Sunday, June 16, 2024

GENERAL TALKS - சக்தியை அதிகரித்துக்கொண்டு சண்டைக்கு செல்லுதல் !

 



பெரும்பாலான நேரங்களில் நம்ம எதிரியின் சக்தியையும் பலத்தையும் அதிகரிக்க விடாமல் பண்ணிவிட்டால் அவர்களை தோற்கடிப்பது சுலபமான காரியமாக மாறுகிறது. வாழ்க்கை வைத்து இருக்கும் போர்க்களத்தில் எந்த ஒரு விதிமுறைகளும் கிடையாது. உன்னால் ஒருவரை தோற்கடிக்க முடிந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்து அவர்களை தோற்கடிக்கலாம். நம்முடைய பலத்தையும் சக்தியையும் கண்டுபிடித்து அடையாளம் காண வேண்டும் மேலும் தீர்ப்பு நாள் வரும் போது நம்முடைய பலமும் சக்திகளும் மட்டும்தான் நம்மை காப்பாற்றும். நம்மை சார்ந்தவர்களும் நமக்காக துணை நிற்பவர்களும் தற்காலிகமான மக்கள். இவர்களால் தற்காலிக பலன்கள் கிடைக்குமே தவிர்த்து நிரந்தர அசோசியேசன் இவர்களால் கிடைக்கவே கிடைக்காது. உங்களை எத்தனை பேருக்கு பிடிக்கும் அல்லது எத்தனை பேருக்கு பிடிக்காது என்று எல்லாமே மிக மிக தற்காலிகமானது , நீங்கள் கஷ்டப்பட்டு உங்களை எல்லோருக்கும் பிடிக்கும் என்று ஒரு நல்ல மன நிலையை சரியான பழக்க வழக்கங்கள் மூலமாக உருவாக்கலாம் ஆனால் ஏதாவது பெரிய சம்பவம் நடந்துவிட்டால் நீங்கள் சேர்த்து வைத்த நல்ல பெயர் கெட்டுபோனால் உங்களை கேட்ட ஜீவன் என்று முத்திரை குத்தி அசிங்கப்படுத்தி வாழ்வார்கள். இன்னொரு பக்கம் கணக்கில் இல்லாத அளவுக்கு பாவங்கள் செய்து பணத்தை சம்பாதித்த ஆட்கள் அந்த பணத்தால் மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் கொஞ்சம் நன்மை செய்து முன்னேற்றம் பண்ணிவிட்டால் போதும் தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். போர்க்களத்தில் உங்களுடைய உடலின் அமைப்பே முக்கியமானது. மற்றவர்களுடைய சப்போர்ட்டை நம்பி எதிரியை சாய்த்துவிடலாம் என்று களத்தில் இறங்காதீர்கள். சமாதியாக மாறிவிடுவீர்கள்.

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...