Friday, June 14, 2024

MUSIC TALKS - EN ANBE NAALUM NEE INDRI NAAN ILLAI EN ANBE NAANUM NEEYINDRI VERU ILLAI - SONG LYRICS - VERA LEVEL PAATU !

என் அன்பே நானும் நீயின்றி நானில்லை
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாவும் நீயாகவே மாற வேண்டும் நானும் தாயாகவே

ஆத்தடி ஆசை அலை பாய சேத்துக்கோ மீசை குடை சாய
கூத்தடி கோடை மழை பேய ஏத்துக்கோ ஆடை உலை காய

தலை தொடும் மழையே செவி தொடும் இசையே
இதழ் தொடும் சுவையே இனிப்பாயே
விழி தொடும் திசையே விரல் தொடும் கனையே
உடல் தொடும் உடையே இணைவாயே

யாவும் நீயாய் மாறிப் போக நானும் நான் இல்லையே
மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லையே
தெளிவாகச் சொன்னால் தொலைந்தேனே உன்னால்

ஆத்தடி அசந்தே போனாயா ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா காதலில் கரைந்தே போனாயா

என் அன்பே நானும் நீ இன்றி நானில்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை

கருநிறச் சிலையே அறுபது கலையே 
பரவச நிலையே பகல் நீயே
இளகிய பனியே எழுதிய கவியே
சுவை மிகு கனியே சுகம் நீயே

கூடு பாவாய் தேகத்தோடு காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாகத்தோடு ஆசை நதி மோதுதே
தொடுவாயா என்னை தொடர்வேனே உன்னை

ஆத்தடி அசந்தே போனாயா ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா காதலில் கரைந்தே போனாயா
ஆத்தடி அசந்தே போனாயா ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா காதலில் கரைந்தே போனாயா

என் அன்பே நானும் நீயின்றி நானில்லை
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாவும் நீயாகவே மாற வேண்டும் நானும் தாயாகவே

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...