Friday, June 21, 2024

MUSIC TALKS - AALAANA NAAL MUDHALAA YAARAIYUM NINAICHATHILLAI - UNNAI NAAN KATTIKKOLLA EPPAVUM NINAICHATHILLAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




ஆளான நாள் முதலா 
யாரையும் நினைச்சதில்ல 
மாமா நான் உங்களுக்கு 
வாக்கப்பட ஆச பட்டேன் 
வேணான்னு சொல்லுறீகளே 
சும்மா வெறும் வாய மெல்லுறீகளே 
ஆடியில கட்டிக்கிட்டா 
சித்திரைக்கு புள்ள வரும் 
ஆகாது ஆகாது மச்சானே 
இது தோதான தை மாசம் மச்சானே 
ஆகாது ஆகாது மச்சானே 
இது தோதான தை மாசம் மச்சானே
 
உன்னை நான் கட்டிக்கொள்ள 
எப்பவும்  நினைச்சதில்ல 
கல்லக் கட்டி தண்ணிக்குள்ள 
முங்குறவன் யாரும் இல்ல 
வேணான்டி விட்டு விடடி 
நான் தவிச்சாக்கா தண்ணி குடுடி 
தாலி கட்டி கூடிகிட்டா 
சாமி குத்தம் ஆகுமுன்னு 
மேலூரு குறிகாரன் சொன்னான்டி 
அடி கண்ணாலம் நமக்குள்ள வேணாம்டி 
மேலூரு குறிகாரன் சொன்னான்டி 
அடி கண்ணாலம் நமக்குள்ள வேணாம்டி

ஆளான நாள் முதலா 
யாரையும் நினைச்சதில்ல 
மாமா நான் உங்களுக்கு 
வாக்கப்பட ஆச பட்டேன் 

புல்லறுக்கப் போகையிலே 
புல் நுனி தண்ணியில 
ஒம் முகத்த பாத்துபுட்டேன் 
வூடு வந்து சேந்து புட்டேன் 
எம் பாசம் தெரியாது மாமா 
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா
எம் பாசம் தெரியாது மாமா 
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா

கொல்லையிலே மாங்கா மரம் 
கொத்து கொத்து காச்சிருக்கு 
காவக்காரன் தூங்கையிலே 
கைய எட்டி மாம்பழத்த 
அறியாம பறிச்சாத்தான் இனிக்கும் அடி 
அணில் பிள்ள கடிச்சாதான் ருசிக்கும் 
அறியாம பறிச்சாத்தான் இனிக்கும் அடி 
அணில் பிள்ள கடிச்சாதான் ருசிக்கும்
பூவெடுத்து மால கட்டி ராசா 
நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா 
உன்ன நெனச்சே பொறந்தேன் 
வளந்தேன் ராசா என் ராசா

உன்னை நான் கட்டிக்கொள்ள 
எப்பவும்  நினைச்சதில்ல 
கல்லக் கட்டி தண்ணிக்குள்ள 
முங்குறவன் யாரும் இல்ல 

காளை கண்ணு வாங்கிக் கட்டி பால் கறக்க ஆச பட்டே
கோழிக் குஞ்சு குட்டி போட கோயிலுக்கு நேந்துகிட்டே 
முட்டாளா இருக்கேடி மானே அடி ஒட்டாதே என் வாழ்க்க தானே 
ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே அடி ஒட்டாதே என் வாழ்க்க தானே
ஒத்தைக்கொத்த சண்டையின்னா 
ஓடிப் போற ஆம்பள நீ 
செத்துப் போன பாம்ப பாத்தே 
சத்தம் போட்ட வீரனும் நீ
நீ மட்டும் சரி தானா மாமா
என் நினைப்பத்தான் நீ பாரு மாமா
நீ மட்டும் சரி தானா மாமா 
என் நினைப்பத்தான் நீ பாரு மாமா

உன் வாயக் கொஞ்சம் மூடிக்கடி வாரேன் 
நான் ஆம்பளைதான் வீரத்த நீ பாரேன் 
நான் நெனச்சா மலைய வளைப்பேன் 
வாரேன் நான் வாரேன்

ஆளான நாள் முதலா 
யாரையும் நினைச்சதில்ல
உன்னை நான் கட்டிக்கொள்ள 
எப்பவும்  நினைச்சதில்ல 
வேணான்னு சொல்லுறீகளே
அடி வேணான்டி விட்டு விடடி 
தாலி கட்டி கூடிகிட்டா சாமி குத்தம் ஆகுமடி
ஆகாது ஆகாது மச்சானே
அடி கண்ணாலம் நமக்குள்ள வேணாம்டி 
ஆகாது ஆகாது மச்சானே
அடி கண்ணாலம் நமக்குள்ள வேணாம்டி 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...