Monday, June 10, 2024

GENERAL TALKS -காதலை விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டும் !

 


வாழ்க்கையில் திருமணம் ஒரு முறைதான் சிறப்பாக நடக்கிறது. இந்த திருமணத்தின் காதலை பற்றி இன்னும் அதிகமாக பேசிக்கொண்டே இருக்கலாம். நிறைய காதல் கதைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. போராட்டத்தில் காதலை விட்டுக்கொடுக்க கூடாது. நிறைய நேரங்களில் கடவுள்தான் இந்த போராட்டங்களுக்கு காரணமாக இருக்கின்றார். நம்முடைய வாழ்க்கையில் நாம் கடைசியில் எல்லாவற்றையும் இழந்தே நிற்கின்றோம். வாழ்க்கை நமக்கே எதிராக செல்கிறது. நாம் வெற்றி அடைந்தபோது நம்மை பாராட்டி நம்மோடு இருந்த மனிதர்கள் எல்லாம் வாழ்க்கையின் சுழற்காற்று நம்மை சூறாவளியாக தூக்கி எறியப்படும் நாட்களில் நம்மை பார்த்து கேலி செய்து அசிங்கப்படுத்த முயற்சிப்பார்கள். கடந்த இருபத்து ஐந்து ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் எப்படி இன குழுவாக சேர்ந்து வாழ்ந்துகொண்டு இருந்தாலும் இந்த குழுக்களுக்கு உள்ளே நடக்கும். இன்டர்னல் பிரிவினை போராட்டங்களால்தான் வாழ்க்கையே நகர்ந்துகொண்டு இருக்கிறது. பெரும்பாலும் கடவுளுடைய நோக்கம் என்னவென்றால் தவறுகளை தடுக்கும் சக்தி மனிதர்களுக்கு இருக்கவே கூடாது என்பதுதான். கடவுள் எப்போதுமே பலம் உள்ள மனிதர்களுக்கு சப்போர்ட் பண்ணுவார். அத்தகைய பலசாலிகளுக்கு வெற்றி கிரீடம் அணிவித்துவிட்டு சந்தோஷமாக சென்றுவிடுகிறார். இவ்வாறு வெற்றி கிரீடம் பெற்றவர்கள் மற்றவர்களை மிகவும் மோசமாக நடத்துகிறார்கள். காதல் இதுபோன்ற பலத்தையும் பலவீனத்தையும் சார்ந்தது அல்ல. காதல் என்பது வெற்றிகளையும் தோல்விகளையும் கூட சார்ந்தது அல்ல. நாம் காதலிக்ககூடிய பெண்ணானவள் கடைசிவரை நம்மோடு இருப்பாள் என்று நம்புகிறோம். உண்மையில் நாம்தான் காதலிக்கும் பெண்ணோடு கடைசிவரை இருக்கவேண்டும். கடவுளுடைய கொடிய சோதனைகளால் காதல் ஒரு ஒரு முறையும் பாதிக்கப்பட்டு உடைந்துதான் போகிறது. இருந்தாலும் நம்மை நம்பி வந்த உறவை எத்தகைய காரணங்களை கொண்டும் தரையில் விட்டுவிட்டு செல்ல கூடாது. கடவுளுக்கு எதிராக விதியை எதிர்த்து வெற்றியை அடையும் இந்த போராட்டங்கள் வலிகள் மற்றும் வேதனைகள் நிறைந்தது. மனதுக்குள்ளே நிறைய சோர்வையும் தூக்கத்தையும் பாரத்தையும் கொடுத்து வாழ்க்கையை நரகமாக மாற்றும் அளவுக்கு இந்த சோதனைகள் இருப்பதால் கவனமாக போரடக்கூடிய இத்தகைய சூழ்நிலைகளில் காதலை நீங்கள் விட்டுக்கொடுக்காமல் இருந்தால் உங்களுக்கு கண்டிப்பாக நல்ல அட்வாண்டேஜ் கிடைக்கும். கப்பல் பயணத்தை போன்ற இந்த வாழ்க்கைக்குள் பயணத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கு ஒருவர் சப்பொர்ட்டாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது. காரணம் என்னவென்றால் வாழ்க்கை நம்மை அந்த அளவுக்கு சோதிக்ககூடியது. இந்த அனைத்து சோதனைகளிலும் காதலை விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டும் !

No comments:

Post a Comment

PLANET NEPTUNE - நெப்ட்யூன் கிரகத்தை பற்றிய டெக்னிக்கல் தகவல்கள் !

1. Diameter: Approximately 49,244 km (30,598 miles) 2. Mass: About 1.02 × 10^26 kg (17 Earths) 3. Surface Gravity: 11.15 m/s² (1.14 g) 4. Or...