Friday, June 28, 2024

GENERAL TALKS - சக்திகள் இருந்தால்தான் போராட முடியும் !

 




இது மிகவும் சமீபத்தில் நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம். இது எனக்கு நிஜமாகவே நடந்த விஷயம். குறிப்பாக ஒரு வார காலம் ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான நிறைய வகையான சக்திகள் அவனுக்கு கிடைத்தால் எந்த அளவுக்கு அவனால் முன்னேற முடியும் என்று சொல்லுங்களேன் ? போதுமான பணம் போதுமான ஆதரவு போதுமான அனுபவங்கள் என்று குறிப்பிட்ட அந்த ஒரு வாரம் மட்டும் என்னுடைய வாழ்க்கையில் கனவில் கூட கற்பனை பண்ண முடியாத அளவுக்கு அதிகமான முன்னேற்றங்களை என்னால் பார்க்க முடிந்தது. இந்த முன்னேற்றத்துக்கு முக்கியமான காரணம் என்னவென்றால் இந்த ஒரு குறிப்பிட்ட ஒரு வாரத்துக்கு மட்டும் தான் என்னுடைய சக்திகள் மிகவும் அதிகமாக இருந்தது. இந்த சக்திகள் தற்காலிகமாக எனக்கு கிடைத்தாலும் இந்த சக்திகள் எனக்கு இருந்த காரணத்தால் என்னுடைய முன்னேற்றம் என்பது வேறு ஒரு லெவல்லில் இருந்தது. மறுபடியும் எனக்கு சோதனை அடிப்படையிலாவது வேண்டும் என்றும் சென்ற முறை நடந்தது போல மிகவும் கவனமாக யோசித்து அத்தகைய சக்திகள் எனக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் பிரபஞ்சத்தின் சக்தியாளரை கேட்டுக்கொள்கிறேன். இது என்ன பிரபஞ்சத்தின் சக்தியாளர் என்ற வார்த்தை என்று கேட்கிறீர்களா ? இந்த வார்த்தை எனக்கும் புதுமையானது தான். கடவுள் என்ற வார்த்தையை இனிமேல் நான் பயன்படுத்த போவது கிடையாது. இன்றைய தேதி முதல் இந்த வலைப்பூவில் கடவுள் என்ற பெயருக்கே பெயர் மாற்றம் பண்ணப்படுகிறது. என்னதான் சிறப்பாக விற்பனையாகும் செய்தித்தாளில் அறிக்கை விடவில்லை என்றாலும் இந்தப் பெயர் மாற்றத்துக்கு இந்த வலைப்பூ பதிவு போதுமானது. கடவுள் குற்றங்களை தடுக்காமலே இருக்கிறார் என்று நான் இந்த வலைப்பூவின் நிறைய பகுதிகளில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கடவுள் இப்படி தடுக்காமல் போவதால் தான் இன்னும் குற்றங்கள் பல மடங்கு பெருகி குற்றங்களை செய்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். கடவுள் எப்போதுமே சக்திகளை நேரடியாக பயன்படுத்தி சண்டை போட மாட்டேன் என்கிறார். அடிப்படையில் சக்திகளை கொடுக்கிறார் ஆனால் தவறான மனிதர்களுக்கு கொடுத்து விடுகிறார். இதனால் மிகவும் கவனமாக யோசித்தேன். பொதுவாக நமது சமுதாயத்தில் இருக்கும் வங்கிகளில் வங்கி கணக்காளர் என்ற பொறுப்பு இருக்கும் அல்லவா ? அதுபோல கடவுளும் சக்திகளின் கணக்காளராக இருக்கிறார் ? இப்போது பிரச்சினை என்னவென்றால் யாரெல்லாம் அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் விளையாடி அவர்களுடைய வாழ்க்கையை நாசம் பண்ணி அவர்களுடைய வாழ்க்கையை நெருப்பிட்டு எரித்து சாம்பலாக மாற்றி அந்த சாம்பலை சந்தோஷமாக சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு நிறைய சக்திகளை கொடுத்து கொண்டு இருப்பதால் பிரபஞ்ச சக்தியாளர் என்ற பெயர்தான் மிகவும் சரியாக இருக்கும். கடவுள் என்ற பெயருக்குள் நிறைய நம்பிக்கைகள் கலந்துள்ளது. இந்த நம்பிக்கைகளை இப்போதெல்லாம் நிறைவேற்றுவதே இல்லை இருந்தாலும் நம்பிக்கை இருப்பவர்கள் கதைகளை நம்பிக்கொண்டு பாட்டுகளை நம்பிக்கொண்டு பல வருஷங்களாக நம்பிக்கைகளை விடவே இல்லை. இவர்களுடைய கணிப்புப்படி இவர்கள் மனதுக்குள் இருக்கக்கூடிய கடவுள் என்ற வார்த்தைக்கும் நாம் நேரடியாக கடவுள் என்ற பெயரில் பேசிக் கொண்டிருக்கும் நபருக்கும் நிறைய மாறுபாடுகள் நிறைய கருத்து மாற்றங்கள் இருப்பதால் பிரபஞ்ச சக்தியாளர் என்ற பெயரே இந்த வலைப்பூவில் இனிவரும் பதிவுகளில் இருக்கும். இந்த வலைப்புக்கு நிறைய ஆதரவு கொடுத்து உலகத்தின் மிகவும் அதிகமாக சம்பாதிக்கக்கூடிய நிறுவனமாக இந்த வலைப்பூவை மாற்றுமாறு கம்பெனியின் சார்பாக பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

GENERAL TALKS - நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலப்பு உலோகங்கள் !

  1. Steel (Iron + Carbon) 2. Stainless Steel (Iron + Chromium + Nickel) 3. Bronze (Copper + Tin) 4. Brass (Copper + Zinc) 5. Sterling Silve...