இந்த படத்துக்கு கேமரா வொர்க் நன்றாக இருக்கிறது. ஒரு வரி கதைதான் ஆனால் நன்றாக மேம்பாடு செய்து இருக்கின்றார்கள். சென்னையில் வாழ்ந்துகொண்டு இருக்கும் கதாநாயகன் காலத்தின் கட்டாயத்தால் சண்டையில் பிரிந்து நிற்கும் இரண்டு ஊர்களை சேர்த்து வைக்க திருவிழா நடத்தி சல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற காரணத்துக்காக அழைத்து வரப்படு்கிறார். இன்னொரு பக்கம் சல்லிகட்டு நாட்டு மாடுகளின் ஜெனட்டிக்ஸ்ஸை எடுத்துகொண்டு அவைகளை கொன்று சாப்பிடும் ஒரு அசைவ வில்லன். இவர்களுக்குள் நடக்கும் நேருக்கு நேரான மோதல்தான் படத்தின் கதை. கார்ப்பரேட் கொடூரங்களையும் கிராமத்து பிரிவினை அரசியலிலும் சொல்லி இருக்கும் இந்த படம் இன்னும் நன்றாக மேம்படுத்தி எடுக்கப்பட வேண்டும் என்றும் புதுமையாக எடுக்க வேண்டும் என்று வேறு ஒரு கோணத்தில் இருந்து யோசித்து எடுத்து இருக்கின்றார்கள். சல்லிக்கட்டினை இவ்வளவு தெளிவாக வேறு எந்த படமும் காட்டியது இல்லை என்ற காரணத்தால் இந்த படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.
No comments:
Post a Comment