Wednesday, June 12, 2024

GENERAL TALKS - காதலிக்க நேரம் நிஜமாவே இல்லையா !



நம்ம மனித இனமே ஃபோன்களை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டது ! ஃபோன்கள் கொடுக்கும் இன்ஸ்டண்ட் டோபம்மைன் ஹார்மோன் நாம் என்ன வகையான மனக்கஷ்ட்டத்தில் இருந்தாலும் நன்றாகவே தேற்றிவிடுகிறது ! இதனால் நிறைய நல்ல விஷயங்கள் நடந்தாலும் கொஞ்சம் கெட்ட விஷயங்களும் இருக்கிறது ! ஃபோன்களில் சந்தோஷம் கிடைப்பதால் யாருமே வேலை பார்க்கவும் மாட்டேன் என்கிறார்கள்.  பொறுப்புகளை எடுத்துக்கொள்ளவும் மறுக்கிறார்கள் ! விடுமுறை நாட்களில் சாப்பிடுவது , குளிப்பது , தூங்குவது போன்ற அடிப்படை ஓய்வு நேரம் கூட எடுத்துக்கொள்ளாமல் ஃபோன்களை பார்க்கின்றார்கள்.  இப்படி இருக்கும் வாழ்க்கை முறை அல்லது லைஃப் ஸ்டைல் கொஞ்சம் மொக்கையாக உங்களுக்கு தோன்றவில்லையா ? கடந்த காலத்தில் சிங்கமே வந்தாலும் அம்பு விட்டு காலி பண்ணிய அந்த வீரம் இப்போது நம்மிடம் இல்லாத காரணம் பொழுதுபோக்கு நம்முடைய வாழ்க்கையில் அதிக நேரத்தை எடுத்துககொள்கிறது - குழந்தைகளுக்கு நொறுக்கு தீனி வாங்கி கொடுக்க கையில் பணம் இல்லை என்றாலும் டிவிக்கு மாதாந்திர சந்தா கண்டிப்பாக செலுத்தி விடுகிறோம் அல்லவா ? பொழுதுபோக்கு உங்கள் வாழ்க்கையில் மிகவும் சின்னதாக இருக்க வேண்டிய பகுதி - வாழ்க்கையே பொழுதுபோக்காக மாற நீங்கள்தான் அனுமதிக்கின்றீர்கள் ! இது தவறான செயல். இந்த வகை கலாச்சாரம் மனித இனத்தை ஒரு கோழைத்தனமான இயலமையின் பாதையில் அழித்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது ! 

No comments:

Post a Comment

MUSIC TALKS - YAARO MANADHILE YEDHO KANAVILE NEEYAA UYIRILE THEEYAA THERIYALE KAATRU VANDHU MOONGIL ENNAI PAADA SOLKINDRATHO MOONGILUKUL VAARTHTHAI ILLAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறயே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் ...