வேலைக்கு போகாமல் பக்கத்து வீட்டு பெண்ணான குமுதாவை ஒருதலை காதல் பண்ணுவது மட்டுமே வேலையாக பார்க்கும் குமாருக்கு எப்படியாவது தன் காதலித்த குமுதாவை கரம் எடுத்து கல்யாணம் பண்ண வேண்டும் என்று ஒரு கதை. இன்னொரு பக்கம் தன் காதலித்த பெண்ணுக்கு இம்ப்ரஸ் பண்ணுவதற்காக எவ்வளவு முயற்சி செய்தும் தோற்றுப் போன நமது தினம் தினம் தனியார் ஆபீஸ்ஸில் ஆஃபீஸ் செல்லும் கதாநாயகன் குடித்துவிட்டு செல்லும்போது தவறுதலாக ஒரு ஆக்சிடென்ட் நடக்கவே அந்த ஆக்சிடெட்டில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றுவதற்காக ஹாஸ்பிடல்லில் அட்மிட் பண்ணினாலும் அந்த பெண்ணின் இரத்த குரூப் ஸ்டாக் இல்லாததால் குமார் ரத்த தானம் பண்ணினால்தான் காப்பாற்ற முடியும் என்று இக்கட்டான நிலையில் இருக்கிறார். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் குமாரை இரவு முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறார் அஸ்வின் . இவர்களுக்கு இருவருக்கும் சம்பந்தமில்லாமல் தன்னுடைய அண்ணனை தீர்த்து கட்டிய அண்ணியையும் அவர்களோடு சேர்ந்து பிளான் போட்ட மற்றவர்களையும் இன்று இரவு முடிவதற்குள் குத்தியே தீருவேன் என்று தம்பி அலைந்து கொண்டிருக்கிறார் இந்த விஷயங்களில் நிறைய காமெடியை சேர்த்து இந்த படத்தை கொடுத்து இருப்பதால் படம் முழுவதும் நன்றாக கலகலப்பாக இருக்கிறது ரௌத்திரம் படத்தை எடுத்த இயக்குனரா இப்படி ஒரு கலகலப்பான படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார் என்பது போல மிகவும் சிறப்பாக எடுத்து இருக்கும் இந்த காமெடி படத்தில் நிறைய புதுமை இருக்கிறது மேலும் நிறைய என்டர்டைன்மென்ட் வேல்யூவும் இருக்கிறது நீங்கள் பொழுதுபோக்காக ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்றால் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகவும் நன்றாக சாய்ஸாக இருக்கும் கண்டிப்பாக பாருங்கள்.
No comments:
Post a Comment