வெள்ளி, 21 ஜூன், 2024

MUSIC TALKS - ENGENGE ENGENGE INBAM ULLATHENDRU THEDI THEDI KOLLATHE ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !





எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் 
உள்ளதென்று தேடி கொல்லாதே 
தள்ளிப்போ தள்ளிப்போ இந்த கொஞ்சும்
நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே 
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று 
தொடாதே நீ தொடாதே 
நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான் 
செல்லாதே தள்ளிச் செல்லாதே 
என்னம்மா என்னம்மா 
உந்தன் நெஞ்சில் உள்ள வலி 
என்ன என்னம்மா ?

என் தூக்கத்தில் என் உதடுகள் 
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் 
ஊரே எழும்பும் 
என் கால்களின் பொன் கொலுசுகள் 
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் 
உயிரை எடுக்கும் 
பூப்போல இருந்த மனம் இன்று 
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே 
சகியே இதயம் துடிக்கும் உடலின் வெளியே 

எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் 
உள்ளதென்று தேடி கொல்லாதே 

என் வீதியில் உன் காலடி 
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் 
இதயம் துடிக்கும் 
உன் ஆடையின் பொன்னூலிலே 
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் 
உயிரோ வலிக்கும் 
நான் உன்னை துரத்தியடிப்பதும் 
நீ எந்தன் தூக்கம் பறிப்பதுவும் 
சரியா ? முறையா ? காதல் பிறந்தால் 
இதுதான் கதியா ?

எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் 
உள்ளதென்று தேடி கொல்லாதே 
தள்ளிப்போ தள்ளிப்போ இந்த கொஞ்சும்
நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே 
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று 
தொடாதே நீ தொடாதே 
நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான் 
செல்லாதே தள்ளிச் செல்லாதே 
என்னம்மா என்னம்மா 
உந்தன் நெஞ்சில் உள்ள வலி 
என்ன என்னம்மா ?

கருத்துகள் இல்லை:

TAMIL BLOGSPOT POSTS - 2K26 - EPISODE 003 - நம்முடைய உலகம் மாறுகிறது

  நண்பர்களே, இந்த உலகம் இந்த நாட்களில் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை, அவ்வளவுதான். நீங்...