சமீபத்திய ஃபோன் விற்பனைகளில் நிறைய விஷயங்களை கவனிக்க முடிகிறது. இங்கே ஆன்லைன் எக்ஸ்க்ளுஸிவ் ஃபோன்கள் நிறையவே இருக்கின்றன. இவைகளை ஆஃப்லைன்னில் வாங்கவே முடியாது, ஆஃப்லைன்னில் வாங்கவேண்டும் என்றால் ஒரு சராசரி மாடல் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் அதனை விட சிறப்பான வசதிகள் உள்ள ஃபோன்கள் ஆன்லைன்னில் இருக்கிறது. இதனை சுருக்கமான சொன்னால் ஆப்லைன் ஃபோன்கள் : பழைய ஜெனரேஷன் பிராசசர் + பழைய ஜெனரேஷன் கேமரா ! ஆன்லைன் ஃபோன்கள் : \புத்தம்புது ஜெனரேஷன் பிராசசர் + தரமான சென்ஸார் உள்ள புது ஜெனரேஷன் கேமரா ! - இதுக்காக விலையில் ஏதாவது ஏற்ற தாழ்வு இருக்குமா என்று கேட்டால் அப்படி எல்லாம் எதுவுமே இல்லை. 20000/- செலவு பண்ணுகிறோம் எனும்போது ஒண்ணுமே கொடுக்காமல் ஆஃப்லைன் ஃபோன்கள் இருந்தால் அதே 20000/- க்கு நிறைய வசதிகளை ஆன்லைன் ஆர்டர் ஃபோன்கள் அள்ளி கொடுக்கிறார்கள் ! என்ன நடக்கிறது !
1. முந்தைய நாட்களை போல ஆஃப்லைன் ஸ்டோர்களில் சேல்ஸ் அவ்வளவு நன்றாக இருப்பது இல்லை. கம்பெனிக்கள் அதிகமான இலாபத்துக்கு ஆசைப்பட்டு ஆனலைன் டீலர்களான பிலிப் கார்டு மற்றும் அமேசான் போன்ற ஆட்களிடம்தான் நல்ல ஃபோன்களை கொடுக்கிறார்கள்!
2. தரமற்ற தயாரிப்புகள் , உதாரணத்துக்கு டேல் மற்றும் பினிக்ஸ் போன்ற பிராண்ட்களில் அதிகம் சேல்ஸ் ஆகாத 2023 வெளியீடு ஃபோன்கள் இருந்தால் அவை 2024 ல் ஆன்லைன் விற்பனையில் இருந்து ஆஃப்லைன் கடைகளுக்கு வருகிறது. மேலும் ஒரு சில மாடல் ஃபோன்கள் வாங்கிய கொஞ்சம் நாட்களில் ஃபால்ட் ஆவதால் ஆஃப்லைன் கடைகளில் வாங்கலாம் என்ற நம்பிக்கை குறைந்து ஷோரூம்களுக்கு செல்கிறார்கள்.
3. ஒரு ஃபோன் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதும் முக்கியமான விஷயம் ! சான்ட்விட்ச் ஆர்க்கிட்டேக்சர் என்று பிராசசர் உடன் ரேம் மெமோரியை சேர்த்து தயாரித்தால் பிராசசர்ரில் ஹீட் அதாவது சூடு , வெப்பம் , கொதிப்பு அதிகமாகி அதனை ரேம்க்கும் கடத்திவிடும் இதனால் ஃபோன் டிஸ்ப்லேக்கு செல்லும் கனெக்ஷன் பின்கள் சேதம் அடைந்து டிஸ்ப்லேவில் கோடு விழலாம் , இல்லை என்றால் டிஸ்ப்லேவே பச்சை நிறமாக மாறலாம்.
4. ஆன்லைன்லில் ரிட்டர்ன் எடுத்துக்கொள்வது கம்பெனிக்கு பெரிய மேட்டர் இல்லை. ஆனால் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒரு ஆப்பர் போட்டு சேல்ஸ் பெர்ஸன் நமக்காக பேரம் பேசியதற்காக விலை குறைப்பு பண்ணி கொடுத்து இருப்பதால் ரிட்டர்ன் கொடுப்பது அந்த சேல்ஸ் பெர்ஸன் ரெபுட்டேஷனுக்கு சங்கடத்தை உருவாக்கலாம்.
5, உண்மையாகவே ஃபோன் விலை கேட்டு விசாரிக்கும் கஸ்ட்டமர்களை எப்படி கையாளுவது என்பது ஆஃப்லைன் விற்பனையாளர்களுக்கு தெரிவதே இல்லை. வெட்டியாக ஏஸி காத்து வாங்க வந்த கஸ்டமர் என்று ஒரு சில நேரம் நினைத்துவிடுகிறார்கள் !
இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது , அடுத்தடுத்த பகுதிகளில் நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள போகிறேன் ! நமது வலைப்பூவுக்கு கண்டிப்பாக சந்தா பண்ணிக்கொள்ளுங்கள் !
No comments:
Post a Comment