Sunday, June 23, 2024

MUSIC TALKS - AZGHAGIYA LAILAA AVAL IVALADHU STYLE AA SANDHANA MELA IVAL MANMADHA PUYALA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா 
அழகுக்கு இவள்தான் தாய் நாடா

அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா 
அழகுக்கு இவள்தான் தாய் நாடா


சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே 
சூரியன் நிலவாய் ஆனது அங்கே
என் மனம் இன்று போனது எங்கே 
மன்மதனே உன் ரதி எங்கே

கன்னத்தை தொட்டால் சந்தனம் கொட்டும் 
வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும்
புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும்
பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்
காலடி ஓசைகள் கம்பனை கேட்டது
பிக்காசோவின் ஓவியம் ஒன்று 
பிட்டோவனின் சிம்ஃப்போனி ஒன்று 
பெண்ணாய் மாறியதோ ?
அந்தப்புரத்து மகராணி அந்தப்புரத்து மகராணி

அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா 
அழகுக்கு இவள்தான் தாய் நாடா


உயிருக்குள் மின்னல்கள் அடித்து என்ன
தாகங்கள் என்னை குடித்தது என்ன 
அழகில் என்னை வளைத்தது என்ன  
இதயம் கொள்ளை போனதென்ன


ரகசியமாய் இவள் இளமையை ரசித்தேன்
கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன்
கனவுகள் அடுக்கி காலையில் கலைத்தேன்
தினம் தினம் இவளை யோசித்தேன்


வாலிப குறும்புகள் ஜாடைகள் சொல்லுது
பூக்கள் அவளை பார்த்து பார்த்து 
ஆட்டோகிராப்பை கேட்டு கேட்டு கைகள் நீட்டியதோ
அந்தப்புரத்து மகராணி அந்தப்புரத்து மகராணி


அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா 
அழகுக்கு இவள்தான் தாய் நாடா

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...