Sunday, June 16, 2024

GENERAL TALKS - இப்படி தகவல் சேர்ப்பது சாதாரணமான விஷயம் அல்ல !

 


இந்த விஷயம் கேள்விப்பட்டு இருந்தால் இது என்னப்பா வெறும் சாதாரண விஷயம் என்று நினைக்க வேண்டாம். இந்த காலத்தில் உங்களுடைய வெப் சர்விஸ் ஸ்பான்ஸர் பண்ணும் நிறுவனங்கள் பிரைவசி பாலிசி என்ற வகையில் ஒரு காண்ட்ராக்ட்டில் இந்த வலைத்தளத்தில் பயன்படுத்தும் முன்னதாகவே டிஜிட்டல் கையெழுத்து வாங்க பார்க்கின்றார்கள். அவர்கள் இஷ்டத்துக்கு பிரைவசி பாலிசியை மாற்றிக்கொண்டே  இருக்கிறார்கள். உங்களுடைய தகவல்களை நாங்கள் காசுக்காக விற்போம், எங்கள் கம்பெனியின் சேவைகள் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் காசை திரும்பவும் கொடுக்க மாட்டோம். எங்கள் நிறுவனத்தில் இருந்து எப்போது வேண்டுமென்றாலும் எடுக்கும் பணத்தை அதிகப்படுத்தி உங்கள் மாதாந்திர சந்தா தொகையை எப்போது வேண்டுமென்றாலும் அதிகப்படுத்தி உங்களுடைய கிரெடிட் கார்டை தீட்டிவிட வேண்டும் என்றும் அவர்களுடைய இஷ்டத்துக்கு பிரைவசி பாலிசியை மாற்றி மக்கள் பணத்தை சாப்பிட்டு சந்தோஷமாக இருக்கின்றார்கள் . இவர்கள் பணத்தை சாப்பிடுவதை விட பெரிய பிரச்சனை என்னவென்றால் நம்முடைய பெயர் , அட்ரஸ் , ஃபோன் நம்பர் , இ-மெயில் அட்ரஸ் , லொகேஷன் , ஆன்லைன் பர்ச்சேஸ் , நாம் அனுப்பிய மெசேஜ்கள் , பண்ணிய ஃபோன் கால்கள் என்று நம்முடைய ஜாதகத்தை தனியார் நிறுவன உரிமையாளர்களு‌க்கு விற்கிறார்கள். இதனால் என்ன பிரச்சனை வந்துவிட போகிறது என்று கேட்கிறீர்களா ? சமீபத்தில் கார் பழுதுபார்க்கும் நிறுவன ஊழியர்கள் காரை சர்வீஸ் கொடுத்து இருக்கும் கஸ்டமர் சம்மந்தப்பட்ட தகவல்களை தெரிந்துகொண்டு அவர்களை பிளாக் மெயில் பண்ணுகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? தனிப்பட்ட கால் மற்றும் மெசேஜ்களை வைத்து பெண் கார் உரிமையாளர்களை மிரட்டி அவர்களிடம் தப்பாக நடந்துகொள்ள முயற்சி பண்ணுகிறார்கள்.  நீங்கள் ஒரு பொருளை வாங்கினால் உங்களுக்குதான் அந்த பொருள் சொந்தமானது. இன்டர்நெட் மூலமாக தேவைப்படும்போது அந்த பொருள் அந்த பொருளை தயாரித்து வெளியிட்ட நிறுவனத்துக்கோ அல்லது ஹேக் பண்ணும் ஹேக்கர்க்கோ விசுவாசமாக நடந்துகொள்ளும் பொருளாக உங்களுடைய பொருள் இருக்கும் என்றால் என்ன மயிருக்கு அந்த பொருளை வாங்க வேண்டும் ? நீங்கள்தான் யோசிக்க வேண்டும்.!

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...