POST ID : 2024.06.17.02.1
தமிழ் சினிமா என்றால் பொதுவாகவே கம்மேர்ஷியல் படமாக இருந்தால் மட்டும்தான் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை அடையும் என்று ஒரு கண்ணுக்கு தெரியாத நிபந்தனை இருக்கும்போது ஒரு சில படங்கள்தான் அவுட் ஆஃப் பாக்ஸ் யோசித்து வெற்றியை கொடுக்கும் படங்களாக இருக்கிறது ஒரு வித்தியாசமான கான்செப்ட்தான் இந்த தெய்வ திருமகள் என்ற திரைப்படம். போதுமான மன வளர்ச்சி இல்லாத கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா என்ற இளைஞரை பானு என்ற ஒரு சோசியல் வொர்க்கர் பெண்மணி இவரை காதலித்து திருமணம் செய்யவே இவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. பிரசவத்தில் தாயார் இறந்து போகவே சில வருடங்களுக்கு கிருஷ்ணாவின் நம்பிக்கையான பக்கத்து வீட்டார் உதவியுடன் போதுமான சப்போர்ட்டுடனும் குழந்தையை வளர்த்தாலும் இந்த குழந்தையை எதிர்பாராமல் சந்திக்கும் பானுவின் குடும்பத்தினர் குழந்தையை அவர்கள் வளர்க்க வேண்டும் என்று அழைத்து கொண்டுபோய்விடவே குழந்தையை கிருஷ்ணாவின் வளர்ப்பில் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்ற வழக்கு கொடுக்கப்படுவதுதான் படத்தின் கதை. ஒரு ஹாலிவுட் படமாக எடுத்து இருந்தால் வேற லெவல்லில் இருந்திருக்கும். தமிழ் சினிமா என்பதற்காக லாஜிக் மிகவுமே அவுட் ஆஃப் ஃபோகஸ்ஸில் இருக்கிறது ! - இந்த படம் அனாலிஸிஸ் பண்ண வேண்டிய ஒரு படம். முடிந்தால் நான் அனலிஸிஸ் கொடுக்கிறேன். சுருக்கமான விமர்சனமாக சொன்னால் இந்த மாதிரியான படங்கள்தான் உண்மையில் ஃபேமிலி ஆடியன்ஸ்ஸோடு பார்க்க வேண்டிய திரைப்படங்கள். ஒரு அப்பா - மகள் என்ற எமொஷனல் வேல்யூ எப்போதுமே மாறாது ! இந்த படத்துடைய கதையும் சுருக்கமாக இந்த கருத்தைதான் சொல்கிறது !
No comments:
Post a Comment