Saturday, June 29, 2024

GENERAL TALKS - சர்க்கரை ஒழிப்பு சங்கத்தில் சேர நீங்கள் தயாரா ?



"சர்க்கரை - இந்த உலகம் முழுவதும் இனிப்புக்காக அதிகமாக சேர்த்துக்கொள்ளப்படும் இந்த விஷயம் உடலுக்கு எந்த ஒரு நல்ல சத்துமானங்களையுமே கொடுப்பது கிடையாது. சர்க்கரையை அதிகமாக சாப்பிடுபவர்கள் பின்னாட்களில் பெரும்துயரம் என்னும் டேப்ரேஷனை அடைய அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது !  இது எல்லாமே காகித தகவல்களை அடிப்படையாக கொண்டது என்று நினைப்பவர்களுக்கு உண்மையாகவே சர்க்கரை சாப்பிடும் மக்கள் இதய நோய்களுக்கும் , செரிமான நோய்கள் , முறையற்ற உடல் அமைப்பு , எடை கூடுதல் , சோர்வு , தூக்கமின்மை என்று நோய்களில் பாதிக்கப்படுவதை நான் கண்களால் பார்த்து இருக்கின்றேன். இனிப்பு பதார்த்தங்களை அதிகமாக சேர்க்கும்போது சோர்வு மற்றும் தூக்கம் அதிகமாக வந்துவிடும். நம்ம வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக சர்க்கரையை எடுப்பதுமே ஒரு சாதனைதான். கட்டுப்பாடு இல்லாமல் சர்க்கரையை தாறுமாறாக சாப்பிடுபவர்கள் இண்டெலிஜன்ஸ் மற்றும் மெமரியில் மிகப்பெரிய குறைபாடுகளை கொண்டு வாழ்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த மாதிரியான நெகட்டிவ் எஃபக்ட்ஸ்  மட்டுமே சர்க்கரையில் இருந்தாலும் சர்க்கரை மேலே இருந்த மோகம் கண்டிப்பாக குறையவே இல்லை. பழங்கள் , பேரீச்சை , தேன் மற்றும் பனங்கற்கண்டு போன்ற விஷயங்களின் பயன்பாட்டால் உடம்புக்கு கொஞ்சம் ஆறுதல் கொடுத்துவிட்டு சர்க்கரை பயன்பாட்டை நிறுத்துவதை சிறப்பான செயல் என்று கம்பெனி கருதுவதால் இப்போதே சர்க்கரையை நிரந்தரமாக நிறுத்திவிடுங்கள். இன்னொரு முக்கியமான விஷயம் சர்க்கரை நிறுத்துவதால் குறைந்தபட்சாம் 300/- ரூபாய் அளவுக்கு உங்களுடைய பட்ஜெட்டில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம் ! இதுவுமே நல்ல விஷயம்தானே !

No comments:

Post a Comment

GENERAL TALKS - நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலப்பு உலோகங்கள் !

  1. Steel (Iron + Carbon) 2. Stainless Steel (Iron + Chromium + Nickel) 3. Bronze (Copper + Tin) 4. Brass (Copper + Zinc) 5. Sterling Silve...