இந்த யூட்யூப்பர் என்ன சொல்கிறார் என்றால் ஒரு சில நேரங்களில் பைரஸி நியாயமானது என்கிறார் ! உங்களுக்கு பிடித்த படம் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்களேன். உதாரணத்துக்கு HOW TO LOSE A GUY IN 10 DAYS என்ற ஹாலிவுட் படம், இந்த படம் உங்களுக்கு பார்க்கலாம் என்று தோன்றுகிறது ஆனால் நீங்கள் பார்க்கவேண்டும் என்றால் கட்டணம் கட்ட வேண்டும். நீங்கள் ஒரு சினிமா ஆப் - உதாரணத்துக்கு வலை-பிலிக்ஸ் ஃபோன் செயலிக்கு மாதா மாதம் ரூபாய் 400.00 கட்டணம் செலுத்தி நீங்கள் பாரக்கின்றீர்கள். இப்போது வலை-பிலிக்ஸ் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது. நீங்கள் பார்த்த இந்த படத்தை நாங்கள் இன்னொரு ஃபோன் செயலிக்கு விற்றுவிட்டோம். உங்கள் காசில் எல்லாம் டிஸ்கவுண்டு போட முடியாது. நேராக அந்த இன்னொரு ஃபோன் செயலியை இன்ஸ்டால் செய்து அவர்களுக்கு மாதம் 550.00 பணம் கட்டி உங்களுக்கு பிடித்த அந்த HOW TO LOSE A GUY IN 10 DAYS படத்தை இளிச்சவாயனை போல சென்று பாருங்கள் என்று சொன்னால் உங்களுக்கு மனதுக்கு கஷ்டமாக இருக்கிறதா ? நீங்கள் காசு கொடுத்து ஒரு விஷயத்தை வாங்கிவிட்டால் அது உங்களுக்கு சொந்தம் அதனை கொஞ்சம் மாதங்களில் இன்னொருவர் சொந்தம் கொண்டாடினால் அது எந்த வகையில் நியாயம் ? OTT தளங்கள் இப்படித்தான் செயல்படுகிறது ! கவனமாக இருங்கள் ! உங்கள் பணத்தை வேஸ்ட்டாக செலவு பண்ண வேண்டாம். கொஞ்சமாவது யோசித்து செலவு பண்ணுங்கள்.
No comments:
Post a Comment