Friday, June 7, 2024

MUSIC TALKS - KANNATHTHIL KANNAM VEIKKA SONG - TAMIL LYRICS - VERA LEVEL PAATU !

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ 

கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ 

உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ

பெண்ணெல்லாம் பெண்ணல்ல

இங்கு யாருமில்லை உன்னை வெல்ல

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ 

கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

வானத்தை விட்டு நிலவெங்கு விலகும் ? 
வாசத்தை விட்டு மலரெங்கு விரியும் ?
உனக்காக நான் எனக்காக நீ உயிர் வாழும் காலம் வரையும்

மோகத்தை விட்டு மனமெங்கு திரியும் ? 
மேகத்தை விட்டு மழையெங்கு விளையும்
கொடி போல நான் மடிமீதுதான்
விழும் போது காதல் மலரும்

உன்னைத்தொடும் தென்றல் வந்து என்னைத்தொடுது
உச்சி முதல் பாதம் வரை மெல்ல சுடுது
சந்தித்தேன் அப்போது சிந்தித்தேன் இப்போது சொந்தங்கள் தப்பாது

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ 

கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

ஆடைக்குள் வைத்த அழகினை எடுத்தேன்
ஆசைக்குள் வைத்து உனக்கென கொடுத்தேன்
இதமாகத்தான் பதமாகத்தான் எனை தீண்டு தாகம் தணியும்

ஓடைக்குள் வந்த மலரினை பறித்தேன்
ஓசைகளின்றி மணிமுத்தம் பதித்தேன்
பழச்சாறையும் இளநீரையும் பரிமாற வேண்டும் தினமும்

அந்திப்பகல் வந்ததொரு இன்ப மயக்கம்
அஞ்சுவிரல் பட்ட இடம் மெல்ல சிலிர்க்கும்
எங்கெங்கே தொட்டாலும் அம்மம்மா உற்சாகம் அங்கங்கே உண்டாகும்

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ 

கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ 

உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ

பெண்ணெல்லாம் பெண்ணல்ல

இங்கு யாருமில்லை உன்னை வெல்ல

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ 

கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

No comments:

ARC - 023 - மலிவாக நடந்துகொள்ளும் மனிதர்கள் !

  ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி என்று ஒருவர் சென்று இருந்தார்! கணவன் மனைவியிடம் காபி போட்டு கொண்டுவருமாறு சொன்னான். இங்கே காபி பொடியும்...