Sunday, June 23, 2024

MUSIC TALKS - VELLAI MAYIL VENNILAVIL KOOTHADA ORU KANNI PUYAL KANGALUKKUL KAATHTHADA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



வெள்ளை மயில் வெண்ணிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட
உன்னை காதல் என்ற வார்த்தையாலே
சொல்லி சொல்லி நான் பாட

ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே
வாழ வேண்டும் உன்னோடு

ஆசை நினைவடி இது ஆறாம் பிறையடி
உனை கண்டேன் ஒரு நோடி
அது காதல் முதற்படி

மீசை புல்லின் மேல் இவள் முத்தம் பனித்துளி
இரு இதயம் சேரவே 
இனி இல்லை இடைவெளி

வெள்ளை மயில் வெண்ணிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட
உன்னை காதல் என்ற வார்த்தையாலே
சொல்லி சொல்லி நான் பாட

பூங்காவனம் தூங்காது வானம்
ரீங்கரம் பாடும் வண்டு 
எந்தன் கையோடு வேண்டும்

ராக்கோழியாய் கூவுது முச்சு
கை ரேகை நூலின் மீது 
சேலை முந்தானையாச்சு

சதை நிலா உன்னை நெஞ்சிலே
விதையென மூடி வைக்கவா
மதம் பிடித்தாடும் யானையாய்
மனக்குளம் வெந்நீரான
பின்பும் கூட பூ பூக்குதே

மூன்றாம் பிறை முந்நூறு மேகம்
சூழ்ந்தாழும் இந்த திங்கள் 
உந்தன் கண்ணாடியாகும்
ஆனவரை ஆனந்த மோகம்
அன்னாந்து பார்த்தால் 
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்

மழைத்துளி வானில் தங்கினால்
மணல்வெளி ஈரமாகுமா 
சுவை சுவை என்று கூறினேன்
முதல் முதல் முத்தம் என்னும் 
பூவை கிள்ளி முத்தாடவாய் 

மீசை புல்லின் மேல் இவள் முத்தம் பனித்துளி
இரு இதயம் சேர்ந்த பின்
இனி இல்லை இடைவெளி


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...