Monday, June 24, 2024

MUSIC TALKS - PESADHE PAARVAIGAL VEESADHE VERENNA MOZHI VENDUM MOUNAME PODHAATHAA ? NERUNGATHE NERUNGIYE VILAGATHE ? VERENNA INI VENDUM ? MOUNAME PODHATHA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா ?
நெருங்காதே நெருங்கியே விலகாதே வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா ?

என் நெஞ்சில் வந்தே என்னென்ன செய்தாய் மிதக்கிறேன் காற்றாக
உன் பேரை தானே என் நெஞ்சில் இன்று இசைக்கிறேன் பாட்டாக
பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா ?

கண்ணில் உன்னை அளந்தது கொஞ்சம்
கண்ணை மூடி ரசித்தது கொஞ்சம்
இன்னும் என்ன சொல்ல அன்பே தெரியாமல்
நான் தவித்தேனே

உன்னால் என்னை இழந்தது கொஞ்சம்
உன்னால் என்னை அடைந்தது கொஞ்சம்
இன்னும் என்ன சொல்ல அன்பே புரியாமல்
நான் துடித்தேனே 

காதல் என்று சொன்னால் நீண்ட மயக்கம் இன்று புரிகின்றதே
உன்னால் எந்தன் பெண்மை புதிய தயக்கம் இன்று அறிகின்றதே
நீ என்ன சொல்ல ? நான் என்ன சொல்ல ? வார்த்தைகள் தேவைதானா ?
நீ என்னை வெல்ல நான் உன்னை வெல்ல ஆனாலும் 
இந்த காதல் போரின் யுத்தம் அடங்காதே

எங்கே எங்கே தொலைந்தது நெஞ்சம் ?
பெண்ணே பெண்ணே சொல்லிவிடு கொஞ்சம்
உன்னை நம்பி விட்டு வந்தேன் நலம்தானா என் இதயம் ?
அங்கே அங்கே அங்கே என்னுடைய நெஞ்சம்
உன்னிடத்தில் வந்திருக்கும் தஞ்சம்
கண்ணில் வைத்து காவல் செய்வாய் என்றதடா உன் இதயம் இங்கே
தேகம் இரண்டு ஆனால் இதயம் ஒன்று இங்கு துடிக்கிறதே
தூரம் தள்ளி நின்றும் சுவாச காற்று நம்மை இணைக்கிறதே
நீ என்ன சொல்ல நான் என்ன சொல்ல வார்த்தைகள் தேவைதானா
நீ என்னை வெல்ல நான் உன்னை வெல்ல ஆனாலும் இந்த காதல்
புரியும் யுத்தம் அடங்காதே

பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா ?
நெருங்காதே நெருங்கியே விலகாதே வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா ?

என் நெஞ்சில் வந்தே என்னென்ன செய்தாய் மிதக்கிறேன் காற்றாக
உன் பேரை தானே என் நெஞ்சில் இன்று இசைக்கிறேன் பாட்டாக
பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா ?

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...