Monday, June 10, 2024

MUSIC TALKS - SOLLAMALE YAAR PAARTHATHU NENJODUTHAN POO POOTHATHU - TAMIL LYRICS - VERA LEVEL PAATU !




சொல்லாமலே யாா் பாா்த்தது ?

நெஞ்சோடுதான் பூ பூத்தது 

மழை சுடுகின்றதே அடி அது காதலா ?

தீ குளிா்கின்றதே அடி இது காதலா ? 

இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா ?


நெஞ்சத்தை தொட்டு தொட்டு காதல் சொல்லும் பச்சைக்கிளி 

மொட்டுக்குள் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி

சொல்லாமலே யாா் பாா்த்தது ?


மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது அடி

பஞ்சுமெத்தை முள்ளை போல குத்துகின்றது

நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது

அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது

கண்ணே உன் முந்தானை காதல் வலையா ?

உன் பாா்வை குற்றால சாரல் மழையா ?

அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா ?

நீ மீட்டும் பொன்வீணை எந்தன் இடையா ?

இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான் !


நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி

பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள்ளும் கண்மணி

சொல்லாமலே யாா் பாா்த்தது ?



கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது

சுக சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது

என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது நான்

உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது

அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து 

முள் மீது பூவானேன் தேகம் இளைத்து

வில்லோடு அம்பாக என்னை இணைத்து 

சொல்லாத சந்தோஷ யுத்தம் நடத்து

உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலால் !



நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி

பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள்ளும் கண்மணி

சொல்லாமலே யாா் பாா்த்தது ?

நெஞ்சோடுதான் பூ பூத்தது 

மழை சுடுகின்றதே அடி அது காதலா ?

தீ குளிா்கின்றதே அடி இது காதலா ? 

இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா ?

சொல்லாமலே யாா் பாா்த்தது ?

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...