சுஜாதா ரங்கராஜன் , சுபா , ராஜேஷ் குமார் அவர்களுடைய க்ரைம் நாவல்களில் என்ன பீலிங் என்ன மாதிரியான சஸ்பென்ஸ்களை எதிர்பார்க்கலாமோ அனைத்தையும் இந்த கதைகளில் எதிர்பார்க்கலாம். இந்த படத்துடைய கதை. செய்யாத கொலைக்கு கொலைக்குற்றம் சாட்டப்படும் ஒரு நிலையில் கதாநாயகன் கொஞ்சம் கொஞ்சமாக இந்த சம்பவத்தை செய்தது யார் என்று கண்டுபிடித்துக்கொண்டே வருகிறார். கடைசியாக வில்லனை நெருங்கும்போது நடக்கும் பிரச்சனைகளில் இருந்து எவ்வாறு வெளியே வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. கணேஷ் , வசந்த் , பரத் , நரேந்திரன் என்று நாவல்களில் இடம்பெற்ற பெயர்களை படத்தில் கதாப்பாத்திரங்களுக்கு வைத்திருப்பது ஸ்மார்ட் ! ப்ரொடக்ஷன் வேல்யூ குறைவாக இருந்தாலும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாகவே இருந்தது. ஒரு பழைய நாவலின் கதையை மறுபடியும் ஒரு முறை தூசு தட்டி எடுத்து மொத்தமாக இரண்டு மணி\நேரங்கள் செலவு செய்து படித்தால் எப்படி பொழுது போகுமோ அபபடி ஒரு அட்வென்சர்தான் இந்த படம் ! திரைக்கதை இன்னும் இம்ப்ரூவ்மேன்ட் பண்ண வேண்டும். திரைக்கதை வலிமையாக இருந்திருக்கலாம். கேமரா வொர்க் டீசண்ட் ! ப்ரொடக்ஷன் வேல்யூ மினிமம் என்றாலும் கிடைத்த அவுட்புட் படத்துக்கு போதுமானதாக இருக்கிறது. நிறை குறை என்று எதுவும் இல்லை.
No comments:
Post a Comment