Monday, June 17, 2024

GENERAL TALKS - மரணத்துக்கு பயந்து வாழ்க்கையை விட்டுவிட கூடாது ! [R]



POST ID : SPECIAL/2024.06.17.01.1

இந்த உலகத்தில் எப்போதுமே சாவை பார்த்து பயப்படாத ஆட்கள் என்று அதிகம் பேர் இருந்தது இல்லை. சாவு எல்லோருக்குமே வரக்கூடிய ஒரு விஷயம்தான். முறையாக உடல் பயிற்சிகள் பண்ணி சத்துள்ள ஆகாரம் சாப்பிட்டால் உடலில் இருந்து சாவை எடுத்து சுமாராக 80 வயது நன்றாக வாழலாம் என்று அறிவியல் சொல்கிறது ! இருந்தாலும் இந்த வலைப்பூவில் பெரும்பாலும் நடப்பு வாழ்க்கை பற்றிதான் பேசிக்கொண்டு இருக்கிறோம். இந்த பதிவில் அறிவியல் பெர்ஸ்பெக்டிவை விட்டுவிட்டு நடப்பு பெர்ஸ்பெக்டிவில் நான் கொஞ்சம் கருத்துக்களை சொல்கிறேன். உங்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்தால் சண்டை போடுங்கள். உங்களால் சண்டை போட முடியாது என்றால் சும்மா இருங்கள். நான் உங்களை தூங்க சொல்லவில்லை. சும்மா இருந்து பிரச்சனைகளின் தீர்வுகளை யோசித்து அந்த தீர்வுகளை உருவாக்க முயற்சி பண்ணுங்கள் என்று சொல்கிறேன். சலிப்பில் மட்டுமே வாழ வேண்டாம். ஒரு மொக்கையான படத்தை பார்த்து தூங்கும்போது உங்களுக்கு உங்களுடைய நேரத்தை வேஸ்ட் பண்ணுவது எவ்வளவு குறையாக தோன்றும் அல்லவா ? அதுவே நீங்கள் ஒரு சூப்பர்ரான படத்தை பார்த்தால் அந்த நேரத்தை பிரயோஜனமான வகையில் பயன்படுத்திய சந்தோஷம் உங்களுக்கு கிடைக்கும் அல்லவா ? இந்த விஷயத்தை மட்டுமே மனதில் பதிவு பண்ணிக்கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கை சூப்பராக மாற வேண்டும். மொக்கையாக மட்டும் இருக்க கூடாது. எப்படியாவது கஷ்டப்பட்டு உங்களுடைய வாழ்க்கையை மாற்றிவிடுங்கள். கஷ்டங்கள் அதிகமாக இருந்தாலும் பொறுத்துக்கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்தினாலே போதுமானது. மரணத்தை பற்றி பயப்படுவது சுலபமான காரியம் ஆனால் மரணத்தை நெருங்கினாலும் மன நிறைவாக இருக்கும் அளவுக்கு சூப்பர் வாழ்க்கையை அமைப்பதே கடினமானது. "சூப்பர் வாழ்க்கை" யை அமைக்க இப்போதே ஸ்டெப்களை எடுங்கள் ! இதுதான் நடப்பு வாழ்க்கைக்கு நான் சொல்லும் முன்னேற்ற கருத்து. இந்த வலைப்பூவை நீங்கள் கண்டிப்பாக சந்தா பண்ணிக்கொள்ளுங்கள். மேலும் இந்த வலைப்பூவின் நிறைய போஸ்ட்களை படித்து எனக்கு ஒரு டாடா - டியாகோ கார் வாங்கும் அளவுக்கு பணத்தை சம்பாதிக்க உதவுங்கள் என்று கம்பெனி சார்பாக பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...