Wednesday, June 12, 2024

CINEMA TALKS - ABIYUM NAANUM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


ஹீரோ வேர்ஸ்ஸ் வில்லன் ! நடுவுல ஒரு காதல் டிராக்  ! 4 பாட்டு 3 ஃபைட்டு இந்த படம் வந்த  காலத்தில் இதுதான் தமிழ் சினிமாவுக்கு உண்டான டெம்ப்ளேட் ! இந்த டெம்ப்ளேட் ஃபாலோ பண்ணாமல் புதிதாக ஏதாவது முயற்சி பண்ணலாம் என்றே யோசிக்காத ஒரு காலத்தில் மிகவும் சுவாரஸ்யமாக இருந்த ஒரு திரைப்படம்தான் அபியும் நானும் ! தன்னுடைய சின்ன வயதில் இருந்து தன்னுடைய மகளின் மேலே உயிரையே வைத்து இருக்கும் ஒரு அப்பா ! அவளுக்காக என்ன கடினமான சவால்களையும் சந்திக்க தயாராக இருக்கும்போது ஒரு வட மாநில பையனை காதலித்த அவளுடைய மனதை உடைக்க வேண்டாம் என்று திருமணம் செய்துகொள்ள மகளுக்கு சம்மதம் கொடுத்தாலும் அடுத்து அடுத்து நடக்கும் சம்பவங்களில் படத்தின் இன்னொரு கட்டமும் அருமையாக நகர்வது இந்த படத்துக்கான ஸ்பெஷல். அப்பா , மகள் , என்ற சென்டிமென்ட் ஒரு பக்கம் மற்றும் லொகேஷன் சாங்ஸ் என்று போர்ட்ஃபோலியோ காட்சிகள் இருந்தாலும் படம் கண்டிப்பாக 2006 - 2007 காலகட்டங்களில் வெளிவந்த எல்லா படங்களை விடவும் வித்தியாசமான ஒரு பிரசன்டேஷன் கொடுத்து இருக்கிறது. கண்டிப்பாக இந்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் கொடுத்தே ஆகவேண்டும் ! காலத்தை கடந்து வென்ற ஒரு திரைப்படம் இந்த அபியும் நானும் ! 

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....