Friday, June 14, 2024

MUSIC TALKS - NAAN ERIKKARAI MEL IRUNDHU ETTU THISAI PAATHIRUNDHU ENTHILAIKKU KAATHIRUNDHEN KAANALE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே
வாடுறேனே இக்கரையிலே
நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே
நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே..
அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே
வாடுறேனே இக்கரையிலே
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே

தூரக் கிழக்கு கரை ஓரந்தான் தாழப் பறந்து வரும் மேகந்தான்
உன்கிட்ட சேராதோ என் பாட்ட கூறாதோ
ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ..
உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே
செந்நாரை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே
கண்ணாலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே.
மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான் மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்
மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ 
அக்காளின் பொண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ
கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பொண்ணா மாறதோ
மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீர பேசாதோ 
உன்னாலே தூக்கம் போயாச்சி உள்ளாற ஏதேதோ ஆயாச்சு

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே..
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே..
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான ஆசைகளை உள்ளாற பூட்டி வச்சே 
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே
அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிபோன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான தோணலே..

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...