வெள்ளி, 21 ஜூன், 2024

MUSIC TALKS - THAMARAI POOVUKKUM THANNIKKUM ENNAIKKUM SANDAIYE VANDHATHILLA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

r />






தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் 
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை அள்ளி நீ தாவணி போட்டுக்க 
மச்சினி யாரும் இல்ல !
கம்பங்கூழில் போட்ட உப்பு 
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி 
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள
நாக்குல மூக்கையே  தொட்டவன் நானடி
பார்வையால் உசிரையே தொட்டவ நீயடி
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் 
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை அள்ளி நீ தாவணி போட்டுக்க 
மச்சினி யாரும் இல்ல !


ஐ ஆறு - எட்டு நெல்லை போல அவசரமா சமேஞ்சே 
ஐத்த மகன் பஞ்சதுக்கு ஆதாரமா அமைஞ்சே  
குட்டிபோட்ட பூனைப் போல காலச் சுத்தி குழைஞ்சே
பாவமுன்னு நீவி விட்டா பல்லுப் போட துணிஞ்சே 
சொந்தக்காரன் நான்தானே தொட்டுப் பாக்கக் கூடாதா ?
கன்னம்தொடும் கை ரெண்டும் கீழேக் கொஞ்சம் நீளாதா ?
இந்த நாட்டில் தீண்டமைதான் இன்னும் உள்ளதா ?
வயசுக்கு வந்தப் பூ ஆசையே பேசுமா ?
வண்டுக்கும் பூவுக்கும் சண்டையா சத்தமா ?



தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் 
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை அள்ளி நான் தாவணி போட்டுக்க 
மாலையும் சூடவில்லை



கம்மாக்குள்ள ஒத்த மரம் அங்கே போவோம் மாமா
கம்மாத்தண்ணி ஊத்தும்போது திரும்பிருவோம் மாமா
நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன் நீயும் கொஞ்சம் வாமா
அங்கே இங்கே கையி படும் சொல்லி புட்டேன் ஆமா
நிலா கறையை அழிச்சாலும் உன்னைத் திருத்த முடியாது
புரட்டி போட்டு அடிக்காம ஆமை ஓடு ஒடையாது
போக போக மாமனுக்கு புத்தி மாறுது
கிள்ளவா அள்ளவா சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா பட்டிமன்றம் வைக்கலாம்




தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் 
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை அள்ளி நீ தாவணி போட்டுக்க 
மச்சினி யாரும் இல்ல !
கம்பங்கூழில் போட்ட உப்பு 
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி 
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள
மாமனே மாமனே உன்கிட்ட ஒட்டவா
பூமிக்கும் வேருக்கும் சண்டையா சத்தமா…


கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...