Sunday, June 16, 2024

GENERAL TALKS - விதியின் முட்டாள்தனமான விளையாட்டுக்கள்!

 


ஒரு விளையாட்டை விளையாடும்போது அது யாருக்குமே பாதிப்பை உருவாக்க கூடாது என்பதில் கவனம் நிறையவே இருக்க வேண்டும். பாதிப்புகளும் வலிகளும் வேதனைகளும் நிறைந்து இருக்கப்போகிறது என்றால் அப்படி ஒரு விளையாட்டை யாரிடமும் விளையாடிவிட கூடாது. சின்ன வயதில் இருந்து நம்மை நேசிக்கவும் நமக்கு ஆதரவு கொடுக்கவும் நிறைய வசதி வாய்ப்புகளை மட்டும்தான் கேட்கின்றோம். பின்னாட்களில் போட்டியும் பொறாமையும் நிலவும்போது வசதி வாய்ப்புகளுக்கு போராடுகிறோம். எல்லோருடைய சப்போர்ட் கிடைக்கும் மனிதன் சிறப்பாக முன்னேறும் சக்திகளை பெறுகிறான். சப்போர்ட் கிடைக்காத மனிதன் நெட்வொர்க் கிடைக்காத ஃப்ரீ ஃபயர் பிளேயர் போல நகர முடியாமல் பண்ணும் மோதல் எல்லாம் எதிரியிடம் பயனற்று போக அனைத்தும் இழந்து காலி டப்பாவாக மற்றவர்களுக்கு பிடிக்காத ஒரு மனிதனாக வாழுகிற கட்டாயம் உருவாகிறது. எல்லா முயற்சிகளும் நாசமாக போகவேண்டும் , எல்லா திட்டங்களும் சொதப்பி போக வேண்டும். அனைத்துமே அல்ப ஆயிசு வரைதான் இருக்க வேண்டும் என்பதுதான் நடப்பு கட்டுப்படுத்தும் சக்தியின் நோக்கம். மக்கள் போதுமான அதிகாரமும் இல்லாமல் வாழ்க்கையில் பல மட்டமான விஷயங்களுக்கு அடிமையாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். குறிப்பாக போதை விஷயங்களுக்கு அடிமையாக இருப்பவர்களை மீட்பது கடினமானது. கட்டுப்படுத்தும் பெரிய சக்தியில் இருந்து இந்த விளையாட்டில் கண்ணாமூச்சி பிளேயர் போல எங்கேயோ இருந்து மறைந்துதான் மக்களை வைத்து விளையாடுகிறார்கள். இன்றைக்கு தேதிக்கு நான் சொல்ல வரும் விஷயம் என்னவென்றால் என்னோடு விளையாடியது தவறு. இந்த விஷயங்களால் அனைத்தையும் இழந்து நிற்பது யார் ? விளையாடுவதற்கு முன்னால் நீங்கள் செய்வது மிகப்பெரிய பாவம் என்று புரிந்துகொள்ள வேண்டும். இந்த பாவங்களுக்கு கட்டாயம் நான் தண்டனைகள் கொடுத்தே தீருவேன். பாதிக்கப்பட்டது நான் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். இந்த நாட்கள் நாம் கஷ்டத்தில் இருக்கக்கூடிய நாட்கள், நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். இந்த போருக்குள்ளே யாருமே சப்பொர்ட்டாக இருக்க மாட்டார்கள். இந்த நாட்களில் கடவுளை நம்பியதற்கு கடவுள் நன்றாக வைத்து செய்துவிட்டார். உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்கு சப்பொர்ட் பண்ணுவார்கள் என்று நீங்கள் ஆசைப்பட்டால் கண்டிப்பாக சப்போர்ட் பண்ணவே மாட்டார்கள்.

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...