வெள்ளி, 14 ஜூன், 2024

CINEMA TALKS - BOGAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



ஜெயம் ரவி - வேர்ஸஸ் - அரவிந்த் சாமி என்ற காம்பினேஷன்னில் தனி ஒருவன் படத்துக்கு பின்னால் இந்த படம் நிறைய எதிர்ப்பார்ப்புகள் கொண்டு வெளிவந்தது. கண்டிப்பாக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கும் ஒரு படம்தான் இந்த போகன். பழங்கால ஓலை சுவடிகள் மூலமாக கூடுவிட்டு கூடு பாயும் மாயாஜால கலைகளை தெரிந்துகொண்டதால் அரவிந்த் இன்னொருவரின் உடலுக்குள்ளே சென்று பணத்தை கொள்ளையடிக்க வைத்து பெரிய பணக்கார இளைஞராக மாறுகிறார். இப்போது ஜெயம் ரவி கொஞ்சம் கொஞ்சமாக பின்னணியில் இப்படி ஒரு மாய ஆசாமி இருப்பதை கண்டறிந்து வெளிச்சம் போட்டு காட்டவேண்டும் , சட்டத்தின் முன்னால் நிறுத்தவேண்டும் என்று வேலை பார்க்கிறார். இதனை தெரிந்துகொள்ளும் அரவிந்த் எப்படி ஜெயம் ரவியின் வாழ்க்கையை பாதிக்கிறார் என்று கதை சென்றுகொண்டு இருக்கிறது. ப்ரொடக்ஷன் வேல்யூ நன்றாக இருக்கிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. கிளைமாக்ஸ் எதிரபார்த்த கிளைமாக்ஸ்தான் என்றாலும் கதையை நன்றாக கொண்டுபோன விறுவிறுப்பு படத்தை வெற்றியடைய செய்துள்ளது ! இதுவும் பார்க்கவேண்டிய ஒரு பட்ஜெட் ஃபேன்ட்டஸி படம்தான் ! 

கருத்துகள் இல்லை:

generation not loving music