Monday, June 17, 2024

GENERAL TALKS - பிரைமரி ஃபோன் இல்லாமல் இன்னொரு ஃபோன் அவசியமா ?


இரண்டாம் கட்ட பயன்படுகளுக்காக பிரைமரி ஃபோன் தவிர்த்து இன்னொரு ஸேகன்ட்டரி ஆண்ட்ராய்டு போனை வாங்குவதன் மூலமாக நிறைய விஷயங்களை செய்ய உதவியாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் குறிப்பாக ஆண்ட்ராய்டு போன் ஆப்ரேட்டிங் சிஸ்டம்களில் கணினி அளவுக்கு வசதிகளும் பயன்பாடுகளும்உள்ளது. இவைகளில் ஒரு குறிப்பிட்ட சில பயன்பாடுகளை மட்டும் தனியாக பயன்படுத்துவதற்காக நெட்வொர்க் இல்லாத ஒரு ஃபோனை செலக்ட் செய்து குறிப்பாக வீடியோ எடிட்டிங் மற்றும் ஆடியோ எடிட்டிங் போன்ற விஷயங்களுக்காக ஒரு குட்டி கம்ப்யூட்டர் போலவே பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் தொடுதிரை வசதிகள் இருப்பதால் கம்ப்யூட்டர்களை பயன்படுத்தி விட மிகவும் சுலபமாகவே வேலைகள் முடிக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.  இதனை விடவும் ஒரு நல்ல கம்ப்யூட்டர் என்ன வேண்டும் ? இருந்தாலுமே ஒரு ஆண்ட்ராய்டு போனை வாங்குவதில் எப்போதுமே கவனம் தேவை என்று தான் சொல்ல வேண்டும் லாவா மற்றும் ஐடெல் போன்ற பிராண்டுகள் தங்களை பிராண்டுகள் என்று சொல்லிக் கொண்டாலும் அவர்களுடைய போன்கள் மிகவும் சரியான தரத்தில் அமையப்படவில்லை இன்னும் மற்ற இன்டர்நேஷனல் பிராண்டுகள் உடைய தரத்துக்கு அவர்களுடைய போன்கள் சமமாக வேலை செய்வது இல்லை என்பதை நாம் கண்கூடாக பார்க்க வேண்டும். இந்த மொக்கை கம்பெனிகளில் அசெம்பிளி பகுதியிலேயே மிகவும் பிரச்சனை இருந்தால் அந்த போன்கள் பல வருடங்களுக்கு நன்றாக நிலைத்திருக்கும் என்று சொல்ல முடியாது கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் வாங்கிய போன் சுவிட்ச் ஆப் ஆகிவிடுகிறது.  மேலும் வாங்கிய கடையில் கொடுத்தால் எந்த விதமான சப்போர்ட்டுமே இல்லை என்றுதான் மற்றவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இந்த காலத்திலும் கூட இப்படி எல்லாம் ஆஃப்லைன் மார்க்கெட்டில் நடந்து கொண்டிருப்பதால் தான் ஆன்லைன் மார்க்கெட்டில் என்னால் இணையத்தில் ஆர்டர் செய்து போன்களை வாங்கிக் கொள்கிறேன் என்று உலகத்துடைய ட்ரெண்ட் மாறிவிட்டது இருந்தாலும் இணைய ஆர்டர்களில் இன்றும் நம்பிக்கை இல்லாத மக்கள் ஆஃப்லைன் விற்பனையை நம்பும்போது டிஸப்பாயிண்ட்மெண்ட் பண்ணுவது தவறான விஷயம் !

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...