சனி, 8 ஜூன், 2024

GENERAL TALKS - காலத்தை என்னைக்காவது பயன்படுத்தி இருக்கின்றோமா ?




காலம் அப்படியென்றால் என்ன ? இந்த குறிப்பிட்ட ஸ்பேஸ் டைம்ல அடுத்த 10 மணி நேரத்துக்கு போதுமான சாப்பாடு அல்லது தண்ணீர் அருந்தி நம்முடைய உடலையும் மனதையும் போதுமான சக்திகளை கொடுத்தால் மட்டும்தான் காலம் நமக்கு கிடைக்கும். இன்னைக்கு தேதிக்கு ஒரு மனிதன் ஒரு நாள் வாழவேண்டும் என்றால் கண்டிப்பாக இந்திய ரூபாய்யில் குறைந்தபட்சம் 3000/- தேவை ! இந்த காசை கூட சம்பாதிக்க முடியவில்லை என்றால் வாழ்க்கையை வாழ்வதே வேஸ்ட் ஆகிறது. இருந்தாலுமே குடும்பங்கள் எப்படி நகர்கிறது என்றால் ஒருவருக்கு ஒருவர் குறைவான தொகையில் ஒரே குடும்பம் ஒரே சாப்பாடு (அரசாங்க திட்டத்தின் டைட்டில் போல உள்ளதே ?) என்று வீட்டு சாப்பாடு சாப்பிடும் போதுதான் நன்றாக உள்ளது ! இது ஒரு விதமான மனிதத்தன்மை , இந்த மனித தன்மை உலக மக்களிடம் எதனால் குறைந்து போய்விட்டது ? பணத்துக்கு சண்டை போடுகிறார்கள் ! மதத்துக்கும் சண்டை போடுகிறார்கள் ! ஒரு குழந்தை பிறந்தால் குழந்தை கியூட்டாக இருக்கிறது என்று கொஞ்ச மாட்டேன் என்கிறார்கள் கீழே உள்ள சாதியில் பிறந்த குழந்தை என்று அந்த குழந்தை பெரிய பணக்கார குழந்தையாக வளரவே கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள் ! இவர்களுடைய கேப்பிட்டலிஸத்துக்கு மக்களுடைய அறியாமை தேவைப்படுகிறது. அறியாமையால் பாதிக்கப்பட்ட மக்களை தப்பாக பயன்படுத்திக்கொள்ள பார்க்கும் இவர்களுடைய வலையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் காலத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ! இது பற்றி இனி வரும் பகுதிகளில் உங்களுக்கு நன்றாகவே புரிய வைக்கின்றேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம் தொடர்ந்து இந்த வலைப்பூவை பயன்படுத்திக்கொண்டே இருங்கள் !

கருத்துகள் இல்லை:

CLEAR TALKZ - EPISODE 7

  பிறப்பு அடிப்படையிலான பிரிவினை, பாகுபாடு போன்றவற்றை பார்க்காமல், ஒருவருக்கு திறமை இருந்தால் அவர் முன்னேறி விடுவார்; திறமை இல்லாவிட்டால் மு...