Friday, June 14, 2024

MUSIC TALKS - MANASELLAM MAZHAIYE NANAIGIREN UYIRE EN NENJIL VANDHU THANGI SAARAL ADITHAAL ENNAGUM UYIRE SONG - VERA LEVEL PAATU !

 


மனசெல்லாம் மழையே 
நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து 
தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே
என் கண்ணில் வந்து நின்று 
என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே


இரவில் வந்தது சந்திரனா 
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா

பகலில் இருப்பது சூரியனா 
என் அழகே உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்
மழையே மனம் உன்னாலே பூ பூக்குதே


மனசெல்லாம் மழையே 
நனைகிறேன் உயிரே
வானில் போகும் பறவைகளாய் 
நீயும் நானும் திரிந்திடலாம்
உலகையே மறக்கலாம்


வேறு வேறு விண்வெளியில் 
மாறி மாறி திரிந்திடலாம்
பறக்கலாம் மிதக்கலாம்


காற்றாகி கைகோர்த்து போவோமே
முகிலாகி அங்கும் இங்கும் 
ஊஞ்சல் ஆடுவோம்


கனவில் வருவது சாத்தியமா 
என் எதிரே நடப்பது மந்திரமா
நான் பார்க்கும் காட்சிகள் தந்திரமா
என் தேகம் எங்கும் நீந்தி போகுதோ

கனவில் வாழ்வது சாத்தியமே 
என் கனவும் பலிப்பது நிச்சயமே
உன் விரலை பிடிப்பேன் இக்கணமே
உன் உருவம் எங்கும் இன்றும் வாழுமே

மழையே மனம் உன்னாலே பூ பூக்குதே
மனசெல்லாம் மழையே 
நனைகிறேன் உயிரே


காதலாகி கரைந்துவிட்டால் 
காலம் நேரம் மறந்திடுமே
வானிலை மாறுமே
ஏழு வண்ண வானவிலில் 
நூறு வண்ணம் தோன்றிடுமே
யாவுமே மாயமே
வெயிலோடு மழை வந்து தூறுமே..
முகிலாகி அங்கும் இங்கும் 
ஊஞ்சல் ஆடுவோம்


தரையில் விண்மீன் வருவதில்லை வந்தாலும் 
கண் அதை பார்ப்பதில்லை பார்த்தாலும் 
கை அதை தொடுவதில்லை தொட்டாலோ 
என்ன ஆகும் என் மனம் 
தரையில் விண்மீன் வருவதுண்டு வந்தாலும் 
கண் அதை பார்ப்பதுண்டு பார்த்தாலும் 
கை அதை தொடுவதுண்டு தொட்டாலோ 
காதல் ஆகும் உன் மனம்


மனசெல்லாம் மழையே 
நனைகிறேன் உயிரே
மழையே மனம் உன்னாலே பூ பூக்குதே

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...