Saturday, June 15, 2024

GENERAL TALKS - கடன்களை வாங்கும் கட்டாயங்கள் பற்றிய பதிவு !


பணத்தை என்னைக்குமே கடனாக வாங்கிவிட கூடாது. இருந்தாலும் மனித வாழ்க்கையில் ஒரு சின்ன டெர்ம் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாக பெற்று அந்த தொகைக்கு மேலே சம்பாதித்து விடலாம் என்ற வியாபார அமைப்பு இருந்தால் கடனாக பணத்தை வாங்க முடியும். பணத்துக்காக வட்டியை மிகவும் அதிகமாக கட்டினால் உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய முடியாது. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் வட்டியாக கட்டிக்கொண்டு இருக்கும் தொகை உங்கள் கைகளில் பணமாக இருந்தால் நீங்கள் எவ்வளவோ சாதிக்கலாம் ஆனால் உங்கள் கைகளில் அந்த தொகை வந்தவுடன் மாயாஜலமாக காணாமல் போகப்போகிறது என்பதால் உங்களுக்கு இதுதான் மிகப்பெரிய பிரச்சினையாக அமைந்துவிடுகிறது. நாம் உயிரோடு இருக்கும் வரை கடன்கள் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த வகையில் எப்படி எல்லாமே தப்பாக போனது என்பதை யோசித்து பார்த்தால் கடனை அடைக்க போதுமான பணத்தை  சேமிக்கவும் முடியாது மேலும் தொடர்ந்து செலவுகள் வந்துகொண்டே இருப்பதால் வட்டியை மட்டும்தான் கட்டிக்கொண்டு இருக்க முடியும். இந்த கடன்களை எப்படி அடைப்பது ? பைனான்ஸ் வகை கடன்களில் தொந்தரவுகள் அதிகமாக இருக்கும்போதுதான் வாழ்க்கை உங்களுக்கு நரகமாக இருக்கிறது. இன்டர்நெட்டில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இருப்பதுதான் கிடைத்த விஷயங்களில் இருந்து மேலே வந்து முன்னேற ஒரே வழியாக இருக்கிறது. கடன்கள் உங்களை பயமுறுத்த கூடியது. கடன்கள் மிகவும் தவறான ஒரு கெட்ட பழக்கம். பொறுப்பற்ற மக்கள் அவர்களிடம் நிறைய பணம் இருந்து தாராளமாக செலவுகளை செய்வார்கள் என்பதால் நாம் அந்த பொறுப்பற்ற மக்களை போல இல்லாமல் பொறுப்புள்ள மனிதனாக உங்களுக்காக போதுமான பணத்தை சம்பாதிக்க மட்டும்தான் நீங்கள் கடனை வாங்குகிறீர்கள் ஆனால் அந்த கடன் உங்களுக்கே மிகப்பெரிய ஆபத்தாக மாறிவிடுகிறது. கடன் தொகையை கட்ட போதுமான வசதி வாய்ப்பு இல்லாதபோது உங்களுக்கு  நீங்கள் வாங்கிய தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என்றால் அது உங்களுக்கு ஒரு புதுமையான மன அழுத்தத்தை கொடுக்கும். உங்கள் மேலே ஒரு ப்ரேக் பிடிக்காத தண்ணீர் லாரி மோதப்போகிறது என்று தெரிந்தும் நகர முடியாமல் தவிப்பதை போல இருக்கும். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...