கும் இந்த படம் அமெரிக்க வரலாற்றின் ரொம்ப முக்கியமான பொலிடிகல் கான்ஸ்பெர்ஸி படம் அதனால மார்ட்டின் ரொம்ப ரொம்ப நிதானமாக பிலிம் பண்ணி அவருடைய ஸ்டைல்ல ரொம்ப எக்ஸல்லேன்ட்டாக கொடுத்து இருக்கிறார். இந்த படத்துடைய கதை. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இராணுவத்தில் ரொம்ப கண்டிப்பான அதிகாரியாக இருந்தவர் ஃப்ராங்க். இப்போது டிரக் டிரைவர்ராக இருப்பதால் போதுமான வருமானம் இருப்பது இல்லை. நான்கு மகள்கள் இருக்கும் குடும்பம் என்பதால் லோக்கல் மாஃப்பியாவில் கொலைகார வேலைகளை பண்ணுகிறார். இங்கே இவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய அரசியல்வாதியான ஜிம்மி ஹாஃப்பாவை சந்தித்து அவருக்கு நேர்மையாக வேலை பார்க்கும் அதிகாரியாக அவருடைய வாழ்க்கையை தொடங்குகிறார். பின்னாட்களில் என்னென்ன சம்பவங்கள் நடந்தது என்ற ஒரு உண்மை சம்பவங்களின் பின்னணிகளை படத்தில் சொல்லி இருக்கிறார். இந்த படத்துக்கு முன்னால் வெளிவந்த ONCE UPON A TIME IN HOLLYWOOD படத்தை போல இல்லாமல் இந்த படம் 3 மணி நேரம் 30 நிமிஷம் ஒரு பெரிய பயோகிராபி க்ரைம் படமாக போகிறது. காட்பாத்ர் படங்களின் நடிகர்களை அப்படியே இந்த படத்தில் கொண்டுவந்து இறக்கியிருப்பதால் ஒரு ஃபுல் அண்ட் ஃபுல் கம்ப்ளீட் க்ரைம் டிராமாவாக இந்த படம் சாதிக்கிறது. லொகேஷன் செலேக்ஷன் அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த படம் கொஞ்சம் பிளாஷ் பேக் காட்சிகளில் ஃபோகஸ் பண்ணுவாதால் சலிப்பு தட்டிவிடும் என்று நினைக்க வேண்டாம் இந்த படத்துடைய ப்ரோட்டகானிஸ்ட்டுடைய வாழ்க்கையை மட்டுமே ஃபாலோ பண்ணி போனால் ஃப்ராங்க் எப்படி ஒரு பெரிய மாஃப்பியா நெட்வொர்க்கை சார்ந்து ரொம்ப பெரிய தவறுகளை செய்ய ஆரம்பித்து அந்த தவறுகளை நினைத்து சாகும் நிலையிலும் யோசித்துக்கொண்டு இருக்கும் ஒரு இடத்துக்கு விதிவசத்தால் செல்கிறார் என்று படம் ரொம்ப நிதானமாக சொல்லிக்கொண்டு இருக்கும். ஒரு க்ரைம் படமாக அவ்வளவு நேர்த்தியாக இந்த படம் இருக்கும் அதனால் கண்டிப்பாக பாருங்கள் !!  THE COLOR  OF MONEY படத்தில் இருந்து ஃபாலோ பண்ணும் ரசிகர்களாக மார்ட்டின் படங்களை எல்லாம் நீங்கள் பார்த்து இருந்தால் உங்களுக்கு  இந்த படத்தின் ஜெனியூன்னான ஸ்டோரி டெல்லிங் மற்றும் கேரக்டர் ஆக்ட்ஸ்களில் இருக்கும் நேர்த்தியான அமைப்பை உங்களால் கண்டிப்பாக புரிந்துகொண்டு ரசிக்க முடியும். இந்த படம் பெஸ்ட்டான படம்தான். 

CINEMA TALKS - MAAMANNAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

இந்த படத்துடைய கதையை ஸ்பாய்லர் பண்ணாமல் இந்த படத்தை எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுவது கஷ்டம் , இந்த கதை சேலம் மாவட்டத்தில் நடக்கிறது நேர்மையான மனம் உள்ள ஒரு நல்ல மனிதராக இருக்கிறார் எம். எல். ஏ. மாமன்னன் , தன்னுடைய வாழ்க்கையில் பிரிவினையும் வெறுப்பும் காரணமாக நிறைய பாதிப்புகளை சந்தித்து இருக்கிறார். இன்னொரு பக்கம் ஊருக்குள் மிகவும் மரியாதையான குடும்பமாக இருக்கும் குடும்பமதான் ரத்னா வேலுவின் குடும்பம். சின்ன வயதில் இருந்தே பிரிவினையை விதைத்தே வளர்த்ததால் தன்னுடைய குடும்பம் அதிகாரமான அடிப்படையில்தான் செயல்படவேண்டும் என்றும் அடிமட்ட குடும்பங்களில் இருந்து யார் வந்தாலும் அவர்களை தாக்கலாம் என்றுமே எண்ணத்தில் வாழ்பவர். இந்த நிலையில் பணவசதி இல்லாத அடிமட்ட கல்லூரி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க தொடங்கப்பட்ட இலவச சேவை அமைப்பு ரத்னவேலுவின் அண்ணனால் தாக்கப்படுகிறது . இதனால் வன்முறை அதிகமாகவே ஒரு கட்டத்தில் நியாயம் கேட்டு முறையாக சமாதானமாக போய்விடவேண்டும் என்று நம்பிக்கையோடு  ரத்னவேலுவிடம் பேச சென்ற மாமன்னனையும் அவருடைய பையனையும் அடித்து அவமானப்படுத்துகிறார் மேலும் கொல்லவும் முயற்சிகளை பண்ணுகிறார். இந்த நிலையில் பொதுத்தேர்தல்லில் நின்று நிறைய பிரச்சனைகளையும் வன்முறைகளையும் சந்திக்கும் மாமன்னனும் அவருடையை பையன் அதிவீரனும் கடைசியில்  எப்படி ரத்னவேலு கொடுக்கும் பிரச்சனை எல்லாமே கடந்து வெற்றி அடைகின்றனர் என்பதே இந்த படத்தின் கதை. போன படமான கர்ணன் படம் பார்த்து முடித்ததும் மனதுக்கு ரொம்ப நாட்கள் பாரமாக இருந்த படம் என்றே சொல்லலாம். இந்த உலகத்தில் சமஉரிமை என்பது பிறந்த குழந்தைக்கு கூட கிடைக்க வேண்டும். ஒரு காலத்தில் பணம் இருப்பவர்கள் அவர்களுடைய குடும்பத்துக்கு மதிப்பு எப்போதுமே கிடைக்க வேண்டும் என்பதால்தானே பிரிவுகளை பிரித்து சமுதாயத்தையே பிரித்து வைத்தார்கள் ? அவர்களுடைய இந்த செயல்தான் தவறானது. இந்த படம் மிகவும் கவனமாக சொல்லப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பாஸில் கதாப்பாத்திரம் மிக அருமையாக உள்ளது. தன்னுடைய குடும்பம் தன்னுடைய ஈகோ எப்போதுமே பெரிதாக மதிக்கப்பட வேண்டும் என்ற காரணத்துக்காக எந்த எல்லைக்கும் சென்று உயிரை எடுக்கவும் தயங்காத ஒருவர். இன்னொரு பக்கம் ஒரு சின்ன தவறு பண்ணியதற்காக அவர்களுடைய நெருக்கமான மூன்று உயிர்களை இனவெறியின் வன்முறையில் இழந்து நின்ற மாமன்னன் குடும்பம். இந்த படம் சொல்லவந்த கருத்தை கிளைமாக்ஸ்ஸில் கடைசியாக சொல்லி முடிக்கிறது. ஒரு நேர்மையான படம். இங்கே மனிதர்களுக்குள் பெரியவர்கள் சின்னவர்கள் என்று பார்க்க கூடாது என்று ஒரு அடிப்படை கருத்தை மிக சரியாக சொன்ன படம் என்று சொல்லலாம். நிறைய அரசியல் மற்றும் சமூக அமைப்பின் குறைகள் இந்த படத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிறப்பான காட்சிகளின் அமைப்பால் மனதை படத்தின் கதைக்குள் ஆழமாக புதைத்துவிடும் அளவுக்கு காமிரா ரொம்ப பிரமாதமாக இந்த படத்தில் இருக்கும். ஒவ்வொரு ஷாட்ஸ்ஸும் ஒரு சிம்பிள்ளி அமேஸிங்காக இருக்கும். ஒரு நிஜ வாழ்க்கை கதையை பார்ப்பது போலவே படமும் காட்சிகளும் வசனங்களும் என்று ஒவ்வொரு சின்ன சின்ன விஷயமும் படத்தின் கதையோடு சென்றுக்கொண்டுதான் இருக்கிறது. கதைக்கு அவசியமற்ற காட்சிகள் என்று எதுவுமே இல்லை என்பதால் அதையும் இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட் என்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு சொசைட்டியில் சாதியும் பேதமும் எந்த அளவுக்கு பாதிப்பை கொடுக்கிறது என்று இந்த படம் ரொம்ப சரியான நேர்கோட்டில் சொல்லி இருக்கிறது. இங்கே சுதந்திரம் பிறப்புரிமை என்ற கருத்தை சிறப்பாக முன்வைக்கிறது. இந்த படத்தை ஸ்டூடண்ட்ஸ் , இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த படத்துடைய நோக்கம் நிறைய பேரை சேரவேண்டும். மாரி செல்வராஜ் உண்மையில் ஒரு பிரமாதமான கதையை தடைகளை உடைத்து நுணுக்கமான கதையமைப்பின் மூலமாக ஒரு இண்டென்ஸ் எமோஷனல் லீகல் டிராமாவாக கொடுத்து இருக்கிறார். இந்த படத்தை அனைவரும் கண்டிப்பாக பாருங்கள். 

BLOG - எழுதுவது வெறும் குப்பையா ? - ANGER TALKS - லைஃப் விமர்சனம் !!

 இன்னைக்கு தேதிக்கு AI வைத்து வலைத்தளம் எழுதும்போது நிறைய சம்பாதிப்பது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. மக்களே ஒரு BLOG எழுதுவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. நீங்கள் எழுதுன எழுத்துக்கள் அப்படியேதான் இருக்கும். ஒரு ஒரு எழுத்துக்களுக்கும் ரொம்ப கஷ்டப்பட வேண்டியது இருக்கும் !! இந்த மாதிரியான விஷயங்களை கம்ப்யூட்டர் எழுதிவிடுமா ? வெறும் காப்பிதான் அடிக்க முடியும். 

1. இது நான் கடந்த காலத்தில் எழுதிய சில விஷயங்கள் :  நேர்மையான கோபம்  - இந்த உலகத்துல யாருக்குமே எதுக்காக எப்படி கோபப்படனும் என்று தெரிய மாட்டேங்குது ! மட்டமான சாப்பாடு கெட்ட கொழுப்புகளை அதிக்கப்படுத்தி இதயத்தை பழுது பண்ணியதாலோ என்னவோ ஹார்ட் அட்டாக் வந்துடும் என்ற பயத்திலாவது கோபப்படாமல் இருக்கிறார்கள் என்று ஒரு பக்கம் எனக்கு தோன்றுகிறது. ஆனால் கோபம் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை. உங்களுக்கு ஒரு தப்பான விஷயம் நடக்குதா ? நிறுத்தி நிதானமாக சண்டை போடுங்கள் ஆனால் சண்டை போடாமலே இருந்துவிடாதீர்கள் உங்களுடைய எலும்புகளை எண்ணிவிடுவார்கள். உங்களுடைய கோபம் உங்களுடைய பாதுகாப்புக்காக கடவுள் கொடுத்த ஆயுதம் அதனால் கடவுளே வந்தாலும் உங்களுடைய பக்கம் நியாயம் இருந்தது கடவுள் பக்கம் அநியாயம் இருந்தால் கடவுளையும் எதிர்த்து சண்டை போடுங்கள் ! பயந்து பயந்து சாக வேண்டாம் !! இருப்பது ஒரே உயிர். நீங்கள் ஜெயிச்சுக்கிட்டே இருக்கும் அளவுக்கு செயல்களை பண்ணிக்கொண்டே இருந்தால் உங்களை நீங்கள் வருங்காலத்தில் ரொம்ப ரொம்ப பெரிய இடத்தில் கொண்டு போக முடியும். இந்த வாழ்க்கை ஒரு போர்க்களம்தான். கணக்கு பார்க்க வேண்டாம். அடித்து சாத்துங்கள். 

2. நான் ஒரு புத்தகம் எழுத முயற்சி பண்ணிக்கொண்டு இருக்கிறேன். பிரிவினை என்பது எப்படி பொதுவான எகனாமிக்ஸ்க்கும் சொசைட்டிக்கும் இருக்கும் ஒரு கேன்சர் என்பதுதான் நான் அந்த புத்தகத்தில் சொல்லலாம் என்று இருக்கிறேன். ஒரு சின்ன குழந்தை , வெறும் 2 வயதுதான் . ஆனால் அந்த குழந்தைக்கும் பிரிவினை பார்த்து தொடவும் மறுக்கிறார்கள் முட்டாள்கள். இவர்களை பொறுத்த வரைக்கும் முன்னதாக சொன்னதுபோல இவர்கள் எல்லோருமே கடவுளின் குழந்தைகள் என்று பொறப்பில் இருந்தே ஒரு கற்பனை. இவங்களுடைய பட்டியில் கட்டப்படும் ஆடுகள் போலதான் இவர்களின் பிறப்புக்கு கீழே இருக்கும் ஆட்கள் இருக்க வேண்டும் என்று மட்டமான சரக்கை சாப்பிட்டது போல ஒரு போதை நினைப்பு இவர்களின் மண்டைக்குள் கைக்குழந்தையாக இருக்கும்போதே ஊறிவிடும். பிறப்பில் இருந்து சாகும் வரைக்கும் மொத்தமாகவே ஒரு வெறியான போதையில் இருந்து சாகும் இவர்களை எல்லாம் என்னவென்று சொல்ல . குப்பை ! காலகாலமாக அடிமைத்தனம் பண்ணி கிடைத்த பணத்தின் போர்வைக்குள் பிரிவினையின் போதையில் தூங்கும் குப்பைகள்.  இவர்களை எல்லாம் விட்டுவிடுங்கள். இந்த காலத்தில் நிறைய ஆப்ஷன்கள் உள்ளது. இவர்கள் பண்ணுவது தப்பு தெரியாமலே பண்ணுகிறார்கள். இவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும். இவங்களுக்கு படிப்பை பறிக்கவும் முன்னேற்றத்தை பறிக்கவும் உரிமைகளை கொடுத்தது யாரு ? இவங்களுக்கு கொடுக்க வேண்டியது தண்டனைகள்! உரிமைகள் கிடையாது!

3. நிறைய நேரத்தில வியாபாரம் பற்றி பேசும்போது கேட்கும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் பணம் எப்படி சேர்க்க முடியும் என்பதுதான். உங்களுக்கு கிடைக்கும் ஒரு ஒரு நூறு ரூபாய்யையும் நீங்க கவனமாக செலவு பண்ண வேண்டும். இங்கே எகனாமிக்ஸ் என்னைக்குமே ஒரே மாதிரி இருக்காது. ஒரு காலத்தில் வெங்காயம் ஸ்டாக் இல்லாமல் போய் வெளிநாட்டில் இருந்து கப்பலில் கொண்டுவந்து சேல்ஸ் பண்ணுண நாட்கள் எல்லாமே உங்களுக்கு நினைவில் இருக்கா ? பொருளாதாரம் அப்படிங்கற வார்த்தையிலேயே பொருள் இருக்கிறது. உங்களால நல்லபடியாக ஆடிட்டிங் பண்ணமுடியும் என்றால் நீங்கள் சம்பாதிக்கும் ஒரு ஒரு 100 ரூபாய் நோட்டையும் ATM மெஷின்னில் போடுங்கள். அப்படி இல்லை என்றால் ஒரு இரும்பு பெட்டகம் போட்டு சேர்த்து வையுங்கள். கடன் கொடுக்க வேண்டாம். கடன் வாங்கவும் வேண்டாம். நீங்கள் அவசரத்துக்கு கடன் வாங்கினால் அடைத்துவிடுவோம் என்று உங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும் ஆனால் வாழ்க்கை அப்படி செயல்படாது. உங்களுடைய முதுகெலும்பே உடைந்தாலும் கடனை அடைக்க முடியாது. இதனால் வியாபாரத்தில் மறுமுதலீடு இலாபமாக இருக்க வேண்டும். இன்வெஸ்ட்மெண்ட்ஸ்க்கும் பாண்ட் போட வேண்டும். கடனுக்கும் பாண்ட் போட்டு கொடுக்க வேண்டும். இங்கே LEGAL ஆக பண்ணுங்கள். இல்லையேல் பண்ணவே வேண்டாம். (இருந்தாலும் நம்ம ஆளு ஸ்டேட்டஸ் போடுவான் !! சட்டம் திட்டம் எல்லாம் நான் எப்பவும் மதிச்சது இல்லைன்னு நானும் தலையில் அடித்துக்கொண்டு சென்றுவிடுவேன்)


CINEMA TALKS - ENOLA HOLMES 2 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!





 இந்த படம் போன படமான எனோலா ஹோம்ஸ் 1 ஐ கம்பேர் பண்ணி பார்க்கும்போது ரொம்பவுமே இம்ப்ரூவ்மெண்ட்டான படம் , நீங்கள் போன படத்தை பார்த்தால் ஒரு தரமான சாலிட் பேமினிஸ்ட் அட்வென்சர் அந்த படத்தில் இருக்கும் , அந்த படத்தை அந்த படத்துடைய கதை நகர்த்திக்கொண்டு இருக்கும், ஒரு சில இடங்களில் படத்துடைய டோன் அப்புடியே ஆட்டோமேடிக்காக சேஞ்ச் ஆகும். அடுத்த செகண்ட் என்ன நடக்கும் என்று கெஸ் பண்ணவே முடியாது. இது எல்லாமேதான் போன படமான எனோலா ஹோம்ஸ் 1 இன் பெஸ்ட்டான விஷயம் என்றால் இந்த படத்திலும் இதே விஷயங்களோடு இன்னுமே இம்ப்ரூவ் பண்ணப்பட்ட விஷயங்களை கொடுத்து இருக்கிறார்கள். நெடிபிலிக்ஸ் இந்த படத்தை ரொம்பவுமே கவனமான முறையில் முதல் படத்தை மிஞ்சும் அளவுக்கு கொண்டுவருவதற்கு முயற்சி பண்ணியது ரொம்பவுமே பாராட்டுக்கு உரியது. 1880 களின் வேர்ல்ட் ஆஃப் இங்க்லாந்து அந்த கல்ச்சர் , கேரக்டர்ஸ் , காஸ்ட்யூம்ஸ், லொகேஷன்ஸ் இது எல்லாமே பிரமாதம்.  இந்த படத்துடைய கதை நம்ம கதாநாயகி எனோலா ஹோம்ஸ் போன படத்தில் அரசாங்க அளவில் நடந்த சதியை முறியடித்த பின்னால் கொஞ்சம் ஃபேமஸ் ஆகிறார். இனிமேல் டிடெக்டிவ்வாக இருக்கப்போகிறேன் என்று சொந்தமாக ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸி திறக்கிறார். நிறைய நாட்களுக்கு பின்னால் அவளுக்கு கிடைத்த முதல் கேஸ் என்னவென்றால் ஒரு சின்ன பெண் அவளுடைய அக்காவை காணவில்லை என்று கொடுத்த கேஸ்தான் , அது விஷயமாக ஒரு தொழிற்சாலையில் விசாரணையை ஆரம்பிக்கும்போது ஒரு கெட்டவர்களின் நெட்வொர்க் நம்ம கதாநாயகியை டார்கெட் பண்ணியதால் ஒரு கொலை கேஸ் போடப்பட்டு சிறையில் அடைக்கபடுகிறாள் எனோலா , அதிர்ஷ்டவசமாக சிறையில் இருந்து தப்பித்து வெளியே வரும் எனோலா நடக்கும் குற்றங்களின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிவாளா ? இந்த சதிகளுக்கு காரணம் என்ன என்றுதான் படத்தின் கதை, படம் ஸ்வாரஸ்யமாக நகர்கிறது. ஷெர்லாக் ஹோம்ஸ்க்கு நல்ல ஸ்கிரீன் டைம் கொடுத்து கேரக்டர் இம்ப்ரூவ்மெண்ட் பண்ணி இருக்கிறார்கள். கதை ஸ்டார் வார்ஸ் போல பெரிய கதையாக இருந்தாலும்  3 மணி நேரம் வரைக்கும் கொண்டுபோகப்படவில்லை. டாக்டர் வாட்சன் இந்த படத்தின் கிளைமாக்ஸ்ஸில் வருவதால் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கலாம். கிளைமாக்ஸ் வரைக்கும் கதை நன்றாக கொண்டுபோகப்பட்டு கிளைமாக்ஸ்ஸில் ஒரு நிஜமான வரலாறு சம்பவத்தை படத்தில் காட்டியுள்ளார்கள். இந்த படத்தில் எனோலா ஹோம்ஸ் பர்சனாலிட்டி ரொம்ப நல்ல இம்ப்ரூவ்மெண்ட் . அண்ணனை போல நுணுக்கமாக ஆராய்ந்து வேலை பார்க்கும் கதாப்பத்திரம் நமது தங்கை அல்ல. இந்த எனோலா எப்போதும் திறமையான கிரிப்ட்டோகிராபியையும் சொந்த ஆராய்ச்சியாலும் பயமே இல்லாமல் செயல்படுவதாலும் மட்டும் சாதிக்கும் குணம் உள்ளவள் என்று கேரக்டர்க்கு ஒரு சாலிட் அப்டேட் கொடுத்து இருக்கிறார்கள். இதுவுமே பாராட்டக்கூடிய ஒரு விஷயம். 

CINEMA TALKS - BLACK PANTHER - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 இந்த படத்துடைய கதை கேப்டன் அமெரிக்கா  சிவில் வார் திரைப்படத்தின் சம்பவங்களை கடந்து நடக்கிறது. இந்த படம் வெளிவந்த சமயத்தில் ரொம்ப பெரிய HYPE என்னவென்றால் BLACK PEOPLE மட்டுமே வாழும் ஒரு பணக்கார நாடாக கலாச்சாரங்கள் கொண்டாடப்படும் ஒரு கனவு உலகமாக இருக்கும் WAKANDA - இந்த நாடு நிறைய அதீத சக்திகளை உடைஉய பாதுகாப்பு தொழில் நுட்பத்தில் கருவிகளையும் சாதனங்களையும் உருவாக்கம் பண்ணுவதில் மிகச்சிறந்த நாடாக இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வெளி உலகத்துக்கே தெரியாமல் மறைக்கப்படும் நாடாக இருக்கிறது. இப்படி ஒரு நாட்டின் பெரிய அரசராக கிங் டி-சல்லா - சாட்விக் போஸ்மேன் இருக்கிறார் இவருடைய இந்த WAKANDA நாட்டில் கிடைக்கும் வைப்ரேனியம் உலோகம் யாராலும் அழிக்க முடியாத அளவுக்கு உறுதியான உலோகம் என்பதாலும் மேலும் பயங்கரமான ஆயுதங்களாக எளிதில் மாற்றப்படும் அளவுக்கு மிகவும் பயனுள்ள உலோகம் என்பதாலும் கண்டிப்பாக பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டிய ஒரு பொருள். இப்போதுதான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது. இங்கே உலக அளவில் ஆயுதங்களை உருவாக்க இந்த உலோகத்தை கொள்ளையடித்தே ஆகவேண்டும் என்று போராடும் ஸ்ட்ரைக்கர் என்ற வில்லனை தடுக்கும் முயற்சியில் WAKANDA செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. 


இங்கே அரசரின் தூரத்து சகோதரரும் இன்டர்நேஷனல் குற்றங்களுக்காக தேடப்படும் மிகவும் சக்தவாய்ந்த மனிதரும் ஆன கில்மாஞ்சர் நடப்பு நிகழ்வுகளை சாதகமாக பயன்படுத்தி நேரடியாக சவால் விட்டு அவரோடு நேர்மையாக சண்டைபோட்டு அரசரை கொலை பண்ணிவிட்டு  வாகாண்டாவின் புதிய அரசராக மாறுகிறார் , இந்த சண்டையில் பலத்த காயங்களுடன் மிகவும் அரிதாக உயிர்பிழைத்தது மக்களை காப்பாற்ற  மறுபடியும் உயிரோடு வரும் கதாநாயகர் பிளாக் பாந்தர் எப்படி அனைவரையும் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதைக்களம். இந்த படம் 2017 ஆம் ஆண்டு மார்வெல் நிறுவன சினிமா பிரபஞ்சத்தின் திரைப்படமாக அமைந்துள்ளது. நிதானமான கதை அமைப்பு மற்றும் காட்சியமைப்பு. கதையில் நேர் எதிராக வரும் இரு கதாபாத்திரங்களாக இருக்கும் பிளாக் பாந்தெர் மற்றும் கில்மொஞ்சேர் கதை முழுவதும் இரு தனித்தனி துருவங்களாக செயல்படும் விதம் புதுமையாக இருக்கும் காட்சிகளின் அமைப்புக்கு ஒரு நிதானமாக செல்லும் வரையறையை கொடுக்கிறது எனலாம்.  இந்த படத்துடைய கதைக்களத்தில் இருக்கும் கலாச்சார அமைப்புகள் மற்றும் தொழில் நுட்ப மேம்பாடுகள் மார்வெல் திரைப்படங்கள் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் அளவுக்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து இருக்கிறது எனலாம். பொதுவாக RACISM பார்க்கும் மக்கள் இந்த படத்தை பார்த்தாவது திருந்தினால் நன்றாக இருக்கும். 

ONE LINE REVIEW : "IN THE LOVING MEMORY OF ACTOR CHADWICK BOSEMAN"


Sunday, October 29, 2023

POWER OF THINKING - உங்களால முடியுமா ? முடியாதா ? - இங்கே என்ன பிரச்சனை ?




இந்த உலகத்தில் நிறைய பேர் நிறைய கருத்துக்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இங்கே ரொம்ப அதிகமாக சொல்லப்பட்டு கேட்கப்படும் கருத்து என்னன்னா வெற்றியை அடைவது எப்படி ? இந்த விஷயத்தை பற்றி வெற்றி அடைந்த எல்லோரையும் கேட்கும்போது சொல்லும் பதில் நிறைய WORK பண்ணனும் ? ஆனால் எங்கே ? எப்படி ? அது பற்றி எதுவுமே சொல்வதற்கு இல்லை. இன்னைக்கு ஒரு வீடு கட்டனும்னா உங்களிடம் பணம் இருந்தால் மட்டும் போதாது. ஃபேக்டரில ப்ரொடக்ஷன் நடக்கணும்னா அதுக்கும் பணம் இருந்தால் மட்டும் போதாது. விவசாயம் , ரோடு போடறது , எலக்ட்ரிசிட்டி , பப்ளிக் சர்வீஸ்ன்னு எந்த ஒரு வேலையாக இருந்தாலும் கடைநிலையில் வேலை செய்யும் மக்களுடைய கடின உழைப்பு காரணமாக உருவானதாகத்தான் அந்த வெற்றி இருக்கும். இங்கே நிறைய பேருடைய பணம் இல்லாத நிலையை பயன்படுத்திக்கொள்கிறார்கள். தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை தெரிந்துகொள்ளாமல் இருக்கும்போது அதனையும் பயன்படுத்திக்கொண்டு இலாபம் பார்த்துவிடுவார்கள். இந்த விஷயத்தை நானும் இளம் வயதில் பண்ணியிருக்கிறேன். எனக்கும் இந்த விஷயத்தை நிறைய பேர் செய்து இலாபம் பார்த்து இருக்கிறார்கள். உங்களால் முடியும் என்று நிறைய பேர் நிறைய விஷயத்தை சொல்லி ஏமாற்றுவார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா ? உங்களால் முடியாது. உண்மை அதுதான் உங்களால் முடியாது. பணம் , பலம் , அறிவு , திறன்கள் , இல்லைன்னா ஏதாவது ஒரு பேக் அப் உங்களிடம் இருக்கணும். அப்படி ஒரு பேக் அப் இல்லைன்னா இந்த மாதிரி விஷயங்களை பன்னும்போது உருவாகும் போட்டியை உங்களால் கண்டிப்பாக சமாளிக்கவே முடியாது. நீங்க ஒரு சினிமா படத்தின் ஹீரோ போல கிளைமாக்ஸ்ல வெற்றி அடைந்துவிடலாம் என்று நினைத்து இருக்கலாம். உண்மையான வாழ்க்கையுடைய கிளைமாக்ஸ் ரொம்ப கெட்டவர்களின் உலகத்தில் நீங்களும் கெட்டவாராக வாழவேண்டும் என்றுதான் கட்டாயப்படுத்தும். இதனை யாராலும் மறுக்க முடியாதே ! உங்களுக்கு ஒரு பாதிப்பை இன்னொருத்தர் கொடுக்கும்போது அவங்களுக்கு மறுபடியும் நீங்கள் ஒரு பாதிப்பை கொடுக்கும் அளவுக்கு பலம் உள்ளவராக இருக்க வேண்டும் அப்போதுதான் உங்களை அவங்களால் ஒண்ணுமே பண்ண முடியாது. இங்கே வெற்றி அடைய கடினமான உழைப்பு தேவை என்கிறார்கள். உண்மையில் பேக் அப் தேவை. போன தலைமுறையின் சொத்துக்கள் இல்லாமல் இந்த தலைமுறை சாதிக்க வேண்டும் என்பது மீன்களே இல்லாத நடுக்கடலில் வலையை வீசிவிட்டு படகு ஓட்டும் அளவுக்கு தர்மசங்கடமான விஷயம். இங்கே ஜெயிக்க வேண்டும் என்றால் பணம் வேண்டும். இங்கே எதனால் பணம் என்று சொல்கிறேன் என்றால் மேல்மட்டம் என்னைக்குமே அடிமட்டத்தில் இருப்பவர்கள் இன்னுமே அடிமட்டம் போக வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்; பணம் இல்லாமல் நீங்கள் சொந்தமாக முயற்சி பண்ணினால் ஒரு வருடம் நீங்கள் வேலை பார்த்தாலும் ஒரே நாளில் உடைத்து மணலும் மண்ணும்மாக மாற்றிவிடுவார்கள். மேல்மட்டம் என்னைக்குமே மேல்மட்டம்தான் அவர்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அடிமட்டம் தேவை. எல்லோருமே மேல்மட்டம் ஆகக்கூடாது என்று நிறைய விஷயங்களை பண்ணுவார்கள். இந்த மேல்மட்டம் மட்டும் எப்படி முன்னேறினார்கள் என்றால் இவர்கள் வேலை பண்ணுவதே இல்லை. இவர்களை வெற்றி அடையவைத்தது அடிமட்டம்தான். நான் பார்த்தவரைக்கும் கொஞ்சம் நல்ல மனசு உள்ளவர்கள்தான் இந்த விஷயங்களை புரிந்துகொண்டு அடிமட்டத்தில் இருப்பவர்கள் மேலே வரவேண்டும் என்று போராடுவார்கள். ஆனால் நிறைய மேல்மட்டத்தில் இருப்பவர்கள் அடிப்படை மதிப்பையும் மரியாதையையும் கொடுக்க கூட தயங்குவார்கள்.இப்படியும் ஒரு மட்டமான மேல்மட்ட ஆட்கள் இருக்கும் இடத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். மேல்மட்டத்துக்கும் அடிமட்டத்துக்கும் நடக்கும் போரானது என்னைக்குமே மாறவே மாறாது. இந்த மாதிரியான விஷயங்களை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள மட்டும்தான் முடியும். இல்லை மாற்ற வேண்டும் என்றால் 2000 வருடங்களுக்கு மேல் தேவைப்படலாம் ஆனால் நம்முடைய ஆயுட்காலம் என்பதே வெறும் 70 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதானே ? நாம் என்னதான் பண்ண முடியம் ? இங்கே பிரச்சனை நம்முடைய உழைப்பை மேல்மட்டம் எடுத்துக்கொள்வதுதான். கடவுளும் அவர்களுக்குதான் சப்போர்ட் பண்ணுகிறார். மெடிக்கல் செலவு பண்ண முடியாமல் தேய்ந்து தேய்ந்து புள்ளியாக போன குடும்பங்கள் ரொம்ப அதிகம் ! இன்னும் சொல்லப்போனால் பணத்தை ஏமாந்துவிட்டுவிட்டு இன்னைக்கு வரைக்கும் இந்த சமூகத்தில் முன்னேற முடியாமல் கவலையில் வாழும் குடும்பங்களும் ரொம்ப அதிகம் ! மேல்மட்டம் விழுந்தால் அவர்களுக்கு எந்த பிரச்சனையுமே இல்லை. அடுத்த நொடி அவர்களின் பலத்தை மறுபடி பெற்றுவிடுவார்கள். கடவுளும் அவர்களுக்குதான் சப்போர்ட் பண்ணுவார் ஆனால் அடிமட்டம் விழுந்தால் மறுமுறை எழுந்து நிற்கவே முடியாது. வாழ்நாள் முழுவதும் தரையில் விழுந்து மனம் உடைந்து உடல் தளர்ந்து இருக்க வேண்டியதுதான். நகராத கல்லறையாக அடிமட்டம் அவர்களை கெட்டியாக பிடித்துக்கொள்ளும் என்பதால் வாழ்நாளில் அவர்களால் முன்னேறுவதை பற்றி யோசிக்கவே முடியாது. அடிப்படையில் உங்களால் முடியும் முடியும் என்று உங்கள் மானதுக்குள்ளே சொல்லி சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். உங்களுடம் எதுவும் இல்லை என்றால் உங்களால் முடியாது. உங்களிடம் பணம் இருந்தால்தான் உங்களால் முடியும். உங்களுடைய வாழ்க்கையில் என்னென்ன செயல்கள் தேவைப்படுகிறதோ அதனை மட்டுமே செய்யுங்கள். காலத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம். காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது. 99 / 100 பேர் பணத்தால் மட்டும்தான் ஜெய்க்கிறார்கள். வேறு எந்த விஷயமும் அவர்களுக்கு தேவைப்பட்டது இல்லை. 

CINEMA TALKS - LKG 2019 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

\

 இங்கே நம்ம தமிழ் சினிமாவில் அரசியல் சார்ந்த படங்களில் நிறைய படங்கள் டார்க்காகவும் வயலன்ஸ் நிறைந்த படமாகவும் இருப்பதை மறுக்க முடியாது. புதுப்பேட்டை படம் போல வன்முறை நிறைந்த அரசியல் போர்க்களங்களை பார்த்து இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் இருவர் , அமைதிப்படை , என். ஜி. கெ என்று பொலிட்டிகல் படங்கள் எல்லாமே அரசியலில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை ஹைலைட் பண்ணி சொல்லிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த படம் கொஞ்சம் வித்தியாசமானது. லால்குடி கருப்பையா காந்தி என்ற கவுன்சிலர், அரசியல் நுணுக்கங்களை புரிந்துகொண்டு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி மேல் பதவிகளை அடைய முயற்சிக்கிறார். எம். எல். ஏ ஆகவேண்டும் என்ற கனவுக்காக ஒரு கார்ப்பரேட் அனாலிட்டிக்ஸ் கம்பெனியை சார்ந்த மெம்பர்ஸ்களின் சப்போர்ட்டை கேட்கிறார். ஆரம்பத்தில் மறுத்தாலும் பின்னால் சம்மதித்த நிறுவனம் மிகவும் புதுமையான பப்ளிசிட்டி மெதட்ஸ்களை பயன்படுத்தி எல்.கே. ஜியை ஒரு எம். எல். ஏ ஆக மாற்ற முயற்சி பண்ணுகிறது. இங்கே இவர்கள் அரசியலில் நிறைய தவறுகள் இருப்பதை கண்டுகொண்டாலும் அவைகளை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வெற்றியை அடைய பயன்படுத்திக்கொள்ளும் மனதுடன் இருப்பதால் அங்கே உள்ளூரின் பெரிய மனிதராக இருக்கும் ராம்ராஜ் பாண்டியனை கொஞ்சம் கொஞ்சமாக குறைகளை கொண்டவராக காட்டி மக்கள் மனதில் இடம்பிடித்து சி. எம். ஆக மாறுவது வரைக்கும் இந்த கதை போகிறது. கதை சோசியல் மீடியா மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் எப்படி நடைமுறை அரசியலில் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தில் இன்னொரு தவறான செயலாக இருக்கிறது என்று தெளிவாக சொல்கிறது. கிளைமாக்ஸ் சிம்பிள்ளாக இருந்தாலும் ரொம்ப பெஸ்ட். பொதுவாக அரசியல் என்பது மூன்று விஷயம் 1. கவர்ன்மெண்ட் 2. பிரைவேட் 3. பப்ளிக் இந்த மூன்று விஷயங்களின் இணைப்புதான் அரசியல். இங்கே GL நிறுவனத்தின் CEO மற்றும் கார்ப்பரேட் மான்ஸ்டர் சுந்தர் ராமசாமி களத்தில் இறங்கி வெற்றி அடைந்தால் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் நடைமுறையில் சாத்தியமாகுமா ? NGK படம் பார்த்தால் மனது ரொம்ப பாரமாக இருக்கும். இந்த படம் புதுபெட்டை படத்துடைய ரொம்ப டீசண்ட் எடிஷன் போல இருக்கும். அவ்வளவு சீரியஸ்ஸான படம் ஆனால் வெளிவந்த காலகட்டத்தில் நல்ல அப்ரிஸியேஷன் கிடைக்கவில்லை. ஆனால் எல்.கே.ஜி படம் வெளிவந்த டிரெய்லர்ல இருந்தே பெரிய சப்போர்ட்டுடன் இருந்தது. ஆர். ஜெ. பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் இந்த படத்துக்கு பெரிய சப்போர்ட் என்றால் சப்போர்டிங் கேரக்டர்ஸ் பண்ணும் ஜெ.கே. ரித்தீஷ். நாஞ்சில் சம்பத், மயில்சாமி என்று எல்லோருமே அவர்களுடைய பெஸ்ட்டை கொடுத்து இருக்கிறார்கள். சகுனி படம் எந்த எந்த இடங்களில் மிஸ் பண்ணியதோ அந்த இடங்களை இந்த படம் மேட்ச் பண்ணி இருக்கிறது. படத்துடைய முதல் ஸீன் முதல் கடைசி ஸீன் வரைக்கும் மொத்தமாக அரசியல்தான். நிறைய கருத்துக்கள் நல்ல நகைச்சுவை உணர்வோடு சொல்லப்படுவதால் நன்றாகவே வொர்க் அவுட் ஆகிறது. காமிரா வொர்க் ரொம்ப பிரமாதம். ஒரு படம் அதனுடய பட்ஜெட்டை மீறி ஒரு பெரிய பட்ஜெட் படம் லெவல்க்கு நல்ல வெற்றியை கொடுக்க இப்படி ஒரு எக்சல்லன்ட் சினிமாடோகிராபியும் ஒரு காரணம். இந்த படத்துக்கு வெளிவந்த நாட்களில் எல்லாம் இவ்வளவு பிரமாதமான பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. இது ஒரு நல்ல படம். கடைசியாக ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றால் ஜெ. கே. ரித்தீஷ் சாரை ரொம்பவுமே மிஸ் பண்ணுகிறோம். இந்த படத்தில் அவருடைய பெஸ்ட்டை கொடுத்து இருப்பார். 

Saturday, October 28, 2023

FREEFIRE - ANDROID GAME - TAMIL REVIEW - ஒரு ஃபைன்னஸ்ட் MMORPG வீடியோ கேம் !!


 இந்த வீடியோ கேம்மை ஒரு வீடியோ கேம்மாக பார்க்காமல் ஒரு பிசினஸ் மாடல்லாக பாருங்கள்  , சொல்லப்போனால் இந்த கேம் ரொம்பவுமே ஃபேன்டாஸ்டிக்காக இருக்கு, நிறைய OPEN WORLD கேம்ஸ் சாதிக்காத ஒரு விஷயத்தை FREEFIRE சாதித்து இருக்கிறது. அதுதான் தினம் தினம் அப்டேட் பண்ணுவது. இந்த வீடியோகேம் ஒரு பெரிய விஷயம். அதிகபட்சம் 1.5 கோடி பேர் ஒரே நேரத்தில் இந்த கேம் விளையாடுகிறார்கள் . 1,00,000 கோடிக்கு மேல் இந்த கணினி விளையாட்டு சம்பாதித்து உள்ளது. இந்த கேம் எதனால் இந்த அளவுக்கு சாதனை படைத்து உள்ளது ? கொஞ்சம் அலசி பார்க்கலாம். இந்த குறிப்பிட்ட கணினி விளையாட்டு ரொம்ப ரொம்ப பிரமாதமான கான்செப்ட். அடிப்படையில ஒரு மேப் லொகேஷன். அந்த லொகேஷன்ல இறக்கப்படும் 50 உண்மையான வாழ்க்கையின் ஆன்லைன் பிளேயர்ஸ் , இந்த பிளேயர்ஸ்களில் ரோபோட்கள் இருப்பது போல தெரியவில்லை. ஆனால் நன்றாக காம்பேட் மெதட்ஸ் டிசைன் பண்ணப்பட்டு இருக்கிறது. இந்த 50 பேரும் ஒருவருக்கு ஒருவர் நேருக்கு நேராக மோதிக்கொள்ளும் வரைக்கும் மேப்பின் லொகேஷன் குறைந்துகொண்டே வருகிறது. ஒரு கட்டத்தில் லொகேஷன் ஒரு சின்ன வட்டத்துக்குள் செல்கிறது. இந்த வட்டம் வரைக்கும் உயிரோடு இருந்தால் டாப் 50 ல் இடம் பிடித்துவிடலாம். புதிய சக்தியை அடைய கோல்ட் அல்லது டைமண்ட்ஸ் வாங்க வேண்டும். அவைகளுக்குதான் பெரும்பாலும் பணம். GOOGLE PLAY அல்லது BANK ACCOUNT ல் இருந்து பணத்தை அனுப்பி புதிய பொருட்களை சக்திகளை வாங்கி இந்த விளையாட்டில் பயன்படுத்தலாம். இந்த விளையாட்டு போகப்போக கடினமாக மாறுகிறது. இங்கே பிளேயர்ஸை கட்டுப்படுத்துவது போல தெரியவில்லை. நிஜ வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்கிறது அதுக்குதான் பணம் சம்பாதிக்க வேண்டும் ஆனால் நிஜத்தில் பணம் அதிகமாக வைத்து இருப்பவரை நம்மால் ஜெயிக்க முடியாது என்றால் இந்த FF போன்ற கணினி விளையாட்டில் வெற்றி அடைய முடிகிறது என்ற சந்தோஷம் கிடைக்கிறது. அதுதான் பிரச்சனை. இங்கே தொடக்கத்தில் பெரிய அக்கவுண்ட் வைத்து இருந்தாலும் சின்ன அக்கவுண்ட் வைத்து இருந்தாலும் அடிப்படையில் கிரவுண்ட்க்குள் விடும்போது எந்த சக்திகளும் இல்லாமல்தான் குதிக்கிறார்கள். இங்கே அனைவரும் சமமான பலத்தோடு ஆரம்பத்தில் இருப்பதால் மோதல் கடினமாகிறது. இங்கே மோதுவது நிஜமான மனிதர்கள் என்பதால் கம்ப்யூட்டர் பாட்ஸ்களுக்கு வேலை இல்லை. இன்டர்நெட் சர்வர் மட்டுமே மெயின்டய்ன் பண்ணுனால் போதும் இன் ஆப் பர்சேஸ்ல கைமேல் பணம். இந்த கேம் நேத்து இருந்தது போல அடுத்த நாள் இருக்காது. ஒரு ஒரு 2-3 நாட்களுக்கும் நிறைய புது புது அப்டேட்கள் இந்த விளையாட்டில் இருக்கும். ரேங்க் எடுக்கும்போது கிடைக்கும் போனஸ்தான் தங்க நாணயங்கள். நீங்கள் விளையாட்டில் வெற்றி அடைந்தால் நாணயங்கள் கிடைத்துவிடும் என்று கனவில் கூட நினைத்து பார்க்க வேண்டாம். ப்ரோன்ஸ் , சில்வர் , கோல்ட் , பிளாட்டினம் என்று ஒரு ஒரு ரேங்க் ஏறும்போதுதான் இங்கே பணம் அதிகமாக கிடைக்கிறது. மொத்தமாக ஒரு நல்ல பொசிஷன்க்கு வரவேண்டும் என்றால் உங்களுக்கு 30 நாட்களுக்கு மேலே கூட தேவைப்படலாம். இன்னொரு ஆப்ஷன் வைரங்களை அள்ளுவது ! இந்த வைரங்களில் 500 வைரங்கள் 10000 தங்க நாணயங்களுக்கு சமம் !! ஆனால் நான் விளையாடிய கணக்குப்படி பார்த்தால் கூட ஒரு ஒரு 1000 வைரங்களுக்கும் குறைந்தபட்சம் ❤ 400/- ரூபாய்யாவது கொடுக்க வேண்டும். இந்த கேம் பெஸ்ட்டான கேம் இல்லை என்று நிறைய பேர் சொல்கிறார்கள் ஆனால் உண்மையில் ஒரு டெக்னிக்கல் பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து பார்த்தால் ரொம்ப பெஸ்ட்டான கேம். தேவையான கிராபிக்ஸ்களை டவுன்லோட் பண்ணிவிட்டால் பின்னால் பிரச்சனையே இல்லை. நெட்வொர்க் மட்டும் இருந்தால் போதும். இந்த கேம்க்கு போட்டியாக இருக்கும் இன்னொரு கேம் போல பெரிய லெவல் ஃபோன் வைத்து இருந்தால்தான் சப்போர்ட் பண்ணுவேன் என்று இந்த கேம் சொல்லாது !! கொஞ்சமாக பணம் வைத்து 12000/- வரை விலை உள்ள ஃபோன் வாங்கினால் கூட கம்மி கிராபிக்ஸ் செட்டிங்கில் மீடியமாக விளையாடலாம். ஒரு AAA கேம் அளவுக்கு OPEN WORLD ADVENTURE இந்த கேம் கொடுக்கும். யாராவது ஒருவரை கம்ப்ளைண்ட் பண்ணினால் கூட தகுந்த ரெஸ்பான்ஸ் இந்த கேம்மில் இருக்கிறது. இந்த கம்பெனியில் இருந்து நிறைய சப்போர்ட் கொடுக்கிறார்கள். மேலும் அப்டேட்கள், ஸ்பெஷல் சீசன்கள் , க்ராஃப்ட்லாண்ட் போன்ற விஷயங்கள் எல்லாம் நல்ல ரெஸ்பான்ஸ். 6 HOUR கேம் லிமிட் உண்மையில் ஒரு நல்ல விஷயம். இந்த கேம்ல நிஜமான மனிதர்கள் கூட விளையாடுவதால் செஸ் மற்றும் காரம் போர்ட்க்கு சற்றும் குறைந்தது இல்லை இந்த ஃப்ரீ பயர்.. மொத்ததில் பிரமாதமான முறையில் டிசைன் பண்ணப்பட்ட கணினி விளையாட்டு ஆனால் ஆன்ட்ராய்ட்டில் மட்டும்தான் விளையாட முடிகிறது. 

Friday, October 27, 2023

CINEMA TALKS - ENOLA HOLMES - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

  இந்த படம் ஷெர்லாக் ஹோம்ஸ் படம் போல ரொம்ப எண்டர்டெயின்மெண்ட் ஃபோகஸ் பண்ணின படம் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அதுதான் இல்லை. இந்த படம் எனோலா ஹோம்ஸ் என்ற ஒரு துணிவான டிடெக்டிவ் பெண்ணின் வாழ்க்கை. இங்கே முதலில் எனோலா ஹோம்ஸ் யாரென்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எனோலா ஹோம்ஸ் , ஷெர்லாக் ஹோம்ஸ் உடைய தங்கை. தன்னுடைய சிறிய வயதில் இருந்தே வீட்டில் இருந்து வளர்க்கப்படும் எனோலா ஹோம்ஸ் கஷ்டமான புதிர்களை சரிபண்ணுவதிலும் முறையான சண்டைப்பயிற்சி கற்றுக்கொள்வதிலும் இன்னும் நிறைய விஷயங்களில் மிகவும் சிறப்பானவளாக இருக்கிறாள். எனோலா பள்ளிப்படிப்பு போகாமல் வீட்டில் இருந்தே கற்றுக்கொள்வதால் மிகவும் சிறப்பான பெண்ணாக வளர்கிறாள். ஒரு நாள் எனோலாவின் அம்மா எனோலாவுக்காக நிறைய புதிரான மெசேஜ்களை விட்டுவிட்டு காணாமல் எங்கேயோ சென்றுவிடுகிறார். எனோலா அந்த புதிர்களை தொடர்ந்து சென்று நடந்த செயல்களுக்கான காரணத்தை கண்டுபிடிக்க நினைக்கிறாள். இதனை அடுத்து அவள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன ? கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய அம்மா எங்கே இருக்கிறார் ? என்று கண்டுபிடிக்க முயற்சிகளை செய்துகொண்டு இருக்கும் எனோலா ஹோம்ஸ்க்கு எப்படி பின்னாட்களில் ஒரு மிகப்பெரிய அரசியல் சதியை முறியடிக்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது என்று இந்த படத்தில் மிகவும் அருமையாக சொல்லி இருப்பார்கள். இந்த படம் 2006 முதல் வெளிவந்த தி எனோலா ஹோம்ஸ் மிஸ்ட்டரி என்ற ஃபேன் ஃபிக்ஷன் புத்தகங்களை அடிப்படையாக கொண்டது.  ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் பப்ளிக் டொமைன் என்பதாலும் காப்புரிமை இல்லாத கதைகள் என்பதாலும் இந்த படத்தில் நிறைய காட்சிகளும் கதாப்பாத்திரங்களின் பர்சனாலிட்டிக்களும் மாற்றப்பட்டு உள்ளது. (MYCROFT HOLMES - ? வில்லனா ?) மாற்றப்பட்டு இருக்கிறது. 

Tuesday, October 24, 2023

CINEMA TALKS - CINEMA TAMIL SONGS V. INDEPENDENT ALBUM TAMIL SONGS - கட்டுரை !

 



நான் தமிழ் சினிமாவின் மியூசிக்கை ரொம்ப நாட்களாக கேட்டுக்கொண்டு இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ரொம்ப வருடங்களாகவே கேட்டுக்கொண்டு இருக்கிறேன். ஒரு அமரிக்க இசை போலவோ ஒரு கொரியா இசை போலவோ நம்ம ஊருக்குள்ள இசையும் பாடல்களும் வணிக வெற்றியை அடைவது கிடையாது. நான் 2000 ல டேப் ரெகார்டர் பாடல்களின் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவின் பாடல்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால்  கிட்டத்தட்ட 10000 தமிழ் பாடல்களுக்கு மேலே கேட்டு இருக்கிறேன். இங்கே நிலை என்னவென்றால் தமிழ் சினிமாவில் இடம்பெற்ற பாடல்கள் மட்டும் தொலைக்காட்சி , வானொலி மற்றும் இதர எல்லா மீடியாக்களாலும் கவனிக்கப்பட்டு பாராட்டப்படுகிறது. ஆனால்  இன்டிபெண்டன்ட்டான மியூசிக்குக்கு அதே அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறதா ? 

ஒரு காலத்துல நான் காலேஜ் பஸ்ல போகும்போது இந்த பாட்டு SCOOTER VANDI - KASH VILLAINZ x OG DASS நான் கேட்டேன். எனக்கு இந்த பாட்டு ரொம்பவுமே ஸ்வரஸ்யமாக இருந்துது. குறிப்பாக மியூசிக் , வாய்ஸ் , சவுண்ட் எஃபக்ட்ஸ்லன்னு எல்லாமே பெஸ்ட்தான். இந்த பாட்டு மட்டுமே இல்லை , கனவெல்லாம் நீதானே , ஒளியாதே ஒளியாதே , அப்படின்னு நிறைய பாடல்கள் இன்டிபெண்டன்ட் மியூசிக்காக மட்டும் ஹிட் ஆனது. இது வரைக்கும் இந்த கனவெல்லாம் நீதானே பாட்டை விட பெஸ்ட்டான ஆல்பம் சாங்க் , அல்லது ஸ்கூட்டர் வண்டி பாட்டை விட பெஸ்ட்டான சாங்க் என்று எதுவுமே எனக்கு தெரிந்து சொல்ல முடியாது. இந்த பாட்டுக்கு எல்லாம் சினிமா பட்ஜெட் போல பெரிய ப்ரொடக்ஷன் வேல்யூ இருப்பது இல்லை. நீங்க "மீசைய முறுக்கு" என்ற ஹிப் ஹாப் தமிழா படத்தை பார்த்தால் உங்களுக்கே புரியும்  2012 வரைக்கும் இன்டிபெண்டன்ட் மியூசிக் பாடல்களை பெரிய அளவில் பப்ளிஷ் பண்ண வேண்டும் என்பதும் மேலும் அந்த பட்டை நெறைய பேர் பலமுறை கேட்டு ரசித்து பின்னாட்களில்  ஹிட் பண்ண வேண்டும் என்பது எல்லாமே ரொம்ப ரொம்ப கஷ்டமான நடைமுறையாக மட்டும்தான் இருந்தது. 

இப்போ இதையே சினிமா சவுண்ட் டிராக்ல கம்பேர் பண்ணி பார்க்கலாமா ? வெப்பம் படத்தில் மழை வரும் அறிகுறி ! என் விழிகளில் தெரியுதே ! மனம் இன்று நனையுதே இது காதலா ? சாதலா ? இந்த பாட்டு இதே 2000 - 2015 வருடங்களின் காலகட்டத்தில் வெளிவந்த ஹிட்தான். இந்த குறிப்பிட்ட படம் வெப்பம் பாக்ஸ் ஆபீஸ்ல பெரிய சாதனையை கொடுக்கவில்லை ஆனால் இந்த பாட்டு இந்த படத்தை ஒரு ஒரு தமிழ் பிளேலிஸ்ட்லயும் சேர்த்துவிட்டு இருக்கிறது. இந்த பாடலை இசையமைத்து கொடுத்தது ஜோஸ்வா ஸ்ரீதர் அப்படினு ஒரு இசையமைப்பாளர். இந்த பாட்டு வெளிவந்த நாட்கள்ள ரொம்ப பெரிய சூப்பர் ஹிட். அதே சமயத்தில் ஆல்பம் ஸாங்க்ஸ்களும் ஒரு அளவுக்கு ஹிட் கொடுத்துக்கொண்டுதான் இருந்தது. இது எல்லாமே GPRS , 3 G HSPA காலகட்டம் ஆனால் இந்த காலகட்டத்தில் 4 G இருப்பதால் பாட்டு என்றாலே யுட்யூப்ல வெளிவரும் தமிழ் சினிமா பாடல்களை மட்டும்தான் சொல்ல முடியும். ஒரு தனித்த இன்டிபெண்டன்ட் ஹிட் தமிழ் சாங்க் என்று பார்த்தால் 2020 - ல இருந்து 2023 வரையிலும் கூட விரல் விட்டு எண்ணிவிடலாம். 

CINEMA TALKS - JAGAME THANDHIRAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 




ஒரு நெகட்டிவ்வான கதாப்பாத்திரத்தை படத்துடைய கிளைமாக்ஸ் வரைக்கும் நெகட்டிவ்வாகவே கொண்டு போவது ரொம்பவுமே சிக்கலான விஷயம். கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்துல இந்த கதைக்கு ரொம்பவுமே கவனமாக கேரக்டர் டிசைன் கொடுத்து இருக்காரு. இந்த படத்துடைய ஹீரோ சுருளி உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இந்த படத்தில் ரொம்ப மாஸ்ஸான ஹீரோதான். இந்த படத்துடைய கதை , சுருளி சென்னையின் முக்கியமான பகுதிகளில் தன்னுடைய நெருக்கமான ஆட்களை மட்டுமே ஆதரவு கொடுத்து அதிகாரத்தை காட்டும் ஒரு மனிதர். தான் செய்யும் விஷயங்கள் சரியானதா என்று யோசித்ததே இல்லை. இங்கே ஒரு இன்டர்நேஷனல் அஸ்ஸைன்மென்ட் , இந்த அசைன்மெண்ட் கொடுத்த பீட்டர் வெள்ளை ஆதிக்கத்தை மட்டுமே விரும்பும் ஒரு வில்லனாக அமெரிக்காவில் இனவெறிமிக்க கோபக்கார அதிகாரியாக இருக்கிறார். இவருடைய அமெரிக்க வாழ்க்கையில் இவருடைய நிறத்தையும் இனத்தையும் வெறுக்கும் மனநிலையால் நிறைய பேரை துன்புறுத்துகிறார். இவரால் தோற்கடிக்க முடியாத ஒருவராகவும் சமூக சமநிலையற்ற அமெரிக்காவால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவருக்கு உதவி பண்ணும் நல்ல மனதுள்ள கடத்தல் தலைவராக இருக்கும் சிவதாஸை சதிசெய்து கொல்லத்தான் சுருளியை வேலைக்கு சேர்க்கிறார். அடுத்து நடக்கும் திருப்பங்கள் என்ன ? இந்த நேர் மோதல் கடைசியில் எப்படிப்பட்ட பாதிப்புகளை நிகழ்த்துகிறது என்பதுதான் ஜகமே தந்திரம் படத்தின் கதை, நான் கண்டிப்பாக ரசித்த ஒரு விஷயம் காமிரா வொர்க். சொல்லப்போனால் ஒவ்வொரு காட்சியும் ரொம்ப ரொம்ப பெஸ்ட்டாக எடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு படமாக அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு நல்ல ஃபிக்ஷன் மாஸ் எண்டர்டெயின்மெண்ட். இருந்தாலும் காட்சிகளில் கரெக்ட்டான கலர்ஸ் இருப்பதால் இந்த படம் சினிமாடோகிராபிக்காகவே திரும்ப திரும்ப பார்க்கலாம் என்று தோன்றுகிறது. பின்னணி இசை டீஸண்ட் , ஸ்வாக் அப்பறம் மாஸ். ஒரு பக்காவான கேங்ஸ்டர் படம் என்பதால் கொஞ்சமுமே குறை வைக்காமல் ஆக்ஷன்னை இந்த பின்னணி இசை கொடுத்துள்ளது. இந்த படத்தில் நிறைய பிளஸ் பாயிண்ட் இருந்தாலும் பெரிய பிளஸ் பாயிண்ட் தனுஷ் அண்ட் பீட்டர் உடைய நேர் ஆப்போஸிட்டான எண்ணங்கள் கிளைமாக்ஸ்ல நேருக்கு நேராக மோதும்போது வெளிப்படுவதுதான். அதுவரைக்கும் நல்லவன் , ஹீரோ , திருந்திவிட்டாரு , மனது வருந்திவிட்டார் என்று எந்த கதையும் சொல்லாமல் தனக்கு சரியென்று பட்டதை யோசிக்காம பண்ணும் ஒரு மோசமான மனிதனாகவே கிளைமாக்ஸ் வரைக்குமே ஹீரோவின் கதாப்பாத்திரம் சென்றுக்கொண்டு இருக்கும், ஒரு மாஸ் ஹீரோவாக நம்ம தனுஷ் ரொம்ப அருமையான கேரக்டர் டிசைன் எடுத்து நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இந்த படம் ரொம்ப பெஸ்ட்டாகவே கொடுத்து இருக்கிறார். இந்த படம் பார்க்காதவர்கள் கண்டிப்பாக சென்று பாருங்கள். ஒரு நல்ல கமர்ஷியல் ஆக்ஷன் டிராமா. கொஞ்சம் மெசேஜ் கலந்து இருக்கும். ஒரு மனுஷன் தனக்கு ஆதரவு இல்லை என்று சொன்னால் அவனிடம் பேப்பர்ஸ் பார்க்கக்கூடாது. மனிதன்மை காட்டாமல் வெறுப்பு மட்டும் காட்டும் மனுஷங்களும் உலகத்தில் இருக்கதான் செய்கிறார்கள். புது ஜெனெரேஷன்க்கு இந்த கருத்துக்கள் கண்டிப்பாக சென்று சேர வேண்டும்.

Monday, October 23, 2023

CINEMA TALKS - POLLADHAVAN 2007 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !






இந்த படத்துடைய கதையே இந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் ரொம்பவுமே புதுமையாக இருந்தது. ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் படம்தான். அதே சமயத்தில் நிறைய பாயிண்ட் ஆஃப் வியூல இருந்து யோசித்து பார்த்தாலும் ரொம்பவுமே பிரமாதமான ஒரு அவுட் ஆஃப் பாக்ஸ் படம்தான் இந்த பொல்லாதவன். ஒரு சராசரி பையன் அவனுடைய வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லாமல் நல்ல வேலை கிடைக்காமல் நண்பர்களோடு இருக்கிறான். ஒரு பைக் வாங்கவேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஆசை இருந்தாலும் எதுவுமே பண்ண முடியவில்லை. கடைசியாக ஒரு கட்டத்தில் அப்பா அவனை புரிந்துகொண்டு அவருடைய பல வருட சேமிப்பில் கஷ்டப்பட்டு சம்பாதித்து வைத்த பணத்தை கொடுத்து பையனுக்கு ஹெல்ப் பண்ணியதால் பையன் பைக் வாங்குகிறான். அப்போது இருந்து அவனுடைய வாழ்க்கையில் எல்லாமே நன்றாக நடக்கிறது. புது வேலை , நல்ல சம்பளம் , காதல் , குடும்பத்தில் மதிப்பு மரியாதை, வெளியில் அங்கீகாரம் என்று எல்லாமே அவனுடைய வாழ்க்கையில் கிடைக்கிறது. இப்போது அந்த பைக் அவனை விட்டு போகிறது. ஒரு கெட்டவங்களின் நெட்வொர்க்கால் அந்த பைக் திருடப்படுகிறது என்னும்போது எப்படியாச்சும் அந்த பைக்கை மீட்கனும்னு அந்த பையன் பண்ணும் போராட்டங்கள்தான் இந்த படத்தின் கதை. சென்னையில் ஒரு கஷ்டப்படும் குடும்பத்துல அபார்ட்மெண்டு வாழ்க்கையின் பேக்டிராப்ல ஒரு தரமான படம் இந்த படம். பிளாக் ஷர்ட்க்கும் பஜாஜ் பல்ஸர் பைக்குக்கும் ரொம்ப பெரிய மாஸ் கிரியேட் பண்ணுண படம் இந்த படம். நம்ம தமிழ் சினிமா வரலாற்றில் ரொம்ப முக்கியமான படம் அப்படின்னு இந்த படத்தை என்னால கண்டிப்பாக சொல்ல முடியும். ஒரு காலத்தில் எல்லாம் ஒரு பாட்டை நான் ரேடியோல கேட்கும்போது இந்த பாட்டின் யுனிவெர்ஸ்லயே வாழனும்னு யோசிச்ச பாட்டு மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம் ! இந்த பாட்டு நான் ஒரு ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்கும் ஒரு ரொமான்ஸ் சாங்க். காதல்ல இருப்பவர்கள் அவங்களுடைய காதலியுடன் ஸ்பெண்ட் பண்ணும் முதல் மழைக்காலத்தை இந்த பாட்டு உங்களுக்கு கொடுக்கும். இந்த படம் கமர்ஷியல் படங்களிலேயே ரொம்ப மாஸ் நிறைந்த படம். இப்போதுதான் டிஜிட்டல் காமிரா இருக்கிறது ஆனால் அப்போது எல்லாமே பிலிம் காமிராதான். இந்த படம் அளவுக்கு டேடிக்கெட்டட்டாக ஒரு பெரிய இன்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு சில படங்கள் மட்டும்தான் அந்த படத்தில் இருக்கும் கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையை மொத்தமாக திரையில் கொண்டுவருவதில் சாதித்துக்காட்டும். இந்த படமும் அப்படிப்பட்ட படம்தான். அப்பா , அம்மா , நண்பர்கள் என்று ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கும் நம்ம கதாநாயகன் வாழ்க்கையில் பிரச்சனைகள் நடக்கும்போது இந்த படம் பார்க்கும் நாமும் அந்த கதைக்குள் அவனுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிப்போம் அவ்வளவு நேர்த்தியாக இந்த படத்தின் காட்சியமைப்புகள் நிறைந்து இருக்கும். கிளைமாக்ஸ்ல தனி ஒரு மனுஷனாக அவனுடைய குடும்பத்தை தாக்க வரும் எல்லோரையும் தடுக்கும் காட்சிகள் எல்லாம் மாஸ்ஸின் உச்சகட்டம் என்றே சொல்லலாம். 2000 - 2010 காலகட்டத்தில் நான் ரொம்ப நேசித்த படம். இன்னுமே எனக்கு பிடிச்ச படம் இந்த படம். 

CINEMA TALKS - NERUKKU NER - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



இந்த படம் நீங்கள் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ஒரு படம் , ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் கணவன் மனைவியாக இருக்கும் ரகுவரன்-ஷாந்தி பிரிந்ததால் விவகாரத்துக்கு பின்னால் இவர்களுடைய குழந்தை அம்மாவின் வளர்ப்பில் வளர வேண்டும் என்று கோர்ட் தீர்ப்பு காரணமாக முடிவு எடுக்கப்படுகிறது. இங்கே இந்த இரண்டு குடும்பத்திலும் ரகுவின் தம்பி விஜய்யும் ஷாந்தியின் தம்பி சூரியாவும் ஒருவருக்கு ஒருவர் அதிகமாக வெறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி ஒரு பக்கம் போகும்போது விஜய் வாழ்க்கையில் ஒரு காதல் , சூரியா வாழ்க்கையிலும் ஒரு காதல். பிரச்சனைகள் ஒரு அளவுக்கு சமாதானம் அடையும் நிலையில் ரகு அவருடைய அரசாங்க அலுவலகத்தில் நேர்மையாக இருந்து லஞ்சம் வாங்காமல் தவறான செயல்களை செய்ய மறுத்ததால் கோபமாக இருக்கும் பணத்தை மோசடி பண்ணிய இந்த படத்தின் மோஸ்ட் வாண்டெட் வில்லனாக களம் இறங்கும் குமாரசாமி குழந்தையை கடத்தி செல்லவே நேருக்கு நேராக மோதிக்கொண்ட இருவரும் சேர்ந்து அந்த குழந்தையை காப்பாற்ற போராடுவதுதான் படத்தின் கதைக்களம். 1997 களின் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதால் அந்த காலத்தின் உலகத்துக்கே இந்த படம் கொண்டு போய்விடும் , மனம் விரும்புதே பாடல் முதல் எங்கெங்கே இன்பம் என்ற பாடல் வரைக்கும் சவுண்ட்டிராக் ஆல்பம் இந்த படத்தில் ரொம்ப பிரமாதமாக அமைந்து இருக்கும். கண்டதும் காதல் என்ற ஃபார்முலா காதல் கதைதான் ஆனால் படத்தின் கமர்ஷியல் கதைத்தொகுப்புக்கு ஃபார்முலா கண்டிப்பாக பிளஸ் பாயிண்ட்டாக இருந்து இருக்கிறது. உங்களுக்கு ஒரு சேஞ்ச் வேண்டும் என்று நினைத்தால் ஒரு ரெட்ரோ காலத்து படம் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் இந்த படம் என்னுடைய ரெகமண்ட்டேஷன். ஒரு கமர்ஷியல் படம்தான் இருந்தாலும் வெளியிடப்பட்ட காலகட்டத்தில் நல்ல வரவேற்பு பெற்ற படம் இந்த படம். உங்களுடைய காணும் பட்டியலில் (வாட்ச்லிஸ்ட்) இந்த படத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். 

Sunday, October 22, 2023

CINEMA TALKS - NAAN - 2012 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்க்கையில் நிறைய கஷ்டம். ஒரே ஒரு வாய்ப்பு கிடைக்குது. நல்லது கேட்டது பார்க்காமல் அவனுடைய மனசுக்கு சரின்னு பட்ட விஷயத்தை பண்ணினால் அவனுடைய வாழ்நாளில் இருக்கும் எல்லா பிரச்சனைகளிலும் வெளியே வந்துவிடலாம். இந்த ஒரு சாய்ஸ் தவிர அவனுக்கு என்று இன்னொரு சாய்ஸ் கிடையாது. இந்த ஒரு விஷயத்தை அவன் கட்டாயமாக பண்ணித்தான் ஆகவேண்டும். அதுதான் இந்த படத்தில் கார்த்திக் கதாப்பத்திரம். இந்த படம் 2012 ல வெளிவந்த படம். விஜய் ஆண்டனி இந்த படத்தில்தான் கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருப்பார். இன்றைக்கு பார்த்தால் கூட ஒரு நல்ல THRILLER படம்தான் இந்த படம். கார்த்திக் அவனுடைய வாழ்க்கையில பண்ணின தவறுக்காக டிடென்ஷன் சென்டர்ல வளர்ந்த பையன். வெளியே வந்ததும் வேலை கிடைக்காமல் கட்டாயமான பிரச்சனைகளை சந்திக்கும் கார்த்திக் ஒரு பஸ் ஆக்சிடென்ட் நடக்கும்போது அவருக்கு கிடைத்த சலீம் என்ற பையனுடைய சான்றிதழ்களை வைத்து மெடிக்கல் காலேஜ்ஜில் சேர்ந்துவிடுகிறார், அங்கே கிடைத்த நண்பனான அசோக் அவனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார், இவர்களின் பணக்கார காதல் , இரவு கலாச்சாரம் எல்லாம் பிடித்தும் பிடிக்காமலும் சலீம்க்கு வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறவே ஒரு மோசமான நாள் அன்று ஒரு விபத்தால் அசோக் அகால மரணம் அடைகிறார். ஆனால் இந்த சம்பவம் காவல் துறையால் கொலை என்று கருதப்பட்டால் கார்த்திக் அவனுடைய வாழ்க்கையே நாசமாக போய்விடும் என்ற இக்கட்டான  நிலையில் கார்த்திக் / சலீம் எடுக்கும் முடிவுகள் என்ன ? எப்படி இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வருகிறார் என்பதை இந்த படத்தின் திரைக்கதையாக அமைத்து இருப்பார்கள். இந்த படம் வெளிவந்தபோது அவ்வளவு வரவேற்பு இருந்தது. "உலகினில் மிக உயரம்" , "மாக்காயலா மாக்கயலா" , "தப்பெல்லாம் தப்பே இல்லை" என்று மூன்று பாடல்கள் இந்த படத்தில் இருக்கிறது. ஒரு சில படங்களில் 5 பாடல்கள் இருந்தாலும் படத்துடைய காட்சிகளுக்கு பெரிய LAG ஆக இருக்கும் ஆனால் இந்த படத்துடைய மூன்று நிலைகளை இந்த பாடல்கள் பிரதிபலிப்பு பண்ணுவது போல இருக்கும். விஜய் ஆண்டனி இந்த படத்தில் ரொம்பவுமே பெஸ்ட் ஆஃப் பெஸ்ட். மற்றபடி சித்தார்த் வேணுகோபால் , ரூபா மஞ்சாரி , மற்றும் நிறைய சப்போர்டிங் ஆக்டர்ஸ் எல்லோருமே பெஸ்ட்டாக இந்த படத்துக்கு பண்ணிக்கொடுத்து இருப்பார்கள். சினிமாட்டோகிராபி ரொம்பவுமே சூப்பர்ராக இருக்கும். இந்த படம் உங்களுடைய வாழ்க்கையில் வேல்யூ ரொம்ப முக்கியமானது என்ற விஷயத்தை எப்படி சந்தர்ப்பமும் சூழநிலைகளும் ரொம்பவுமே கஷ்டத்தையும் வலியையும் கொடுத்து மனுஷங்களை வேல்யூ இல்லாத நிலைமைக்கு கொண்டுவந்து நிறுத்தும் என்று நன்றாக சொல்லி இருப்பார்கள். இந்த படத்தின் நிறைய பிளஸ் பாயிண்ட் இருக்கிறது. 2012 ல வெளிவந்த நிறைய படங்களில் அந்த வருடத்தின் பெஸ்ட் சினிமா என்று இந்த படத்தை கண்டிப்பாக சொல்லலாம். இங்கே ரஜினி , அஜீத் , விஜய் , சூர்யா போன்ற நடிகர்கள் நடித்து வெளிவந்த படங்கள்தான் ஸ்டார் வேல்யூ காரணமாக பெரிய ஹிட் கொடுக்கிறது. இந்த மாதிரி புது நடிகர்களை கொண்டு வெளிவந்த படங்கள் எல்லாம் நம்ம சப்போர்ட்னால மட்டும்தான் வெற்றி அடைய முடியும். இந்த மாதிரி நல்ல கருத்துள்ள படங்கள் அதே சமயம் மறுமுறை மறுமுறை பார்க்க வைக்கும் அளவுக்கு விறுவிறுப்பான படங்கள் நம்ம தமிழ் சினிமாவுக்கு நிறையவே தேவை. சினிமா ஒரு ஃபார்ம் ஆஃப் ஆர்ட் கிடையாது. சினிமா ஒரு புரஃபஷன், இந்த மாதிரி நல்ல படங்கள் கொடுத்தால் மட்டும்தான் சினிமா அதனுடைய நெக்ஸ்ட் லெவல் அடையும். மொத்ததில் இந்த படம் ஒரு நல்ல படம். கண்டிப்பாக பாருங்கள். இந்த மாதிரி நிறைய படங்களின் விமர்சனங்களை தெரிந்துகொள்ளவும் மேலும் நிறைய தகவல்களையும் தெரிந்துகொள்ளவும் என்னுடைய இந்த NICE TAMIL BLOG க்கு நிறைய சப்போர்ட் கொடுத்து FOLLOWBACK கொடுங்கள். இந்த காலத்தில் நல்ல TAMIL BLOG கள் ரொம்பவுமே குறைந்துவிட்டது. நீங்கள் சப்போர்ட் பண்ணினால் மட்டும்தான் தமிழ்ல என்னால இந்த வெப்சைட்டை மேற்கொண்டு இன்னும் நிறைய முன்னேற்றத்தை கொடுத்து கொண்டுபோக முடியும். கண்டிப்பாக சப்போர்ட் பண்ணுங்கள். தேங்க்ஸ். 

CINEMA TALKS - THIRUCHITRAMBALAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 




ஒரு சில நேரங்களில் நிறைய கமர்ஷியல் படங்களை பார்த்துவிட்டு ஒரு ரிலிஃப்பான ரொமான்டிக் காதல் கதையை பார்க்கவேண்டும் என்று தோன்றும் அப்படிப்பட்ட கதைதான் இந்த திருச்சிற்றம்பலம். இந்த படத்தை பற்றி சொல்லனும்னா ரொம்பவுமே எதார்த்தமான அழகான ஃபேமிலி காதல் கதை. ஒரு சிட்டி லைப் ஸ்டைல்ல நடுத்தர குடும்பத்தில் இருக்கும் ஸ்மார்ட்டான பையன்தான் நம்ம ஹீரோ திருச்சிற்றம்பலம். ஒரு நல்ல மெச்சூரிட்டியான ஹீரோ. குடும்பத்தை காப்பாற்றி கஷ்ட நஷ்டங்களை தாண்டி அவரை நேசிப்பவர்களை நேசிக்கக்கூடிய ஒரு மனிதன். இளையராஜா பாட்டு முதல் கிராமத்து காதல் வரைக்கும் ஒரு நடுத்தரமான குடும்பத்து பையனுடைய வாழ்க்கையின் நிறைய சம்பவங்கள் இந்த படத்துல ரொம்பவுமே நன்றாக காட்சிப்படுத்தபட்டு இருக்கிறது. இந்த படம் பார்த்தாலே ஒரு நல்ல ஃபேமிலியோடு பார்க்க முடிந்த படத்தை பார்த்த உணர்வு படத்தில் இருக்கிறது. கமர்ஷியல் விஷயங்கள். வில்லனின் இடத்துக்கே சென்று ஹீரோயினை காப்பாற்றுவது. ஃபோன் பண்ணி சேலஞ்ச் பண்ணுவது. தனியாக ஒரு பக்கம் போகும் காமெடி டிராக் என்று படத்துக்கு தேவையற்ற விஷயங்கள் என்று எதுவுமே இல்லை. இங்க நம்ம கதாநாயகன் அம்மா இல்லாமல் வளர்ந்த பையன் என்பதால் கொஞ்சமாக அன்பு காட்டினாலும் அட்டாச்சாக இருப்பது படத்தில் ரொம்பவுமே நல்ல அளவில் வெளிப்பட்டது. ரொமான்ஸ் என்றால் நல்ல கெமிஸ்ட்ரி இருக்க வேண்டும். காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம் சேர்த்துக்கொண்டு செல்லும் மேகம் என லொகேஷன் லொகேஷன்னாக ஷாட்ஸ் இருக்க வேண்டும் என்று கமர்ஷியல் படங்களில் எதிர்பார்ப்போம். ஆனால் கமர்ஷியல் சாயம் இல்லாத இப்படி ஒரு வண்ணமயமான மாடர்ன் காலத்து காதல் கதை ரொம்பவுமே புதுசாக இருந்தது. இந்த படம் ஒரு ஒரு காட்சியிலும் சிம்பில்லாகவும் டீஸண்ட்டாகவும் இருப்பதால்தான் இந்த படம் என்னுடைய நினைவுக்குள் இன்று நினைத்தாலும் சின்ன சின்ன காட்சிகளாக நினைவுக்கு வருகிறது. LOVE THE WAY YOU ARE அப்படின்னு ஒரு கொரியன் படம். அந்த படத்தில் ஹீரோவும் ஹீரோயின்னும் சின்ன வயதில் சந்தித்துக்கொள்ளும் பிளாஷ்பேக் காட்சிகள் ரொம்பவுமே நன்றாக இருக்கும் அதே போல சின்ன வயது காதல் என்றால் ஒரு சின்ன பிளாஷ் பேக் காட்சி கொடுத்து இருக்கலாம். கிளைமாக்ஸ்ல ரொம்பவுமே எதிர்பார்த்து இருந்த ஒரு கல்யாணம். இந்த குறிப்பிட்ட திருச்சிற்றம்பலம் மற்றும் ஷோபா கேரக்டர்ஸ் நம்ம மனதுக்குள் ரொம்ப நன்றாகவே ஒரு இடத்தை பிடிப்பார்கள். பிரகாஷ் ராஜ் , பாரதி ராஜா , பிரியா பவானி ஷங்கர் கதாப்பாத்திரங்கள் இந்த படத்துக்கு நல்ல பிளஸ் பாயிண்ட். விமர்சனங்கள் இந்த படத்தை வொர்க் ஆஃப் சிம்பிள் ஸ்டோரி டெல்லிங் என்று சொல்வார்கள். ஆனால் அதிகமான பணவசதி இல்லாமல் இருக்கும் குடும்பத்தில் பிறந்தவர்களுக்குதான் இந்த படத்தின் ஒரு ஒரு காட்சியும் நன்றாக பதியும். இந்த படத்தை பாங்க் அக்கவுண்ட்ல பல லட்சங்கள் வைத்துக்கொண்டு பார்ப்பவர்களுக்கு எதுவுமே புரியாது, மணிரத்னம் படம் போல பிரிமியம் காதல்தான் அவங்களுக்கு சரியான படமாக இருக்கும். மாதம் முதல் தேதி சம்பளம் வந்ததும் அந்த ஒரு மாத சம்பளத்தை வைத்து வாடகை முதல் சாப்பாடு வரைக்கும் எல்லா அடிப்படை செலவுகளையும் பண்ணிவிட்டு இன்சூரன்ஸ்ஸை நம்பும் நடுத்தர மற்றும் கடை நிலை இளைஞர்களுக்கு இந்த படம் ஒரு ஸ்லைஸ் ஆஃப் லைப் அட்வென்சர். அவங்க வாழ்க்கையில் முக்கியமான ஒரு சினிமா படம். இந்த மாதிரி நிறைய படங்களின் விமர்சனங்களை தெரிந்துகொள்ளவும் மேலும் நிறைய தகவல்களையும் தெரிந்துகொள்ளவும் என்னுடைய இந்த NICE TAMIL BLOG க்கு நிறைய சப்போர்ட் கொடுத்து FOLLOWBACK கொடுங்கள். இந்த காலத்தில் நல்ல TAMIL BLOG கள் ரொம்பவுமே குறைந்துவிட்டது. நீங்கள் சப்போர்ட் பண்ணினால் மட்டும்தான் தமிழ்ல என்னால இந்த வெப்சைட்டை மேற்கொண்டு இன்னும் நிறைய முன்னேற்றத்தை கொடுத்து கொண்டுபோக முடியும். கண்டிப்பாக சப்போர்ட் பண்ணுங்கள். தேங்க்ஸ். 

CINEMA TALKS - MARK ANTONY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 பொதுவாக எனக்கு டைம் டிராவல் படங்கள் பிடிக்கும். இந்த படம் நீங்கள் பார்க்கும்பொது உங்களுக்கே புரியும் இதுதான் ரொம்பவுமே ஆர்ட்வொர்க்ஸ் பண்ணி எடுக்கப்பட்ட டைம் டிராவல் படம். இந்த படம் ஆரம்பத்தில் 1995 ல தொடங்குகிறது. SJ சூரியா இந்த படத்துடைய வில்லனாக மிரட்டி இருப்பார். ஒரு சில காட்சிகளில் இருக்கக்கூடிய சிறப்பான நடிப்பு திறனை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். இந்த படத்துடைய திரைப்பயணம் நிறைவுக்கு வது OTT வெளியீடு வந்துவிட்டது என்று கருதுகிறேன். அதனால நான் SPOILER கொடுத்தால் கோபித்துக்கொள்ள வேண்டாம். இந்த படம் விஷால்க்கு அவருடைய CAREER BEST ! இந்த படத்துல விஷால் தன்னை கேட்டவராக காட்டிக்கொள்ளும் ஒரு நல்ல அப்பாவின் காதாப்பாத்திரம் பண்ணியிருப்பார். இந்த படத்தை பொறுத்தவரை பெஸ்ட்டான விஷயம் ஸாங்க்ஸ் தவிர்த்துவிட்டு மற்ற எந்த காட்சிகளும் வேஸ்ட் பண்ணப்படவில்லை. இன்னொரு முக்கியமான விஷயம். அப்படியே பழைய சென்னையை காட்சியின் ஒரு ஒரு ஃபிரேம்லயும் கொண்டுவந்து இருக்கிறார்கள். இப்படி ஒரு பிரில்லியன்ட் ஆனா வொர்க் ஆஃப் ஆர்ட் நான் வேறு எந்த படத்திலும் பார்த்தது இல்லை, நிறைய ரெட்ரோ படங்கள் (அமராவதி) , ரெட்ரோ பாடல்கள் (பஞ்சுமிட்டாய் , அடியே) இந்த படத்தில் பயன்படுத்தப்படுவது அல்லது பாப் கல்ச்சர் ரெஃபரென்ஸ் கொடுக்கப்படுவது இந்த படத்துக்கு இன்னும் ரொம்பவுமே இண்டரெஸ்ட் கொடுக்க வைக்கிறது. இந்த படத்தில் காமெடி ரொம்பவுமே நன்றாக இருந்தாலும் மாஸ் காட்சிகள் இருந்தாலும் எமோஷனல் காட்சிகளை எந்த வகையிலும் பாதிக்கவே இல்லை. ஒரு டைம் டிராவல் படம் என்னும்போது அக்யூரசி ரொம்ப ரொம்ப முக்கியம். இன்று நேற்று நாளை படம் இந்த காரணத்தால்தான் சக்ஸஸ் ஆனது. இந்த படத்திலும் டைம் டிராவல் காட்சிகள் சிறப்பாக மற்றும் நேர்த்தியாக பண்ணப்பட்டதால் குறை என்று சொல்லவே முடியாத அளவுக்கு ஆடியன்ஸ்க்கு இந்த படம் புரிந்துகொள்ள முடியும். 1975 ல நிறைய 1985 விஷயங்கள்தான் படம் மொத்தமும் இருக்கிறது. இந்த படத்தில் பெண்களுக்கு ஒரு அளவுக்காவது பாசிட்டிவ் ஆன கருத்துக்களை இயக்குனர் ஆதிக் சொல்லியிருக்கிறார் என்று மற்ற விமர்சனங்களில் பார்த்தேன். இவருடைய முந்தைய படங்களை நான் இந்த விமர்சனம் எழுதும் இந்த நேரத்தில் பார்த்தது இல்லை. பார்த்தால் கண்டிப்பாக என்னுடைய கருத்துக்களை பதிவு பண்ணுகிறேன். இந்த படத்தில் பாடல்கள் ஒரு அளவுக்கு இருந்தாலும் படத்தின் கதையை பாதிக்கவில்லை. கிளைமாக்ஸ் வரைக்கும் நிறைய செல்ஃப் ஆவார்னஸ் நகைச்சுவை இந்த படத்தில் இருக்கிறது. விஷால் , எஸ் ஜெ , ரித்து வர்மா , சுனில் எல்லோருமே இந்த படத்துக்கு பெஸ்ட்டாக அவங்களுடைய உழைப்பை கொடுத்து இருக்கிறார்கள். ஒரு சில படங்கள் நம்ம தமிழ் சினிமாவை காலத்துக்கு ஏற்றது போல நன்றாக அப்டேட் பண்ணும். இந்த படமும் மாடர்ன் நாட்களின் கமர்ஷியல் படங்களுக்கு 

Friday, October 20, 2023

CINEMA TALKS - MOANA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



மோனா - இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது. கடலுக்கு நடுவில் மக்கள் தனித்து வாழும் ஒரு யாரும் அறியாத தனிதீவில் வாழ்ந்துகொண்டு இருக்கும் பழங்குடி கிராம குழுவினரின் தலைவரின் மகளான மோனா அங்கே இருக்கும் கிராம மக்கள் பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற காரணத்தால்  பழங்கால போர்கடவுள் மாயியை கஷ்டப்பட்டு கடல் மொத்தமும் தேடிச்சென்று ஒரு வழியாக சந்திக்கிறார்.  இவருடைய உதவியின் காரணமாக இதுவரைக்கும் அவளுடைய கிராமத்தில் தொடர்ந்து நடக்கும் விவசாய பிரச்சனை ஒரு மாயாஜால சாபத்தால் உருவாகிறது என்பதை அறிந்த மோனா இப்போது சாபம் கொடுத்த கடலின் கோபத்தில் இருந்து மக்கள் அனைவரையும் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் தான் இந்தத் திரைப்படத்தின் கதைக்களம்-ஆக இருக்கிறது. இந்த படத்தில் இருக்கும் கலர் கலரான விஷுவல்ஸ் மற்றும் பழங்குடி மக்களுடைய வாழ்க்கைக்கும் அவர்களுடைய நம்பிக்கைக்கும் மதிப்பு கொடுத்து எழுதப்பட்ட கதைக்களம் எல்லமே இந்த படத்துக்கு பிளஸ் பாயிண்ட். இந்த படம் நிறைய பிரமாதமாக காட்சி அமைப்புகளை கொண்டு இருப்பதால் இந்த படத்துக்கு பின்னால் வரும் படங்களுக்கு கூட பெஸ்ட் யூஸ் ஆஃப் CGI கொடுக்க இன்ஸ்பிரேஷன்னாக இருந்தது என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை. டிஸ்னி நிறைய இளவரசிகளின் ஃபேண்டஸி கதைகளை சொல்லியுள்ளது அந்த வகையில்தான் இந்த கதையும். ரொமான்டிக் ஆங்கிள்க்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் டெமிகாட் மாயி மற்றும் பிரின்சஸ் மோனாவின் கலகலப்பான சக்திகளை மீட்க முயற்சி பண்ணும் காட்சிகள் படத்துக்கு நல்ல மோமென்ட்ஸ் கொடுக்கிறது. கிளைமாக்ஸ் எதிர்பார்த்ததுதான். இருந்தாலும் இயற்கை சார்ந்த வாழ்க்கை குறித்த ஒரு நல்ல மெசேஜ் இந்த படத்தின் கிளைமாக்ஸ்ல கிடைக்கிறது. ஒரு நல்ல படம். உங்களுடைய பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள். 

CINEMA TALKS - SPECTRE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 




"இத்தனை வருஷமாக படத்தில் மட்டுமே ஒரு பாகமாக இருந்தது SPECTRE ஆர்கனைஷேஷன் . இந்த ஆர்கனைஷேஷன் உலகம் முழுக்க பணம் கொடுக்கும் கேட்டவர்களுக்காக எவ்வளவு பெரிய காரியம் வேண்டுமென்றாலும் செய்யக்கூடிய அமைப்பு. இதுவரைக்கும் முன்னாடி வந்த மூன்று படங்களிலும் ஜேம்ஸ் பாண்ட் இந்த ஆர்கனேஸேஷனை கொஞ்சம் கொஞ்சமாக தடுத்துக்கொண்டு இருந்தாரு. ஆனால் இந்த படம் இந்த அமைப்பு மற்றும் இந்த அமைப்பு சார்ந்த எல்லோருமே நேருக்கு நேராக ஜேம்ஸ் பாண்ட்டை காலி பண்ண வேண்டும் என்று மோதுவதால் இந்த படம் பயங்கரமான இண்டரெஸ்ட்டிங்காக இருக்கும். ஜேம்ஸ் பாண்ட் மற்றும் மென்டலின் ஸ்வான் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும். குறிப்பாக CASINO ROYALE மற்றும் QUANTUM OF SOLACE படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும் நம்ம ஜேம்ஸ் பாண்ட்க்கு ரொமான்டிக் ஆங்கில் இருப்பது ரொம்ப முக்கியமான விஷயம். இந்த படம் ஸ்டண்ட்ஸ் என்ற வகையில் பிரமாதமாக இருந்தாலும் ரியல்லிஸம் விட்டு வெளியே போகவில்லை. கார் சேசிங் முதல் பராக்டிக்கல்லாக ஒரு பெரிய கட்டிடத்தையே தகர்த்து கின்னஸ் வேர்ல்ட் ரெகார்ட் பண்ணியது வரைக்கும் ஸ்டண்ட்கள் மற்றும் லொகேஷன்கள் இந்த படத்தை ஒரு எவர்கிரீன் பாண்ட் ஸ்பெஷல்லாக மாற்றியுள்ளது. இந்த படத்துக்கு ரொம்ப பெரிய ப்ரொடக்ஷன் வேல்யூ இருப்பதால் இன்ட்டரோடக்ஷன்ல வரும் டே ஆஃப் தி டெட் காட்சி முதல் கிளைமாக்ஸ்ல ஹெலிகாப்டர் சேஸ்ஸிங் வரைக்கும் கிளாசிக் பாண்ட் ஆக்ஷன்னின் கோல்டன் மெமரிஸ் இந்த படத்தில் கிடைக்கும். இந்த படத்தின் முக்கியமான வில்லன்னாக ERNST STAVRO BROFIELD நம்ம ஜேம்ஸ் பாண்ட்க்கு சொந்த அண்ணன் போல வளர்ந்தவர் என்பதாலும் SPECTRE படம் BOND உடைய பெர்சனல் ப்ராப்ளம் ஒரு பெரிய நேஷனல் லெவல் இஷ்யுவாக மாறும் அளவுக்கு இந்த படத்தில் நல்ல ப்ராக்ரஸ் கதையின் ஒவ்வொரு ஸீன்னிலும் இருக்கும். மொத்தத்தில் ரசிக்கும் தன்மையுள்ள ஒரு ஜேம்ஸ் பாண்ட் ஆக்ஸன் இந்த படத்தில் கியாரன்டியாக உங்களுக்கு கிடைக்கும்."

CINEMA TALKS - SKYFALL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ரொம்பவுமே ரசிக்கும்படியான விஷயம் என்னவென்றால் விஷுவல்லாக இருக்கும் ஸ்டைல்தான். போன க்வான்டம் ஆஃப் சொலஸ் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன்ல ஃபோகஸ் பண்ணியதால் அஃப்பிஷியலாக ஜேம்ஸ் ஒரு மிஷன்னில் இறங்க போதுமான வாய்ப்பு அந்த கதையில் கிடைக்கவில்லை. ஆனால் இந்த கதையில் கிடைத்துள்ளது. ஜேம்ஸ் பாண்ட்க்கு சூப்பரியராக இருக்கும் பேர்ஸன்களில் அவருக்கு  ஆர்டர்ஸ்களை கொடுப்பவராக M தான் இருக்கிறார். இப்போது LONDON மாநகரத்தில் தொடர் தாக்குதல்கள் நடக்க காரணமாக இருப்பவர் ரேவல் சில்வா. இவர் ஒரு காலத்தில் ஜேம்ஸ் பாண்ட் வேலை செய்யும் எம். ஐ. சிக்ஸ்க்காக வேலை பார்த்து ஒரு ஆபத்தான மிஷன்னால அவருடைய வாழ்க்கையில் எல்லாத்தையுமே இழந்துவிட்டார். இப்போது உலகத்தை அச்சுறுத்தும் ஒரு கம்ப்யூட்டர் ஜீனியஸ்ஸாக பல வருடங்களுக்கு பின்னால் M ஐ தீர்த்துக்கட்டி பழிவாங்க வேண்டும் என்று முடிவு பண்ணுகிறார். இப்போது ஜேம்ஸ் பாண்ட்டால் M ஐ காப்பாற்ற முடியுமா என்பதுதான் படத்தின் கதை. இதுக்கு முந்தைய படம் குவாண்டம் ஆஃப் சொலஸ் படத்தை கம்பேர் பண்ணும்போது இந்த படத்தில் ட்ரேடிஷனல் ஜேம்ஸ் பாண்ட் ஆக்ஷன் பார்க்கலாம். இந்த படத்தின் தொடக்க காட்சி கொஞ்சம் கன்ப்யூஸ் பண்ணினாலும் மறுபடியும் இங்கிலாந்தை காப்பாற்ற பாண்ட் களத்தில் இறங்கும்போது கதை வேகமாக நகர்கிறது. இந்த படத்தின் வில்லன் எப்போதுமே பாண்ட்டை விட ஒரு படி மேலே இருப்பதால் இந்த படம் ஜேம்ஸ் பாண்ட்டின் எல்லா திறன்களையும் பயன்படுத்தி சண்டைபோட்டு சம்மந்தப்பட்ட M இன் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தை ஜேம்ஸ் பாண்ட்க்கு இந்த சம்பவங்கள் கொடுப்பதால் SKYFALL என்ற பெயருக்கு பொருத்தமாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் வரைக்கும் ஜேம்ஸ்க்கு இருக்கும் பொறுப்புகள் ரொம்பவுமே அதிகமாக இருக்கும். கிளைமாக்ஸ் கொஞ்சம் டிஸ்ப்பாயிண்ட்மென்ட்தான் ஆனால் படத்தில் நல்ல ரியல்லிஸம் இருப்பதால் படம் ரொம்பவுமே சிறப்பாக இருக்கிறது. 

CINEMA TALKS - QUANTUM OF SOLACE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

CASINO ROYALE படத்துக்கு டேரக்ட் கன்டினியூவேஷன் தான் இந்த QUANTUM OF SOLACE . இது ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம். இந்த படத்தில் CASINO ROYALE அளவுக்கு ஒரு நல்ல நேரான கதைக்களம் இல்லை என்றாலும் ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்துக்கான நிறைய ஆக்ஷன்ஸ் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் படத்தில் இருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் அவருடைய காதலி வேஸ்ப்பர்ரின்  இறப்புக்கு காரணமான அமைப்பை பற்றிய விசாரணையில் இறங்குகிறார். இவர் தேடிக்கொண்டு இருக்கும் இந்த அமைப்பின் பெயர் குவாண்டம். இந்த அமைப்பு எதிரிகளை கொடூரமாக கொலைகளை பண்ணும் ஒரு அமைப்பு. இந்த அமைப்பின் தலைவன்தான் பெரிய அரசியல் செல்வாக்கும் ஆக்கிரமிப்புக்களை பண்ணும் அளவுக்கு சக்திகளும் கொண்ட டாமினிக் கிரீன். இந்த படம் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உரிய நிறைய விஷயங்களை கண்டிப்பாக கொடுத்துதான் இருக்கிறது. ஆனால் ஆக்ஷன் காட்சிகள் இந்த படத்தில் மிக மிக அதிகம். இதுக்கு முன்னாள் வந்த 2000ஸ் களின் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஒரு ஒரு படத்திலும் தனித்தனி கதைக்களம் இருக்கும் ஆனால் இந்த படம் ரொம்ப ரொம்ப சீரியஸான ரிவேன்ஜ் படம். ஜேம்ஸ் பாண்ட் அவருடைய காதலியை கொன்றவர்களை பழிவாங்க களத்தில் இறங்குவதால் இந்த படம் ஆக்ஷன் காட்சிகளை மிக மிக அதிகமாக கொடுத்து இருக்கிறது. சண்டை காட்சிகளுக்கு இந்த படத்தில் பஞ்சமே இல்லை. இதுக்கு முன்னால் வந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும் ஜேம்ஸ் பாண்ட் எப்போதுமே அவர் பாதுக்காக்க வேண்டும் என்று நினைப்பவர்களை கண்டிப்பாக பாதுகாப்பார் ஆனால் இந்த படம் அவருக்கு ரொம்பவுமே சோதனைகளையும் காயங்களையும் கொடுத்து இருக்கும். இந்த படத்தை LICENCE  TO KILL படத்துடன் கம்பேர் பண்ணலாம். PERSONAL REVENGE க்காக BOND ஒரு விஷயத்தின் அடிமட்டம் வரைக்கும் சென்று அழிக்க வேண்டும். இந்த படத்தை பற்றி கடைசியாக ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றால் பொதுவாக இந்த காலத்து ஹாலிவுட் ஆக்ஷன் படங்களில் சண்டைக்காட்சிகளும் ஸ்டண்ட்காட்சிகளும் மட்டுமே அதிகமாக இருப்பதால் PLOT ல நம்மால் ஒரு ENGAGEMENT ல இருக்க முடியாது. THE CONTRACTOR , ERASER REBORN போன்ற படங்களை எடுத்துக்காட்டாக சொல்லாம். இந்த படம் என்னை பொறுத்தவரை ஜேம்ஸ் பாண்ட் படம் என்பதை விடவும் ஒரு சிறப்பான ACTION படம் என்றுதான் என்னுடைய கருத்து. பொதுவான ஜேம்ஸ் பாண்ட் படங்களுடைய ஸ்டோரி அமைப்பு இந்த படத்தில் மிஸ்ஸிங். இருந்தாலும் நல்ல படம். 

CINEMA TALKS - BLUE BEETLE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 ஒரு நடுத்தரமான அன்பான மெக்ஸிக்கன் குடும்பத்தில் பிறந்து வளரும் ரொம்ப சாதாரணமான பையன்தான் நம்ம ஹீரோ ஜெய்மி ரேஸ் - இவன் ஒரு கட்டத்தில் குடும்பத்துடைய கஷ்டத்தை புரிந்துகொண்டு பெரிய பட்டப்படிப்பு படித்து இருந்தாலும் வெளியே நல்ல வேலை கிடைக்காமல் இருப்பதால் தற்காலிகமாக KORD நிறுவனத்தில் சின்ன சின்ன பராமரிப்பு வேலைகளை செய்துகொண்டு இருக்கிறான். இன்னொரு பக்கம் KORD நிறுவனத்தின் சொத்துக்களின் ஒரே வாரிசாக இருக்கும் நம்ம ஹீரோயின் ஜென்னி கார்ட். இவளுடைய அத்தைதான் படத்தின் வில்லனாக இருக்கும் விக்டோரியா கார்ட். இந்த விக்டோரியா KORD நிறுவனத்தின் ஆராய்ச்சி டெக்னாலஜிக்களை பூமிக்கு சம்மந்தமே இல்லாமல் ஒரு காலத்தில் விண்வெளியில் இருந்து பூமியில் வந்து விழுந்த மிக மிக அதிகமான சக்திகளை உடைய வேற்றுகிரக உயிரினமாக கருதப்படும் SCARAB பை வைத்து யாராலும் கொல்ல முடியாத இயந்திர போர் வீரர்களை உருவாக்கவேண்டும் என்று ஒரு ப்ராஜக்ட் பண்ணி நிறைய வருடங்களாக முயற்சிகளை பண்ணிக்கொண்டு இருக்கிறார். இந்த அபாயகரமான ப்ராஜக்ட் நடைமுறைக்கு வராமல் தடுக்க வேண்டும் என்று ஜென்னி அந்த SCARAB ஐ யாருக்கும் தெரியாமல் எடுத்து ஜெய்மி ரேஸ்ஸிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்க சொல்கிறாள் ஆனால் தவறுதலாக அந்த SCARAB இப்போது பாதிக்கு மேல் ஜெய்மி ரேஸ்ஸின் உடலுக்குள் கலந்து ஒரு பிரிக்கவே முடியாத பயோலாஜிக்கல் இணைப்பை உருவாக்கிவிடுகிறது. இதனால் KORD நிறுவனத்தால்  துரத்தப்படும் ஜெய்மியும் அவருடைய குடும்பமும் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் ? விக்டோரியா கார்டின் இயந்திர போர்வீரர்களின் திட்டத்தை ஜெய்மியால் முறியடிக்க முடிந்ததா ? என்றுதான் இந்த படத்தின் கதை செல்கிறது. இந்த படமும் மற்ற சூப்பர் ஹீரோ கதைகளை போல ஒரு ஹீரோவுக்கு சூப்பர் பவர் கிடைக்கிறது. வில்லன் அந்த சூப்பர் பவர்ரை அடைய நினைக்கிறான். ஹீரோ அவனுடைய செயல்களை தடுத்து அவனை கட்டுப்படுத்துகிறான் என்ற வழக்கமான சூப்பர் ஹீரோ ஆரிஜின் கதைகளுக்கு கொஞ்சமுமே மாற்றம் இல்லாத கதைதான். இந்த படத்தில் திரைக்கதை நன்றாகவே பண்ணி இருப்பார்கள். குறிப்பாக  மெக்ஸிக்கோ கலாச்சாரம் அதிகமாக இடம்பெற்ற முதல் சூப்பர் ஹீரோ படம் இதுதான் என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு வேறு நல்ல மெக்ஸிக்கன் படங்கள் தெரிந்து இருந்தால் கமெண்ட் பண்ணுங்கள் ! 

DCEU எப்போதோ MCU போல கதைகளில் ஒரு நல்ல எமோஷனல் கனெக்ஷன் மற்றும் ஸ்டோரிக்களின் கன்டினியூவிட்டி எல்லாம் பார்ப்பதை நிறுத்திவிட்டது. DC இன் METAHUMAN வரிசையில் புதிய அறிமுகமாக களத்தில் இறங்குகிறார் இந்த புளூ பீட்டில். இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் இந்த படம் நல்ல ஃபேமிலி வேல்யூஸ் கொண்ட படம். சூப்பர் பவர் காட்சிகளில் விஷுவல் எஃபக்ட்ஸ் போதுமானதாக இருந்தது. சண்டைக்காட்சிகள் எதுவுமே குறை சொல்வது போல இல்லை. THE FLASH படம் போலவே படத்தின் டோன்னில் கொஞ்சம் கலகலப்பான காட்சிகளை மிக்ஸ் பண்ணித்தான் கலந்து கொடுத்து இருக்கிறார்கள். எனக்கு தெரிந்து AQUAMAN படம்தான் இன்று வரைக்கும் DC CINEMA UNIVERSE இன் அதிக கலெக்ஷன் எடுத்த சூப்பர் ஹீரோ படம். இந்த படமும் அதே போல வெற்றிப்படமாக அமைந்து இருக்கலாம் ஆனால் பாக்ஸ் ஆபீஸ் எதிர்பார்ப்பை விட குறைவுதான் என்பதால் DC  இன் ஃப்யூச்சர் பற்றிய பிளான்ஸ் இன்னும் ஸ்டுடியோவுக்கு கடினமாகத்தான் இருக்கப்போகிறது. ஆனால் என்னை பொறுத்த வரைக்கும் இந்த படம் ஒரு நல்ல படம். ஒரு கம்பேர்ரிஸன்க்கு சொல்லவேண்டும் என்றால் VENOM , MORBIUS . THE INHUMANS போன்ற சூப்பர் ஹீரோ ORIGIN களை கம்பேர் பண்ணி பார்த்தால் இந்த படம் இந்த DC டைம்லைன்னில் ஒரு நல்ல பாஸிட்டிவ் ஆன வெளியீடுதான். கண்டிப்பாக இந்த மாதிரியான நல்ல படங்களுக்கு ஆடியன்ஸ்ஸாக இருக்கும் நீங்கள் சப்போர்ட் பண்ணுங்கள். RESTORESNYDERVERSE க்காக இந்த மாதிரியான நல்ல படங்களை வரவேற்பு கொடுக்காமல் இருக்கவே வேண்டாம். அதுதான் என்னுடைய கருத்து. இது ஒரு GOOD MOVIE . எனக்கு குறை என்று சொல்ல எதுவுமே இல்லை.  

Thursday, October 19, 2023

TRUE LIFE EVENTS V. CINEMA SCENES !!! - சினிமா என்பது வாழ்க்கை இல்லை !!

 




நிறைய நேரங்களில் சினிமாவில் இருப்பது போல வாழ்க்கை மாறிவிடும் என்று நினைக்கிறோம் ! அதுதான் இல்லை ! நீங்க நிறைய நேரங்களில் சினிமாவையும் வாழ்க்கையையும் கலந்து கன்ப்யூஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் சினிமா வேறு வாழ்க்கை வேறு , நிறைய கற்பனைகள் இந்த சினிமாவில் இருக்கிறது. இவைகள் எல்லாம் கற்பனை இல்லை உண்மைதான் என்று நம்பும் மக்களும் இருக்கிறார்கள் உதாரணத்துக்கு SPEED படத்தில் இருப்பது போல டைம் பாம் வைப்பவர்கள் எதுக்காக HH:MM:SS என்று தேடி பிடித்து ஒரு TIMER ஐ சேர்த்து வைக்கிறார்கள் ? இது எல்லாமே படத்தில் ஒரு கற்பனைக்காக சொல்லப்பட்ட விஷயம் , நிஜத்தில் ஆகாது ! இந்த மாதிரி விஷயங்களை மட்டும் பார்க்கலாமா ? 1. தலையில் அடிபட்டால் மயக்கம் வரும் !! - நமது மனித மூளை நரம்புகள் மிக நுணுக்கமானது , அதனால் தலையில் ஒருவருக்கு அடிபடும்போது SHORT TERM என்று மட்டும் இல்லாமல் பல வருடங்களுக்கு பின்னால் LONG TERM பாதிப்புகளும் உருவாகும். படத்தில் காட்டும் காட்சிகள் எல்லாமே ஸ்டண்ட்தான், குழந்தைகள் இந்த மாதிரி சக நண்பர்களை தலையில் அடிப்பதை நிறுத்த வேண்டும். CONCUSSION என்ற பாதிப்பை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? தெரியாது என்றால் GOOGLE பண்ணி பாருங்கள் FOOTBALL மற்றும் BOXING பண்ணுமபோது CONCUSSION நடந்துவிட்டால் பல வருடங்களுக்கு பின்னால் கூட மூளையில் பிரச்சனைகள் உருவாகலாம். 2. கண்ணாடியை வெறும் கையில் உடைக்கலாம் : இதுவும் தவறான செயல். கண்ணாடி என்பது சிலிக்கான் சேர்த்து ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ள ஸ்ட்ரக்சர் , சினிமாவில் ஸ்டண்ட்களில் பயன்படுத்தும் கண்ணாடி ஒரு கண்ணடியே இல்லை !! SUGAR GLASS என்று சொல்லப்படும் சர்க்கரையை கண்ணாடி போன்று மாற்றி செய்யப்பட்ட கண்ணாடி , கதவுகள் , ஜன்னல்கள் மற்றும் பாட்டில்கள்தான். எனக்கு தெரிந்தே கோபத்தில் வெறும் கையால் சுவரை குத்தியதால் மணிக்கட்டு எலும்புகள் மற்றும் விரல்களில் எலும்புகள் உடைந்து எக்ஸாம் எழுத முடியாமல் போனவர் இருக்கிறார். மனித எலும்பின் டென்ஸ்ஸிட்டி ரொம்ப ரொம்ப கொஞ்சம்தான். 3. பிரமாதமான நினைவுத்திறன் : இந்த இன்வெஸ்டிகேஷன் படங்களில் எல்லாம் க்ளூக்களை கண்டுபிடித்து வில்லன்களை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற மனிதர் வருவார். நடந்த சம்பவங்களை நினைவில் வைத்துக்கொண்டு படம் முடியும்போது மிஸ்ட்டரியை கிளியர் பண்ணிவிடுவார் ஆனால் நிஜத்தில் இப்படி நடக்காது என்று நான் சொல்லவில்லை , ஒரு குற்றத்தை கண்டறிய சாலிட் ஆன எவிடென்ஸ் {CCTV) மற்றும் நிறைய மணி நேரங்கள் ஆலோசனை தேவை, ஒரு சில நிமிடங்களில் இதுபோன்ற விஷயங்கள் முடியாது. 4. ஒரு மனுஷனால் அவன் சாப்பிட முடிந்த அளவையும் மீறி சாப்பிட முடியும் : இதுதான் தவறான செயல் , உங்களுடைய வயிறு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் கேப்பாஸ்ஸிட்டி உள்ள விஷயம், நீங்கள் பரோட்டா காமெடி பார்த்து அளவுக்கு அதிகமாக திணித்தால் உங்களை ICU வில் அட்மிட் பண்ண வேண்டிய நிலை உருவாகும். உங்களுடைய வயிற்றில் இருந்து போதுமான செரிமான கெமிக்கல்கள் நன்றாக உணவை பிராசஸ் பண்ணிய பின்னால் கல்லீரல் , கணையம் மற்றும் மண்ணீரல்லில் வேலைகள் முடிந்ததும்  ஸ்மால் இண்டஸ்ட்டைன்ஸ்கு போகும்போது உணவின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக லார்ஜ் இண்டென்ஸ்டைன்ஸ்க்கு சென்று உணவு நகரும்போது தண்ணீரும் உறிஞ்சப்பட்டு ஈரப்பதம் குறைந்து கழிவு நீக்கம் பண்ணப்படுகிறது. ஒரு வேளைக்கு 800 கிராம் நல்ல உணவு போதுமானது. இரைப்பை கொஞ்சம் உணவு அதிகமாக இருந்தாலும் விரிந்துகொள்ளும் என்பதற்காக 1.2 கிலோ என்பதே உங்கள் ஒரு வேலை இன்டேக்கில் மிக மிக அதிகம். உங்கள் உணவு செரிக்க நிதானமாக நீங்கள் 4 மணி நேரம் கொடுக்க வேண்டும். CHALLENGE பண்ணி சாப்பிட்டு ஹாஸ்பிடல்க்கு போகும் நிலைக்கு போகாதீர்கள். 4. காதல் கதை வெற்றியில் முடியும் : உங்களுடைய வயது அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு முடிவு எடுக்க தெரியாது. இங்கே அன்கன்டிஷனலாக யாருமே காதலிக்க மாட்டார்கள். இதுமட்டுமே இல்லாமல் பணம் என்ற அளவில் 100 சதவீதம் நீங்கள் தன்னிறைவு அடைந்து குடும்பத்தையும் தன்னிறைவு அடையும் அளவுக்கு வளர்ந்து இருக்க வேண்டும். உங்கள் உடல் பலமும் அறிவு பலமும் பெரிய விஷயம் இல்லை. இந்த பலதரப்பட்ட மக்கள் இருக்கும் இடத்தில் உங்களின் சக்தி என்ன அதுதான் பெரிய விஷயம். நிறைய திருமண பந்தங்கள் கிளைமாக்ஸ்ஸில் இரண்டு பக்கமும் மனக்கசப்பு என்ற காரணத்தால் பிரிந்துவிடுகின்றனர். இப்படி பிரிந்து போகவா நேசிப்பதாக சொல்லுவார்கள். அடிப்படையில் ஒரு திரைப்பட கதையில் வரும் காதலுக்கு பிரச்சனைகளை வராது ஆனால் நிஜமான காதலுக்கு பிரச்சனைகள் கோடிக்கணக்கில் வரும். இளமை இருக்கும்போதே சொத்து நிறைய சேர்த்து கடைசியில் மொத்த பணமும் ஹாஸ்பிடல் பில்க்கு மட்டுமே கரைந்து போன கதைகள் ஏராளம். கடன்களை வாங்க வேண்டாம் காரணம் இந்த கடன்களை உங்களால் எப்போதுமே அடைக்கவே முடியாது. கிரெடிட் கார்டால்  3 வருடத்துக்கு 371 % வட்டி என்று 2007 ல் சொந்த வீட்டை விட்டு நடுத்தெருவுக்கு கொண்டுவரப்பட்ட குடும்பம் இருக்கிறது. நீங்கள் நல்லவராக இருந்தால் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் பறிக்க தயாராக இருக்கும் அசைவ உண்ணிகள் உலகத்தில் ஏராளம். உங்கள் வாழ்க்கை துணையையும் , குழந்தைகளையும் உங்களால் அடுத்த 15 வருடத்துக்கு காப்பாற்ற முடியும் 1. கடன் இல்லாமல்..  2. உடல் நலம் என்ற அளவிலும் குறைவு இல்லாமல்..  3. பிரச்சனைகளை எப்போதுமே மனக்கசப்பு வரைக்கும் கொண்டு போகாமல்..  உங்களால் இந்த  3 விஷயங்களை கவனித்து வாழ்க்கையில் பணம் பண்ண முடியும் என்றால் குடும்பங்களின் அனுமதியுடன ஒருவரை ஒருவர் நேசித்தால் மட்டும்தான் வாழ்க்கையில் இது எல்லாமே சாத்தியம் !!  இந்த அன்கன்டிஷனல் காதல் ஒரு பெரிய கட்டுரை. இன்னொரு நாட்களில் பார்க்கலாம். கடைசியாக ஒரு விஷயம் "ஒரு மனுஷன் நினைச்சா அவனால முடியாதது எதுவுமே இல்லை !! இன்னும் எண்ணி ஒரே வருஷத்தில் கோடீஸ்வரன் ஆக முடியும் !! உன்னால இது பண்ண முடியும்ன்னு சொன்னதும் கையில் 10 பைசா இல்லாமல் இருந்த ஹீரோ இப்போ AUDI கார்ல வந்து இறங்குகிறான். அவனுடைய வளர்ச்சியை ஊரே வேடிக்கை பாக்குது !! உங்களால பணமே இல்லாமல் உங்க உழைப்பை மட்டும் வைத்து 1-2 லட்சம் / வருடம் சம்பாதிக்கலாம் ஆனால் கோடீஸ்வரனாக உங்களுக்கு நிறைய வருஷம் தேவைப்படும். நீங்கள் 500000/- மேலே வருமானம் பார்த்தால் 30 சதவீதம் நீங்கள் TAX கட்ட வேண்டும் ! கடைசியாக என்னுடைய POINT என்னவென்றால் கண்ணை நம்பாதீர்கள், காதுகளை நம்பாதீர்கள் , உங்களுடைய அறிவை நம்புங்கள் ! 

Monday, October 16, 2023

TECH REVIEWER V. PROFESSIONAL TECHNOLOGY SPECIALIST - ஒரு இண்டரெஸ்ட்டிங் பதிவு !!

 சமீபத்தில்தான் A2D V. TT சேனல்களின் கருத்து பற்றிமாற்றமாக URUTTU TECH என்று ஒரு வீடியோ பார்த்தேன் , உண்மையை சொல்லவேண்டும் என்றால் A2D சேனல்லில் நான் பார்த்த முதல் வீடியோவே இந்த வீடியோதான், ஆனால் இந்த வீடியோ அடிப்படையில் நிறைய கேள்விகளையும் யோசிக்க வேண்டிய விஷயங்களையும் நம்முடைய மனதுக்குள் கொடுக்கிறது. இந்த காலத்தில் பொதுவாக TECH என்று எதை சொல்ல வேண்டும் ? என்று மிக சரியாக இந்த வீடியோ சொல்லியுள்ளது ! இங்கே விளம்பர நோக்கமுள்ள சேனல்களுக்காக நிறைய கடுமையான விமர்சனங்களையும் கொடுத்து இருக்கிறது, கடைசியில் TT சேனல் விஷயத்தை புரிந்துகொண்டு ACCEPT பண்ணியது பாராட்டுக்கு உரியது என்றாலும் அடிப்படையில் கவனிக்க வேண்டியது வேறு விஷயம்.  இந்த வீடியோல நிறைய கேள்விகள் முன்வைக்கப்பட்டு உள்ளது. நான் சொல்வதை விடவும் இந்த காணொளியை பாருங்கள் புரியும் !!


 நான் முதல் முதலாக ஃபோன் வாங்கியபோது சப்ஸ்க்ரைப் பண்ணின 2 சேனல்கள் , C4ETECH மற்றும் TT ஆனால் இப்போதுவரைக்கும் இந்த TT சேனல் ஃபோன்களை மட்டுமே விமர்சனம் பண்ணினாலும் PCDOC போல PROFESSIONAL PC & SOFTWARE தயாரிக்கும் ஒரு கம்ப்யூட்டர் மற்றும் சாஃப்ட்வேர் டேவலப்மெண்ட்டில் சிறப்பாக இருக்கும் ஒரு சேனல் மேல் விமர்சனம் கொடுக்கப்படும்போது கொஞ்சம் அந்த சேனல்லின் அனைத்து வீடியோக்களையும் பார்த்துவிட்டு உங்களின் விமர்சனத்தை கொடுத்து இருக்கலாமே !!


இங்கே YOUTUBE இல் நிறைய விமர்சனம் பண்ணும் CHANNEL கள் சொல்லும் தகவல்களில் நிறைய MISINFORMATION - களும் FLAWS - களும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ஒரு சில CHANNEL கள் மட்டும்தான் உள்ளது உள்ளபடி என்று தகவல்களை சரியாக சொல்கிறது !

இதுமட்டும் இல்லாமல் PAYMENT கிடைக்கும் என்ற பட்சத்தில் இந்த ப்ராடக்ட் மிக சிறப்பு என்றும் உண்மைக்கு கொஞ்சம் மாற்றான கருத்துக்களை சொல்ல ஒரு சில சேனல்கள் பண்ணும் விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது ! இந்த PRODUCT-இல் தரம் இல்லை என்றால் வாங்கியவர்கள் நிலைமை என்ன ஆவது ? !


இங்கே REVIEW AND NEWS பண்ணும் ஒரு சேனல் எதுக்காக மற்ற சேனல்களுடன் சேர்த்து தன்னை TECH COMMUNITY என்று சொல்லவேண்டும ? TECH REVIEW COMMUNITY என்று சொல்லலாமே ? அதே போல இன்னொரு கேள்வியும்  கேட்கப்பட்டது . ஒரு லேப்டாப் ஓபன் பண்ணியோ அல்லது SOLDERING பண்ணியோ உங்கள் சேனல்களில் எந்த வீடியோவும் இல்லை என்னும்போது TECH என்ற வார்த்தைக்கு நீங்கள் கொடுக்கும் JUDGEMENT என்ன ?

TECH PROFESSIONAL லாக PC தயாரிப்புகள் மற்றும் REPAIR களை பண்ணும் அளவுக்கு உயர்ந்து இப்போது YT யில் விமர்சனங்களை கொடுக்கும் ஒருவரை எதுக்காக இப்படி தாக்கி பேச வேண்டும் ? A2D இன்றைக்கு வரைக்கும் அவங்க சேனல்லை நன்றாக அப்டேட் பண்ணி இருக்கிறார்கள்.  விமர்சனங்களில் ஒரு குறிப்பிட்ட ELECTRONIC பொருள் அதனுடைய CAPACITY யை விட அதிகமாக கொடுக்கும் என்று பொய் சொல்லும்போது உண்மையில் அதனுடைய CAPACITY இவ்வளவுதான் என்று சொன்னால் கூட அதனை தவறு என்று குற்றம் சாட்டி சம்மந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பை கொடுக்கும் அளவுக்கு மோசமான COMPANY களும் உலகத்தில் இருக்கிறது என்பதை இந்த காணொளி பார்த்துதான் தெரிந்துகொண்டேன் !!


RAM அளவு VS. PROCESSOR SPEED என்பதே வேறு வேறு விஷயம் என்று எனக்கு A2D பார்த்த பின்னால்தான் புரிகிறது ! 32 BIT X86 OS க்கும் 64BIT X64 OS க்கும் என்ன வித்தியாசம் ? இந்த மாதிரி கேள்விகள் எல்லாமே TECHNICAL ஆன கேள்வி , A2D இன் கருத்து என்னவென்றால் சப்போஸ் நான் இப்போது ஒரு YT TECH CHANNEL ஆரம்பித்து இங்கே நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ளாமல்லே  வெறுமனை  நுனிப்புல் மேய்ந்துவிட்டு தகவல்களை மேலோட்டமாக படித்துவிட்டு வீடியோவில் ஸீன் போட்டுக்கொண்டு இருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் ?

இப்படி நடந்து நான் அடைப்படை தெரியாமல் பேசினால் நான் ஒரு தரமான TECH PERSON - ஆ ? !! ஒரு வேளை நான் இது போன்று ஒரு மனிதனாக இருந்தால் கடைசியில் என்னுடைய மனதுக்குள் நான் மட்டுமே சிறந்த கருத்துக்களை சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்றும் எனக்கு எல்லாமே தெரியும் என்றும் என்னால் எல்லாமே முடியும் என்றும் கற்பனையாக நம்பிக்கொண்டு இல்லாத CONCEPT களை எல்லாம் சொல்லி என்னுடைய BRAIN ஐ நானே மிகைப்படுத்தி காட்டிக்கொண்டு இருப்பேன். அதனால்தான் MISINFORMATION களை கொடுப்பது தவறு ! தவறு ! தவறு !


இதனால் நான் பணம் சம்பாத்திக்கலாம் [?] ஆனால் எத்தனை நாட்களுக்கு ?  கொடுக்கபட்ட REPLY வீடியோவில் குறிப்பட்ட சில விஷயங்கள் எதிர் தரப்பாலும் கடைசியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது பாராட்டுக்கு உரியது . A2D CHANNEL நேர்மையாக தன்னுடைய CHANNEL மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எல்லாம் சரியான நிரூபணம் கொடுத்து சரியான தகவல்களை மட்டும்தான் கொடுக்கிறோம் என்று A2D சேனல் தரப்பில் மிகவும் தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. 

கடைசியாக நான் சொல்வது என்னவென்றால் இந்த காலத்தில் TECH REVEIWER க்கும் TECH PROFESSIONAL க்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. ஒரு FOOTAGE இல் நீங்கள் தவறாக ஒரு இன்ஃபர்மேஷன் கொடுத்துவிட்டால் பின்னாட்களில் YOUTUBE EDITING இல் சரிபண்ணிவிடலாமே !! அல்லது COMMENT SECTION இல் இந்த இன்ஃபர்மேஷன் நான் கொடுக்கும்போது தவறாக கொடுத்துவிட்டேன். உண்மையில் இதுதான் சரியான விஷயம் என்று உண்மையான CORRECTED INFORMATION - ஐ சொல்லிவிட்டு அடுத்த விஷயங்களை பார்க்கலாமே. !! அதனை விட்டுவிட்டு களத்தில் இறங்கி பேச்சுவார்த்தைகளை பண்ணுவது இன்னுமே பிரச்சனைகளைத்தானே கொண்டுவரும் ? 

CINEMA TALKS - EDUCATION PESALAAMA ? - TAMIL REVIEW - நிஜ வாழ்க்கை விமர்சனம் !!! - இது எல்லாம் காசுக்கு நடிக்கற வியாபாரம் மக்களே !!








 எஜுகேஷன் நமக்கு முக்கியமா ? - இப்போ இந்த கேள்வியை கேட்கும்போது நான் முக்கியம் இல்லை என்று பதில் சொல்லணும் அதுதானே உங்கள் விருப்பம் , சமீபத்தில் 3 இடியட்ஸ் படம் பார்த்தேன். விஷயம் அந்த படத்தில்தான் இருக்கிறது. இந்த காலத்தில் எஜுகேஷன் ரொம்பவுமே பிரஷர்ராக இருக்க காரணமே தரம் இல்லாத ஸ்டாஃப் தான். இவங்க ஒரு அளவுக்கு பேசிக் மட்டும்தான் கற்றுக்கொள்கிறார்கள் ஆனால் மற்றவர்களிடம் ரொம்ப கடினமாக நடந்து கொள்கிறார்கள். ஒரு பையன் அவனுடைய சப்ஜெக்ட் பற்றிய கேள்வியை கேட்டா அவன் உங்களை மரியாதை இல்லாமல் நடத்துகிறான் என்று கம்ப்ளைண்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறீர்களே ? இந்த காதலுக்கு மரியாதை கொடுத்தா மட்டும் பத்தாதுப்பா !! கத்துக்கொடுத்த வாத்தியாருக்கும் மரியாதை கொடுக்கணும்னு சொல்வது போல நீங்கள் உங்களுக்கு பதில் தெரியாது என்று சொல்ல அவமானப்பட்டுக்கொண்டு பையன் விதிமுறைகளை மீறுகிறான் என்று அவன் மேல் கெட்ட பெயரை உருவாக்க நினைக்கின்றீர்கள் . இத்தனை பேச்சு பேசுற அட்மின் நீ படிச்சு இருக்கியா என்று என்னை கேட்டால் நானும் பட்டப்படிப்பு முடித்துதான் இந்த வியாபாரத்தில் வலைப்பூ போட்டு கடையை நடத்திக்கொண்டு இருக்கிறேன். அப்படி நான் படிக்கவில்லை என்றால் கடைநிலை ஊழியராக நான் நிறையவே கஷ்டப்பட்டு இருப்பேன் என்பதை இன்னைக்கும் என்னால் பரோமிஸ் பண்ணி சொல்ல முடியும் ! இங்க அடிப்படையில் பணக்கார வீட்டு பையனாக இருந்தால் "பார்த்தா தெரியல ? பெரிய இடத்து பசங்க ! " என்று சொல்லி கெத்து காட்டிக்கொண்டு பள்ளிக்கூடம் காலேஜ் போகாமல் இருக்கலாம், இதுதான் PRIVILAGED FAMILY இங்கே அடுத்த 3 தலைமுறைக்கு காசு பணம் இருக்கிறது அதனால் கவலை இல்லை. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியே என்னை பொறுத்தவரைக்கும் WWE போல SCRIPT பண்ணப்பட்ட வாய்த்தகராறு , அங்கே இருக்கும் ஒரு நடிகன் / நடிகை படிப்பு பெரிய விஷயம் இல்லை என்றால் அதை அப்படியே சப்போர்ட் பண்ணலாமா ? BIGG BOSS TAMIL இல் இருப்பவர்கள் எல்லாருமே பணக்காரர்கள் , இன்னும் சொல்லப்போனால் VIJAY TV யில் இருப்பவர்கள் எல்லாருமே பணக்காரர்கள். இவர்களிடம் 3 தலைமுறைக்கு சாப்பிட , தூங்க , துணிமணிகள் வாங்க காசு இருக்கிறது. இவர்களின் BANK PASSBOOK பார்க்காமல் உங்களுடைய வீட்டு கஷ்டத்தை எல்லாம் தாங்கி அப்பாவும் அம்மாவும் உங்களை படிக்க வைக்கிறார்கள் என்ற FACT ஐ மறந்து இவர்கள் சொல்வது போல படிப்பு அவசியமே இல்லை என்று நீங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். படிப்பு மட்டும் போதும் என்று இல்லை. வீட்டுக்குள் அடைபடாமல் ஒரு BIKE எடுத்துக்கொண்டு (குறிப்பாக LICENCE , RC BOOK , HELMET எல்லாவற்றையும் சேர்த்து எடுத்துக்கொண்டு ) வெளியே போய் பாருங்கள். படிப்பு இல்லை என்றால் மரியாதை இருக்காது . செத்த பசங்களா என்று வெறும் வாய் வசனம் பேசினாலோ , காமெடி , டான்ஸ் , கேம்பிளே வீடியோ , சாப்பாடு  விமர்சனம் , சினிமா விமர்சனம் என்று எல்லாம் பண்ணி இணையத்தில் பணம் சம்பாத்தித்து விடலாம் என்று கனவில் கூட நினைக்க வேண்டாம். படிப்பு மட்டும் உங்களுக்கு இல்லைன்னா ஒரு கை இல்லாதவரை எப்படி நடத்துவாங்களோ அப்படி நடத்துவார்கள். உங்க மனசுக்குள் இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் உடைத்துவிடுவார்கள். இது எல்லாம் காசுக்கு நடிக்கற வியாபாரம் மக்களே !! நடிகர்கள் சொல்லும் கருத்தை கேட்டு அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி வாழ்க்கையை தொலைச்சுட்டு நீக்காதீங்க !! அப்பறம் ஒரு பய உங்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் ! உங்களுக்கு கல்யாணம்'ஆன மாதிரிதான் !!

CINEMA TALKS - AVATAR - THE WAY OF WATER - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



இந்த 3 மணி நேரம் 13 நிமிஷம் இருக்கும் ஒரு EPIC SEQUEL படம் உங்களுக்கு மறக்கவே முடியாத ஒரு அட்வென்சர் கொடுக்கும் , ஒரு பக்கம் பாண்டோரா பிளானெட்டை மனிதர்களின் படையெடுப்பில் இருந்து காப்பாற்றி அங்கேயே நிரந்தரமாக தங்கி குடும்பம் குழந்தைகள் என்று சந்தோஷமான ஒரு வாழ்க்கையை ஜேக் வாழ்ந்தாலும் ஒரு ஒரு முறையும் எதிரிகளின் தாக்குதலை எதிர்பார்த்து கவனமாகவே வாழ்ந்துகொண்டு இருக்கிறார் ஆனால் புதிதாக படைகளை சேர்த்துக்கொண்டு மறுபடியும் பல வருடங்களுக்கு பின்னால் போன படத்தின் கொடூரமான கோபக்கார வில்லனான மைல்ஸ்ஸின் க்ளோனை மறுபடியும் உயிரோடு கொண்டுவந்து அவதார் உலகத்தின் உடலில் உருவாக்கியதோடு மட்டும் இல்லாமல் அவரின் மொத்த இராணுவ படையையும் மறுமுறை உயிர்கொடுத்து கொண்டுவந்துவிடுகிறார்கள். இப்போது ஜேக் குடும்பத்தை பழிவாங்க மொத்த ஆர்மியையும் களம் இறக்கி பாண்டோராவின் மேல் படையெடுக்கிறார் இந்த ஜேக் V. மைல்ஸ் போராட்டத்தில் குடும்பத்தில் இருப்பவர்களின் உயிரை காப்பாற்ற கடல் பகுதிகளில் தீவுகளில் வாழும் மக்களாக இருக்கும் OMATIKAYA தீவுகளில் அடைக்கலம் கேட்கிறார் . பின்னால் எப்படி ஜேக் அவருடைய குடும்பத்தை காப்பாற்ற மைல்ஸ்ஸின் படைகளை எதிர்த்து போராடுகிறார் என்பதுதான் படத்தின் கதைக்களம். இந்த படத்தை பற்றி என்னுடைய கருத்து சொல்லவேண்டும் என்றால் முதலாவதாக நான் சொல்ல வேண்டிய விஷயம் போன படம் போல போதுமான இம்ப்ரஷன் இல்லாமல் ஒரு நேரான வேகமான பிரபஞ்ச மோதல் கதை என்று இல்லாமல் நிறுத்தி நிதானமாக ஒரு EPIC படத்தை ஸ்டுடியோ கொடுத்துள்ளது. விஷுவல் எஃப்பக்ட்ஸ் ஃபிரேம்களை பார்க்கும்போது இன்னொரு பிளானெட்டின் கடல் அடியில் இருக்கும் உயிரினங்களை பார்க்கிறோம் என்று காட்சிகளுக்குள் குதிக்கும் அளவுக்கு அவ்வளவு தெளிவான விஷுவல்ஸ். இங்கே AI இன்ஸ்டால் பண்ணி மிகவும் கிரியேட்டிவ்வான உலகத்தை உருவாக்க முடிவதால் போன படத்துக்கு இந்த படம் ஒரு பக்கா UPGRADE. பொதுவாக இங்கிலீஷ்ஷில் பார்க்க வேண்டும். தமிழில் பார்ப்பவர்கள் மட்டமான டேஸ்ட் உள்ளவர்க்ள் என்று சில பேர் கருத்துக்களை சொல்வார்கள். ஃபேன் டப்க்காக மொழி மாற்றம் பண்ணிய அதே கம்ப்யூட்டர் வாய்ஸ்களை பார்த்து அதுதான் தமிழ் டப்பிங் என்று நினைக்க வேண்டாம். நம்ம ஊரு தமிழ் டப்பிங் கலைஞர்கள் ரொம்பவும் ஸ்வாரஸ்யமாக வசனங்களை கொடுப்பதில் மிகவும்  திறமையான மனிதர்கள் , விஜய் சேதுபதி [AVENGERS ENDGAME] , சித்தாரத் [THE LION KING] , ஸ்ருதி ஹாசன் [FROZEN 2] , இன்னும் சொல்லப்போனால் ஆர்யா [TERMINATOR - DARK FATE] என்று CELIBRITY STATUS இருப்பவர்களை வந்து புரஃபஷனல் டப்பிங் பண்ண சொல்லலாம் ஆனால் நான் சொல்லும் கருத்து என்னவென்றால் DUBBING TEAM இந்த விஷயத்தில் அனுபவம் உள்ளவர்கள். படம் டப்பிங் என்ற வகையில் பார்த்தால் DUBBING TEAM இந்த WORK கை எடுத்துக்கொண்டால்தான் நன்றாக இருக்கும். KONG SKULL ISLAND , MISSION IMPOSSIBLE FALLOUT போன்ற படம் எல்லாம் பெஸ்ட் டப்பிங்க்கு ஒரு நல்ல சாட்சி. அவதார் படமும் ENGLISH வெளியீட்டில் பார்த்தால் அது உங்கள் விருப்பம் ஆனால் TAMIL DUBBING நன்றாகவே உள்ளது. ஸ்டூடியோக்கள் பிரபலமானவர்களை தேடாமல் நல்ல DUBBING EXPERTS களை பெரிய ப்ராஜக்ட்டில் பயன்படுத்த வேண்டும் என்பதே என்னுடய கருத்து. இப்போது இந்த படத்தை விட்டுவிட்டு OUT OF TOPIC சென்றுவிட்டேன். இப்போது படத்தை பார்க்கலாம். போன படம் போல இல்லாமல் இந்த படத்தில் நிறைய புதிய கதாப்பாத்திரங்கள் மேலும் சூப்பர் ஹீரோ படங்கள் போல தரமான ஆக்ஷன் காட்சிகள். இந்த உலகத்தில் இயற்கையை அழிக்க கூடாது என்ற மெசேஜ் இன்னும் இந்த படத்தில் கடல்களை அழிக்க கூடாது என்று கடினமாக சொல்லப்பட்டு இருக்கிறது. இன்றைக்கு தேதிக்கு கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துகொண்டு இருப்பது ஆயிரத்தில் ஒருவருக்கு கூட தெரியவே இல்லை. ஆனால் இந்த படம் இன்னொரு முறை பூமியை நாம் எப்படி கட்டுப்படுத்தி உயிரினங்களின் வாழ்க்கையை நம்முடைய சுயநலத்துக்காக அழிக்கிறோம் என்று நன்றாக சொல்லியுள்ளது. இந்த மாதிரி படங்கள் கிடைப்பது அரிது. மொத்ததில் ஒரு அழகான சினிமாட்டிக் ப்ரெஸ்ஸேன்டேஷன். IMAX இல் பாருங்கள். 3D விட IMAX நன்றாக இருக்கும். 

Friday, October 13, 2023

CINEMA TALKS - பெர்சனல்லாக பிடித்த 10 திரைப்படங்கள் - P.2 - [4-5]

 4. CATCH ME IF YOU CAN 


இந்த படத்தை பற்றி உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும் , தன்னுடைய இளம் வயதில் அப்பா அம்மா பிரிந்து போனதால் வீட்டை விட்டு வெளியே வரும் ஃப்ராங்க் வில்லியம் ஆபிக்னேல் கொஞ்சம் கொஞ்சமாக ரியாலிட்டியை வெறுத்து செக் மோசடி பண்ணும் இளைஞராக மாறிவிடுவார். இந்த படம் நிஜமாகவே ஒரு மனிதருடைய வாழ்க்கையில நடந்த விஷயம் , நான் முன்னதாகவே ஒரு கருத்து பகிர்தலில் சொல்லியிருப்பேன் , THE POST படம் மட்டும் இல்லாமல் STEVEN SPEILBERG எந்த BIOGRAPHY படம் எடுத்தாலும் ரொம்பவே ஸ்பெஷல்லாக இருக்கும் , அது என்னமோ தெரியல அவர் ஒரு பயோகிராபி படம் எடுத்தால் ரொம்ப சூப்பர்ராக இருக்கிறது. இந்த படத்தில் நம்ம லியோனார்ட் டிக்காப்ரியோ ஒரு பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் வொர்க் ஆஃப் ஆர்ட் பண்ணியிருப்பாரு , தன்னுடைய மொத்த திறனையும் பயன்படுத்தி தனி ஒரு மனிதனாக செக் மோசடிகளை பண்ணி உலகம் முழுவதும் சுற்றும் ஒரு வாலிபராக அவருடைய கதாப்பத்திரம் ஒரு பிளஸ் பாயிண்ட் என்றால் இன்னொரு பக்கம் டாம் ஹேன்க்ஸ் இந்த கேஸ் மட்டுமே முக்கியமாக எடுத்து இன்வெஸ்டிகேஷன் பண்ணி கொஞ்சம் கொஞ்சமாக ஸ்கெட்ச் போட்டு நம்ம ஃப்ராங்க் வில்லியம்மை மடக்குவார் , கிளைமாக்ஸ் காட்சி ரொம்பவே நன்றாக இருக்கும். இந்த படம் பாக்கும்போது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் கிளைமாக்ஸ்தான். வாழ்க்கையில் பொறக்கும்போதே யாருமே நூறு வருடம் நல்லவராகவோ இல்லைன்னா கெட்டவாராகவோ வாழ்வது இல்லை. சந்தர்ப்பம் சூழநிலையில் இருக்கும் கஷ்டம்தான் மனுஷங்களை பாடாக படுத்துகிறது. இந்த படம் எதனால் ஸ்பெஷல் என்றால் இந்த படம் பார்த்த பின்னால் ஃப்ராங்க் வில்லியம் ஆபிக்னேல் என்ற பெயரை சொன்னாலே உங்களுக்கு கண்டிப்பாக அந்த கதாப்பத்திரம் பற்றி நினைவுக்கு வரும். ஒரு முறை இந்த படம் பார்த்தால் உங்கள் நினைவை விட்டு கண்டிப்பாக போகாது. கண்டிப்பாக தமிழில் பாருங்கள். 

5.SPIDER MAN NO WAY HOME :

           

இந்த படம் எனக்கு ரொம்பவுமே பிடிச்ச படம் , இன்னும் சொல்லப்போனால் சினிமா வரலாற்றில் ஃபர்ஸ்ட் டைம் யாருமே பண்ணாத ஒரு விஷயத்தை மார்வேல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ்ல பண்ணியிருந்தாங்க , ஆனால் அப்படி பண்ணுவது அவ்வளவு சுலபம் இல்லை. இன்னொரு பெரிய விஷயம் இந்த படத்துடைய ப்ரோட்டோகானிஸ்ட்க்கு மார்வேல் கொடுத்த ஆன் ஸ்கிரீன் டிசைன்தான். அதாவது ஃபார் ஃபர்ஸ்ட் டைம் ஸ்பைடர்மேன் அவனுடைய அம்மாவை போல பார்த்துக்கொண்ட அத்தையை வில்லன்கள் கொலையே பண்ணியிருந்தாலும் கஷ்டப்பட்டு அந்த வில்லன்களின் உயிரையும் சேர்த்து காப்பாத்த மட்டும்தான் போராடுவான். இந்த படம் அடுத்த WONDER WOMAN 1984 படமாக மாறவில்லை. அந்த DC படத்தில் என்ன மிஸ்டேக் பண்ணினார்களோ அந்த மிஸ்டேக்கை இந்த மார்வேல் படம் பண்ணவில்லை. இந்த மாதிரி படம் எடுக்கறது கஷ்டம். சொல்லப்போனால் 3 மணி நேரம் இந்த படம் ஓடினாலும் மற்ற MULTIVERSE என்ற  வகையில் வந்த SPIDER MAN படங்களுக்கும் தெளிவாக இல்லை என்றாலும் சுமூகமான CONCLUSION கொடுத்து இருப்பார்கள். AMAZING SPIDERMAN 3 நிறைய எதிர்பார்ப்பை கிளப்பிய ஒரு ப்ராஜக்ட், இந்த படத்தின் வெற்றிக்கு பின்னால் எப்படியாவது AMAZING SPIDERMAN படங்களின் ஸ்டோரி ஆர்க் முடிவுக்கு கொண்டுவார இன்னொரு படம் எடுக்கவேண்டும் என்று WISH பண்ணிக்கொள்ளலாம் ஆனால் நிஜத்தில் நடக்காது. இந்த படம் ஒரு GAME CHANGER ஆன படம். நிறைய MISTAKES இந்த படத்தில் இருந்தாலும் படம் பார்க்க நன்றாக இருக்கும். அதுதான் இந்த படத்தின் ஸ்பெஷல். 

Friday, October 6, 2023

CINEMA TALKS - பெர்சனல்லாக பிடித்த 10 திரைப்படங்கள் ! P.1 - [1-3]

1. PIRATES OF THE CARIBBEAN : CURSE OF THE BLACK PEARL (2003)




இந்த படத்தை நான் நிறைய முறை பார்த்து இருக்கிறேன் , இந்த படம் 2003 ல வெளிவந்தது ஆனால் இன்னைக்கு பார்த்தால் கூட லேடஸ்ட் காமிரா வாங்கி ஷாட் பண்ணுண மாதிரி இருக்கும், விஷுவல்லி ஸ்டன்னிங் அப்படின்னு ஒரு படம் . கேப்டன் ஜாக் ஸ்பேரோவுடைய கடற்கொள்ளைக்காரர்களின் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் இந்த படத்தில் ஒரு அழகான கதையான நல்ல கலகலப்பான நகைச்சுவையாக சொல்லியிருப்பார்கள். முதல் காட்சியில இருந்து கடைசி காட்சி வரைக்கும் இந்த படம் போர் அடிக்காது , அவ்வளவு இண்டரெஸ்ட்டிங்காக இருக்கும். இப்போ ஒரு படம் பார்க்கிறோம் ஆனால் அந்த படத்தில் THE CONTRACTOR படம் மாதிரி மிகவுமே பரிச்சியமான  ஆன ஒரு கதையை சொல்வதை விட ஏதாவது புதுசா பண்ணனும். பெரிய பட்ஜெட் இருக்கு, பெரிய ஸ்டுடியோ இருக்கு , மேலும் பராக்டிக்கல்லாக ஆர்ட்வொர்க் கொடுத்து ரொம்பவுமே நேர்த்தியாக ஸ்டண்ட் வொர்க் பண்ணியிருப்பார்கள். கத்தி சண்டை எல்லாம் அவ்வளவு உண்மையாக இருக்கும். இந்த ஒரு புதையல் தேடும் கதைதான் ஆனால் சொல்லப்பட்ட விதம் ரொம்பவுமே வேல்யூவான விதம். ஒரு சினிமாவை சினிமாவா எப்படி ரொம்ப கிராண்ட்டாக காட்டலாம் என்ற விஷயத்தில் இந்த படம் ஒரு நல்ல எக்ஸாம்பில். 


2. CASINO ROYALE (2006)

பொதுவாக ஜேம்ஸ் பாண்ட் படம் என்றாலே ஒரு ஃபார்மட் இருக்கும் ஆனால் இந்த படம் அந்த ஃபார்மட்க்கு நேர் ஆப்போஸிட்ல இருக்கும் , ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட் ஒரு பெரிய தொகையை மீட்டுக்கொடுத்து கெட்டவங்களை தோற்கடிக்க அவங்களுடைய நெட்வொர்க்குக்கு உள்ளே போகிறார் என்றபோது இந்த படம் பார்க்க சாதாரணமான ஒன் லைன் போல இருந்தாலும் எக்ஸிக்யூஷன் பண்ணியிருப்பது வேற லெவல்லில் இருக்கும். பொதுவாக நல்ல ரசனை என்பது ஒரு நல்ல கதையில் அந்த விஷுவல் ஸ்டைல் நன்றாக இருந்தால் மட்டும்தான் ஆடியன்ஸ்க்கு பெர்பெக்ட்டாக எடுத்துக்கொள்ள முடியும். இந்த படத்தில் இப்படி ஒரு ஸ்ட்ராங்க்கான திரைக்கதை இருப்பதால்தான் பெஸ்ட்டாக இருக்கிறது. 


3. MINIONS (2016)

இந்த படம் நான் முதல் டைம் பார்க்கும்போது நான் DESPICABLE ME படங்களை பார்த்தது இல்லை. மினியான்ஸ் கதாப்பத்திரங்கள்க்கு ஒரு இன்ட்ரோ கொடுப்பாங்க பாருங்களென் , ரொம்ப இன்னொஸெண்ட் இந்த மினியான்ஸ் ஆனால் டைனோஸர்கள் காலத்தில் இருந்தே உயிரோடு இருக்கும் இந்த குட்டி பையன்கள் வேலை பார்த்தால் சூப்பர் வில்லன்களுக்காக மட்டும்தான் வேலை பார்க்க வேண்டும் என்ற பாலிசியோடு அலைந்துகொண்டு இருக்கும் . சிங்கிள் செல் ஆர்கானிஸம்ஸ் என்பதால் மட்டும் இல்லை எமோஷனல்லாகவும் மினியான்ஸ் எல்லாரிடமும் நன்றாக பழக்குகிறது, கம்யூனிகேட் பண்ணுகிறது. ஈவென் இந்த படத்தில் மினியான்ஸ்ஸின் ஆரிஜின்ஸ் பற்றி எதுவுமே தெரியவில்லை என்றாலும் மினியான்ஸ் ஒரு பார்ட் ஆஃப் தி லைப் ஸ்லாப்ஸ்டிக் அனிமேஷன் கதாப்பத்திரங்கள். இந்த படம் செம்ம காமெடியாக இருக்கும். இந்த படத்தில் ஒரு நல்ல உணர்வு இருக்கும். இந்த மினியான்ஸ்க்கு நல்ல இண்டெலிஜன்ஸ் லெவல் இருக்கிறது ஆனால் நல்ல கேரக்டர் டேவலப்மெண்ட்டும் இருக்கிறது அதுதான் இந்த படத்தில் எனக்கு ஸ்பெஷல்லாக இருந்தது.கடைசியாக கம் ஆன் இந்த கியூட்டான குட்டி மினியான்ஸ்களை யாருக்குதான் பிடிக்காது ?  



CINEMA TALKS - WHIPLASH - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 

ஒரு படம் தன்னுடைய மொத்த ஸ்கிரீன்பிளேக்கும் வைத்து கிளைமாக்ஸ்ஸில் வெயிட் காட்டிவிடும், அப்படிப்பட்ட படம்தான் விப்லாஷ். ஒரு பெரிய ட்ரம்ஸ் வாசிப்பாளராக அமெரிக்க ம்யூஸிக்கல் பாண்ட்டில் மாற வேண்டும் என்று கனவுகளோடும் லட்சியங்களுடனும் இருக்கும் நமது கதாநாயகன் ஒரு மட்டமான கோபக்கார மியூசிக் கோச் ஒருவரிடம் மாட்டிக் கொள்கிறார். இந்த புதிய கோச் எப்போது பார்த்தாலும் ஸ்டூடண்ட்ஸ்ஸை திட்டுவது , அடிப்பது , WWE போல சேர்ரை தூக்கி மண்டை மேலே போடுவது என்று தன்னால் எவ்வளவு கடினமாக கோபமாக நடந்துகொள்ள முடியுமோ அவ்வளவு கடினமாக நடந்துகொள்ளும் சாடிஸ்ட்டாக இருக்கிறார், எந்த அளவுக்கு என்றால் இவருடைய கிளாஸ் ஸ்டூடண்ட்ஸ்களை தற்கொலை பண்ண வைக்கும் அளவுக்கு கொடுமை பண்ணுகிறார். இப்போது ஹீரோவுக்கு வாழ்க்கையில் ஆயிரம் கவலை இருக்கும்போது ஆயிரத்து ஒன்றாவது பெருங்கவலை இந்த மியூசிக் கோச் தான். கடைசியாக கிளைமாக்ஸ்ஸில் இந்த கொடூரமான மியூசிக் கோச்சை எதிர்த்து நமது கதாநாயகன் பண்ணும் முயற்சிகள் வெற்றி அடைந்ததா என்பதே இந்த படத்தின் கதைக்களம். பொதுவாக சண்டை போடுவது மட்டுமே வன்முறை இல்லை. இன்றைக்கு தேதிக்கு மனசாட்சி இல்லாத ப்ரோஃப்பஸர்கள் பலரை நாம் பார்க்கிறோம். இவர்கள் ஸ்டூடண்ட்ஸ்ஸை வாழ்க்கையில் கடைசி வரைக்கும் உருப்புட விடமாட்டார்கள். இவர்கள் டெக்னிகல்லாக மொக்கை என்பதை வெளியே காட்டாமல் இவர்களின் குறைகளை மறைக்க அப்பாவிகளை திட்டும் அரக்கர்களாக இருப்பார்கள். இவர்களை எல்லாம் வடிவேல் அண்ணன் காமெடியில் சொல்வது போல கூலிப்படை வைத்து காலி பண்ண வேண்டும். மைல்ஸ் டெல்லர் மற்றும் ஜெ. கே. ஸைமன்ஸ் இந்த இரண்டு ஹீரோக்களும் நேர் எதிர் கதாப்பத்திரத்தில் எந்த அளவுக்கு சூப்பர்ராக நடித்து இருக்கிறார்கள் என்றால் திரைக்கதை அவ்வளவு இண்டென்ஸ்ஸாக இருக்கும். குறிப்பாக ஸைமன்ஸஸின் வில்லத்தனமான நடிப்பு பக்கா மாஸ். பேசும் டோன்னில் பயமுறுத்திவிடுவார். கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களை பெஸ்ட் ஆஃப் பெஸ்ட்டாக நடித்து கொடுத்தி இருப்பதால்தான் இந்த படம் நன்றாக இருக்கிறது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

CINEMA TALKS - THE HITCHHIKERS GUIDE TO THE GALAXY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 




இன்னைக்கு இந்த படத்தை பற்றி என்னுடய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் முன்னால் நான் ஒரு சில விஷயங்களை இந்த வலைப்பூவில் பதிவு பண்ண விரும்புகிறேன், என்னதான் நான் விமர்சனம் என்று பெயர் கொடுத்தாலும் இன்று வரைக்குமே நான் கருத்துக்களை மட்டும்தான் பதிவு பண்ணுகிறேன். நான் பாரபட்சம் பார்ப்பது இல்லை. இந்த உலகத்துல பொய் சொல்லி நல்ல பேர் எடுப்பது ரொம்ப ஈஸி ஆனால் உண்மையை சொல்லி உண்மையான மனுஷனாக வாழ்வது ரொம்பவே கஷ்டம். உதாரணத்துக்கு நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால் "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" பாட்டு எனக்கு கொஞ்சம் கூட புடிக்காது. இதனால நான் ரொம்ப தப்பான விஷயம் எதுவுமே சொல்லலையே. ஆட்டோகிராப் படம் வெளிவந்த நாட்களில் எல்லாம் இந்த பாடலை ஒரு நாளுக்கு 100 முறையாவது டிவியிலும் எஃப் . எம் . களிலும் போட்டு போட்டு நானும் கேட்டு கேட்டு சலித்து போய்விட்டேன். நான் எதுக்கு பொய் சொல்ல வேண்டும். "ஜூன் போனால் ஜூலை காற்றே" பாடல்க்காக நான் நிறைய நாள் காத்து இருப்பேன். சன் மியூசிக் பக்கமாகவே நான் தொலைக்காட்சி முன்னால் காத்துக்கொண்டு இருப்பேன். ஆனால் என்னமோ உலகத்துல இல்லாத மோட்டிவேஷன் பாடலை கண்டுபிடித்தது போல இந்த ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே ! வாழ்வென்றால் போராடும் போர்க்களமே !" அப்படின்னு இந்த பாட்டு கேட்க ஆரம்பிக்கும. இந்த காட்ஸில்லா படத்துல தமிழில் ஒரு வசனம் வருமே "அடக்கடவுளே ! இது என்ன சோதனை ?" என்ற வசனம்தான் நினைவுக்கு வரும். 


இப்போ நான் உண்மையை சொல்லிவிட்டேனா ? உடனே எதிரிகள் கிளம்பிவிடுவார்கள் , "டேய் , உனக்கு ஒவ்வொரு பூக்களுமே எப்படிப்பட்ட பாட்டுன்னு தெரியுமா ? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பிடிக்காதுன்னு சொல்லறயே. உனக்கு எவ்வளவு திமிர் ! நீ மட்டும் நேரில் கிடைச்சா மவனே கைமா பண்ணிடுவேன் " என்று ஆட்டோ டிரைவர் அண்ணன் முதல் இன்போசிஸ் நிறுவனர் வரைக்கும் எனக்கு எதிராக போர்க்கோடி உயர்த்த வேண்டாம் ! அதாவது நான் அந்த பாட்டு மோசமான பாட்டு என்று சொல்லவே இல்லை. நான் எனக்கு அந்த பாட்டு பிடிக்காம போய்விட்டது என்றுதான் சொல்கிறேன். பள்ளிக்கூடம் படிக்கும் காலங்களில் நல்லா டான்ஸ் ஆடுவது போல "அடி லட்சாவதியே , என்ன அசத்துற ரதியே" போன்ற பாடல்கள்தான் நான் தொலைக்காட்சிகளில் எதிர்பார்த்தேன். எனக்கு சன் மியூசிக் பார்க்க தொலைக்காட்சி ரிமோட் கிடைக்கும் நேரமே கொஞ்சமதான் . அந்த கொஞ்சம் நேரத்திலும் இந்த பாட்டை யாராவது சன் மியூசிக்கில் கேட்டுவிடுவார்கள் இல்லையென்றால் எஸ். எம். எஸ் பண்ணி விண்ணப்பம் போட்டுவிடுவார்கள். ஒரு நூறு முறைக்கும் மேல் இந்த ஒரு பட்டை மட்டும் கேட்டு கேட்டு கேட்டு சலித்து போய்விட்டது. 


சந்தோஷ் சுப்ரமணியம் படம் போல இளைஞர்களின் பேஷன் சென்ஸ் தெரியாமல் ஃபுல் ஹேன்ட் ஷர்ட் எடுத்து கொடுத்துவிட்டு இதுதான் பெஸ்ட் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. உங்களுடைய கருத்து நியாயமாகவே இருந்தாலும் வாஷிங் மெஷின் லிக்விட் டிடர்ஜென்ட் போட்டு இன்னொருவரையும் மூளையை கழுவி உங்களுடைய கருத்துக்களை திணிக்க முயற்சி பண்ணக் கூடாது. இன்னைக்கு தேதிக்கு பிறந்ததில் இருந்து வாழ்க்கையின் போர்க்களம் என்று எல்லாம் கருத்து பேசாமல் அப்பாவின் சொத்துக்களால் நன்றாக வாழும் நிறைய பேர் இருக்கின்றனர். இப்போது உங்கள் பாயிண்ட் ஆஃப் வியூவில் பார்த்தால் அவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா ? மெஜாரிட்டி கூட்டத்துடன் சேர்ந்துவிடாமல் தனித்து ஒரு கருத்தை முன்வைப்பவர்களை உலகம் எனிமியாக பார்க்க கூடாது. ஜெய்ப்பவர்கள் எல்லோருக்குமே மோட்டிவேஷன் பாடல்கள் தேவைப்படுவது இல்லை. 


இந்த படம் பார்க்கும்போது எனக்கு இந்த கதைதான் நினைவுக்கு வந்தது. அதனால்தான் உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். இப்போது இந்த படத்துக்கு வருவோம். இந்த படத்துடைய கதை , ஸ்பேஸ்ஸில் ரோட் போடவேண்டும் என்பதற்காக பூமியை அழித்து விடுகிறார்கள் , நமது கதாநாயகன்னும் அவனின் வேற்றுகிரக பயணியாக இருக்கும் நண்பனும் மட்டும்தான் உயிரோடு இருந்து தப்பிக்கிறார்கள். முன்னே பின்னே விண்வெளியில் சென்று அனுபவம் இல்லாததால் தி ஹிட்ச் ஹைக்கர்ஸ் கைட் டூ கேலக்ஸி என்ற ஸ்பேஸ் மொத்தமும் அதிகமாக விற்பனை பண்ணப்பட்ட புத்தகத்தை நம்பி மொத்த ஸ்பேஸ்க்கும பயணித்து கிடைக்கும் அனுபவங்கள்தான் இந்த படத்தின் கதை. இந்த படம் ஒரு டீசண்ட்டான காமெடி ஸ்பேஸ் டிராமா என்டர்டென்மெண்ட். பொதுவாக ஸ்பேஸ் படங்களை கலாய்ப்பது போன்ற டோன் இந்த படத்தில் இருந்தாலும் 2005 களில் இந்த படம் வெளிவந்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஒரு பெரிய பட்ஜெட் காலேஜ் ப்ராஜக்ட்க்காக எடுத்து சப்மிட் பண்ணப்பட்டது போல இந்த படத்தின் திரைக்கதை அவ்வளவு புதுமையாகவும் நேர்த்தியாகவும் உள்ளது. நான் பெரிய பட்ஜெட் மாஸ்டர் பீஸ் மட்டும்தான் பார்ப்பேன். சின்ன பட்ஜெட் படங்களை பார்க்க மாட்டேன் என்று ஈகோ இல்லாமல் ரசனை மிக்க எந்த ஆடியன்ஸ்ஸும் இந்த படத்தை நன்றாகவே ரசித்து ஒரு முறை பார்க்கலாம். இன்னொரு முக்கியமான விஷயம் இந்த படம் நிஜமாகவே ஒரு பெஸ்ட் செல்லர் புத்தகத்தின் பிலிம் அடாப்ஷன்.

இந்த படத்தின் தமிழ் டப்பிங் நான் பார்த்து இருக்கிறேன் , இப்போது வரைக்கும் நான் இந்த படத்தின் தமிழ் டப்பிங் பிரிண்ட்டை தேடிக்கொண்டு இருக்கிறேன் 

CINEMA TALKS - THE DARKEST MINDS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 சூப்பர் ஹீரோ படங்களுக்கு டாப் லெவல் டிமாண்ட் இருந்த காலங்களில் வெளிவந்து அப்போது பெரிய லெவல் ஹிட் கொடுக்காமல் போனாலும்  இப்போது நோட் பண்ண வேண்டிய நாவல் அடாப்ஷன் படங்களின் பட்டியலில் இருக்கிறது இந்த 'தி டார்க்கெஸ்ட் மைண்ட்ஸ்' , ஒரு புதிய உலகத்தில் குறிப்பிட்ட ஒரு சில சூப்பர் பவர்ஸ் மட்டுமே இருப்பவர்கள் தவிர மற்ற எல்லோரும் மர்கையா என்றால் உலகம் எப்படி இருக்கும்  ? இப்போது அப்படிப்பட்ட உலகத்தில்தான் மக்கள் தொகை கொஞ்சமாக இருப்பதால் ஒரு பெரிய அமைப்பாக கிடைத்தவர்களை எல்லாம் பிடித்து வேலை செய்ய கட்டாயப்படுத்தும் ஒரு வில்லன் என்று நடைமுறை அரசியலாக ஒரு படம் இந்த படம். இந்த படத்தை நீங்கள் பார்க்கும்போது உங்களுடைய வாழ்க்கையில் என்றைக்காவது நிறைய இன்ஸ்பிரேஷன் இல்லாத நேரம் ஒரு ORIGINAL கதை எழுத நினைத்து நீங்கள் ஒரு நாவல் ஃபினிஷ் பண்ணினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த படமும் இருக்கும். லொகேஷன் , விஷுவல்ஸ் , மற்றும் ப்ரொடக்ஷன் டிசைன்னில் சின்ன சின்ன குறைகள் இருக்கிறது. இந்த படம் எந்த ஆடியன்ஸ்க்காக எடுக்கப்பட்டது என்ற குழப்பம் படம் முடியும் வரைக்கும் இருக்கிறது. இந்த படத்தின் அடுத்த பாகத்தை வேறு நம்பிக்கையாக பரோமிஸ் பண்ணி இருக்கிறார்கள். இந்த படத்தில் இளம் அரசியல் தலைவனிடம் மாட்டிக்கொண்ட நண்பர் கூட்டம் போல படம் பார்க்க வந்த ஆடியன்ஸ்ஸும் கண்டிப்பாக ஒரு மாறுபட்ட ஸ்லோவான திரைக்கதைக்குள் மட்டிக்கொள்வார்கள் என்று கண்டிப்பாக சொல்லலாம். இந்த படம் 2018 இல் வெளிவந்தது. இந்த வகை படங்கள் கதையில் ஃபோகஸ் பண்ணுவதை விட்டுவிட்டு தியேட்டர்ரில் நூறு நாட்கள் ஓட வேண்டும் என்றால் எப்படி இந்த கதையை ப்ரெசெண்ட் பண்ணலாம் என்று திரைக்கதையில் லாட் ஆஃப் வொர்க் கொடுக்க வேண்டும். இந்த படம் அப்படிபட்ட முயற்சிகளை பண்ணாமல் மிஸ் ஆன படங்களுக்கு ஒரு நல்ல எக்ஸாம்பில். 

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...