Monday, June 10, 2024

MUSIC TALKS - MAZHAI MAZHAI EN ULAGATHIL VARUGIRA MUDHAL MAZHAI NEE MUDHAL MAZHAI - SONG LYRICS - VERA LEVEL PAATU !




யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது 
போர் வந்தது போர் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது 
பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது 
தீ வந்தது தீ வந்தது பூ கண்களில் தீ வந்தது 
ஏன் வந்தது ஏன் வந்தது கண்ணோரமாய் வெப்பம் வெப்பம் 
பெண் வந்ததும் பெண் வந்ததும் உன் சூழலில் சத்தம் சத்தம் 

மழை மழை என் உலகத்தில் வருகின்ற 
முதல் மழை நீ முதல் மழை 
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற 
முதல் அலை நீ முதல் அலை 
என்ன திண்மை என்ன வன்மை 

எந்த பெண்ணும் அதிசய விண்கலம் 
போக போக புரிகின்ற போர்க்களம் 
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய் 

மழை மழை என் உலகத்தில் வருகின்ற 
முதல் மழை நீ முதல் மழை 
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை 
எந்தன் மேனி உனக்கொரு தேன்குளம் 
நீந்த நீந்த நிறைகின்ற நீர்வளம் 
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய் 

யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது 
போர் வந்தது போர் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது 
பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது 
தீ வந்தது தீ வந்தது பூ கண்களில் தீ வந்தது 
ஏன் வந்தது ஏன் வந்தது கண்ணோரமாய் வெப்பம் வெப்பம் 
பெண் வந்ததும் பெண் வந்ததும் உன் சூழலில் சத்தம் சத்தம் 

நீ மட்டும் -ம் என்றால் உடலோடு உடல் மாற்றம் செய்வேனே 
நீ மட்டும் போ என்றால் அப்போதே உயிர் விட்டு செல்வேனே 
அடி பருவ பெண்ணே நீயும் ஒரு பங்கு சந்தை போலே 
சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி மேலே
பூவின் உள்ளே ஒரே தாகம் உன் உதடுகள்தான்  
மழை மழை என் உலகத்தில் வருகின்ற 
முதல் மழை நீ முதல் மழை 
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற 
 முதல் அலை என் முதல் அலை 


தீண்டாமல் சருகாவேன் 
நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன் 
அய்யோடி நான் கல்லாவேன் 
உளியாக நீ வந்தால் கலையாவேன்  
நீயும் ஓடி வந்து எனை தீண்டத் தீண்ட பாரு 
ஒரு பாதரசம் போல நான் நழுவிச் செல்வேன் தேடு 
ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலன்களில் ஏன்? 

மழை மழை என் உலகத்தில் வருகின்ற 
முதல் மழை நீ முதல் மழை 
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற 
முதல் அலை நீ முதல் அலை 

எந்த பெண்ணும் அதிசய விண்கலம் 
போக போக புரிகின்ற போர்க்களம் 
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய் 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...