வெள்ளி, 14 ஜூன், 2024

MUSIC TALKS - NEE MALARAANAAL ENTHAN PEREY POOVASAM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




நீ மலரா ? மலரா ? மலர் ஆனால் 
எந்தன் பேரே பூவாசம்
நீ மழையா ? மழையா ? மழை ஆனால் 
எந்தன் பேரே மண்வாசம்
ஒரே சுவாசமே ஜோடி 
ஜீவன் வாழுமே உயிரே உயிரே
பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே 
நீ கூட எனக்கும் ஒரு தாயே
நீ மலரா ? மலரா ? மலர் ஆனால் 
எந்தன் பேரே பூவாசம்


வாழாமலே வாழ்ந்த நாள் 
எந்த நாளோ ?
பார்க்காமல் நாம் இருவரும் 
இருந்த நாளோ 


அட காதல் என்பதென்ன ?
இன்ப சிகிச்சை
இது இரண்டு நபர் ஒன்றாய் 
எழுதும் பரீட்சை
தினம் உன் பேரயே நான் கூறியே 
உயிர் வாழ்கிறேன்
நீ மலரா ? மலரா ? மலர் ஆனால் 
எந்தன் பேரே பூவாசம்

காற்றோடு நான் 
ஈரமாய் சேருகிறேன்
மரமாகி நான் ஈரத்தை ஈர்க்கிறேன்
என் அந்தபுரம் எங்கும் 
சாரல் அலைகள்
என் நந்தவனம் எல்லாம் 
ஈர இலைகள்
ஒரு மழையோடு தான் 
வெயில் சேர்ந்ததே 
நம் காதலே


நீ மலரா ? மலரா ? மலர் ஆனால் 
எந்தன் பேரே பூவாசம்
நீ மழையா ? மழையா ? மழை ஆனால் 
எந்தன் பேரே மண்வாசம்
ஒரே சுவாசமே ஜோடி 
ஜீவன் வாழுமே உயிரே உயிரே
பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே 
நீ கூட எனக்கும் ஒரு தாயே

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Gowtham 💝 - Anushya 💝

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...