Friday, June 28, 2024

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE - DEAD RECKONING - PART ONE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

இந்த மாதிரி நிறைய படங்களை நாம் ஹாலிவுட்டில் அடிக்கடி பார்க்க முடியாது. ஸ்பை திரைப்படங்களின் ஜேனரை வேற ஒரு லெவல்லில் கொண்டுபோன படங்களின் பட்டியலில் இந்த படத்துக்கு ஒரு தனியான இடம் கொடுக்க வேண்டும். இந்த உலகத்தை அழிக்க நினைக்கும் ஒரு ஆர்ட்டிஃப்பிஷியல் இண்டெலிஜன்ஸ் உலகத்தின் அனைத்து கணினி தொழில்நுட்பங்களையும் கட்டுப்படுத்தி என்னவோ மோசமாக பண்ண நினைக்கிறது. நாடுகளுடைய தனித்தனி அரசாங்கங்கள் அந்த ஆர்ட்டிஃப்பிஷியல் இண்டெலிஜன்ஸ்ஸை கட்டுப்படுத்தவும் மூன்றாம் உலக போருக்காக பயன்படுத்தவும் அதனுடைய கட்டுபாட்டை அடைந்துவிட போராடுகிறார்கள். நடக்கக்கூடிய அசம்பாவிதத்தை தடுக்க ஈதன் பண்ணும் போராட்டத்தில் நெருக்கமான நண்பர்கள் கைகொடுக்க காதலிக்கும் எலிஸா ஈதனை காப்பாற்றும் போராட்டத்தில் உயிரை தியாகம் செய்கிறாள். இந்த இண்டெலிஜென்ஸை முடக்க ஒரே வழி என்பது பிரித்து வைக்கப்பட்ட இரண்டு சாவிகள்தான் என்பதால் உயிரை பணயம் வைத்து அந்த சாவிகளை மீட்பதுதான் இந்த படத்தின் கதை. இரு பாகங்கள் என்று வெளியிடப்படும் படங்களில் இதுதான் முதல் பாகம் என்பதால் இந்த படத்துடைய இரண்டாம் பாகத்துக்கு எல்லோருமே விறுவிறுப்பாக எதிர்பார்க்கும் அளவுக்கு திரைக்கதையில் அவ்வளவு வேகத்தை கூட்டி இருக்கிறார்கள். கடைசி ஒரு மணி நேரம் கண்டினியூவான ஆக்ஷன் காட்சிகள் இந்த படத்தின் ஃபேன்ஸ்களுக்கு ஒரு விஷுவல் மழைச்சாரல் என்றே சொல்லலாம். படத்துக்காக நிறைய பிரமாதமான ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகள் இருப்பது படத்துடைய திரைக்கதைக்கு பயங்கரமாக பலமாக இருக்கிறது. ஒரு இன்டர்நேஷனல் ரிலீஸ்க்கு கண்டிப்பாக வோர்த்தான படம் என்று இந்த படத்தை சொல்லலாம் இதுதான் இந்த வலைப்பூ விமர்சனம் ! இந்த வலைப்பூவில் சந்தாவால் இணைந்து இந்த வலைப்பூ நிறைய பணம் சம்பாதிக்க உதவுங்கள் என்று கம்பெனி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...