1. அப்டேட்க்கு முன்னதாக ஃபோன் நன்றாகத்தான் இருந்தது , ஆனால் அப்டேட்டுக்கு பின்னதாக ஹேப்பர் ஓஎஸ் என்று ஒரு புதிய சாப்ட்வேர் இன்ஸ்டால் ஆன பின்னால் ஃபோன் சுமாராகவே இயங்குகிறது.
2. 2018 காலத்தில் வெளிவந்த ஒரு பழைய சிப்ஸெட் இருக்கும் ஃபோன் வாங்கிவிட்டேன். இப்போது FREE FIRE , PUBG போன்ற விளையாட்டுகளை விளையாட முடிவது இல்லை.
3. தயாரிப்புலேயே கொஞ்சம் மிஸ்டேக் இருக்கிறது. உதாரணத்துக்கு ஸிம் கார்டு போடும் ஸ்லாட் அடிக்கடி பழுதாவதால் ஸிம் கார்டு போட்டாலும் ஃபோன்னில் காட்டமாட்டேன் என்கிறது.
4. வாட்டர்ப்ரூஃப் என்று நம்பி மழையில் நனைந்தபோது சும்மாவே இருந்துவிட்டேன். இப்போது ஃபோன் மட்டையாகிவிட்டது. கேமரா வேலை செய்யவில்லை.
5. ஃபோன் வாங்கும்போது காசு மிச்சம் பண்ணலாமே என்று ஹார்ட் கேஸ் வாங்கி போடாமல் விட்டுவிட்டேன், இப்போது ஃபோன் டிஸ்ப்லே நொறுங்கவே புதிதாக மாற்ற கடையில் அதிகமாக பணம் கேட்கின்றார்கள்.
இந்த மாதிரி பிரச்சனைகளுமே ஃபோன் வாங்குவதில் உங்களுக்கு நேரலாம் , இவைகளை எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் வலைப்பூவில் முடிந்தவரை பதிவு பண்ணுகிறேன்.
No comments:
Post a Comment