Thursday, December 30, 2021

CINEMATIC WORLD - 053 - SPIDERMAN : FAR FROM HOME - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 

 

SPIDERMAN FAR FROM HOME - ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்  இந்த படம் 2019 இல் வெளிவந்தது. இந்த படத்துடைய கதை. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் டோனி ஸ்டார்க்ன் மறைவுக்கு பிறகு பிரபஞ்சத்தின் பாதி மக்கள் தொகை மீட்டமைக்கபட்டது. இந்த காலகட்டத்தில் இப்போது உயர்நிலை பள்ளியில் படிக்கும் பீட்டர் பார்கேர் இன்னும் டோனி ஸ்டார்க்கின் மறைவுக்காக வருத்தத்தில் இருக்கிறார். இந்த நிலையில் நிஜம் போலவே கற்பனையான ஆனால் பாதிப்புகளை உருவாக்கக்கூடிய மிகப்பெரிய உருவங்களையும் காட்சிகளையும் உருவாக்கும் தொழில் நுட்பம் கொண்ட மெஸ்டரியோ என்று அழைக்கப்படும் கவெண்டென் பெக் என்ற அறிவியல் ஆராய்ச்சியாளர் நிறைய வருடங்களாக திட்டமிட்டு ஷெல்டு பாதுகாப்பு அமைப்பையும் ஸ்பைடர் மேன் யும் நம்பவைத்து டோனி ஸ்டார்க்கின் அதி நவீன தொழில் நுட்பம் நிறைந்த டிரோன் புராஜக்ட்டையும் பாதுகாப்பு சாதனங்களையும் பீட்டர் பார்கெரின் அனுமதியுடன் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பின்னாளில் பீட்டர் பார்கெரை மோசமாக தாக்குகிறார். இந்த எதிர்பாராத தாக்குதல்களால் இன்னும் பாதிப்புகளை அடையும் பீட்டர் பார்கர் கடைசியில் எப்படி ஹாப்பி மற்றும் ஸ்டார்க் தொழில் நுட்பத்துடன் எவ்வாறு இந்த முயற்சிகளில் கடைசிவரைக்கும் போராடி மெஸ்டரியோவை தடுக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாய்ண்ட் என்றால் இந்த படத்துடைய கதை எனலாம். காரணம் என்னவென்றால் மெஸ்டரியோ போன்ற சக்திவாய்ந்த மாயாஜால மாயைகளை உருவாக்கும் தொழில் நுட்பம் கொண்ட சக்திகளை மார்வெல் சினிமா யுனிவர்ஸ் அளவுக்கு பின்னணியில் கொண்டுவந்து சொல்லியிருப்பது மிகவும் சிறப்பாக பயனளித்து இருக்கிறது என்றே சொல்லலாம். ஜேக் கிளைகால் பிரின்ஸ் ஆப் பெர்சியா படத்தில் இருப்பது போலவே ஒரு ஸ்ட்ராங் ஆன கதாப்பாத்திரமாக நடித்து மிகவும் சிறப்பாக மெஸ்டரியோ கதாப்பாத்திரத்தில் பிரகாசிக்கிறார். முந்தைய ஸ்பைடர் மேன் ஹோம்கமிங் படத்தில் இருந்த சண்டை காட்சிகளுக்கு ஒரு நல்ல அப்டேட் இந்த படத்தின் விஷூவல் எஃபெக்ட்ஸ் சண்டை காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சியில் பேக்கிரவுன்ட் மியூசிக் பிரமாதம். ஸ்பைடர் மேன் மற்றும் எம்ஜெயின் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் பேசும் வசனங்கள், டோனி ஸ்டார்க் நினைவுகளால் ஸ்பைடர் மேன் மனதுக்குள் உருவாகும் மாற்றங்கள், நெட் லீட்ஸ், ஹாப்பி ஹோகான், அண்ட் மே, நிக் பியூரி காதப்பாத்திரங்கள் கொஞ்சம் நேரங்களே எடுத்துக்கொண்டாலும் படத்தை நிறைவு செய்கின்றனர்.  மொத்தத்தில் ஒரு நல்ல படம் என்று சொல்லலாம்.ONE LINE REVIEW - SPIDERMAN - FAR FROM HOME IS NEXT LEVEL நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

Tuesday, December 21, 2021

CINEMATIC WORLD - 052 - SHANG CHI LEGEND OF TEN RINGS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 

 இந்த படம் 2021 இல் வெளிவந்தது. அவெஞ்ஜர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் அவென்ஜர்ஸ் எண்ட் கேம் படங்களோட சம்பவங்களை கடந்து இந்த திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டு உள்ளது. கதை ஷங் சியின் பெற்றோர்கள் சாகாவரம் பெற்ற வென்வோ பேரரசர் மற்றும் தற்காப்பு கலைகள் மிகச்சிறந்த வீராங்கனையானயான டா லோ திருமணம் செய்துகொள்வதில் இருந்து தொடங்குகிறது. இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஷாங் சி மற்றும் அவருடைய தோழி கேட்டி ஒரு உணவகத்தில் வரவேற்பாளர்களாக சராசரி ஏஸியன் அமேரிக்கன் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் ஒரு கட்டத்தில் ஒரு மோசமான அமைப்பை சார்ந்த மெம்பர்கள் சாங் சியுடன் சண்டை போட்டு ஒரு பேருந்தையே கேக் வெட்டுவதை போல வெட்டுவார்கள். தோழி கேட்டி இப்போது ஷாங்சியிடம் அவனுடைய ஃப்ளாஸ் பேக்கை அவன் வென்வோ பேரரசரின் மகன் அப்படின்னு தெரிஞ்சுக்கறாங்க. பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து ஷாங் சியின் சகோதரியுடன் சேர்ந்து வென்வோ பேரரசரின் மனைவியை மறுபடியும் உயிருடன் கொண்டுவருவதாக சொல்லும் மாயாஜால காட்டின் தீய சக்திகளுடன் போராடுவதே படத்தின் கதைக்களம். இந்த படம் ஒரு சிறப்பான திரைப்படம். மிகைப்படுத்தி சொல்லாமல் எதார்த்தமான காட்சிகள் கதையின் பின்னணி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது‌. மேன்டரின் கதாப்பாத்திரம் சக்திவாய்ந்த வில்லனாக மட்டுமே காட்டப்படாமல் ஒரு சராசரி மனிதராக வாழ்க்கையில் நேசித்த ஒருவரை இழந்து அவரை மறுபடியும் உயிரோடு கொண்டுவர எல்லா முயற்சிகளையும் எடுக்கும்போது மனதை தொடுகிறது. டென் ரிங்ஸ் - டாக்டர் ஸ்டேரேஞ்ச்ன் வாங் கதாப்பாத்திரம் - அயர்‌மேன் 3 ன் பென் கிங்ஸ்லேயின் ட்ரெவெர் கதாப்பாத்திரம் எல்லாமே எம்.சி.யூ‌. மெமரிஸ். கேட்டி கதாப்பாத்திரத்தின் தோழமையான நட்பு மற்றும் கலகலப்பான பேச்சுகள் திரைப்படத்துக்கு இன்னமும் ரசனையை கொடுத்து இருக்கு. ஆரம்பத்தில் 'மார்வெல்' உலகத்தில் இடம்பெறுமா ? என்ற யோசனையை கொடுத்தாலும் படம் முடியும்போது அடுத்த பாகத்துக்காக கண்டிப்பாக காத்திருக்கலாம் என்ற அளவுக்கு திரைக்கதை அவ்வளவு பிரமாதமாக இருக்கிறது. க்ளைமாக்ஸ் எப்போதும் போல பிரம்மாண்டமான CGI மோதல்‌. மொத்தத்தில் இந்த படத்தில் நல்ல பொழுதுபோக்கு நிச்சயமாக கிடைக்கும். ஒரு சராசரி மனிதர்களாகவே காதல் இல்லாமல் நட்பு வட்டாரங்கள் என்று படம் மொத்தமும் பயணிக்கும் கேட்டி மற்றும ஷங் சியின் கதாபாத்திரங்களுக்கு மறுபடியும் ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம் ONE LINE REVIEW : SHANG CHI - LEGEND OF TEN RINGS - "BRAND NEW CHAPTER" நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

CINEMATIC WORLD - 051 - FREE GUY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!!


இந்த படம் 2021 இல் வெளிவந்தது. இந்த படத்துடைய கதை, ஃப்ரீ சிட்டி எனப்படும் விளையாட்டை சுற்றி மட்டுமே நகர்கிறது.  ஒரு நிகழ்நிலையில் விளையாடும் ஆன்லைன் கணினி விளையாட்டில் பின்னணி காதப்பாத்திரமாக இருக்கும் ரேனால்ட்ஸ் ஒரு கட்டத்தில் அந்த கணினி விளையாட்டை விளையாடும் ஒரு கதாப்பத்திரத்தை நேசிக்க தொடங்குகிறார், ஆனால் அந்த கதாப்பத்திரம் ஒரு கணினி வரைகலையாளரின் நகல் என்றும் உண்மையில் தான் ஒரு கணினி விளையாட்டின் கதாப்பாத்திரம் மட்டும்தான் என்றும் தெரிந்துகொள்ளும் ரேனால்ட்ஸ் பொறுப்பற்ற கோபமான அந்த கணினி விளையாட்டின் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் டைக்காவின் ஆன்லைன் விளையாட்டை முடக்கும் முயற்சியை எப்படி தடுக்கிறார் என்பதுதான் இந்த படத்துடய கதை, இந்த படத்தில் விஷுவல் எஃபக்ட்ஸ் நம்பும் வகையில் இருக்கிறது. உண்மையில் கணினி விளையாட்டை விளையாடும் ஒரு கதாப்பத்திரத்தின்  ஒரு அனுபவத்தை வழங்க முயற்சி செய்துள்ளது எனலாம். இந்த படத்துடைய கிளைமாக்ஸ் சொன்னால் ஸ்பாய்லர் ஆக மாறிவிடும் என்றாலும் ரொம்பவுமே இமாஜினேஷன் நிறைந்த இந்த காதல் ஆக்ஷன் டிராமா நகைச்சுவை போன்ற எல்லா விஷயங்களும் ஒரு சேர அமைந்துள்ள திரைக்கத்தைக்கு ஒரு நல்ல முடிவை கொடுத்துள்ளது. ஒரு கணினி கதாப்பத்திரமாக வந்திருக்கும் ரேனால்ட்ஸ் இதற்கு முந்தைய திரைப்படங்களை போலவே துல்லியமான வசனங்களாலும் எதார்த்தமான காட்சி நடிப்பினாலும் மனதை கவர்கிறார். 20 ஆம் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் வெளியீட்டில் வெளிவந்து இருக்கும் இந்த திரைப்படம் அனைவரும் பார்க்கும் படியாக இருக்கிறது. சலிப்பு தட்டாத திரைக்கதையில் என்ற குறைகளும் இல்லை. காட்சி அமைப்புகளும் இந்த படத்தின் டிரெய்லர் கொடுத்த எதிர்பார்ப்பை விட ரொம்பவுமே அதிகமாகவே சிறப்பாக அமைந்துள்ளது என்று சொல்லலாம். நிறைய செல்ஃப் ஹ்யூமர் இருப்பதால் இந்த படம் ஒரு மீட்டா லெவல் படம் என்ற எண்ணமே தோன்றாத வண்ணம் ஒரு செம்ம படம் கொடுத்து இருக்கிறார்கள்.  ONE LINE REVIEW - FREE GUY - '10/10 RATED OPEN WORLD GAME' - ஒரு முறை கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம். இன்னும் கருத்துக்கள் இருந்தால் மேற்கொண்டு பதிவு பண்ணுகிறேன். ரொம்ப நல்ல படம் கண்டிப்பாக பாருங்கள் !! BYE நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 

CINEMATIC WORLD - SPECIAL MENTIONS - VENOM LET THERE BE CARNAGE - TAMIL

 

 

 VENOM - LET THERE BE CARNAGE - மார்வெல் மற்றும் சோனி நிறுவனத்தின் தயாரிப்பில் காமிக் புத்தக கதாபாத்திரங்களாக இருக்கும் வெனோம் மற்றும் கார்நெஜ் ஆகிய கதாப்பாத்திரங்கள் இடம்பெறும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு 2018 இல் வெளிவந்த வெனோம் திரைப்படத்தின் அடுத்த பாகமாக இந்த திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்த பத்தி சொல்லணும் என்றால் இந்த படம் முதல் பாதியை போல இல்லாமல் கொஞ்சம் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. முதல் வெனம் திரைப்படம் 800 மில்லியன் வசூல் குவித்த சாதனை படைத்த காரணத்தால் இந்த திரைப்படம் வெளிவந்த சோனி மார்வெல் பிரபஞ்ச திரைப்படங்களில் இப்போது ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்றே சொல்லலாம். கொள்ளையடிக்க முயற்சி செய்தவரை விட்டுவிட்டு காப்பாற்ற வந்த வேனமை பார்த்து மக்கள் பயந்து ஒடும் காட்சியாக இருக்கட்டும் ஹர்டிக்கு புரியாத கேசடியின் கிறுக்கல்கள் கொடுக்கும் தகவல்களை வெனம் கண்டுபிடிக்கும் காட்சிகளாக இருக்கட்டும் ஹர்டியிடம் இருந்து பிரிந்து மாறுவேடம் போடும் பார்ட்டிக்கு செல்லும் வெனோம் அங்கே செய்யும் அட்டகாசங்களும் கொடுக்கும் சொற்பொழிவும் இரு துருவங்களாக வெனமும் ஹர்டியும் இருந்தாலும் கலகலப்பான காட்சிகளாக அமைந்துள்ளது.டாம் ஹார்டி மற்றும் வெனோம் கதாபாத்திரங்களின் இடையில் இருக்கும் பிரிக்க முடியாத வாக்குவாதம் செய்யும் கட்சிகள். வில்லைன் கேசடியாக நடிக்கும் வுட்டி ஹரல்சன் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சியில் மிகப்பெரிய சி ஜி ஐ சண்டை காட்சிகள் என ரைஸ் ஆஃப் த பிளானட் ஆஃப் த ஏப்ஸ் படங்களின் விறுவிறுப்பு தன்மையோடு சலிப்பு தட்டாமல் திரைக்கதையை நகர்த்தி வெனம் திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு அதன் அடுத்த திரைப்படத்தை கொண்டு வந்திருக்கும் இயக்குனர் செர்கிஸ் அவர்களுக்கும் பாராட்டுகள். கடைசி காட்சியில் மார்வெல் சினிமா திரை பிரபஞ்சத்தை சொனியில் இணைத்து இருப்பது இந்த திரைக்கதை நுணுக்கங்களை காட்டும் கலையின் அடுத்த கட்டம் என்றே சொல்லலாம். மார்வெல் சினிமாக்களின் பாணியில் முதல் திரைப்படம் அமையாமல் போனாலும் இரண்டாவது திரைப்படம் இந்த முயற்சியில் மிகவும் சரியாகவே வெற்றியை அடைந்துள்ளது. மொத்தத்தில் ONE LINE REVIW : வெனோம் லெட் தேர் பி கார்நெஜ் _ SONY LET THERE BE MARVEL

CINEMATIC WORLD - SPECIAL MENTIONS - ENTERTAINMENT 2021 - TAMIL

 

RED NOTICE ரெட் நோட்டீஸ் இந்த படம் 2021 இல் வெளிவந்தது . ராயன் ரெனால்ட்ஸ் கால் கடோட் மற்றும் டுவெய்ன் ஜான்சன் நடித்து வெளிவந்த இந்த படம் நெட்ஃப்லிக்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பிரம்மாண்டமான படைப்பு அப்படின்னு சொல்லலாம். இந்த படத்துடைய கதை. வரலாற்று கலைப்பொருட்கள் அதிகமான பண மதிப்பு கொண்டதாக இருந்தால் கண்டிப்பாக பிளான் போட்டு எடுத்து செல்வதில் நினைத்ததை முடிப்பவனாக இருக்கும் ரெனால்ட்ஸ். ஆனால் அவருக்கு நேர் எதிராக இருக்கும் சிறப்பு காவல் துறை அதிகாரி ஜான்சன். பாரம்பரிய மதிப்பு மிக்க கிளியோபட்ராவின் பொன் அணிகலன்களை மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு அதனுடைய ஒரு பாகத்தை ரெனால்ட்ஸ் கொள்ளையடிக்கும்போது அரும்பாடுபட்டு செம்ம சண்டைகள் நிறைந்த சேஸிங் காட்சிகளுடன் தடுக்கிறார் ஜான்சன். ஆனால் இப்போதுதான் கதைக்குள் ஒரு செம்ம டுவிஸ்ட். பிஷப் என்று அழைக்கப்படும் உலகின் மிக சிறந்த கொள்ளையராக இருக்கும் கடோட் ரொம்பவுமே எளிமையாக அந்த கலைப்பொருளை கொள்ளையடித்துவிட்டு மேற்கொண்டு பழியை ஜான்சனிடம் போட்டுவிட்டு சிறப்பாக எஸ்கேப் ஆகிறார். இந்த‌ சம்பவத்தால் ரஷ்ய சிறையில் மாட்டிக்கொள்ளும் ஜான்சன் மற்றும் ரெனால்ட்ஸ் அங்கே இருந்து வெளியே வந்து கலைப்பொருளின் மற்ற இரு பாகங்களை அதற்கான இடங்களுக்கு பயணித்து கண்டறியும் ஒரு அட்வென்சரான கதைதான் இந்த ரெட் நோட்டிஸ். படத்துடைய ப்ளஸ் பாயிண்டாக மிகப்பெரிய பஜ்ஜெட் மற்றும் சிறப்பான ஆக்ஷன் காட்சிகள் அட்வென்சரின் எல்லைகளை தொட்டு வருகிறது. உலகம் முழுவதும் பயணிக்கும் கதைக்களம் சுறுசுறுப்பாக அடுத்தடுத்த காட்சிகளை நகர்த்தி கதைகள் மற்றும் காட்சிகளுக்கு தொண்ணூறு சதவீதம் வேகத்தை கூட்டுகிறது என்றால் வண்ணமயமான CGI மற்றும் துல்லியமான வசனங்கள் கதையோடு சேர்ந்த திரைக்கதைக்கு மிஞ்சிய பத்து சதவீதத்தை மொத்தமாக கொடுக்கிறது. உள்ளுர் மொழிகளில் டப்பிங் கொடுத்த கலைஞர்களுக்கு படத்துடைய கடைசியில் CREDITS கொடுத்த நெட்பிளிக்ஸ்க்கு ஒரு SPECIAL THANKS !!! ONE LINE REVIEW : RED NOTICE - மூன்று பேர் - மூன்று மோதல் !!!

Sunday, October 24, 2021

CINEMATIC WORLD - SPECIAL MENTIONS - ZACK SNYDER'S JUSTICE LEAGUE


இயக்குனர் ஜாக் ஸ்னைடர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ஜஸ்டிஸ் லீக் - இந்த திரைப்படத்தை பற்றி நிச்சயமாக சொல்லியே ஆக வேண்டும். இந்த படம் 2017 ல் வெளிவந்து அவ்வளவு வணிக அளவிலான வெற்றியை அடையாத ஜோஸ் வேடன் இயக்கத்தில் வெளிவந்த ஜஸ்டிஸ் லீக் (2017) திரைப்படத்தின் மறுபதிப்பு எனலாம். அந்த திரைப்படம் இயக்குனர் ஜோஸ் வேடன் இயக்கத்தில் ஜாக் ஸ்னைடர் கதையில் நிறைய மாற்றங்களை செய்து வெளிவந்ததால் வெற்றியை அடையவில்லை.. ஆனால் இந்த திரைப்படம் மிகவும் சிறப்பாக வெற்றி அடைய ஒரே கரணம்தான், கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் RUNNING LENGTH இருந்தாலும் இந்த திரைப்படம் "ஒரு சிறந்த திரைப்படம்" - டி சி காமிக்ஸ் கதாபாத்திரங்களான பேட் மேன் , சூப்பர் மேன் , ஃபிளாஷ் , அகுவா மேன், வோண்டர் வோமன் மற்றும் சைபார்க் இணைந்து ஜஸ்டிஸ் லீக் என்னும் சூப்பர் ஹீரோ குழுவை உருவாக்கி இந்த பூமிக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து இந்த பூமியை காப்பாற்ற போராடுவதுதான் இந்த திரைப்படத்தின் கதை. இந்த திரைப்படத்தில் நடிப்பு, திரைக்கதை, காட்சி அமைப்பு, இடங்கள் என எல்லாமே சிறப்பானதாக உள்ளது. உண்மையில் இந்த 2021 ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் "மிகச்சிறந்த திரைப்படம்" என்ற விருதை ஜஸ்டிஸ் லீக் திரைப்படத்துக்கு கொடுக்கலாம். இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் , ஃபிளாஷ் காலத்தை கடந்து செல்லும் காட்சிகள், சைபோர்க் பணம் கொடுத்து உதவும் காட்சி, ஸ்டேப்பேன் உல்ஃப்க்கு எதிராக சண்டையிடும் காட்சி, என்று எல்லா காட்சிகளும் மிக சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளன. விஷுவல் எஃபக்ட்ஸ் அவுட் டேட்டட் ஆக தோன்றலாம் ஆனால் துல்லியமாக இருந்தது. இந்த திரைப்படத்தை கண்டிப்பாக எல்லோரும் ஒரு முறை பார்க்கலாம். இந்த திரைப்படம் 2021 ம் ஆண்டு வெளிவந்தது. 



Wednesday, October 13, 2021

CINEMATIC WORLD - 050 - THE DARK KNIGHT RISES - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




  இந்த படம் ஒரு பெரிய சகாப்தம். இந்த படத்தை பற்றி மட்டுமே பேசவேண்டும் என்றால் பேசிக்கொண்டே போகலாம். இந்த திரைப்படம் 2012 ம் ஆண்டு வெளிவந்தது. கிறிஸ்டோபர் நோலான் இயக்கத்தில் வெளிவந்த BATMAN BEGINS (2005),  THE DARK KNIGHT (2008) திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது திரைப்படமாக கடைசி திரைப்படமாக இந்த திரைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் GOTHAM நகரத்தில் நடந்த குற்றங்களை தடுக்கும் பேட் மேன் கடந்த 7 வருடங்களாக பேட் மேனாக செயல்படாமல் இருக்கிறார், டென்ட் சட்ட அமைப்பு மூலமாக காவல்துறை குற்றங்களை தடுத்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக லீக் ஆஃப் ஷாடோஸ் அமைப்பில் இருந்து வரும் வில்லன் BANE அந்த நகரத்தில் வாழும் தொழில் அதிபர் புரூஸ் வேய்ன் தான் பேட் மேன் என்று தெரிந்து இருப்பதால் புரூஸ் வேய்னை தாக்கி அவருடைய சாதனங்கள் அனைத்தையும் கைப்பற்றி அவரை ஒரு கொடிய சிறையில் அடைக்கிறார், மேலும் GOTHAM மக்களை நகரத்தினை விட்டு வெளியே செல்ல முடியாதவாறு அடைக்கிறார். இந்த பிரச்சனைகளில் இருந்து மிகவும் கடினமாக முயற்சி செய்து வெளியே வரும் பேட் மேன் அங்கே காவல் துறையின் உதவியுடன் BANE ஐ தோற்கடித்து அனைவரையும் காப்பாற்றினாரா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதைக்களம். இந்த திரைப்படம் ஐ மாக்ஸ் காமிராவில் எடுக்கப்பட்டு மிகவும் சிறப்பான நேர்த்தியான கதைக்களத்துடன் வெளிவந்து. இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் சிறப்பாக இருப்பதோடு மட்டும் இல்லாமல் கதையின் STORY ARC க்கு மிகவும் சிறப்பான முடிவை கொடுத்துள்ளது. இந்த படத்தின் முக்கிய வில்லனான BANE இன் கேரக்டர் டிசைன் எனக்கு ரொம்பவுமே பிடிக்கும். BANE பண்ணுவது அதிகாரத்தை உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு GOTHAM நகரத்தை அழிக்க வேண்டும் என்பதுதான் ஆனால் BANE பண்ணற எல்லா விஷயங்களையும் LARGE SCALE -ல் பண்ணுவாரு. COMICS ல இவர் அந்த அளவுக்கு பயங்கரமான வில்லன் இல்லை. இந்த படத்தில் இவர் மொத்த GAME ஐயும் CONTROL ல எடுத்துக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமாக GOTHAM நகரத்தை அந்த நகரத்தில் இருப்பவர்களை கொண்டே தாக்குவது எல்லாம் ரொம்ப அருமையான கதைக்களம். CHRISTOPHER NOLAN அவருடய கதைகளில் சிக்கலான CONCEPT களை கொண்டு வருவதில் மிகவும் சிறப்பாக சாதிப்பார். இந்த படமும் அவருடைய சாதனைப்பட்டியலில் அடக்கம். BRUCE WAYNE இப்போது அவரிடம் COMPANY இல்லை , MONEY இல்லை , TECH இல்லை ஆனால் எதுவுமே இல்லை என்றாலும் BATMAN ஆக களத்தில் குதிப்பார். இங்கே நான் கவனிக்க வேண்டிய விஷயம் சொல்கிறேன். BATMAN V. SUPERMAN -ல் SUPERMAN உயிரோடு இருக்கிறார் என்று அதிகமான DETAIL கொடுத்து இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த படத்தில் CLIMAX -ல் BATMAN எப்படி ESCAPE ஆனார் என்பதை ஒரு மறைக்கப்பட்ட PLOT LINE ஆகவே மாற்றியிருப்பார்கள். ஒரு STORY யை எப்படி EXECUTION பண்ணனும் என்பதற்கு இந்த படம் ஒரு BEST உதாரணம். இன்னும் என்ன சொல்ல ? எப்போதும் போல இந்த தமிழ் வலைப்பூவை பயன்படுத்தியதற்க்கு நன்றி, அப்படியே ஃபாலோ பட்டன் கொடுத்துவிடவும் ! தொடர்ந்து சப்போர்ட் பண்ணிக்கொண்டே இருங்கள். முடிந்தால் ஏதாவது கமெண்ட் பண்ணுங்கள். பல வருடமாக என்னுடைய வலைத்தளத்துக்கு கமெண்ட் இல்லை. நானும் பார்க்கிறேன் பார்க்கிறேன் ஒருவரும் கமெண்ட் பண்ணவே மாட்டேன் என்கிறார்கள். யுட்யூப் காலத்தில் பிளாக் வேலை செய்யாது என்ற எழுதப்படாத சட்டத்தை தோற்கடிக்கதான் இந்த முயற்சி. சப்போர்ட் பண்ணுங்கள்.  நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 


CINEMATIC WORLD - 049 - THE DARK KNIGHT - TAMIL REVIEW - திரை விமர்சனம்


இந்த திரைப்படம் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த பேட்மேன் பெகின்ஸ் என்ற திரைப்படத்துக்கு அடுத்ததாக வெளிவந்துள்ளது. லீக் ஆப் ஷாடோஸ் அமைப்பின் மூலமாக பெற்ற பயிற்சியினால் GOTHAM நகரத்தில் நடக்கும் குற்றங்களை தடுத்து நிறுத்துகிறார் பணக்காரர் தொழில் அதிபர்  BRUCE WAYNE என்ற BAT MAN - இந்த நிலையில் வங்கி கொள்ளை மூலமாக பெரிய மிகவும் மோசமான மனநிலை பாதிக்கப்பட்ட வில்லனாக மாறிய ஜோக்கர் இப்போது பேட் மேனை நேருக்கு நேராக எதிர்க்கிறார். பேட்மேன் அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ஜோக்கர் அப்பாவிகளை தாக்குகிறார். வழக்கறிஞர் ஹர்வே டென்ட் எல்லோரையும் காப்பாற்ற தான்தான் பேட் மேன் என்று சொல்கிறார். ஆனால் ஜோக்கர் உருவாக்கிய விபத்தால் ஹர்வே டென்ட் மற்றும் ரேச்சல் மிகவும் பாதிக்கப்படுகிறா்கள். ரேச்சல் இறப்புக்கு பின்னால் பேட்மேன் / ப்ரூஸ் வெய்ன் நகரத்தில் ஜோக்கரிடம் எல்லோரையும் காப்பாற்ற எடுக்கும் கடினமான முயற்சிகள் இந்த படத்தின் கதைக்களமாக இருக்கிறது. இந்த படம் திரைப்பட வரலாற்றில் மிகவும் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது என்றால் அதனை யாராலும் மறுக்க முடியாது. ஜோக்கர் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் ஹேத் லெட்ஜெர் அவர்களின் மறைவுக்கு பின்னால் அவருடைய கடைசி திரைப்படமாக இந்த திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் பேட்மேன் விட ஜோக்கர் கதாப்பாத்திரத்தின் அமைப்பு சூப்பர் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். சொசைட்டி மேலே அவ்வளவு மனக்கசப்பு இருக்கிறது. மனசு முழுக்க விஷம் விஷம். இந்த படத்தை பார்த்து இன்ஸ்பேர் ஆகி களத்தில் குதித்தால் காவல் துறை உங்களை துவைத்து கிளிப் போட்டு காயப்போட்டு விடுவார்கள். பேட்மேன் ஆக இருங்கள் . காசு வைத்து இருந்தாலும் நல்லவராக இருங்கள். ஜோக்கர் பார்த்து இன்ஸ்பிரேஷன் எடுத்துக்கொண்டு தப்பான பாதைக்குள் பைத்தியம் போல போக வேண்டாம். நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 


CINEMATIC WORLD - 048 - BIG HERO 6 -TAMIL REVIEW - நாங்களும் சூப்பர் ஹீரோக்கள்தான் என்று சொல்லும் ஒரு DISNEY படைப்பு !



BIG HERO 6 - ஒரு பக்கம் அனிமேஷன் படங்கள் எல்லாம் ஃபேண்டஸி கதைகளை மட்டுமே நம்பி சென்றுக்கொண்டு இருக்கவுமே ஒரு படம் மட்டும் அனிமேஷன் படங்களை கொண்டு சூப்பர் ஹீரோ கதைகளை சொல்லலாம் என்று புதுசாக யோசித்தது , அப்படி ஒரு படம்தான் இந்த BIG HERO 6 , இந்த படம் பார்த்தவர்கள் கண்டிப்பாக BAYMAX ஐ மறக்க மாட்டார்கள் !! அடுத்த பாகம் எப்போது வரும் என்று பார்க்காமல் TANGLED - THE SERIES போல BIG HERO - 6 THE SERIES ஓடிக்கொண்டு இருக்கிறது , COME ON சென்று பாருங்கள். இந்த படத்தின் கதை, படத்துடைய கதாநாயகன் ஹீரோ [ HIRO - ஜப்பான் பேருப்பா !!] அவனுடைய தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி சின்ன சின்ன ரோபோட்களை கொண்டு ஆடுகளம் தனுஷ் போல லோக்கல் தெருக்களில் சண்டைகளை உருவாகிறான். கடைசியில் காவல் துறை கடமையை செய்வதற்குள் காபற்றப்படும் நம்ம ஹீரோ பின்னாளில் அவனுடைய அண்ணனால் வடிவமைக்கப்பட்ட பே மேக்ஸ் என்ற ரோபோட்டை பார்த்து ரொம்பவுமே இம்ப்ரஸ் ஆகிறான், இதனால் மண்டைக்குள் வெற்றி அடைந்தே ஆக வேண்டும் என்று யோசனை வந்த ஹீரோ ஹமடா அவனே ரொம்பவுமே கடினமாக முயற்சி செய்து ஒரு தனித்த சிறு சிறு பாகங்களாக பிரிந்தும் இணைந்தும் செயல்படும் ஒரு சின்ன சின்ன ரோபோட்கள் இணைந்த இயந்திரத்தை உருவாக்கி அறிவியல் படைப்புகளை வெளியிடும் எக்ஸ்போ கண்காட்சியில் காட்டுகிறான். இந்த EXIBITION இல் நடக்கும் ஒரு மோசமான நெருப்பு விபத்தில் அவனுடைய அண்ணன் இறந்து போகிறார். குடும்பமே உடைந்து போகிறது. ஆனால் கொஞ்சம் வருடங்களுக்கு பிறகு சின்ன சின்ன ரோபோட்கள் வில்லன்களால் பயன்படுத்தப்படுவதை கண்டுபிடிக்கிறான் நமது கதாநாயகன் ! அந்த விபத்தின் மர்மங்களை கண்டறிந்து நடந்த எல்லாமே சதி என்று புரிந்துகொள்கிறான் ! அவருடைய அண்ணனின் இழப்புக்கும் மேலும் அவன் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு இப்போது இப்படி தவறான இடத்தில் தப்பான ஆட்களிடம் இருக்க கூடாது என்பதற்காகவும் புதிதாக அண்ணனின் நண்பர்களுடன் இணைந்து மெடிக்கல் ரோபோட் பே-மேக்ஸ்-ன் உதவியுடன் பிரச்சினைகளை சமாளித்து ஒரு சூப்பர் ஹீரோ குழுவினராக இணைந்து போராடி வெற்றி அடைவதுதான் இந்த பிக் ஹீரோ 6 திரைப்படத்தின் மொத்த கதை. இந்த படம் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் திரைக்கதையில் விறுவிறுப்பாக அமைகிறது. டிஸ்னி வெளியிட்டு பின்னாளில் வெளிவந்த ஜூடோபியா படத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரு சராசரி பொழுதுபோக்கு அனிமேஷன் திரைப்படமாக மட்டுமே இல்லாமல் ஒரு ஆக்சன் அடவென்சர் நிறைந்த திரைப்படமாக இந்த திரைப்படங்கள் அமைவது வரவேற்கதக்கது. இருந்தாலும் ஒரு அனிமேஷன் காட்சிகளில் சி ஜி ஐ தொழில்நுட்ப வடிவமைப்பில் பிரமாதமாக அமைக்கப்பட்ட காட்சிகள் திரைக்கதைக்கு சிறப்பு சேர்க்கிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும். மொத்தத்தில் ONE LINE REVIEW : BIG HERO 6 _ புதிய கதாநாயகர்களின் உதயம் !!! நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 


Tuesday, October 12, 2021

CINEMATIC WORLD - 047 - THE SECRET WORLD OF WALTER MITTY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


THE SECRET LIFE OF WALTER MITTY - இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பான திரைப்படம் என்று சொல்லலாம் . இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டில் நெகடிவ் கேமராக்களை பயன்படுத்தி எடுக்கும் நிழற்படங்கள் அனைத்தையும் அச்சிவதற்கு உதவும் நெகடிவ் ஆசெட்ஸ் துறையில் பணிபுரிகிறார் வால்டர். புதிதாக பதவி க்கு வரும் நிறுவன அதிபரால் LIFE என்ற மாதம் தோறும் வெளிவந்த மாத இதழ்  நிறுவனத்தில் இருந்து அனைவருமே வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர். லைஃப் ஒரு இணையதள பத்திரிக்கையாக மாறுகிறது. LIFE மேகஸின் கடைசி பதிப்பின் அட்டைப்படத்துக்காக போட்டோகிராபர் ஷியான் அவர்கள் எடுத்த  நெகடிவ் 25 இல் இருக்கும் படம் அட்டைப்படமாக வெளியிடப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டதால் அந்த நெகட்டிவ் தொலைந்து போனதால் ஷியானை சந்திக்க  நிறைய ஆண்டுகளுக்கு பின்னால் ஒரு அடவெஞ்செர் நிறைந்த பயணமாக கிரீன்லாந்து செல்கிறார். இந்த பயணத்தில் அவரை சந்திக்க முடியாமல் போனாலும் மனதுக்குள் ஒரு புதிய தன்னம்பிக்கை பெறும் வால்டர் மறுபடியும் பயணித்து இமய மலை பகுதியில் அவரை சந்தித்து பேசுகிறார். கடைசியில் அவருக்கு நெகடிவ் 25 கிடைத்ததா ? அந்த மாத இதழ் வெளிவரும் கடைசி பதிப்பில் அட்டைப்படத்தை அவரால் கொடுக்க முடிந்ததா என்பதை மிகவும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறது இந்த திரைப்படம். இந்த திரைப்படம் யாராக இருந்தாலும் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய திரைப்படம் என்றே சொல்லலாம். பென் ஸ்டில்லேர் ஒரு சிறப்பான நடிப்பை இந்த திரைப்படத்துக்கு கொடுத்துள்ளார் என்றால் அது மிகையாகாது. கடைசியாக ஒரு விஷயம் சொல்லப்போனால் குடும்ப கஷ்டத்துக்காக தன்னுடைய வாழ்க்கையை தியாகம் பண்ணிட்டு வேலை விட்டா வீடு , வீடு விட்டால் வேலை என்று மோத்த வாழ்க்கையும் சம்பளத்துக்கு போக்கியம் பண்ணிவிட்டு சின்ன சின்ன சந்தோஷம் கூட கிடைக்காமல் குடும்பத்தை காப்பாத்தும் ஆண்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்.!!




CINEMATIC WORLD - 046 - BRAVE - TAMIL REVIEW - டிஸ்னியின் சாதனை செல்வி !! - திரை விமர்சனம் !!

பழங்கால ஸ்காட்லாந்து காடுகளில் காடுகளை ஆட்சி செய்யும் தலைவராக இருக்கும் KING FERGUS மற்றும் QUEEN ELINOR இளவரசி MERIDA வுக்கு திருமணம் செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ஆனால் இளவரசி MERIDA அவருடைய திருமணத்துக்கு மறுப்பு தெரிவிக்கிறார். இந்த காடுகளில் MOR'DU என்ற கரடியினால் அந்த காடுகளில் வசிக்கும் அரசர் மற்றும் குழுவினர் நிறையவே பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் MERIDA கோபப்பட்டு காடுகளுக்குள் செல்லும்பொழுது அங்கே எதிர்பாராத விதமாக ஒரு WITCH ஐ சந்திக்கிறார். வயதான அந்த மாயக்கலைகள் தெரிந்த பாட்டி அரசி ELINOR இன் மனம் மாறுவதற்கும் மேலும் இளவரசியின் திருமணத்தை நடத்தும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு மாய சக்திகள் நிறைந்த கேக் ஐ கொடுக்கிறார். ஆனால் கேக்கை சாப்பிட்ட அரசி அவர்கள் ஒரு கரடியாக மாறுகிறார். MERIDA இப்போது அரசி யை காப்பாற்ற முயற்சி செய்கிறார். இந்த முயற்சியில் அவரால் வெற்றியடைய முடிந்ததா என்பதை சுவாரசியமான கதைக்களத்தில் சொல்லியிருக்கிறது இந்த திரைப்படம். அகாடமி ஆஸ்கர் விருது வென்ற இந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 2012 ஆகும். இந்த திரைப்படம் ஒரு ஸ்டேண்ட் அலோன் திரைப்படமாக சிறப்பான கதைக்களம் மற்றும் சிறப்பான அனிமேஷன் காட்சிகளின் கதம்பமாக உள்ளது. வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் மற்றும் பிக்ஸர் நிறுவனத்தின் பிரஸ்டோ [PRESTO] என்ற அனிமேஷன் தொழில்நுட்ப கட்டமைப்பு ANIMATION ல் வெளிவந்த இத்திரைப்படம் சிறப்பான விமர்சனங்கள் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்தது.இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயம் என்று பார்த்தால் இளவரசி மேரிடாவின் கதாப்பாத்திரம்தான். மற்ற இளவரசி போல சரியான நல்ல நேரம் நல்ல நாளுக்கு காத்து இருக்காமல் அவளுக்கு பிடிக்கும் என்ற விஷயத்தை மட்டுமே துணிந்து செய்கிறாள். கவனமாக செயல்படுகிறாள். வில் அம்பு சண்டைகளில் தேர்ச்சி உள்ளவளாக இருக்கிறாள். இதை விட ஒரு நல்ல இளவரசி எங்கே கிடைப்பாள் ? PART TWO க்கு பல வருடங்களாக காத்துக்கொண்டு இருக்கிறோம் , ஒரு WEB SERIES ஆவது கொடுக்கலாமே !! இப்படி கேட்க காரணம் என்னவென்றால் இந்த படம் அப்படி ஒரு சிறப்பான இன்டர்நேஷனல் சூப்பர் ஹிட், பாக்ஸ் ஆபீஸ் பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். இப்போது வலைத்தளத்தின் ப்ரமோஷன்க்கு வருவோம். NICE TAMIL BLOG - ORU TAMIL WEBSITE - இந்த வலைப்பூ வருடக்கணக்காக வேலைபார்த்து உருவாக்கிய ஒரு வலைத்தளம். கண்டிப்பாக சப்போர்ட் பண்ணுங்கள். விளம்பரங்களை கிளிக் பண்ணுங்கள். அப்போதுதான் நம்முடைய கம்பெனிக்கு நிறைய காசு கிடைக்கும். 

Saturday, October 2, 2021

AVATAR THE LAST AIRBENDER - TAMIL

அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர் - ஒரு சிறப்பான தொலைக்காட்சி தொடர். 2015 களில் சுட்டி டிவியில் ஒளிபரப்பான கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் ரொம்பவுமே ஸ்பெஷல் ஆன கார்ட்டூன் செரீஸ் இந்த அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர். இந்த சீரியல் ரொம்பவுமே சிறப்பாக கதைப்படுத்தப்பட்டு இருக்கும். அதனாலேயே இந்த சீரியல் க்கு ஒரு தனி ஃபேன் பேஸ் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஒரு காலத்தில் நெருப்பு, நிலம், கடல், மற்றும் காற்று ஆகிய நான்கு சக்திகளை கட்டுப்படுத்தும் மக்களுக்குள் போர் உதயமாகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மறு ஜென்மம் எடுக்கக்கூடிய அவதார் என்ற சிறப்பு சக்தி வாய்ந்த ஒருவர் இந்த போரை தடுத்து அமைதியை நிலைநாட்ட வருவார் என்று அங்கே எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். கேப்டன் அமெரிக்கா போல பனிக்கட்டியில் உறைந்து போகிறார். பின்னாளில் கடல் சக்திகளை கொண்ட நாடோடி அண்ணன் தங்கையான சாக்கா மற்றும் கடாராவால் மீட்கப்பட்டு நெருப்பு இன மக்களிடம் இருந்து எல்லோரையும் காப்பாற்ற பயணத்தை தொடங்குகிறார்கள். இந்த பயணத்தில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் எல்லாமே எபிசோட்களில் சொல்லப்பட்டு இருக்கும். இந்த அனிமேஷன் தொடர் ரொம்பவுமே இன்டர்ஸ்டிங் ஆக இருக்கும். முதல் சீசனில் அவதாரை தேடிக்கொண்டு இருக்கும் இளவரசன் ஜுகோ மற்றும் அவருடைய கார்டியன் இரோஹ்விடம் இருந்து தப்பித்து பனி நாட்டுக்கு சென்று அங்கே கடல் நீரை கட்டுப்படுத்தும் சக்திகளை கற்றுக்கொள்வது சொல்லப்பட்டு இருக்கும்.. அடுத்த இரண்டாவது சீசனில் நிறைய திருப்பங்களுடன் நில சக்தியில் மிகவும் சிறந்தவராக இருக்கும் டோஃப் என்பவரின் உதவியுடன் நெருப்பு சக்திகளை உடையவர்களை கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகள் ஜூகோவால் தோற்கடிக்கப்பட்ட அவதார் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுப்பதில் முடியும்.. மூன்றாவது சீசனில் நெருப்பு இனத்தை சேர்ந்தவர்களின் முயற்சிகளை தடுத்து அமைதியை நிலைநாடடவும் மக்களின் நன்மைக்காகவும் அவதார் ஆங் மற்றும் குழுவினர் போராடுவதாக இருக்கும்.. இந்த அனிமேசன் தொலைக்காட்சி தொடர் கண்டிப்பாக நீங்கள் பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகளின் பட்டியல் சேர்த்துக்கொள்ளலாம். நல்ல கதை, சிறப்பான காட்சியமைப்பு , ரசிக்கும் படியாக இருக்கும் நகைச்சுவை காட்சிகள், என்று இந்த தொடர் ஒரு முழுமையான அடவெஞ்செர் தொடராக இருக்கிறது.
  LIVE ACTION MOVIE TRAILER FOR COMPARISON :

CINEMATIC WORLD - 045 - DORA AND LOST CITY OF GOLD - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

டோரா அண்ட் தி லாஸ்ட் சிட்டி ஆஃப் கோல்ட் - இந்த படம் டோரா தி  எக்ஸ்பிளோரர் என்ற ரொம்பவுமே ஃபேமஸ் ஆன அனிமேஷன் தொடரை தொடர்ந்து லைவ் ஆக்சன் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

சமீபத்தில் வெளிவந்த சோனிக் தி ஹெட்ஜ்ஹாக், ஜங்கிள் க்ரூஸ் திரைப்படங்க இந்த திரைப்படம் ஒரு நல்ல அட்வெஞ்செர் திரைப்படமாக உள்ளது.. இந்த படத்துடைய கதை - தொல்பொருள் ஆராய்ச்சியில் சிறப்பான அறிவுத்திறன் கொண்ட டோரா அவருடைய பெற்றோரால் தொலைவில் சிட்டியில் இருக்கும் பள்ளியில் மேல்படிப்புக்காக சேர்க்கப்படுகின்ரார். ஒரு கட்டத்தில் ஒரு தங்க புதையலை தேடும் குழுவினரால் டோராவின் பெற்றோர் கடத்தப்படும்போது நண்பர்களுடன் காடுகளுக்குள செல்லும் டோரா அவருடைய பெற்றோரை மீட்க முயற்சி செய்வதுதான் இந்த படத்தின் கதைக்களம். கலகலப்பான கதைகளத்துடன் ஒரு நல்ல அடவெஞ்செர் திரைப்படமாக வெளிவந்துள்ள இந்த திரைப்படம் 2019 -ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தை கண்டிப்பாக ஃபேமிலியுடன் பார்க்கலாம். நான் SUPER WHY என்ற SHOW பார்த்துள்ளேன், அந்த ஷோ போலத்தான் DORA THE EXPLORER SHOW இருக்கும். குழந்தைகளுக்கு இன்டராக்டிவ் முறையில் கற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியாக மட்டும்தான் இருந்து வருகிறது. இந்த தொடர் வெறும் கார்ட்டூன் தொடர். ஆனால் 90 ஸ் கிட்ஸ்களுக்கு இந்த தொடர் ஒரு நல்ல மெமரி. இப்போது SONIC போல LIVE ACTION அடாப்ஷன் DORA THE EXPLORER க்கும் கொண்டுவர வேண்டும் என்றால் கதையில் நன்றாக கவனம் செலுத்தி எழுத வேண்டும்.ஸ்டுடியோக்கள் இன்னுமே கவனமாக படத்துக்கு மார்க்கேட்டிங் கொடுக்க வேண்டும். இந்த படம் ஒரு HARMLESS TEEN ஃபேண்டஸி காமெடியாகவும் இருக்கிறது அதே நேரத்தில் டைட்டில் மற்றும் டிரெய்லர்களில் பிராமிஸ் பண்ணிக்கொடுத்த அட்வென்சர் அனுபவங்களையும் படம் கொடுத்துள்ளது. குறிப்பாக வனப்பகுதிகளில் இடம்பெறும் காட்சிகள்ளில் காமிரா வொர்க் மிக்கவுமே டீசண்ட்டாக இருந்தது. TADEO JONES என்ற ஒரு அட்வென்சர் படத்தை எனக்கு கிளைமாக்ஸ் நினைவுபடுத்தியது. கடைசி கிளைமாக்ஸ்ஸில் ஃப்ரெண்ட்ஸ்ஷிப் மற்றும் ஃபேமிலி வேல்யூக்களுடன் ஒரு நல்ல மெசேஜ்ஜெயும் சொல்லி முடித்து இருக்கிறார்கள். SWIPER -ஐயும் கதையில் ஒரு GUEST APPEARANCE கொடுக்க வைத்துள்ளனர். இந்த படம் இந்த படத்துடைய SOUCRE MATERIAL க்கு ரொம்பவுமே நம்பிக்கையான ஃபவுண்டேஷன் கொடுத்துள்ளது. WELLDONE ! இப்போது வலைத்தளத்தின் ப்ரமோஷன்க்கு வருவோம். NICE TAMIL BLOG - ORU TAMIL WEBSITE - இந்த வலைப்பூ வருடக்கணக்காக வேலைபார்த்து உருவாக்கிய ஒரு வலைத்தளம். கண்டிப்பாக சப்போர்ட் பண்ணுங்கள். விளம்பரங்களை கிளிக் பண்ணுங்கள். அப்போதுதான் நம்முடைய கம்பெனிக்கு நிறைய காசு கிடைக்கும். 



CINEMATIC WORLD - 044 - PRINCE OF PERSIA - TAMIL REVIEW - கெத்தான GAME ! கெத்தான PADAM ! - திரை விமர்சனம் !!

 பிரின்ஸ் ஆப் பெர்சி யா - சான்ட்ஸ் ஆப் டைம். இந்த திரைப்படம் 2012 ல் வெளிவந்தது. ஆதரவற்ற சிறுவனாக இருந்து பின்னாளில் பெர்சியா நாட்டின் அரசரால் எடுத்து வளர்க்கப்படும் கதாநாயகர் இளவரசர் தஸ்தான். ஒரு கட்டத்தில் அல்மொண்ட் என்ற புனித இடத்தை அடைய முயற்சி செய்யும் போது அங்கே இருந்து ஒரு அதிசக்தி வாய்ந்த காலத்தை கடந்து கொஞ்சம்  நிமிடங்கள் பின்னோக்கி செல்லக்கூடிய ஒரு குருவாளை மீட்கிறார். ஒரு கட்டத்தில் அரசருடைய மறைவுக்கு இளவரசர்தான் காரணம் என்று குற்றம் சுமத்தப்படும்போது அவரால் எப்படி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடிந்தது என்பதுதான் இந்த திரைப்படத்துடைய கதைக்களம். கோல்டன் காம்பஸ், வார் கிராஃப்ட், அசாஸின்ஸ் கிரீட் , அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர் படங்கள் மாதிரி அடுத்த  பார்ட் ல பார்த்துக்கொள்ளலாம். அடுத்தடுத்து படங்களை எடுத்து கதையை சொல்லலாம் என்று இல்லாமல் ஒரு ஸ்டேண்ட் அலோன் திரைப்படமாக முழுமையாக ஒரு கதைக்களம் கொடுத்து பெர்சியா அல்லது பாரசீகம் சார்ந்த ஒரு உலகத்தையே டிசைன் செய்து ஒரு ஆக்ஷன் அடவெஞ்சர் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் பாய்ண்ட்.. இந்த படத்தின் கிளைமாக்ஸ் எட்ஜ் ஆப் டோமரோ திரைப்படத்தை உங்களுக்கு நினைவு படுத்தலாம்.. இந்த படத்தின் இன்னொரு பிளஸ் பாய்ண்ட் இந்த படத்துடைய விஷூவல் எஃபெக்ட்ஸ்.. மாயாஜால காட்சிகள் - ஸ்டன்ட் காட்சிகள் மிகவும் அருமையாக காட்சியமைப்பு செய்யப்பட்டு இருக்கும்.. வீடியோ கேம் கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது.. இந்த படம் எனக்கு பெர்சனல் ஃபேவரைட் எனலாம்.. ஒரு அருமையான ஃபேண்டஸி அடவெஞ்சர் திரைப்படம். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். சமீபத்தில் வெளிவந்த ஜங்கிள் க்ரூஸ் திரைப்படம் கூட ஃபேண்டஸி அடவெஞ்செர் ஜெனரில் வெளிவந்து ஹிட் கொடுத்தது. இருந்தாலும் இந்த திரைப்படம் இப்போது பார்த்தாலும் நன்றாக இருக்கும்.. பொதுவா PRINCE OF PERSIA - SANDS OF TIME - கேம் விளையாடுபவர்களுக்கு மட்டும்தான் தெரியும் இந்த GAME ஐ முடிப்பது எவ்வளவு கஷ்டம் என்ற விஷயம் ! யாராவது PRINCE OF PERSIA - SANDS OF TIME விளையாடி இருக்கிறீர்களா ? COMMENT பண்ணுங்க !! நமக்கு பிடித்த சாய்ஸ் எல்லாம் GTA VICE CITY .ZIP FILE மற்றும் GTA SAN ANDREAS .ZIP FILE மட்டும்தான் !!




Sunday, September 26, 2021

CINEMATIC WORLD - 043 - TENET - TAMIL REVIEW - காலத்தை இன்வேர்ட் பண்ண முடிந்தால் ? - திரை விமர்சனம் !!


TENET - இந்த படத்தை பற்றிய இண்டரெஸ்ட்டிங் ஆன விஷயம் என்ன தெரியுமா ? இந்த படத்தில் கடைசி வரைக்கும் ஹீரோவின் பெயர் சொல்லப்பட்டு இருக்காது. இந்த படத்தில் ஹீரோ எதிர்காலத்தில் இருந்து காலத்தில் ரேவர்ஸில் பயணிக்க கூடிய ஒரு பரிமாண சக்தியை ஆராய்ச்சி செய்யும் ஒரு குழுவில் சேர்க்கிறார். இந்த சக்தி இந்த உலகத்துக்கு அழிவு உருவாகாமல் தடுக்க எதிர்காலத்தில் இருந்து அனுப்பப்படுவதாக கருதி இந்த சக்திகளை உடைய பொருட்களையும் நடக்கும் சம்பவங்களின் பின்னணியையும் தெரிந்துகொள்ள நிறைய இடங்களுக்கு சென்று கடைசியில் இந்த படத்தின் வில்லனை சந்திக்கிறார்கள். ஹீரோவும் அவருடைய குழுவில் இருப்பவர்களும் இந்த வில்லன் இந்த உலகத்தை அழிப்பதற்கு முன்னால் நடக்கப்போக்கும் சம்பவங்களை தடுக்க முடிந்ததா என்பதுதான் இந்த படத்துடைய கதைக்களம். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக எதிர்பார்த்த இந்த திரைப்படம் கண்டிப்பாக எதிர்பார்த்த அளவுக்கு இருக்கிறது. இந்த படத்துடைய கதை மிகவும் அருமையாக இருக்கும். நிறைய காட்சிகள் கொஞ்சம் புரியவில்லை என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட ஒரு பெரிய சயின்ஸ் ஃபிக்ஷன் வெப் சீரிஸ்ன் SEASON 2 EPISODE 15 ஐ பார்ப்பது போலத்தான் இருந்தது. கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் ஒரே நேரத்தில் பயணம் செய்தால் அந்த காட்சிகள் எப்படி இருக்கும் என்ற இமாஜினேஷன் இந்த படத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தையே கொடுத்துள்ளது. இனசெப்ஷன் திரைப்படத்தில் கனவுகள் - இன்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தில் விண்வெளி என்று ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கான்செப்ட்டாக காலத்தை பயன்படுத்தும் காட்சிகள் மிகவும் அருமையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். MISS பண்ணாம பாருங்க.. இந்த இயக்குனருக்கு மட்டும் எங்க இருந்து இவ்வளவு கிரியேட்டிவ் ஆன ஐடியாக்கள் கிடைக்கிறது , நான் எல்லாம் பேனாவும் நோட்புக்கும் எடுத்து வைத்துக்கொண்டு கதை எழுதினால் ஒரு பக்கம் கூட எழுத முடிவது இல்லை. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு வசனம் நடந்தது நடந்துடுச்சு இந்த ஒரு வார்த்தை நம்பி தான் இந்த உலகமே உன்னைப் பொறுத்தவரைக்கும் அதுக்கு பேரு என்ன ? அதுக்கு பேர் தான் எதார்த்தம் !!! இது எனக்கு ரொம்ப பிடிச்ச வசனம். இந்த மாதிரியான படங்கள் கண்டிப்பாக உலக சினிமாவுக்கு கிரேயடிவிட்டி எல்லைகளை எல்லாமே கடந்து வெற்றி அடைய சொல்லிக்கொடுத்து இருக்கிறது. இந்த படம் ரொம்பவே பாராட்டப்பட வேண்டிய விஷயம் !!




CINEMATIC WORLD - 042 - THE PRESTIGE - TAMIL REVIEW - தொழில் முறை போட்டி போராக மாறிய கதை - திரை விமர்சனம் !!

 THE PRESTIGE - இந்த படம் CHRISTOPER NOLAN இயக்கத்தில் வெளிவந்த ஒரு செம்ம ஹாலிவுட் திரைப்படம் என்று சொல்லாம். உங்களுக்கு ஹாலிவுட் படங்கள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக நீங்கள் ஒரு முறை பார்க்க வேண்டிய திரைப்படம்தான் தி ப்ரெஸ்டிஜ் - இந்த படத்துடைய கதை. 1950 களில் ஆல்ஃபிரட் ஒரு மாயாஜால வித்தைகளை காட்டும் ஃபேமஸ் மேஜிஷியானாக இருக்கிறார். மேஜிக் நடக்கும்போது ஒரு எதிர்பாராத விபத்தில் அவருடைய மனைவி இறந்த பின்னால் அந்த இறப்புக்கு காரணம் அவரோடு பணிபுரியும் போரான் என்பவர்தான் என்று நினைத்து அவர்மீது கோபமாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் போரானை தாக்க முயற்சிக்கும்போது போரானுக்கு பாதிப்பு உருவாகிறது. இந்த சம்பவத்துக்கு பின்னால் அவரும் ஆல்ஃபிரட்டை எதிர்த்து போட்டி போடுகிறார். ஆல்ஃபிரட் மாயாஜாலம் செய்யும்போது அவருடைய மாயாஜாலங்களை தடுத்து அவரை காயப்படுத்துகிறார். இவர்களுக்குள் நடக்கும் இந்த பிரச்சனைஇன்னும் சீரியஸ் ஆகும்போது ஒரு கட்டத்தில் ஸ்டேஜில் ஒரு இடத்தில் இருந்து மறைந்து இன்னொரு இடத்தில் தோன்றும் ஒரு மிகவும் கடினமான மேஜிக்கை செய்ய இவர்களுக்குள் மிகப்பெரிய போட்டி உருவாகிறது.  இதனை அடுத்து நடக்கும் சம்பவங்கள்தான் ப்ரெஸ்டிஜ் திரைப்படத்தின் கதைக்களம். இந்த படம் 2006 ல் வெளிவந்தது. இந்த படம் அவ்வளவு சூப்பராக இருக்கும். கிட்டத்தட்ட மிஸ் பண்ணாமல் பாருங்க.. உங்களால் கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை கெஸ் பண்ண முடியாது. இவ்வளவு அருமையான திரைப்படம் எப்படி நான் மிஸ் பண்னினேன் என்று எனக்கே தெரியவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக இந்த இருவருடைய வெறுப்பு DEVOLOP ஆகும்போது ஒருவரை ஒருவர் அழித்தே ஆகவேண்டும் என்று சபதம் எடுக்காத குறையாக சண்டைப்போட்டுக்கொள்வார்கள். ஒரு படம் பார்த்தால் கிளைமாக்ஸ் வரைக்கும் இந்த படம் ஒரு MYSTERY படம் ஆனால் CLIMAX இல் இந்த படம் ஒரு SCIENCE FICTION படம் என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு சர்ப்ரைஸ்ஸாக இருக்குமோ அவ்வளவு சர்ப்ரைஸ்ஸாக எனக்கு இந்த படம் பார்க்கும்போது இருந்தது .  


BEST FILM - THE EXTRAORDINARY JOURNEY OF FAKIR - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 BEST FILM - THE EXTRAORDINARY JOURNEY OF FAKIR - TAMIL  - தி எக்ஸ்ட்ராடினரி ஜெரனி ஆப் பகிர் - இந்த படம் 2019 ல் கென் ஸ்காட் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த படத்தை நான் தமிழ் மொழியில் பார்த்துள்ளேன், ஆங்கில மொழியிலும் பார்த்துள்ளேன். எனக்கு பிடிச்ச வெர்ஷன் என்னவென்று கேட்டால் நான் தமிழ் வெர்ஷன் என்றுதான் சொல்வேன். நம்ம ஊரு மொழியில் இந்த படம் பார்க்கும்போது பின்னணி இசையும் டப்பிங் மொழிபெயர்ப்பும் அவ்வளவு அருமையாக இருந்தது இந்த படத்துக்கு தமிழ் மொழிபெயர்ப்பில் பேக்ரவுண்ட் மியூசிக் சிறப்பாக இருந்தத்து ஆனால் இங்கிலீஷ் வெர்ஷன்ல வேறு ஒரு ஸ்டைலில் இருந்தது. இந்த படத்துடைய கதையை பற்றி சொல்லலாம். இன்னமும் கொஞ்சம் நேரத்தில் சிறை தண்டனைக்காக ஜூவலைன் பள்ளிக்கூடம் அனுப்பப்படும் பாசங்ககிட்ட அவர்களை சந்திக்கும் ராஜகுமரகுரு \ தனுஷ் அவருடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். பாரிஸ் போனபோது அவருக்கு அங்கே என்னவெல்லாம் நடந்தது. மேலும் ஒரு ஐகியா ஷோரூம்ல ஆரம்பிக்கும் அவருடைய கதை காதல், அட்வென்சர், சேசிங், ஆக்ஷன், அப்படின்னு எப்படி நிறைய கட்டங்களை கடந்து கடைசியில் அவருக்கு உதவி செய்த நண்பர்களுக்கு அவரால முடிந்த வரைக்கும் உதவி செய்வதில் முடிந்தது என்பதை ரொம்பவும் ஸ்வரஸ்யமாக இன்டரேஸ்டிங் ஆக சொல்கிறார். 2019 ல வெளிவந்த திரைப்படங்களில் இந்த படம் ஒரு FEEL GOOD MOVIE. இந்த படத்துடைய கிளைமாக்ஸ் ரொம்ப நல்லா இருக்கும். சொன்னால் SPOILER ஆகிவிடும். படம் பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். என்னுடைய பெர்சனல் ஃபெவரேட் தமிழ் வெர்ஷன்தான். 










Friday, April 9, 2021

TOP 15 SONGS IN TAMIL CINEMA - MUSIC TALKS

 

BEST SONGS TO LISTEN NOW... 

1. உன்னை கண்டேனே - பாரிஜாதம் [2006]

2. OH OH UYIRE - தங்க மகன் [2015]

3. வெண்ணிற இரவுகள் காதலின் மௌனங்கள் - பேசு [UNRELEASED]

4.வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா - உல்லாசம் [1997]

5. KURU KURU KANNALE - FROM VATHIKUCHCHI - MOVIE

6. OH PENNE EN KANNE - FROM மாலை பொழுதின் மயக்கத்திலே [2012]

7. மின்சாரம் என் மீது பாய்கின்றதே - FROM RUN [2002]

8. என்ன சொல்ல ஏது சொல்ல - மனம் கொத்தி பறவை [2012]

9. ORU PANITHULI PANITHULI - கண்ட நாள் முதல் [2005]

10. AYYAYO NENCHU ALAIYUDHADI - ஆடுகளம் [2011]

11. MAZHAI VARUM ARIKURI - VEPPAM [2011]

12. VASEEGARA - MINNALE [2001]

13. ENAKKU PIDITHTHA PAADAL - JULY GANAPATHI [2003]

14. MAZHAI MAZHAI EN ULAGATHIL - ULLAM KETKUME [2005]

15. SEMBARUTHI POOVE - KADHAL SOLLA VANDHEN [UNRELEASED]




SPECIAL MENTIONS :

1. VENNILA VELIYE VARUVAYA - UNAKKAGA ELLAM UNAKKGA

2. JUMABALAKKA JUMBALAKKA - EN SWASA KATRE

3. OH PENNE PENNE - VANAKKAM CHENNAI

4. THENDRAL VARUM VAZHIYAI POOKAL ARIYADHA - FRIENDS

5. PUDHU VELLAI MAZHAI - ROJA

6. CHINNAMMA CHILAKKAMMA - SAKKARAIKATTI

7. ADI AATHI - SILLUNU ORU SANDHIPPU

8. MUDHAL NAAL INDRU - UNNALE UNNALE

9. UNNIDATHIL ENNAI KODUTHEN - AVALUKKENDRU ORU MANAM

10. KURUKKU VAZHIYIL VAAZHVU - MAHA DEVI

11. OYAAYIYE - AYAN

12. PINAPPLE VANNATHODU - SAMUTHIRAM

13. JANUARY NILAVE NALAMDHAANA - EN UYIR NEEDHANE

14. MUKKALA MUKKABLA - KADHALAN

15. CHILLENA ORU MAZHAITHULI - RAJA RANI

16. INDHA CHIRIPPINAI - NAAM IRUVAR NAMAKKU IRUVAR

17. VIZHIYILE MANI VIZHIYIL - NOORAVADHU NAAL

18. MALARE MOUNAMA - KARNAN

19. NEE KATRU NAAN MARAM - NILAVE VAA

20. YEN INIYA PON NILAVE - MOODUPANI




CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...