வெள்ளி, 28 ஜூன், 2024

GENERAL TALKS -கோபத்தினால் தற்காலிகமான வெற்றியை அடைய முடியும் !


கோபமே படவே கூடாது என்று யாராவது உங்களுக்கு அட்வைஸ் பண்ண வேண்டும் என்று பண்ணினால் அவர்கள் உங்களை கண்டிப்பாக ஏமாற்றுகிறார்கள் என்றுதான் அர்த்தம். உங்களுக்கு நன்றாக ஆதரவாக இருப்பவர்கள் உங்களுடைய கோபங்களின் காரணம் சரியானதாக இருந்தால் உங்களுடைய போராட்டத்தில் பங்கு கொடுத்து உங்களை வெற்றி அடைய செய்வார்கள். இங்கே என்னை பொருத்தவரைக்கும் கோபம் என்பது உங்களை ஒரு குறிப்பிடத்தக்க தற்காலிக வெற்றியை அடைய வைக்கும். இருந்தாலும் இந்த தற்காலிகமான வெற்றி எப்போதும் குறிப்பிட்ட குறைவான கால அளவுக்கே உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். உங்களுக்கு நிரந்தரமான சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என்றால் கோபத்தோடு உங்களுடய யோசனைகளையும் உடல் மற்றும் மனதின் பலத்தையும் சேர்த்துக்கொண்டு போராடவேண்டும. ஒரு முட்டாளுக்கு வெற்றி கிடைத்துவிட்டால் அந்த வெற்றி அவனுக்கு நிரந்தரமானது என்று சொல்ல முடியாது. அதே சமயம் ஒரு புத்திசாலிக்கு ஒரு சிறிய தங்க நாணயம் கிடைத்தால் கூட அந்த தங்க நாணயம் அவனோடு நிரந்தரமாக இருக்கும் என்று சொல்லிவிடலாம் அல்லவா ? ஆகவே தவறு எங்கே நடக்கிறது. நீங்கள் கோபப்படாமல் இருப்பதால்தான் எல்லாமே நடக்கிறது. உங்களுடைய கோபத்தை காட்டுங்கள். உடைப்பதால் மட்டும்தான் உருவாக்கம் பண்ண முடியும் என்றால் உடைக்க தயங்க வேண்டாம் !

கருத்துகள் இல்லை:

நீங்கள் சாடர்டே நைட் லைவ் பார்த்திருக்கிறீர்களா?

  அமெரிக்காவில் 'சாட்டர்டே நைட் லைவ்' என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நண்பர்களே, அந்த நிகழ்ச்சியைப் பற்றிய பெரும்பாலான தகவல்களை இ...