Friday, June 28, 2024

GENERAL TALKS - குற்றங்களை தடுக்காமல் இருப்பது தவறு !

 



இப்போ கேள்வி இந்த உலகத்தில் நிஜமாகவே நாம் ஆசைப்படும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா ? என்பது அல்ல. நடப்பு உலகத்தில் நடக்கக்கூடிய விலைவாசி உயர்வும் மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பும் பொதுவாகவே உணவுப்பொருள் உட்பட அனைத்து பொருட்களுடைய தேவைகளையும் அவைகளுடைய விலைவாசியையும் அதிகமாக்கிக் கொண்டே வருகிறது. மேலும் மனிதர்களுக்குள்ளேயும் மனித தன்மை குறைந்து கொண்டே இருக்கிறது. இவற்றை எல்லாம் தடுக்க வேண்டும் என்றால் மிகப்பெரிய சக்தி தேவை. கடவுளால் மட்டும் தான் நான் மிகப்பெரிய சக்தியை கொடுக்க முடியும் என்றால் கடவுள் எதனால் இந்த செயலில் பின் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இது நிச்சயமாக கடவுள் மறுப்பு கொள்கை அல்ல கடவுள் மீது வைக்கப்படும் நேரடியான கோபம். இன்றைய நாட்களைப் பாருங்கள் மகளிர் எதிரான கொடுமைகள் இணையதளத்தின் கொடிய கிளாமர் ஆப்ஸ் என்ற மிகவும் எளிமையாக நடக்கிறது. அரசாங்கம் நேரடியாக இவர்களை தட்டி கேட்காமல் மௌனம் காப்பது ஏன் ? இந்த பிரச்சனையின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது புரியவில்லை என்றால் நான் இப்போது ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு மோசமான காவல்துறை அதிகாரி ஒரு குழந்தையை கைது செய்து சிறையில் அடைக்கிறார். அந்த குழந்தை தாக்கப்படும் போது அந்த குழந்தையும் எதிர்த்து சண்டை போட முடியவில்லை. சண்டை போடும் அளவுக்கு வலிமை அந்த குழந்தைக்கு இருப்பதும் இல்லை. இப்போது காவல்துறை அதிகாரி மோசமான முறையில் அந்த குழந்தையை தாக்கவே அந்தக் குழந்தை கல்லறைக்கு சென்று விடுகிறது. இந்த உலகத்திலும் இதுதான் நடக்கிறது. காவல்துறை அதிகாரியாக இருப்பவர் இவரை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற தடைகளை கடந்து அவரை யாராவது தடுத்து அவரை அடித்தால் மட்டும்தான் பாதிக்கப்படக்கூடிய அந்த அப்பாவி குழந்தையை காப்பாற்ற முடியும். யாருக்கு என்ன ஆனால் என்ன ? என்று சம்பந்தப்பட்ட அதிகாரத்தை கொண்டு தப்பாக பயன்படுத்தும் இத்தகைய மோசமான அதிகார வர்க்கமான தவறான குற்றங்களை செய்யும் நிறுவனங்களை மட்டும்தான் இப்போது கடவுள் சப்போர்ட் செய்கிறார். இவை அனைத்தும் கண்களுக்கு முன்னால் நடக்கிறது. தடுக்க வேண்டிய பொறுப்பில் யாரும் இல்லை. இதுவே யாராவது ஒருவர் கோபத்தோடு சமூகத்தை பாதுகாக்க போராடினால் அவர்களுடைய குடும்பத்தையும் அவர்களுடைய வாழ்க்கையும் கடவுள் நேரடியாக அழித்து விடுகிறார். இந்த விஷயத்தில் பேச வேண்டிய கருத்துக்கள் இன்னும் நிறையவே உள்ளது.

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...