ஞாயிறு, 9 ஜூன், 2024

MUSIC TALKS - VENNILA VELIYE VARUVAIYA VIZHIYILE VELICHAM THARUVAIYAA SONG - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAAATU !




வெண்ணிலா வெளியே வருவாயா ?
விழியிலே வெளிச்சம் தருவாயா ?
இரவிலே தவிக்க விடுவாயா ?
அருகிலே அணைக்க வருவாயா ?
பாலொளி குடிக்க தருவாயா ?
தாகத்தில் தவிக்க விடுவாயா ?

நிலவே நீ பூக்கள் சூடி
என் வாசல் வந்து விடு
உன் காதல் இல்லை என்றால்
நீ என்னை கொன்று விடு


வெண்ணிலா வெளியே வருவாயா ?
விழியிலே வெளிச்சம் தருவாயா ?
இரவிலே தவிக்க விடுவாயா ?

புரண்டு நீ படுக்கும் போது
உதிர்ந்திடும் கூந்தல் பூவில்
என் காதல் வாசம் இருக்கும்நீ பாரம்மா
அதை நீயே மறந்தாயே கொடி பூவே

உதிர்ந்திடும் முளைத்திடும்
ஒரு விதை காதல்தான்
விதைகளை புதைக்கிறாய்
சிரிக்கிறேன் நான்தான்

வெண்ணிலா வெளியே வருவாயா ?
விழியிலே வெளிச்சம் தருவாயா ?
இரவிலே தவிக்க விடுவாயா ?

உன் கண்களை கொஞ்சம் தந்தால்
நான் கொஞ்சம் தூங்கி கொள்வேன்
என்றாலும் காதல் நெஞ்சம் தூங்கதம்மா
என் அன்பே என் அன்பே என் அன்பே 
காதலில் காதலி கனவுகள் தோன்றாதா ?
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா ?


வெண்ணிலா வெளியே வருவாயா ?
விழியிலே வெளிச்சம் தருவாயா ?
இரவிலே தவிக்க விடுவாயா ?
அருகிலே அணைக்க வருவாயா ?
பாலொளி குடிக்க தருவாயா ?
தாகத்தில் தவிக்க விடுவாயா ?

நிலவே நீ பூக்கள் சூடி
என் வாசல் வந்து விடு
உன் காதல் இல்லை என்றால்
நீ என்னை கொன்று விடு

கருத்துகள் இல்லை:

CLEAR TALKZ - EPISODE 7

  பிறப்பு அடிப்படையிலான பிரிவினை, பாகுபாடு போன்றவற்றை பார்க்காமல், ஒருவருக்கு திறமை இருந்தால் அவர் முன்னேறி விடுவார்; திறமை இல்லாவிட்டால் மு...