Monday, June 10, 2024

CINEMA TALKS - OKOK - இந்த படம் கொஞ்சம் அனாலிஸிஸ் பண்ண வேண்டிய படம் !!


ஒரு சூப்பர் பொண்ணு , ஒரு சுமாரான பையன் எப்படி விழுந்து விழுந்து காதலிக்கிறான் , கூடவே நண்பனை எப்படியெல்லாம் காதலை சேர்த்து வைக்க சொல்லி டார்ச்சர் பண்ணுகிறான் ? இது எல்லாமேதான் பொதுவாக தமிழ் சினிமா ரொமான்டிக் காமெடிகளின் கதை டேம்ப்லேட் ! ரசிகர்கள் அதிகமாக ரசித்து பார்க்கும் டேம்ப்லேட் இதுதான். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் இருந்து கொஞ்சம் கூட மாறாத ஒரு படம்தான் ஒரு கல் ஒரு கண்ணாடி ! உதயநிதி ஸ்டாலின் , சந்தானம் , ஹன்ஸிகா - பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் ஆக்டிங். குறிப்பாக எக்ஸ்ப்ரேஷன்ஸ்ஸில் குறை வைக்காமல் வேற லெவல்லில் நடித்து கொடுத்து இருக்கிறார்கள் ! ஃபைட் ஸீன்களும் ஹீரோயினை காப்பாற்றும் காட்சிகளும் இருந்தால் படம் பார்க்க இண்டரெஸ்ட்டிங்காக இருக்கும் என்று விதிமுறைகளை எல்லாம் உடைத்து மொத்தமாக நகைச்சுவையயை மட்டுமே பின்னணியாக கொண்ட இந்த படத்துக்கு மிகப்பெரிய பக்கபலம் ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் மாற்றும் சிறப்பான ஆர்ட்டிஸ்ட் தேர்வுதான். சின்ன சின்ன கதாப்பாத்திரங்கள் என்றாலும் நினைவில் நிற்கிறது. மொத்தமாக காமெடியை மட்டுமே கொடுத்துக்கொண்டு இருந்தாலும் கிளைமாக்ஸ் வரும் வரைக்கும் இவர்களுடைய காதல் கதையின் பிரிவும் சந்திப்புக்களும் , கூடவே சந்தானத்தின் நட்பின் எஸ்கேப்களும் மறுபடியும் மாட்டிக்கொள்வதும் என்று படத்தை நன்றாக கொண்டு சென்று இருக்கிறார்கள். இன்னொரு விஷயம் ப்ரொடக்ஷன் வேல்யூ மிகவும் சிறப்பாக கொடுத்து இருக்கிறார்கள் ! ஒரு இன்ட்ரோ கொடுத்த படமே இவ்வளவு சிறப்பாக பாக்ஸ் ஆபீஸ் எடுத்து இருப்பதால் வருங்காலத்தில் முதல் படம் எடுப்பவர்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. மொத்தத்தில் ஆடியன்ஸ்க்கு பிடித்துவிட்டால் படம் என்ன ஆனாலும் ஹிட் ஆகிவிடும் என்பதுக்கு இந்த படம் பெஸ்ட் உதாரணம் ! 

1 comment:

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...