Monday, February 5, 2024

GENERAL TALKS - வேண்டுமென்றே கொடுக்கப்படும் அறியாமை !

 



பணம் இருப்பவர்களின் வாழ்க்கை சுட சுட வெற்றிகளை நிறைந்த வாழ்க்கையாக இருக்கும் ஆனால் பணம் இல்லாத நம்முடைய வாழ்க்கை கெட்டுப்போன பழைய சாதத்தில் சலித்து போன சாம்பாரை பிசைந்து சாப்பிடுவதாக இருக்கும். மிட் லைஃப் கிரிஸிஸ் என்று வயதான வாழ்க்கையின் மரண பயத்தை கொடுக்கும் மனநிலையும் நமக்குள்ளே நன்றாக வளர்ந்துவிடும். இது எல்லாவற்றுக்குமே அடிப்படையான காரணம் என்னவென்று கேட்டால் யாருமே நமக்கு சப்போர்ட் பண்ணவிலையே என்றும் மற்றவர்களை போல எனக்கும் சப்போர்ட் கிடைத்து இருந்தால் நான் வெற்றி அடைந்து இருப்பேனே என்ற ஏக்கமான ஒரு மனநிலையில் வாழ்க்கை டிஸெப்பாய்ண்ட்மென்ட்டாக இருக்கிறது என்பது ஒரு விஷயம். இன்னொரு விஷயம் நாம் மிகப்பெரிய அறியாமையில் மூழ்கியிருக்கும் ஒரு நிலை. நாம் ஒரு பெரிய கடலின் ஆழத்தில் கடல்நீரில் ஆழம் அதிகமாக அதிகமாக நேரடியாக அழுத்தம் அதிகமாகும் நிலையில் புதைந்து கிடப்பது போல புதைந்து கிடக்க வேண்டும். இந்த அறியாமையின் ஆழத்தில் இருந்து யாராவது நம்மை காப்பாற்ற வேண்டும் இல்லையென்றால் நாமே கஷ்டப்பட்டு மேலே வரவேண்டும். யாராவது நம்மை இத்தகைய போராட்டத்தால் கிடைக்கும் அறியாமையில் இருந்தும் பணம் காசு இல்லாததால் உருவாகும் மன சோர்வில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கின்றோம் ஆனால் நம்மை காப்பாற்ற அப்படி ஒரு சக்திவாய்ந்த மனிதர் வருவது மிகவும் அரிதானது. இதனால் நாமே நம்முடைய பலத்தை அதிகப்படுத்தி நம்முடைய அறியாமை இருளில் இருந்து வெளியே வந்துதான் ஆகவேண்டும். இன்னொரு வகையில் நம்மை காப்பாற்றும் மனிதர்களுக்காக நாம் காத்திருக்கலாம் ஆனால் என்னதான் போராடினாலும் அதிர்ஷ்டம் மாதிரியான ஒரு கற்பனையான விஷயம் நமக்கு ஆபத்தில் இருக்கும் நேரத்தில் உதவி பண்ணி நம்மை அறியாமையில் இருந்து காப்பாற்ற இன்னொரு மனிதரால் உதவியை அனுப்பும் வரை காத்திருக்கலாம் என்று சொல்வது முட்டாள்தனமானது. நம்முடைய உள்ளூர் அரசியல் போல நமக்கு நாமே என்று வாழ்ந்துகொண்டு இருப்பதுதான் நடைமுறை வாழ்க்கைக்கு சரியானதாக இருக்கும். 

GENERAL TALKS - நம்மால் முடியாத விஷயங்களை இப்போது பேசிக்கொண்டு இருக்கின்றோம் !

 



நான் என்னால் முடிந்த வரைக்கும் போராடினேன் இருந்தாலும் என்னுடைய வாழ்க்கையின் 95 சதவீத நேரம் போராடுவதில் சென்றுவிட்டது. மீதம் இருக்கும் 5 சதவீத நேரத்தை கூட நான் ரெஸ்ட் எடுக்கவும் என்னுடைய மனதுக்கு கொஞ்சம் மருந்து போட்டுக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் என்னால் வலியை தாங்க முடியாமல் இறந்துவிடுவேன் என்று சொன்னாலும் அடிப்படையில் நல்ல பணத்தின் காரணமாக வெற்றிகளை அடைந்த மனிதர்கள் நம்மை இளக்காரமாக நாயை போல பார்த்து அறியாமை நிறைந்த முட்டாளே உன்னுடைய கண்களால் எங்களின் தரிசனத்தை பார்த்துக்கொள். நாங்கள்தான் அறிவு ஜீவிகள் எங்களிடம்தான் நிறைய செல்வம் இருக்கிறது. காலம் எங்களைதான் ராஜாவாக தேர்ந்தெடுத்து இருக்கிறது. காலத்தால் கேவலமாக வாழும் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கும் ஈன பிறவியே உன்னுடைய வாழும் ஒரு ஒரு நாட்களும் பூமிக்கு நீ பாரமாக கருதப்படுவாய் ஆதலால் இறந்து போ என்று வாழ்க்கையில் அறிவு இருப்பவர்கள் நம்மை மோசமாக கொடுமைப்படுதுவார்கள். உடலும் மனதும் உடைந்து போய் இருக்கும்போது மேலும் நமக்கு ஆதரவாக இருக்கும் எல்லா விஷயங்களையும் உடைத்துக்கொண்டு இருப்பார்கள்.இந்த அறியாமையை கடவுள் வேண்டுமென்றே நமக்கு கொடுக்கின்றார். நம்மை வாழ்க்கையில் கொடுமைப்படுதுகிறார். துன்புறுத்தவும் செய்கிறார். சக்திவாய்ந்த அரக்கனை போல அவருடைய கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து நம்மால் எதுவுமே பண்ண முடிவது இல்லை. வாழ்க்கையில் ஆசைப்பட்ட எதுவுமே கிடைக்காமல் மிகவும் நரகமாக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். இந்த நிலை இப்படியே நீடிக்க வேண்டுமா ? நமக்கு யாரேனும் பாவங்களை செய்து நாம் துணிந்து சண்டை போடாமல் விட்டுவிட்டால் நமக்கு கொடுத்த கஷ்டத்த்தால் சம்பாதித்த போதையால் கிடைக்கும் சந்தோஷத்தை இன்னும் அனுபவிக்க வேண்டுமென்று யாராலும் ஆசையை கட்டுப்படுத்த முடியாது. வேண்டுமென்றே ஒருவரை ஏழையாக அறியாமை இருளுக்குள் தள்ளிவிட்டு இன்னொருவரை பணக்காரராக அறிவின் ஒளியில் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ வைப்பது எந்த வகையில் நியாயமானது ? கஷ்டப்பட்ட மனிதனாக நினைவு திறன் குறைபாடு, உடல்நல குறைவால் சேமிப்புகள் கரைந்து சென்று நம்மிடம் இருக்கும் கடைசி கட்ட பணமும் காலியாக மாறுவது, நொடிக்கு நொடி மனதுக்கு பாரத்தை கொடுத்து கஷ்டங்களை கொடுத்து காசுகளை கரைப்பது, மற்றவர்களுக்கு உதவிகளை செய்யும் மனது கொடுத்து எதுவுமே பண்ண முடியாத பணம் இல்லாத கையாலாகாத ஒரு மனிதனாக மாற்றி நம்முடைய வாழ்க்கையையே நாசம் பண்ணுவது என்று நீங்கள் நிறைய விஷயங்களை செய்துகொண்டு இருந்தாலும் அனைத்திலும் உங்களை வேண்டுமென்றே தோற்கடித்து உங்களை முட்டளாகவே வைத்து இருக்க வேண்டும் அதே சமயத்தில் பணம் இருப்பவர்களை மறுபடியும் மறுபடியும் மறுபடியும் ஜெயிக்க வைத்து ஜெயிக்க வைத்து புத்திசாலியாகவே வைத்து இருக்க வேண்டும் என்றால் அடிப்படையில் இது மிகவும் தவறான செயல் ஆகும். இந்த அறியாமை கண்டிப்பாக வேண்டுமென்றே திணிக்கப்படுகிறது. கண்டிப்பாக இந்த வாழ்க்கையை நாசம் பண்ணும் சம்பவங்களை தடுத்தே ஆக வேண்டும்.

TAMIL TALKS - EP. 53 - பிரச்சனைகளின் கடலுக்குள்ளே முழுகுதல் !

 



நம்மால் போராட முடியும் என்று கடைசிவரைக்கும் போராடிக்கொண்டு இருந்தாலும் இந்த வகையிலும் ஒரு கடினமான அறியாமை உருவாகும். இந்த வகை அறியாமை எப்படிப்பட்டது என்றால் நம்முடைய அறிவை வளர்த்துக்கொள்ள நேரம் இல்லாமல் வளங்களும் இல்லாமல் உயிரே போகும் ஒரு ஆபத்தில் கடைசி வரைக்கும் சண்டைபோட்டுக்கொண்டே இருக்கிறோம் என்பதால் மனது அறிவை வளர்த்துக்கொள்ள மறுத்து ஒரு கடினமான அறியாமையை உருவாக்குகிறது. வாழ்க்கையில் நம்மை எல்லோருமே முட்டாள்கள் என்று அழைப்பார்கள். இப்படி முட்டாள்கள் என்று அழைக்கும் மனசாட்சி இல்லாத மனிதர்கள் எல்லாம் நிறைய பணம் காசு வைத்து இருப்பார்கள். பெரும்பாலும் இந்த பணம் காசு எல்லாம் அவர்கள் சம்பாதித்தால் கிடைத்தவையாக இருக்காது. சொத்துக்களுடைய அடிப்படையில் அவர்களுக்கு கிடைத்த விஷயங்களாக இருக்கும். நமக்கு ஒரு நாளில் 24 மணி நேரமும் போராட்டமாக மட்டும்தான் இருக்கும். வாழ்க்கையில் ஒரு ஒரு நோடியை வாழவும் அவ்வளவு பயமாக இருக்கும். கண்களை மூடி கடைசி வரைக்கும் நிம்மதியாக தூங்கிக்கொண்டு இருந்தால் என்ன என்றுதான் தோன்றும். நம்மை நம்முடைய வாழ்க்கையின் அவமான சின்னமாக பார்ப்பார்கள்.நம்ம வாழ்க்கையில் எல்லோருமே நம்மை தரக்குறைவாக நடத்த நாமும் தோற்றுப்பொய்க்கொண்டு இருந்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கை நரகமாக மாறிவிடும்.இதுவே பெரிய விஷயம். என்னுடைய நிலையில் வேறு யாரேனும் இருந்தார்களேயானால் கண்டிப்பாக வலியை தாங்க முடியாமல் பாரத்தை சுமக்க முடியாமல் இறந்து இருப்பார்கள்.இதனால்தான் நான் ஸ்பெஷல் என்னால் மட்டும்தான் பிரச்சனைகளை சரிபண்ண முடியும். இது கடவுளுக்கும் தெரியும்.பொதுவாக நான் அனுபவங்களை கற்றுக்கொள்வது குறித்து வேறு யாருமே பண்ணாத ஒரு முறையை நான் பயன்படுத்துகிறேன். இங்கே எப்போதுமே சுலபமான ஆப்ஷன் மற்றும் கஷ்டமான ஆப்ஷன் என்று இரண்டு வகையான ஆப்ஷன்கள் இருந்தால் நான் கஷ்டமாக இருக்கும் ஆப்ஷனை செலக்ட் பண்ணுகிறேன். இதனால் சுலபமான ஆப்ஷன்கள் தேர்ந்தெடுப்பவர்களின் எக்ஸ்பீரியன்ஸ் விட என்னுடைய எக்ஸ்பெரியன்ஸ் மிகவும் அதிகமானது !

TAMIL TALKS - EP. 52 - கொடியதோர் உலகம் செய்யல் !

 





இது சம்பந்தமான நேரடியான அதிகபட்சமாக இருக்கும் யோசனைகளை எல்லாமே சேர்த்துதான் ஒரு முடிவை எடுத்துள்ளேன். நான் என்னை விட்டுக்கொடுப்பதை விடவும் இந்த பிரபஞ்சத்தில் நேருக்கு நேராக தனக்காக போராடிய ஒரு கௌரவமான உயிராக மட்டும்தான் என்னுடைய உயிர் போக வேண்டும். இந்த பிரபஞ்சம் ஜெயித்தாலும் இந்த பிரபஞ்சம் பண்ணிக்கொண்டு இருப்பதெல்லாம் தவறானது. நான் தோற்று போய் இறந்து போனாலும் நான் எடுக்கும் முடிவுகள் சரியானது. சிறிய வயதில் இருந்து எனக்கு கொடுத்த பாதிப்புகளுக்கும் தோல்விகளுக்கும் நேருக்கு நேராக சண்டை போட்டு பழிக்கு பழியாக வாங்க வேண்டும். நான் அடைந்த தோல்வியை விடவும் ஒரு கோடி மடங்கு அதிகமாக வெற்றியை அடைய வேண்டும். வலி என்றால் என்னவென்றே தெரியாத இயந்திர உடம்பும் பசி என்றால் என்னவென்றே தெரியாத சக்தியின் ஊட்டமும் இருப்பதால் பிரபஞ்சத்தில் ஆணவம் அதிகமாக மாறிவிட்டது. இந்த பூமியை பாதுகாப்பாக வைத்து இருந்த உயிர்களும் தாவரங்களும் அழிந்துகொண்டு இருக்கின்றன. டெக்னாலஜி கம்பெனி நான் தொடங்கினால் என்னால் இந்த பிரச்சனைகளை சிறப்பாக சரிபண்ண முடியும். தொடர்ந்து காயங்களையே கொடுத்துக்கொண்டு இருக்கும் பிரபஞ்சத்தை எதிர்த்து என்னால் பாதிக்கப்பட்ட மனிதர்களையும் உயிரினங்களையும் தாவரங்களையும் காப்பாற்ற முடியும்.ஒரு காலத்தில் எனக்கு இருந்த அறிவுத்திறனை விட இப்போது இருக்கும் அறிவுத்திறன் எனக்கு மிகவும் குறைவாக இருக்கிறது. எல்லோரும் டேரா பைட் அளவுக்கு திறன்களை வைத்து இருக்கின்றார்கள் ஆனால் நான் வெறும் மெகா பைட் கணக்கில்தான் திறன்களை வைத்து இருக்கின்றேன். என்னால் முடியவில்லை. பல் துலக்குவது , குளிப்பது , வெளியே நிறைய இடங்களுக்கு செல்வது, வேலை செய்வது, சம்பாதிப்பது, சாப்பிடுவது என்று எல்லா வேலைகளிலும் ஒரு இனம் புரியாத தடங்கல்களும் சோர்வுகளும் பின்னடைவுகளும் இருக்கின்றது. மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. உயிரோடு இருக்கும் ஒரு ஒரு நொடியும் எப்படியாவது வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இது எல்லாமே பிரபஞ்சம் அல்லது கடவுள் நான் சாகவேண்டும் என்று எனக்கு பண்ணுகிறார் என்னும் பட்சத்தில் நான் கண்டிப்பாக சாக கூடாது. இங்கே எவருக்குமே உயிரை கொடுக்கவும் காப்பாற்றவும்தான் உரிமைகள் உள்ளது. உயிரை எடுக்க உரிமைகள் இல்லை.கடவுளின் கையால் சாகவேண்டும் என்றால் என்னை கொல்ல காரணங்களை கடவுள் உருவாக்க வேண்டும். முடிந்த வரையில் என்னுடைய வாழ்க்கையில் நான் சாகவேண்டும் என்ற காரணத்துக்காக என்னென்னமோ சதிவேலைகளை செய்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட வைத்து 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைச்சாலை தண்டனை போல வாழ்க்கையை கொடுத்தாலும் நான் ஜெயித்து காட்டியுள்ளேன்.

TAMIL TALKS EP. 51 - மாற்றங்கள் அத்தியாவசியமான விஷயங்கள் !

 



இது எல்லாமேதான் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான நாட்கள் , மார்ட்டல் காம்பேட் வீடியோகேம் போல நான் என்னுடைய வாழ்க்கையை எதிர்த்து என்னுடைய பிரச்சனைகளை எதிர்த்து நேருக்கு நேராக போராடவேண்டிய நாட்கள். இந்த நேரங்களில் வாழ்க்கை என்னை கொஞ்சம் கூட காசு இல்லாத மனிதனாக மாற்றியபோது நான் பட்ட கஷ்டங்களால் நான் எனக்கு கிடைத்த அனுபவங்களை சொல்கிறேன். முன்னதாக படிப்பு , படிப்பு விஷயத்தை பொறுத்தவரை பள்ளிக்கூடம் , கல்லூரி என்று எனக்கு கிடைத்த எல்லா விஷயங்களும் என்னுடைய பொட்டேன்ஷியலை கொடுக்க போதுமானதாக இல்லை. பொருளாதார நஷ்டம் எனக்கு பள்ளிக்கூட காலகட்டத்தில் மிக மிக அதிகமாக இருந்தாலும் ஒரு மிகப்பெரிய கம்ப்யூட்டர் டெக்னாலஜி கம்பெனியை உருவாக்க என்னால் எவ்வளவு போராட முடியுமோ அவ்வளவு போராடினேன். பள்ளிக்கூட காலங்களில் ஃபிஸிக்கல் லெவல்லில் எனக்கு போதுமான வலிமை இல்லை. பொதுவாக ஃபிக்ஷன்னல் வொர்க்ஸ் என்னுடைய மனதை அதிகமாக கவர்ந்தது. நன்றாக யோசித்து பார்த்தால் ஃபிக்ஷன்னல் வொர்க்ஸ்ஸில் இருக்கும் கன்டேன்ட்தான் நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட நிறைய விஷயங்களுக்கு சோர்ஸ் என்று சொல்லலாம். ஒரு கம்ப்யூட்டர் டெக்ஸ்ட்டில் இருந்து ரேஃப்ரேன்ஸ் எடுத்து செயல்படுவது போல நான் மொத்தமாக என்னுடைய வாழ்க்கையையே ஃபிக்ஷன்னல் வொர்க்ஸ்ஸில் இருந்து ரேஃப்ரேன்ஸ் எடுத்தேன். நான் பிறந்த நாளில் இருந்து இன்றைய நாள் வரைக்கும் பணத்துடைய தேவையில் நசுங்கிப்போன ஒரு புதைந்த போர் கத்தியை போலத்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நிரந்தரமான மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இது சம்மதமான நான் என்ன மாற்றங்களை எனக்குள்ளேயும் என்னுடைய மனதுக்கு உள்ளேயும் என்னுடைய சுற்று சூழல்லிலும் பண்ணினாலும் குறைந்த பட்ச அளவில் பண்ணினால் அதனால் எந்த பிரயோஜனமும் இருக்காது. மறுபடியும் மறுபடியும் வேண்டுமென்றே ஜெயிக்க வேண்டிய என்னை தோற்கடித்து தோற்கடித்து காலம் நிச்சயமாக என்னுடைய மனதை உடைத்துதான் விட்டது. அதுக்காக நான் மிகவும் தெளிவான முடிவுகளை எடுத்தேன். காலமோ அல்லது பிரபஞ்சமோ ஒரு ஒரு முறையும் என்னை கையாலாகாத அன்னாடும் காய்ச்சியாக வைத்து இருக்க எல்லா தவறான காரியங்களிலுமே இறங்கியது. பாதிக்கப்பட்ட என் மேலே உடல் அளவிலும் மனது அளவிலும் சுமத்தப்பட்ட பாரங்கள் மிக மிக அதிகம். கடைசி வரைக்கும் நான் பாதிக்கப்பட்டு இப்படியே இருக்க வேண்டும் ஆனால் எல்லா நேரங்களிலுமே என்னை பாதித்தவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். நான் மன்னிக்கலாம் , மன்னிக்கலாம் , ஆனால் தொடர்ந்து ஒருவருக்கு நம்மை தாக்குகிறார் என்றும் நமக்கு கெடுதல் செய்து விஷமமாக நடந்துகொள்கிறார் என்றும் மன்னித்து விட்டுக்கொண்டே இருந்தால் கடைசியில் மிகவும் பெரிய தவறாக கண்டிப்பாக முடியும். பிரபஞ்சம் ஒரு ஒரு முறையும் என்னை உயிரோடு தின்றுகொண்டு இருக்கிறது. போலியான உறவுகள் அவர்களால் காப்பாற்ற முடிந்த அளவுக்கு சக்திகள் அவர்களிடம் இருந்தாலும் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். கடைசியாக ஒரு விஷயத்தை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் இறந்து போனால்தான் உங்களுக்கு சந்தோஷம் என்றால் என்னுடைய சடலத்தைத்தான் நீங்கள் பார்க்க ஆசைப்படுகிறீர்கள் என்றால் கண்டிப்பாக நான் உயிரோடு இருக்கும்போது என்னால் முடிந்த வரைக்குமே போராடுவேன். நான் போர்க்களத்தை பார்த்து பயப்பட மாட்டேன். 

TAMIL TALKS EP. 50 - பயனற்ற நிலையில் சிக்கிக்கொள்ளல் !

 



இந்த பிரபஞ்சம் இன்னைக்கு எனக்கு உடல்நலக்குறைவை உருவாக்கியதன் மூலமாக பெரிய சாதனையை பண்ணிவிட்டதாக சந்தோஷப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த பிரபஞ்சத்துக்கு நான் தேவை. இன்னைக்கு இந்த பிரபஞ்சம் எனக்கு பண்ணியிருக்கும் மிஸ்டேக் மிகவுமே பெரிய மிஸ்டேக். இன்னைக்கு நான் உடல்நல குறைவு காரணமாக என்னுடைய பணத்தை பெரும் அளவுக்கு இழந்துள்ளேன். நான் சராசரியான மனிதன்தான். ஒரு வருஷம் இரண்டு வருஷம் என்று எல்லாம் இல்லை . தொடர்ந்து 8 வருடங்களாக என்னுடைய முயற்சிகளில் நான் மிகவுமே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் இந்த பணம். இன்றைக்கு இந்த பிரபஞ்சம் எனக்கு பொருளாதார நஷ்டத்தை உருவாக்கி நான் சேர்த்து வைத்த பணத்தை நானே அதிகமாக செலவு பண்ணிவிட்டு என்னுடைய உடல்நிலையை சரிபண்ணினாலும் கடைசியில் நான் சாப்பாட்டுக்கு கூட வாய்ப்பு இல்லாமல் கண்கள் குருடாகவும் காதுகள் செவிடாகவும் , கால்கள் முடமாகவும் , கைகள் பயணற்றும் போகவேண்டும் என்று ஆசைப்படுகிறது. என்னை இந்த பிரபஞ்சம் இவ்வளவு கேவலமாக தாக்குகிறது நான் ஒரு மடையனை போல பிரபஞ்சத்தை மன்னித்து விட வேண்டுமா ? இது மிகவும் நுணுக்கமான இரண்டு மூளைகளுக்கு எதிரான மோதல் , பிரபஞ்சம் கடவுளாக கூட இருக்கலாம். கடவுளின் சக்திகள் இருப்பதால் பிரபஞ்சம் கடவுளாக மாறிவிட முடியாது. தேன் பாட்டில்லில் விழுந்த கருந்தேள் தன்னை காப்பாற்ற வருபவர்களின் விரலை நச்சு கொண்டு கொடூரமாக கொட்டுமாம். அதுபோலத்தான் இந்த பிரபஞ்சமும் எனக்கு பண்ணுகிறது. என்னுடைய அதிகாரத்தில் இருந்தால்தான் இந்த பிரபஞ்சத்தால் உயிரோடு இருக்க முடியும். இந்த பிரபஞ்சத்தை பாதுகாக்க என்னால் மட்டும்தான் முடியும். பிரபஞ்சம் நினைத்தால் ஒரே நொடியில் எனக்கான சக்திகளை வலிமைகளை பணத்தை கொடுத்துவிட முடியும் ஆனால் ஆரம்பத்தில் இருந்து பிரபஞ்சம் பண்ணும் காரியங்கள் காரணமாக எனக்கு ஒரு சிறு துளி கூட நன்மைகளை செய்யவே இல்லை. என்னுடைய கோபத்தை எப்போதுமே பிரபஞ்சம் எள்ளி நகையாடுகிறது. நம்முடைய சமூகம் பூந்தோட்டமாகவும் இருக்க வேண்டாம் சுடுக்காடகவும் இருக்க வேண்டாம். எல்லோரையுமே காப்பாற்றும் ஒரு சரணாலயமாக மாறினால் அதுவே போதுமானது. நான்தான் இந்த பிரபஞ்சத்தை தாங்கிக்கொண்டு இருக்கின்றேன். தான் உட்கார்ந்து இருக்கும் கிளையை தானே கோடலியை வைத்து வெட்டுவது போல ஒரு முட்டாள்தனத்தை இந்த பிரபஞ்சம் செய்துகொண்டு இருக்கின்றது. இந்த ஒரு விஷயம் இந்த பிரபஞ்சம் இறந்து போனால்தான் தவறு என்று புரிந்துகொள்ளும் என்றால் பிரபஞ்சத்தின் இந்த தோல்விகரமான முடிவு வெற்றிகரமாக தோற்றுப்போக வாழ்த்துக்கள்.  இதுக்கு மேலே நான் என்ன சொல்ல முடியும் ? நான் கவலைப்படுகிறேன். என்னுடைய அதிகாரத்தில் இல்லாத உயிர்களுக்காக நான் கவலைப்படுகிறேன். இது ஒரு பெரிய சாதனை அல்ல. என்னுடைய கனவு நிறுவனத்தை தடுத்தால் நானும் மனசு உடைந்து வாழ்க்கையை முடித்துக்கொள்வேன் என்று பிரபஞ்சம் ஆசைப்பட்டு மண்ணை தின்றுக்கொண்டு இருக்கிறது. நான் ஒரு போர்க்களத்தில் இறங்கும்போது எனக்கு என்ன வேண்டுமென்றாலுமே நடக்கலாம் என்பதை புரிந்துகொண்டுதான் களத்தில் இறங்குகிறேன். எனக்கு நோய் நொடியை கொடுத்து என்னுடைய பணத்தை மிகவும் சுலபமாக இந்த பிரபஞ்சம் கரைத்துவிட்டது/ வாழ்த்துக்கள். மறுபடியும் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் இன்னும் 10 வருடங்கள் ஆகவேண்டும். நான் எந்த ஆப்ஷனை கடைசி ஆப்ஷனாக வைத்து இருக்கிறேனோ அந்த ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும் என்று பிரபஞ்சம் ஆசைப்படுகிறது. என்னுடைய கடைசி ஆப்ஷன் ரொம்ப ரொம்ப ஆபத்தானது. இந்த ஆப்ஷனுக்கு நான் வைத்து இருக்கும் பெயர் ப்ராஜக்ட் கேமிஸ்ட்ரி ! மார்ட்டல் காம்பேட் என்ற கணினி விளையாட்டு போல நேருக்கு நேராக உன்னை எதிர்த்து சண்டை போடுவதுதான் இந்த  ஆப்ஷனுடைய செயல்பாடு. 

TAMIL TALKS EP. 49 - இது ஒரு கொடிய போராட்டம் !

 



நான் தனிப்பட்ட ஒரு கருத்தை சொல்லியே ஆகவேண்டும். நான் காலத்துக்கு எதிராக போர் செய்யப்போகிறேன். இன்னைக்கு தேதிக்கு கடந்த 8 வருடங்களாக எனக்கு நடந்த கொடுமைகளுக்கும் அதனால் உருவான பாதிப்புகளுக்கும் நான் பதிலுக்கு எதுவுமே பண்ணவே இல்லை. நான் ரொம்பவுமே நம்பிக்கையாக இருந்தேன் காலம் எனக்கு ஒரு வாய்ப்பை கொடுக்கும் என்று 8 வருடம் காத்திருந்தேன். எனக்கு நடந்த கொடுமைகளில் ஒரு 20 சதவீதம் மட்டுமே எந்த ஒரு சராசரி மனிதனுக்கு நடந்து இருந்தாலும் கூட அந்த மனிதன் அவனுடைய வலியை தாங்காமல் உயிரை விட்டு இருப்பான். நானும் உயிரை உள்ளங்கையில் சுமந்து எனக்கு நடந்த எல்லா கொடுமைகளையும் தாங்கிவிட்டென். இதனை மிகவும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் பணம் அடிப்படையில் எனக்கு இருந்த கஷ்டம்தான்.கடந்த 8 வருடங்களாக நான் இழக்க கூடாததை எல்லாமே இழந்து இருக்கிறேன். பணத்தை காலம்  கண்ணால் கூட  காட்டவே இல்லை.கொஞ்சமாவது எனக்கு இரக்கமும் கருணையும் மனிதத்தன்மை கொடுத்து இருக்கலாம். அன்பாக இருப்பது அவ்வளவு கஷ்டமா என்ன ? நான் நிரந்தரமாக இழந்த விஷயங்கள் நிரந்தரமாக இழந்ததுதான்.ஒரு குற்றத்தை எப்படி பார்த்தாலும் மன்னித்து விடுவதுதான் சரியானது. இங்கே எனக்கு நடந்த எல்லா விஷங்களிலும் எல்லா சம்பவங்களும் தெரியாமல் நடந்த ஆக்ஸிடென்ட் கிடையாது. எல்லாமே நான் சாகவேண்டும் என்ற நோக்கத்தோடு காலத்தால் வேண்டுமென்றே பண்ணப்பட்ட இன்ஸிடென்ட்ஸ். யாருமே காலம் என்னை எப்படி ஒரு ஒரு நொடியும் நரகம் போல எண்ணெய் சட்டியில் வைத்து வறுத்து இருந்தால் மன்னித்து விட்டு இருக்கவே மாட்டார்கள். ஆனால் நான் மன்னித்தேன். காலத்தை நிரந்தரமாக மன்னித்தேன். ஆனால் நச்சு பாம்பை மன்னித்து விட கூடாது என்று காலம் எனக்கு புரியவைத்து விட்டது. காலம் எனக்கு பண்ணிய குற்றங்களை நான் மன்னித்தேன். ஆனால் காலம் இந்த தேதிக்கு என்னுடைய உடல்நிலையை மிகவும் மோசமாக மாற்றி உயிருக்கே ஆபத்தை விளைவிக்க வேலையை பார்த்துவிட்டது. இனிமேல் நான் என்ன பண்ணனும் ? என்ன பண்ண போகின்றேன் ?

Friday, February 2, 2024

TAMIL TALKS - EP.48 - பயந்தவர் வென்றதில்லை !

 



பிரச்சனைகளை பார்த்து பயந்து விட கூடாது. பொதுவாகவே நிறுத்தி நிதானமாக யோசித்தால் நல்ல முடிவு உங்களுக்கு கிடைக்கும். இங்கே நிறைய பேர் யோசிக்க பயப்படுகிறார்கள். பிரச்சனைகளை பார்த்து பயந்து கடைசி வரைக்கும் பிரச்சனைகளை சரியே பண்ண முடியாது என்று தப்பான முடிவை எடுத்து போதையில் மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களை செய்வதில் நேரத்தை செலவு பண்ண ஆரம்பிக்கிறார்கள். இது தான் தவறான செயல். நிறுத்தி நிதானமாக யோசித்தால் யாருடைய தவறு என்றும் எப்படி இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும் என்றும் நமக்கு ஒரு நல்ல யோசனை கண்டிப்பாக கிடைக்கும். இங்கே நான் நிதானமான யோசனை என்று சொல்லும்போது வெறும் யோசிப்பது என்று மட்டும் நினைக்காதீர்கள் ! உங்களுடைய பிரச்சனைகளுக்கு ரெப்ஃபரேன்ஸ் எடுக்க கண்டிப்பாக உங்களுக்கு ஒரி டேட்டா செட் தேவை. வெறும் மாஸ் முயற்சிகளால் கே.ஜி. எஃப் ராக்கி போல வயலன்ஸ் செய்து உங்கள் பிரச்சனைகளை முடிக்கவேண்டும் என்றால் அது எல்லாமே நடைமுறை சாத்தியம் ஆகாது ! நான் பயந்து இருந்தேன் எந்த செயலுமே செய்யாமல் இருந்தேன் அதனால்தான் வெற்றியை அடைந்தேன் என்று யாராவது சொல்லி நீங்கள் கேட்டு இருக்கின்றீர்களா ! அப்படி யாருமே சொல்ல முடியாது. நம்ம மானதுக்குள்ளே பயம் இருப்பது நம்முடைய கல்லறைக்குள் நாம் வாழும்போதே ஒளிந்துகொள்வதற்கு சமமானது. கவனமாக வேலை பார்த்து மூளையை பயன்படுத்தினால் காரியம் என்னவாக இருந்தாலும் ஜெயித்துவிடலாம் ! இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் பயம் என்பது பணம் இல்லாமல் போவதால்தான் மட்டுமே வருகின்றது. பயந்து கிடந்தால் பணத்தை பார்க்க முடியாது. பணத்தை கண்டதும் உங்களுடைய பயம் எப்போதுமே சூரியனை கண்ட பனித்துளி போல விலகி செல்வதை நீங்களே பார்க்கலாம் ! 


TAMIL TALKS - EP. 47 - இனிமையான வாழ்க்கை !



பொதுவாக சர்க்கரையை நம்ம உணவு பழக்கத்தில் சேர்த்துக்கொள்ளவே கூடாதாம் ! அதுக்கு நிறைய காரணம் இருக்கிறது ! சர்க்கரை இன்ஸ்டண்ட்டாக உடைந்து உடலுக்கு கொஞ்சம் சக்திகளை கொடுக்கிறதே தவிர்த்து நியூட்ரிஷியனாக சர்க்கரையிடம் கொடுக்க எதுவுமே இல்லை. இது சம்மந்தமாக இணையத்தை தேடும்போது நிறைய விஷயங்கள் கிடைத்தது ! குறைவாக சர்க்கரை சாப்பிடுகிறோம் என்றாலுமே தினம் தினம் எடுத்துக்கொள்ளும்போது உடல் சோர்வு உருவாக்க ஆரம்பிக்கிறது. சர்க்கரைக்கு அடிக்ஷன் ஆனால் மனதும் சர்க்கரை கிடைக்கவில்லை என்றால் சோர்வாக மாறிவிடும் ! பற்களுடைய எனாமல் பாகங்களை சர்க்கரையை பாகடீரியாக்கள் உட்கொள்ளும்போது கொஞ்சம் கொஞ்சமாக அரித்து சொத்தை பற்களை உருவாக்கிவிடுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதும் அதிகரிப்பதும் நாம் கவனமான வேலை செய்யும் திறனை இழக்க செய்கிறது ! இதய நோய் , இரண்டாம் வகை சர்க்கரை நோய் மற்றும் கல்லீரல் கொழுப்பு பாதிப்புகளையுமே சர்க்கரை உருவாக்குகிறது என்கிறது அறிவியல். இதனால் இனிமையான வாழ்க்கை என்பது சர்க்கரை அல்லாத உணவுகளையும் சத்துள்ள உணவுகளையும் சாப்பிட்டால் மட்டும்தான் நடக்கும். இதுக்கு கண்டிப்பாக அதிகமான பொருளாதார வசதி தேவை. நம்ம வாழ்க்கையில் சர்க்கரையை சேர்ப்பதும் இனிப்பு சாப்பிடுவதும் ஒரு வகையான போதை போன்றதுதான். ஆனால் சர்க்கரை பண்ணும் விஷயங்களை இன்டர்நெட்டில் பார்க்கும்போது ஆல்கஹால் விட மோசமாக பாதித்துவிடும் போல இருக்கிறது. நான் படித்த சோர்ஸ் மிகவும் டிடேய்ல்ட்டான ரிப்போர்ட் , இந்த விஷயங்களை நிறைய ப்ரூஃப் வைத்துதான் சொல்ல முடியும். இப்போது நான் மேலோட்டமாக கருத்து பகிர்வை மட்டும்தான் உங்களோடு பகிர்ந்துகொண்டு இருக்கின்றேன்.  

MATH TALKS - COMPOUND INTEREST CALCULATOR - சோதனை முயற்சி !


 

Compound Interest Calculator





GENERAL TALKS - நான் கிடப்பில் போட்டு தோற்றுப்போன ப்ராஜக்ட்கள் !

 


இத்தனை ப்ராஜக்ட்களை முடிக்க பணம் காசு போதாது இருந்தாலுமே நான் நிறைய ப்ராஜக்ட்களை கைவசம் வைத்து இருந்து கொஞ்சம் பேருடைய முட்டாள்தனமாக அணுகுமுறையால் காலியாகிவிட்டேன். இந்த ப்ராஜக்ட்கள் யாருக்குமே பிரயோஜனம் இல்லாமல் போவதற்கு இந்த ப்ராஜக்ட்களின் பேஸிக் ஐடியாக்களை நான் இப்போது பகிர்ந்துகொள்கிறேன் !  இந்த கட்டுரையில் வெப் ப்ராஜக்ட்களை பார்க்கலாம் ! அனானிமேஸ்ஸாக எழுதுவதற்கு ஒரு வெப்ஸைட் - கிட்டத்தட்ட நோவ்னி என்ற வெப்சைட் போலத்தான். செக்யூரிட்டி க்வேஸ்டின்ஸ் மூலமாக அவர்களுடைய கட்டுரையை வேண்டுமென்றால் டெலீட் பண்ணிக்கொள்ளலாம். அல்லது பின் நம்பர் ஸேட் பண்ணிக்கொள்ளலாம் ! இல்லையென்றால் எப்படி வேண்டுமென்றாலும் ஆப்ஷன்ஸ் செய்துகொள்ளலாம். இந்த ப்ராஜக்ட் கமேர்ஷியல் பண்ண கண்டிப்பாக நன்றாக பணம் சம்பாதிக்கும் ஒரு பிஸினேஸ் மாடல் தேவைப்படுகிறது. அதனால்தான் கிடப்பில் போட்டுவிட்டேன். நோட்ஸ் மட்டும் எடுத்துக்கொள்ள தனியாக ஒரு மைக்ரோ பிளாக் வெப்ஸைட் , இன்னும் சொல்லப்போனால் பிக்கோ பிளாக் வெப்ஸைட் . வெறும் 2 வரியை கூட பிளாக் போல பப்ளிஷ் பண்ணிக்கொள்ள ஆப்ஷன்ஸ் கொடுக்க வேண்டும். இதுவுமே பிஸினேஸ் மாடல் தேவைப்படுகிறது என்பதால் ரேஜேக்ட் பண்ணிய யோசனைதான். கிரியேட்டிவ்வாக பேக்ரவுன்ட்களை 2500 X 1600 போல பெரிய ரேஸால்யூஸன்களில் கூட உருவாக்க முடியும் என்று ஒரு வேப்ஸைட் ! இது எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கிறது என்று பிராக்ட்டிக்கல் டெஸ்ட் பண்ணினால் மட்டும்தான் முடியும். இன்டர்நெட் ஹியூமர் வெப்ஸைட் தமிழில் பண்ணலாம் என்று பல வருடங்களாக ஒரு யோசனை பெண்டிங்கில் இருக்கிறது. பாட்கேஸ்ட் (பாட்டு கேஸட் இல்லைங்க ! PODCAST ! ) அப்லிக்கேஷன் கொண்டுவர வேண்டும் என்ற விஷயமும் பெண்டிங்தான். இன்னும் நிறைய ஐடியாக்கள் இருக்கிறது ! இருந்தாலும் இன்னொரு போஸ்ட்டில் போடுகிறேன் ! இந்த வலைப்பூவில் இருக்கும் என்னுடைய கருத்துப்பகிர்வுகள் உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக வலைப்பூவின் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும் !


TAMIL TALKS EP. 46 - வலிகள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை !

 



ஜெயிக்கக்கூடிய அளவுக்கு சக்தியையும் வலிமையையும் நமக்குள்ளே உருவாக்கிக்கொண்டால் வெற்றிகள் தானாக நமக்கு கிடைத்துக்கொண்டுதான் இருக்கும். இருந்தாலுமே அதனை விடவுமே முக்கியமான ஒரு பலம் என்னவென்றால் கஷ்டப்பட்டு நமக்கான வலியையும் வேதனையையும் சலிப்பையும் தாங்குவதுதான்.. இந்த உலகம் இன்னொருவருக்கு கடினமான் உழைப்பு இருப்பதால்தான் நமக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தற்காப்பு கலைகளை எடுத்துக்கொள்ளுங்களேன். அடிபடாமல் எந்த ஒரு கலையையும் கற்றுக்கொள்ள முடியாது. வலி இல்லாமல் எப்போதுமே நடக்கும் தாக்குதல்களை தடுக்க முடியாது. எல்லோருடைய உடலுக்குள்ளேயும் கொடுக்கும் அதே எலும்புகளையும் சதைகளையும்தான் நமக்கும் கடவுள் கொடுத்து இருக்கிறார். கடினமான உடற் பயிற்சியின் மூலமாக நம்முடைய பலத்தை அதிகப்படுத்தலாம் ஆனால் முறையான வலி இல்லாமல் பலத்தை அதிகப்படுத்துவது என்பதுமே நடக்காது. நீங்கள் உங்களுடைய உடல் மற்றும் மனது அளவில் சிறப்பாக இருக்க வேண்டும். குழப்பம் மற்றும் கவலை என்பது துளியும் அர்த்தம் இல்லாத விஷயங்கள். நமக்கான தோல்விகளையும் வலிகளையம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. கிடைக்கக்கூடிய தோல்விகள் நம்முடைய பலத்தை அதிகப்படுத்திக்கொள்ள கிடைக்கும் பொன்னான வாய்ப்புகள் என்றுதான் சொல்ல வேண்டும். நீங்கள் வலியை விட்டு ஓடி ஒளியலாம் ஆனால் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலும் உங்களுக்கான வலிகளை நீங்கள் அனுபவிக்கத்தான் போகின்றீர்கள். இவ்வளவு குறைவான வாழநாட்களே நம்முடைய வாழ்க்கை கொடுக்கிறது என்னும்போது எதுக்காக இத்தனை வலிகள் வேதனைகளை கொடுத்து நம்முடைய வாழ்க்கையை நன்றாக வாழக்கூடாது என்ற காரணத்துக்காக என்னவெல்லாம் வாழ்க்கையினால் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறது. நெடுஞ்சாலையில் ஆதரவு இல்லாமல் வழியே தெரியாமல் நின்றுகொண்டு இருக்கும் நிலையை நம்முடைய வாழ்க்கை நமக்கு அளித்துவிடுகிறது. நம்முடைய கனவுகள் அப்படியே நிறைவேறுவது இல்லை. நம்முடைய கனவுகள் கடைசிவரைக்கும் கனவாகவே சென்றுவிடுகிறது. இரும்பால் ஆன கரங்களை கொண்டு இப்போதே இந்த தோல்விகரமான நிலையை மாற்ற வேண்டும். நம்மை நாம் மேம்படுத்த வேண்டும். வலிக்காமல் வாழ்க்கையை நடத்த முடியாது. இது நம்ம உலகத்தின் எழுதப்படாத சட்டமாகவே மாறிவிட்டது என்ன செய்வது ? இந்த வலைப்பூவில் இருக்கும் என்னுடைய கருத்துப்பகிர்வுகள் உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக வலைப்பூவின் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும் !


TAMIL TALKS EP. 45 - சாதனைகளை பண்ணுவதுக்காகத்தான் இந்த வாழ்க்கை !


ஒரு பெரிய விஷயத்தை ஒரு பெரிய சாதனையை பண்ணவேண்டும் என்றால் எந்த ஒரு கட்டத்திலும் நம்மை நாமே 100 சதவீதம் மாற்றிக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் , ஒரு உடைந்துபோன மெஷின் என்றால் அந்த மெஷின்னுக்கு பதிலாக புதிய ஒரு மெஷின் போடுகிறோம் அல்லவா அதேதான் நம்முடைய வாழ்க்கையிலும் நாம் பண்ண வேண்டும். பெரிய விஷயங்களை பண்ணுபவர்கள் எப்போதுமே நிறைய சாதனைகளை பண்ணுபவர்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையில் எப்போது தேவைப்பட்டாலும் அப்போதே தங்களை மாற்றிக்கொண்டுவிடுகிறார்கள். நான் இப்படித்தான் என்ற பெர்ஸனல் பிரெஃப்ரன்ஸ் உங்களுடைய தோல்விக்கு காரணமாக இருந்தாலோ அல்லது உங்களுடைய சாதனைகளை தடுக்கும் தடுப்பு சுவராக இருந்தாலோ உங்களை நீங்கள் கண்டிப்பாக மாற்றிக்கொண்டால் மட்டும்தான் நீங்கள் ஆசைப்படும் வெற்றியை பெற முடியும் நீங்கள் சாதிக்க நினைக்கும் சாதனையை செய்ய முடியும்.  நாம் அனைவருமே சூரியனை போல பணத்தாலும் பொருளாலும் யாராலுமே நெருங்க முடியாத உயரத்துக்கு போகவும் யாராலுமே தாக்க முடியாத சக்தியை அடையவும் கடமைப்பட்டு இருக்கின்றோம். நம்ம வாழ்க்கையில் ஒரு சில நேரங்கள் இருக்கிறது , நமக்கென்று எந்த மனக்கசப்பும் வேண்டாம் என்றும் போதுமான சாப்பாடும் நல்ல தூக்கமும் கிடைத்தால் மட்டுமே போதுமானது என்றும் முடிவு எடுப்போம். தப்பான முடிவு , கண்டிப்பாக தப்பான முடிவு, நம்முடைய உடலுக்கு 6-7 மணி நேர தூக்கம் அவசியமானதுதான் ஆனால் இந்த தூக்கத்தை இரவு 9:00 முதல் அதிகாலை 4:00 என்ற அளவுக்குள் இருக்கும் காலகட்டத்தில் முடித்துவிட வேண்டும். கண்டிப்பாக நேரத்துக்கு குளிக்க வேண்டும் , நேரத்துக்கு சாப்பிட வேண்டும் , நம்முடைய உடல் நலத்தை கண்டிப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். மனதுக்குள்ள உறுதி வேண்டும். வாழ்க்கையில் எப்போதுமே தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும். பேசும் வார்த்தைகளில் தெளிவு இருக்க வேண்டும். நம்ம வாழ்க்கையில் சாதனைகளை செய்தாலும் செய்யாமல் போனாலும் வயது முதிர்ச்சி அடையும்போது செரிமானம் பயங்கரமாக குறைந்து சத்துமானம் குறைந்து எதையுமே சாதிக்க முடியாமல் ஒரு மட்டமான உடல் நிலையில் நிரந்தரமாக வாழத்தான் போகின்றோம் நமக்குள் சக்திகள் இருக்கும்போதே சக்திகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் , அப்படியாக பயன்படுத்த வேண்டிய நாட்களில் வெற்றிகளை அடையாமல் வயது முதிர்ந்த பின்னால் வெற்றிகளை அடைவது அவ்வளவாக சிறப்பான விஷயமாக கருதப்படாது. நிறைய பெர் வாழ்க்கையுடைய அர்த்தம் என்ன என்ற முட்டாள்தனமாக இருக்கும் கேள்வியை கேட்டு வாழ்க்கையை குழப்பிக்கொண்டு அலைக்கிறார்கள். ஒரு பொருளை புதிதாக பார்த்தால் அந்த பொருளுக்கு நீங்கள்தான் பெயர் வைக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒரு நெல்லிக்காயை எடுத்துக்கொள்ளுங்கள் , சாப்பிட்டால் கசப்பும் துவர்ப்பும் கலந்து இருக்கிறது ? கசப்பு என்பதன் அர்த்தம் என்ன ? இந்த கேள்விக்கு எங்கேயாவது விளக்கம் கொடுக்க முடியுமா ? ஒரு ஆரஞ்சு பழம் ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது ? ஆரஞ்சு நிறத்தின் அர்த்தம் என்ன ? வெறும் டெக்ஸ்ட் மட்டுமே வைத்து ஆரஞ்சு நிறத்தையோ அல்லது கசப்பு சுவையையோ விளக்க முடியுமா ? இவர்களும் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று முட்டாள்தனமாக ஒரு கேள்வியை கேட்டு எதையுமே அனுபவிக்காமல் வாழ்க்கையை வாழ்ந்து இறந்தும் போகிறார்கள் ! வேறு என்னதான் சொல்லி இவர்களுக்கு புரிய வைக்க முடியும் ? நீங்களே சொல்லுங்கள் ! உங்களுக்கு வழி தெரியவில்லை என்றால் யாரையாவது கேளுங்கள் ! பாதம் போன போக்கில் போகாதீர்கள் !

Thursday, February 1, 2024

TAMIL TALKS EP. 44 - டெக்ஸ்ட் லாக் எழுதுவது எப்படி ?

 




எழுதுவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். உங்களால் ஈஸியாக எழுத முடியும் என்று ஒரு எண்ணம் இருந்தால் அந்த எண்ணத்தை கண்டிப்பாக மறந்துவிடுங்கள். நான் பெர்ஸனலாக கணக்கு போட்டு பார்க்கும்போது ஒரு ஒரு 15 நிமிடங்களுக்கும் 183 வார்த்தைகள் மட்டும்தான் மிக நுணுக்கமான ஆவேரேஜ்ஜில் எழுத முடியும், இந்த வேகத்தினை விட அதிகமாக வேகத்தை எடுத்துக்கொள்வது நம்முடைய கைகளுக்குதான் அதிகமான வலியை கொடுக்கிறது. இதுபோல வலைப்பூ எழுதுவது சாதாரணமான விஷயம் அல்ல. வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகமாகிக்கொண்டு இருக்கும்போது பணம் இருந்தால் மட்டும்தான் பிரச்சனைகளை நம்மால் சரிபண்ண முடியும் என்ற கட்டாயம் உருவாக்கும்போது நம்முடைய வாழ்க்கை கடினமான சோதனைகளுக்கு உள்ளாக்கபடுகிறது.இத்தனை சோதனைகளை கடந்து வரும்போது நமக்காக யாருமே சப்போர்ட் பண்ண மாட்டார்கள். தனிமையில் நமக்கு நிறைய அனுபவம் இருக்கின்றது என்பதால் நம்முடைய அனுபவங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வலைப்பூவாக மாறுகிறது. ஒரு ஒரு புள்ளியிலும் நான் என்னுடைய வாழ்க்கையை இன்னுமே சிறப்பாக மாற்றிக்கொண்டுதான் இருக்கின்றேன். நம்முடைய வாழ்க்கையில் கணக்கு வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு பணம் கொட்டிக்கிடக்க வேண்டும் அப்போதுதான் மிகவுமே பெரிய விஷயங்களை சாதிக்க முடியும். இந்த வலைப்பூ என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான ஒரு பாகம், தொடர்ந்து 1 மாதமாவது இந்த வலைப்பூவுக்காக நான் யோசித்து இருப்பேன். அந்த அளவுக்கு இந்த வலைப்பூ மிக்கவுமே அதிகமாக என்னிடம் வேலையை வாங்கிவிட்டது. வலைப்பூவுடைய டெவலப்மெண்ட் என்பது ஒரு நாளில் நடந்துவிடாது. மாதக்கணக்கில் வருடக்கணக்கில் சென்றுக்கொண்டு இருக்கும் ஒரு வேலை இது ஆகும். இந்த வலைப்பூவுடைய எதிர்காலம் என்ன ? நான் இன்னுமே கொஞ்சம் வருடங்களுக்குத்தான் உயிரோடு இருக்க முடியும் என்றால் நான் என்ன சாதித்து என்னதான் பிரயோஜனம் எல்லாமே வாழ்க்கையில் கடைசியில் காலத்துக்கு ஏற்றவாறு மாறத்தான் போகிறது. மிகப்பெரிய அரண்மனைகள் , கோட்டைகள் எல்லாம் இப்போதைக்கு வெறும் காட்சிப்பொருட்கள்தானே ? நான் என்ன சாதித்தாலும் இந்த உலகத்தால் அழிக்க முடியாத அளவுக்கு சாதிக்க வேண்டும் ஆனால் மக்கள் நம்மை நினைவில் வைத்துக்கொள்ள போவதால் நாம் என்ன கல்லறையில் இருந்து எழுந்து காப்பி சாப்பிடவா போகிறோம். நம்ம வாழ்க்கை முடியும்போது நம்மிடம் எது இருந்தாலும் எது இல்லை என்றாலும் கவலையே இல்லை. இந்த வலைப்பூ டெவலப் பண்ணும்போது உலகத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை என்று வேலைக்கு போகும் சிஸ்டம் என்பதையே மாற்ற வேண்டும் என்று ஒரு பேராசை இருந்தது. இந்த ஐடியா நன்றாக இருந்தால் கண்டிப்பாக டெவலப் பண்ணுங்கள். பேஸிக்காக இந்த வலைப்பூ என்பது ஒரு டெக்ஸ்ட் லாக் ! V-LOG போல ஒரு TEXT-LOG என்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும்.  இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்து பகிர்வுகள் எல்லாமே என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள்தான். கண்டிப்பாக மாற்றங்களுக்கு உட்பட்டதுதான். இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்துக்களில் மாற்றங்கள் தேவை என்றால் பின்னூட்டம் கொடுங்கள். இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றால் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். 

TAMIL TALKS EP. 43 - கஷ்டப்பட்டு சம்பாதிப்பதுதான் வாழ்க்கை !

 



இங்கே யாருக்குமே கஷ்டப்படவே விருப்பம் இருப்பது இல்லை. கஷ்டப்பட்டு வேலை யாராவது பார்த்தால்தான் சம்பாதிக்க முடியும். உங்களுடைய கைகளில் ஒரு 10 ரூபாய் நோட்டு இருக்கிறது. இந்த நோட்டு இலவசமாக கிடைத்துவிடுமா என்ன ? இந்த நோட்டை சம்பாதிக்க ஒரு மனிதனாக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா ? சமுதாயம் ஒருவரை வேண்டுமென்றே குறை சொல்லும் , ஏமாற்றும் , அவரை எந்த வேலைக்குமே சென்று பணம் சம்பாதிக்க முடியாமல் ஒரு அறைக்குள்ளே அடைத்துவிடும், வாழ்க்கை இப்படி சென்றுக்கொண்டு இருக்கும்போது அப்படி சிக்கிக்கொண்ட அந்த குறிப்பிட்ட மனிதரால் சுமாராக 10 ரூபாய் சம்பாதிப்பது கூட கடினமாக மாறிவிடும். அவருக்கு எல்லோருமே கடன்கள்தான் கொடுக்க முன்வருவார்கள் ஆனால் இலவசமாக பணத்தை வழங்க மாட்டார்கள். பணம் என்பது நம்முடைய வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை பயன்படுத்தி அந்த நேரத்துக்கான வேலையை செய்யும்போது அல்லது வேலையை செய்வதற்கு மேலே அதிகாரமாக இருக்கும்போதோ நமக்கு அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ சட்ட திட்டங்களின் அடிப்படையில் சமுதாயத்துக்கு கான்ட்ரிப்யூஷன் பண்ணிய காரணத்துக்காக கொடுக்கப்படும் பாயிண்ட்ஸ்கள். இவைகளை கவனம் இல்லாமல் செலவு பண்ணினால் உங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது. கவனத்தோடு மட்டும்தான் பணத்தை செலவு செய்ய வேண்டும். பல வருடங்களுக்கு முன்னால் இருந்த பண்டமாற்று முறையின் மோஸ்ட் அட்வான்ஸ்ட் வெர்ஷன்தான் இந்த பணம் என்ற முறை. கவனமாக இருக்க வேண்டும், பணத்தை கொண்டு என்ன விஷயங்களை வேண்டுமென்றாலும் செய்யலாம், பணம் என்பது பொருட்களை செய்வதற்கான மூலப்பொருள் போன்றது. இந்த பொருள் உங்களிடம் அதிகமான ஸ்டாக் இருந்தால் நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம், மேலும் பணம் என்ற விஷயம் உங்களுடைய வாழ்க்கையில் இருந்தால்தான் உங்களுடைய அறிவுத்திறன் அதிகமாக மாறுவதும் நடக்கும், நம்முடைய உலகத்தில் யார் எப்படி கேட்டாலும் உங்களுடைய பணத்தை கொடுக்க வேண்டாம். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பணத்தை கடனாக வாங்கி வட்டி கட்ட வேண்டாம், உங்களுக்கு வரவேண்டிய பணத்தை எப்போதுமே பாரபட்சம் பார்க்காமல் வசூல் பண்ண வேண்டும். உங்களுடைய பணம் உங்களுடைய அடிப்படை. மனிதர்களுடைய மனது மாறிவிடும். இன்றைக்கு உங்களுக்கு சப்போர்ட் பண்ணுபவர்கள் நாளைக்கு சுயநலத்துக்கு சப்போர்ட் பண்ணலாம். உங்களிடம் இருக்கும் பொருட்கள் மட்டும்தான் கடைசி வரைக்குமே உங்களுக்கு சப்போர்ட் பண்ணிக்கொண்டு இருக்கும். அதனால் கவனமாக இருங்கள். பணத்தையும் பொருட்களையும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். பேஸிக்காக இந்த வலைப்பூ என்பது ஒரு டெக்ஸ்ட் லாக் ! V-LOG போல ஒரு TEXT-LOG என்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும்.  இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்து பகிர்வுகள் எல்லாமே என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள்தான். கண்டிப்பாக மாற்றங்களுக்கு உட்பட்டதுதான். இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்துக்களில் மாற்றங்கள் தேவை என்றால் பின்னூட்டம் கொடுங்கள். இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றால் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். 


TAMIL TALKS EP. 42 - மனதுக்குள் இன்டேக்ரேஷன் வேண்டும் !

 



குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்ட ஸ்பேஸ் மற்றும் டைம்தான் நமக்கு கிடைத்து இருக்கிறது. இவ்வாறு நமக்கு கிடைத்த விஷயம் கொஞ்சமாக இருந்தாலும் எப்படியாவது வாழ்க்கையில் மனதுக்குள்ளே இண்டெக்ரேஷன் கொண்டுவந்து கண்டிப்பாக சாதிக்க வேண்டும். நம்ம வாழ்க்கையில் நிறைய நேரங்களில் மிகப்பெரிய வெற்றியை அடையவேண்டும் என்றால் நம்மை ஒரு கடினமாக உழைக்கும் மெஷின்னாக மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஒரு ஸ்மார்ட்டான கணினியாக மாற்ற வேண்டும். நம்முடைய உடல் மற்றும் மனம் என்ற இரண்டு விஷயங்களிலும் ஆரோக்கியம் மிகவுமே முக்கியமானது. இவற்றில் ஏதாவது ஒரு விஷயம் வேண்டும் என்றால் இன்னொரு விஷயத்தை இழந்தாக வேண்டும். நம்முடையவாழ்க்கை  இப்படித்தான் வேலை செய்கிறது. நம்முடைய அறிவை தொடர்ந்து அப்டேட் பண்ணிக்கொண்டு இருக்கும்போது ஒரு கட்டத்தில் நம்முடைய வாழ்க்கையை சுற்றி மிகவும் கடினமாக ஒரு போராட்டமே நடந்துகொண்டு இருப்பதை நம்மால் கண்டுபிடிக்க முடிகிறது. உணவு , உடை , இருப்பிடம் போன்ற அடிப்படையான விஷயங்களுக்காக நாமும் போராடிக்கொண்டுதானே இருக்கின்றோம். நம்முடைய மனதை கட்டுப்படுத்திக்கொண்டால் மனது தன்னை புதுப்பித்துக்கொள்ளும் தகவல்களை பெறாது. மனது எப்போதுமே ஒரு நல்ல முன்னேற்றத்தை அடைந்துகொண்டே இருக்க வேண்டும் ஒரு நாள் என்றாலும் இன்னொரு நாள் நன்றாக அப்டேட் ஆகிக்கொண்டே இருக்க வேண்டும். இறப்பு எப்போதுமே தவிர்க்க முடியாத விஷயம்தான் ஆனால் இறப்புக்குள்ளே நாம் செய்யும் விஷயங்களை தூய்மையாக , தெளிவாக மற்றும் முழுமையாக செய்யும் அளவுக்கு நம்மை திறமை வாய்ந்தவர்களாக மாற்றிவிட்டால் நம்முடையவாழ்க்கை  சிறப்பானதாக இருக்கும், நம்முடைய வாழ்க்கையில் மனதை எப்போதுமே ஒரு இண்டெக்ரேஷன்னில் வைக்க வேண்டும். போதுமான இண்டெக்ரேஷன் இல்லை என்றால் நமக்கு வருடக்கணக்கில் நேரமும் வாய்ப்புகளும் கிடைத்தாலும் நம்மால் நினைப்பதை சாதிக்க முடியாது. நெகட்டிவ்வாக நடக்கும் சம்பவங்களை தடுக்கவே முடியாது, மொத்த நெகட்டிவ்வான விஷயங்களையும் எப்போதுமே ஒரு பாசிட்டிவ் விஷயங்கள் நிறைந்த கண்ணோட்டத்தில் இருந்து பார்க்க வேண்டும். நமக்கு சொந்தமான பொருட்களை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும். நாம் நிறைய மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு தொடர்ந்து மனதை கட்டுப்பட்டுக்குள்ளே வைத்து இருக்கின்றோம் என்னும் பட்சத்தில் நம்முடைய வாழ்க்கை மாற ஒரு மென்மையான சான்ஸ் இருக்கின்றது. கடந்த காலத்தை பற்றி கவலைப்பட நிகழ்காலத்தில் நேரம் இல்லை, எதிர்காலத்திலும் நேரத்தை கொடுக்க கூடாது. ஒரு கட்டத்தில் ஸ்டேட்மென்ட்ஸ் - தி கேம் ஆஃப் ப்ளட் என்ற ஒரு புத்தகத்தை எழுத முயற்சிகளை செய்துகொண்டு இருக்கிறேன். இந்த புத்தகத்தில் இதுபோன்ற கருத்துக்கள் நிறைய கொடுக்கலாம் என்று ஒரு திட்டம் வைத்து இருக்கிறேன். காலம் கொடுக்கும் குறைவான நேரத்தில் சிறப்பான விஷயங்களை நிகழ்த்த என்னால் ஆன எல்லா முயற்சிகளையுமே நானும் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறேன். குறைகளை நான் வைப்பது இல்லை. பேஸிக்காக இந்த வலைப்பூ என்பது ஒரு டெக்ஸ்ட் லாக் ! V-LOG போல ஒரு TEXT-LOG என்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும்.  இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்து பகிர்வுகள் எல்லாமே என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள்தான். கண்டிப்பாக மாற்றங்களுக்கு உட்பட்டதுதான். இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்துக்களில் மாற்றங்கள் தேவை என்றால் பின்னூட்டம் கொடுங்கள். இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றால் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். 

TAMIL TALKS EP. 41 - தனியே தன்னந்தனியே என்னுடைய அனுபவம் !

 



தனியாக போராடும்போது வாய்ப்புக்களுக்காக காத்திருக்க கூடாது. நமக்கான வாய்ப்புகளை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும். தனியாக போராடும்போது எடுக்கக்கூடிய முயற்சிகள் எல்லாமே தனிப்பட்ட ஒரு பெர்ஸனாக எடுக்கும் முயற்சிகள் என்பதால் என்னதான் உயிரை கொடுத்து போராடினாலும் நம்முடைய போராட்டத்தின் சக்தி குறைவுதான். இப்படி குறைவாக சக்தி இருந்தாலும் ஒரு ஒரு முறையும் தோற்றுப்போகிறோம் என்று தெரிந்தும் போராட்டத்தை நாம் செய்துகொண்டுதான் இருக்கின்றோம். இது எல்லாமே எங்கே செல்லப்போகிறது என்று கணித்து பார்த்தாலும் அந்த கணிப்புமே நாம் தோல்விதான் அடையப்போகிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது. தனியாக போராடும்போது மட்டுமதான் நம்முடைய மிகவும் சிறிய தவறுகளை கூட மிஸ்டேக் என்று எடுத்துக்கொண்டு சுற்றுச்சூழல் மிகவும் நேர்த்தியாக நடக்கும் விஷயங்களை அதனுடைய கட்டுப்பாட்டில் எடுத்துககொள்கிறது. நடக்கக்கூடிய சம்பவங்கள் எல்லாம் சுற்றுச்சூழலின் கட்டுப்பட்டுக்குள்ளே சென்றால் நம்மால் எதுவுமே பண்ண முடிவது இல்லை. நாம் நெருக்கமான மனிதர்களை காலத்திடம் இழக்கிறோம் , பணத்தை இழக்கிறோம் , உடல்நலக்குறைவுக்கு காரணமாகிறோம் , நம்முடய மதிப்பு மிக அதிகமாக குறைந்துபோவதை பார்க்கின்றோம். இது எல்லாம் எதனால் நடக்கிறது ? வாழ்க்கை நேரடியாக நம்மோடு எப்போதுமே சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. நாமும் நேருக்கு நேராக துணிந்து வாழ்க்கையுடன் சண்டை போடத்தான் வேண்டும். வாழ்க்கையை நாம் கேட்கவில்லை. வாழ்க்கைதான் நமக்காக உயிரோடு இருக்கும் இதுபோன்ற காலங்களை கொடுக்கிறது ஆனால் வாழ்க்கை நம்மை உயிரோடு இருக்கும் அத்தனை நாட்களும் துன்பமும் துயரங்களும் இருக்கும் நாட்களாகவே வாழச்சொல்லி கட்டாயப்படுத்துவது எதனால் என்று நமக்கு புரியவில்லை. இருந்தாலும் இங்கே என்னதான் பிரச்சனைகள் வந்தாலும் நமக்கு நாம்தான் சப்போர்ட் என்று இருந்துள்ளோம். இதனால்தான் நமக்கு நாம் எப்போதுமே மரியாதையையும் மதிப்பையும் அதிகமாக கொடுத்து கௌரவமான மனிதர்களாக வாழ்ந்துகொண்டு இருக்க வேண்டும். உங்களுடைய நினைவுத்திறனும் இதுபோன்று ஒரு விஷயத்தில் பங்களிப்பு கொடுப்பதில் மிக முக்கியமானது. உங்களுடைய நினைவுத்திறனை கவனமாக வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் நிறைய விஷயங்களை எப்போதுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பேஸிக்காக இந்த வலைப்பூ என்பது ஒரு டெக்ஸ்ட் லாக் ! V-LOG போல ஒரு TEXT-LOG என்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும்.  இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்து பகிர்வுகள் எல்லாமே என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள்தான். கண்டிப்பாக மாற்றங்களுக்கு உட்பட்டதுதான். இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்துக்களில் மாற்றங்கள் தேவை என்றால் பின்னூட்டம் கொடுங்கள். இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றால் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். 

TAMIL TALKS EP. 40 - கஷ்டப்பட்டால்தான் முன்னேற முடியும் !

 



நாம் செய்யும் விஷயங்களில் கஷ்டமான விஷயங்களை நமக்காக வேலை பார்ப்பவர்களிடம் பிரித்து கொடுக்கின்றோம். இந்த வகையில் இங்கே நாம் செய்யும் விஷயங்களை நியாயப்படுத்த முடியாது. நம்முடைய முன்னேற்றத்துக்காக இன்னொருவருக்கு வலியை கொடுப்பது என்றால் வலியை கொடுப்பதுதான், உடைத்து போடுவது என்றால் உடைத்து போடுவதுதான் , சேதப்படுத்துவது என்றால் சேதப்படுத்துவதுதான். நம்முடைய வாழ்க்கை  எந்த வகையிலும் நம்மை கடைசி வரைக்கும் பூக்கள் நிறைந்த பாதையில் கொண்டு செல்லப்போவது இல்லை. உங்களுடைய மனதுக்குள்ளே கோபம் இருக்கிறது என்றால் அனைவருடனும் கடினமாக பழகுவதில் அவ்வளவு பெரிய தவறு என்று எதுவுமே இல்லை. நம்முடைய வாழ்க்கையில் எப்போதுமே சிறப்பான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம் ஆனால் அந்த முடிவுகளை செயல்படுத்த வேண்டும் என்பது மிகவும் கஷ்டமான பொறுப்பு. அதுவுமே இல்லாமல் அந்த பொறுப்பை முடிக்க கண்டிப்பாக ஒருவர் மட்டும் போதாது. நிறைய பேர் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு நாம் சொல்லும் விஷயங்கள் சரியானது என்றாலும் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் நமக்காக வேலை செய்துகொண்டு இருக்க வேண்டும் அப்போதுதான் வாழ்க்கை ஒரு முழுமையை உங்களுக்கு கொடுக்கிறது. நம்முடைய பட்ஜெட் குறைவானதாக இருக்கலாம் ஆனால் செய்யும் வேலைகள் அதிகம் என்றால் பொருளாதார அளவில் நிறைய இலாபம் உங்களுக்கு கிடைக்கும். இந்த இலாபத்தை வைத்து உங்களால் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும், பண வகையில் கிடைக்கும் சக்தி என்பது அடிப்படையில் மிகவும் சிறப்பான விஷயம். நம்மிடம் இருக்கும் பணத்தை சரியாக பயன்படுத்தினால் அல்லது நமக்காக வேலை செய்பவர்களை மிகவும் சரியாக தேர்ந்தெடுத்து அவர்களை கொண்டு வேலையை சிறப்பானதாக முடித்தால் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். நமக்காக வேலை பார்ப்பவர்களை நன்றாக நடத்துவதும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம். நமக்காக வேலை பார்ப்பவர்கள் அவர்களுடைய வளர்ச்சி என்று மட்டும் இல்லாமல் நம்முடைய வளர்ச்சிக்குமே சேர்த்து உதவி பண்ணத்தான் போகின்றார்கள். நமக்காக வேலை பார்ப்பவர்களின் தனிப்பட்ட மரியாதை மற்றும் கௌரவத்தை எப்போதுமே நாம் மதிக்க வேண்டும். ஒரு விஷயத்தில் நிறைய பேர் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்றால் விறுப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்க கூடாது. பேஸிக்காக இந்த வலைப்பூ என்பது ஒரு டெக்ஸ்ட் லாக் ! V-LOG போல ஒரு TEXT-LOG என்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும்.  இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்து பகிர்வுகள் எல்லாமே என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள்தான். கண்டிப்பாக மாற்றங்களுக்கு உட்பட்டதுதான். இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்துக்களில் மாற்றங்கள் தேவை என்றால் பின்னூட்டம் கொடுங்கள். இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றால் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். 

TAMIL TALKS EP. 39 - எப்போதும் போல எனது கருத்து பகிர்வு !

 


ஒரு விஷயத்தை கிரியேட்டிவ்வாக யோசித்தும் பண்ணலாம் , இல்லையென்றால் அனாலிட்டிக்கல்லில் யோசித்தும் பண்ணலாம் , இந்த இரண்டு விஷயங்களுமே நேர் எதிரான ஃபார்மட் , கிரியேட்டிவ் யோசனைகள் பொதுவாக நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை பொறுத்து முடிவுகளை எதிப்பது என்றால்  அனாலிட்டிக்கல் யோசனைகள் பெரும்பாலும் கடந்த காலத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு அவைகளை பொறுத்து முடிவுகளை எடுப்பதுதான். கிரியேட்டிவ்வாக இருப்பவர்கள் எப்போதுமே மேலே சென்றுவிடுவார்கள் காரணம் நிச்சயமாக அபாரமான அறிவுத்திறன் என்றே சொல்லலாம். மேலும் கிரியேட்டிவ்வாக இருப்பவர்களுக்கு பணம் கிடைப்பது மிகவும் கடினமான விஷயம். கிரியேட்டிவ்வாக இருப்பவர்கள் எப்போதுமே மேலேதான் இருப்பார்கள் என்பதால்  அனாலிட்டிக்கல்லில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் அட்வைஸ் கொடுக்கிறேன், நாம் எப்போதுமே கடந்த காலத்தை மட்டுமே வைத்து முடிவுகளை எடுக்கின்றோம். கடந்த காலம் நம்மை மைனஸ்ஸில் மட்டுமே டிராவல் பண்ண வைக்கிறது, நிகழ்காலத்தை மட்டுமே ஃபோகஸ் பண்ணினால் இருக்கும் நிலையில் இருந்து மேலேயும் செல்ல இயலாமல் கீழேயும் செல்ல இயலாமல் அங்கேயே ஸ்டே பண்ணுகிறோம். அதுவே எதிர்காலத்தை ஃபோகஸ் பண்ணும் கிரியேட்டிவ்வாக இருப்பவர்கள் வெற்றிகளை குவித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆகவே நாம்  அனாலிட்டிக்கல் விஷயங்களால் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருந்தாலும் நமக்கான மாற்றங்களை நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும், நமக்கு தேவையான விஷயங்கள் எப்போதுமே பொருட்கள்தான். கற்பனைகள் அல்ல. நாம் எப்போதும் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியின் சக்திகளின் அடிப்படையில் சாதித்துக்கொண்டே இருக்க வேண்டும். கிரியேட்டிவ் மக்கள் எப்போதுமே நம்மை பற்றிய தவறான அபிப்ராயத்தையும் பணம் இல்லாமல் இருப்பதால் நம் மேலே ஒரு மார்க்கமான வெறுப்பையும் கொண்டு இருப்பார்கள். அவர்களுடைய இந்த மைண்ட்ஸேட்டை நாம் எப்படியாவது மாற்ற வேண்டும். கிரியேட்டிவ் மக்கள் அவர்களுடைய சக்திகளில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே செலவு செய்து வெற்றிகளை சுலபமாக அடைந்துவிடுவார்கள். அவர்களுடைய பணம் அவர்களுக்கு கைகொடுக்கும் ஆனால்  அனாலிட்டிக்கல் விஷயங்களில் இருக்கும் நாம் ஒரு ஒரு சின்ன சின்ன வெற்றிக்கும் நம்முடைய சக்திகளில் இருந்து 95 சதவீதம் செலவு செய்து மீதம் இருக்கும் 5 சதவீதத்தில் பிழைத்து நம்முடைய வாழ்க்கையில் ஒரு வெற்றியை அடைகிறோம். ஒரு டி.எஸ்.எல்.ஆர் காமிராவின் அருமை தெரியாமல் இருப்பவர்களுக்குதான் அந்த ஒரு டி.எஸ்.எல்.ஆர் காமிரா இருக்கின்றது. கிரியேட்டிவ் மக்களுக்கு எப்போதுமே ஸ்மார்ட்னஸ் மிகவும் அதிகம் அவர்கள் வெற்றியை அடைந்துகொண்டே இருந்தாலும் காலத்தில் நாமும் நமக்கான தடத்தை படித்து அவர்களுக்கு மேலே வெற்றியை அடைந்து காட்ட வேண்டும். கிரியேட்டிவ் மைண்ட்ஸேட் நம்மிடம் இல்லை என்றாலும் அனாலிட்டிக்கல் மைண்ட்ஸேட்தான் நம்மிடம் இருக்கிறது என்றாலும் நாமும் இந்த உலகத்தில் நமக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும் ? சாதனை செய்ய வேண்டும் ! நமக்கான நேரம் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால் நமக்குள் குறைகளை எடுக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் நிறைகள் மட்டுமே இருக்க வேண்டும். நாம் செய்யும் விஷயங்களில் அதிகபட்சமாக அக்யூரஸி இருந்தாலே நம்முடைய லைஃப் மிகவும் பெஸ்ட்டாக இருக்கும். இந்த வாழ்க்கை ஒரு ஸ்டோரி புத்தகம் போன்றதே , வொர்க் பண்ணுவது கஷ்டம் , ஸ்டோரியை முழுமையாக எழுதிவிட்டு எடிட் பண்ணி பப்ளிஷ் பண்ணுவது அதனை விடவும் பெரிய கஷ்டம். 

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...